சுகந்திர போராட்டம் என்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களை தவிர்த்து நிறைய பேர் சிறு சிறு குழுக்களாய் சுகந்திர போராட்டத்திற்கு பாடுபட்டு உள்ளார்கள். ஆனால் சோகம் என்றால் பிரிட்டிஷ் அரசும் அன்றைய காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளும் இந்த சிறு குழுக்களை கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்றே அடையாள படுத்தி உள்ளது. பெரும் தலைவர்களுக்கு சுகந்திர போராட்டத்தில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அத்தனை பங்கு இந்த சிறு குழு வீரர்களுக்கும் இருக்கிறது.
கல்கி அவர்கள் தனது கிளாச்சிக் நாவலான "அலை ஓசை"யில் இவர்களை பற்றியும், இவர்களது செயல் பாடுகளை பற்றியும் விரிவாகவே எழுதிருப்பார். அதன் மூலம் தான் எனக்கும் இவர்களை பற்றி தெரிய வந்தது.
இவர்கள் பெரும்பாலும் அறிவுசார்ந்த குழுக்களாகவும், மதம் சார்ந்த குழுக்களாகவும் தான் இருந்தார்கள். அதுவும் மதம் சார்ந்த குழுக்கள் தான் அதிகம் பரவலாக இருந்துள்ளனர், அதற்கு முக்கிய காரணம் அன்றைய மக்களிடையே நிலவி வந்த மதம் / ஜாதி சார்பு தன்மையே.
காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவும் அப்படிப்பட்ட மதம் சார்ந்த போராட்ட குழுவை சேர்ந்தவன் தான்.
குறிப்புகளின் படி பார்த்தால், தென் இந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்த மாதிரியான போராட்ட குழுக்கள் அதிகம் இருந்தன. அல்லது தென் இந்திய போராட்ட குழுக்களை பற்றி நான் அதிகம் படிக்கவில்லை என்று வைத்து கொள்ளலாம்.
இவர்கள் பலர் காந்திய வழியை ஆதரித்தும் எதிர்த்தும் கொள்கைகளை கொண்டவர்களாக இருந்து உள்ளனர். அனுஷிலன் சமிதி, ஜுகாந்தர், பெங்கால் தோழர்கள், மோகன் பேகன் ஓட்டபந்தைய குழு ஆகிய குழுக்களை பற்றி குறிப்புகள் கிடைக்கிறது. சில பல குழுக்களை இந்தியாவிற்கு வெளிய இருந்தும் ஆதரவு இத்தகைய போராட்ட குழுக்களுக்கு தந்து உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிதி உதவி, அடைக்கல உதவி என்ற அளவிலேயே இருந்து உள்ளனர். களப்பணியும் சிறுது உண்டு இவர்களுக்கு.
இன்றைய காலத்தில் இந்த குழுக்களை பற்றிய சினிமா பதிவுகள் என்று பார்த்தால் கொஞ்சம் குறைவு தான், காரணம் அரசியல், இன்னொன்று இந்த குழுக்களை பற்றி விஷய ஞானம் இல்லாதமை. புனைவு / அபுனைவு புத்தக பதிவுகள் பற்றி எனக்கு தெரியவில்லை.
நேற்று நான் படித்த முக்கிய குறிப்புகளின் முக்கியமானதாக கருதுவது சிட்டகாங் ராணுவ தாக்குதல் தான், ஏனென்றால் லாகன் புகழ் அஷுடோஷ் கோவரிகர் தயாரித்து இயக்கிய க்ஹெளின் ஹம் ஜி ஜான் சே (Khelein Hum Jee Jaan Sey ) தான். இது ஏதோ புத்தகத்தை தழுவி எடுத்து உள்ளனர்.
சோகம் என்னவென்றால் இந்த சிறு குழுக்களை கலவர காரர்கள் / தீவிரவாதி என்றே அடையாள படுத்தி வந்துள்ளதால், சுகந்திர இந்தியாவில் தியாகி பென்ஷன் பலருக்கு கிடைக்கவில்லை. அதை அவர்கள் எதிர் பார்க்கவும் இல்லை என்பது வேற விஷயம்.
இவர்களது காலம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்த வரைக்கும் அது 1900 க்கு பிறவு தான்.
வன்முறை பாதையில் சென்றவர்களுக்கு ஆயுதம் வழங்கி பல வெளிநாட்டவர்களுக்கும் உதவி செய்து உள்ளதாக தெரிகிறது.சிலர் பிரிட்டிஷ் அரசுக்கு இம்சை தருவதையே கொள்கையாக வைத்து கொண்டவர்களும் உண்டு. உதாரணம் லக்நொவ்வில் நடந்த காகோரி ரயில் தாக்குதல். மாபெரும் கூட்டு முயற்சி.
நட்புகளே, உங்களுக்கு இந்த சிறு போராட்ட குழுக்களை பற்றி விவரம் எதாவது தெரிந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்.
குறிப்பு -
இதிகாசமானது.
கண்ணன், அர்ச்சுனர்
குறிப்பு -
இதை படித்து விட்டு நண்பர் கண்ணா.கே அவர்கள் கூறியது -
எனக்கு இந்த கவிதைதான் ஞாபகத்துக்கு வருது
'மகாபாரதம்
'மகாபாரதம்
இதிகாசமானது.
பகவத்கீதை
வேதமானது.
கண்ணன், அர்ச்சுனர்
அனைவரும் கடவுளானார்கள்.
எல்லாம் சரி,
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?' ''
= = =
பின் சேர்க்கை :-
விவரங்களை காலையில் எழுதிவிட்டு, அலுவலகம் வந்த பின்...யோசனைகள் இது குறித்தானது பலம் பெற்றது. எப்படி போராடி இருந்தாலும் எல்லோரது நோக்கமுமொன்றானதாக தானிருந்திருக்கிறது. ஐயம் இல்லை. அனால் ஒரு விழா என்று வந்துவிட்டால் ஏதோ சிலரை அல்லது ஒரு வகுப்பினரை மட்டுமே நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரும் இயக்கத்தோடு கூட்டு சேரவில்லை இவர்கள்.... அதனால் குறிப்புகளில் கலவரகாரர்கள் / தீவிரவாதிகள் என்று பெயர் பெற்று விட்டனர்.
எல்லாவற்றிலும் இருக்கும் புகழ் சார்பு மயக்கம் இதிலும் மக்களிடத்தில் பரவி உள்ளதாகவே இருக்கிறது.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு காகோரி ரயில் தாக்குதலை பற்றி இன்னும் விவரமாக படிக்கலாமென்று தேடல்பொறி உதவி கொண்டு தேடினால், அச்சம்பவத்தை காகோரி ரயில் கொள்ளை என்று பலர் குறிப்பீட்டு எழுதி உள்ளார்கள். கஷ்டமாக இருந்தது. என்ன ஏதென்று கூட படிக்கவில்லை. அப்பக்கத்தை மூடிவிட்டேன். ஆதரங்களே தன்மை யற்று இருக்கிறது ...இவ்விஷயத்தில்.
அதுசரி இந்திய நாட்டின் கல்வி நூல்கள் எல்லாம் அரசியல் சார்பு கொண்டதாக தானே இருக்கிறது, அப்படி இருக்கும் பொழுது சிறு போராட்ட குழுக்களின் நியாய பக்கங்கள் எவ்வாறு எழுத படும் ??
நான் பார்க்கும் / கேட்கும் விவாதங்கள் யாவும் பிரபல தன்மை கொண்டவர்களின் சுற்றியே உள்ளது. இந்த சிறு போராட்ட குழுக்கள் பற்றிய விவரங்கள் தேடி கொண்டு இருக்கிறேன். கிடைத்தவைகளை படித்துவிட்டு, முழுமையாக பகிர்கிறேன்.
No comments:
Post a Comment