பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடுபவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய பட வேண்டும் என்று பரவலாக கருத்து சொல்லுறாங்க. சந்தோசம். ஆனா அந்த மாதிரி பாலியல் வன்முறை செய்றவன் கல்யாணமானவனா இருந்தா, அவனோட ஆண்மைல அவனோட மனைவிக்கும் பங்கு / உரிமை இருக்குல.
அப்படி பாலியல் வன்முறைல ஈடுபட்ட கல்யாணமான ஒருத்தனுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவனது மனைவி இடம் அனுமதி கேட்பார்களா ??? கணவன் செய்த குற்றத்துக்காக மனைவிக்கு அவன் மூலம் கிடைக்கும் உடலுறவு இன்பங்கள் மறுக்க பட வேண்டுமா ??? அவள் என்ன பாவம் செய்தாள் ???
முக்கியமா நான் கேள்வி பட்ட வரைக்கும் ஆண்மை நீக்கம் என்பது குடும்ப கட்டுப்பாடு மாதிரி இல்லை.
கொஞ்சம் யோசித்து பார்த்ததில் இந்த ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தால் பல சமூக சீர்கேடுகள் கிளை போல் வருமே, அதற்கு எல்லாம் அரசு பொறுப்பு ஏற்குமா ???
ஆண்மை நீக்கம் என்ற விஷயத்தை சரி / தவறு என்று எல்லாம் நான் பேசவில்லை... அப்படி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு ரூம்ல கம்ப்யூட்டர் முன்னாடி உட்கரந்துகிட்டு எங்கையோ நடந்த குற்றத்தை பற்றியும், அதனால் பாதிக்க பட்ட மனிதர்களை பற்றியும் பேசுறது நியாயம் இல்லை.
பாலியல் குற்றதுல ஈடுபட்டவன் கல்யாணம் ஆகாதவனா இருந்த ஒன்னும் பிரச்சனை இல்லை, கல்யாணம் ஆனவன் என்றால் .... இந்த தீர்ப்பினால் பாதிக்க பட போகும் அவனது மனைவியை பற்றியும் யோசிக்க வேண்டும்ன்னு தோணுது. அதுக்குன்னு கல்யாணம் ஆனவங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய கூடாதுன்னும் சொல்ல முடியல.
ஒரு வேளை பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்கம் தான் தீர்ப்பு என்று முடிவானால், அது எல்லா பக்க நியாயங்களையும் யோசித்து எடுக்க பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment