நேத்து சாயங்காலம் ஓசில நுங்கம்பாக்கம் ரயில் ஸ்டேஷன்ல இறக்கி விடுறேன்னு ஒரு ஆடு தானா வந்து மாட்டினதால, சரின்னு பீச் ஸ்டேஷனுக்கு போன பஸ் காசு ஆகும், இவரோட போன அது மிச்சம் ஆகுமேன்னுட்டு, நானும் அவரோட பைக்ல போய் லயோலா காலேஜ் பக்கமா இருக்குற ஸ்டேஷனுக்கு போற வழில இறங்கிட்டு, அவருக்கு டாடா காட்டின பிறவு ஸ்டேஷன் நோக்கி போக ஆரம்பிச்சுட்டேன்.
அந்த குறுக்கு சந்துல போகும் போது தள்ளு வண்டி கடைல கடலை விக்குறதை பார்த்த பிறவு நான் எப்புடி ஒரு இலக்கியவாதியோ அதே மாதிரி காந்தியவாதிங்குறது ஞாபகம் வந்து அந்த கடைல ஒரு அஞ்சு ரூவாய்க்கு அவிச்ச கடலையும் ஒரு அஞ்சு ரூவாய்க்கு வறுத்த கடலையும் வாங்கினேன்.
பிறவு தொடர்ந்த நடைல வறுத்த கடலை பொட்டலத்தை ஜோப்ல வைச்சிகிட்டு அவிச்ச கடலை பொட்டலத்தை பிரிச்சி, கடலைய ஒரு கை எடுத்து வாய்ல போடுறேன்....கடிச்சப்ப ஏதோ வாய்ல குத்துச்சு, என்னனு பார்த்தா ...சின்னத ஒரு ஆணி.
நல்ல வேளை முழுங்கி இருந்தா என்ன ஆகிருக்கும்ன்னு யோசனை வந்தப்ப் திடுக்குன்னு ஆகிருச்சு. சரின்னு போய் கேட்கலாம்ன்னு பார்த்தா பதட்டத்துல ஆணிய தூக்கி போட்டிருந்தேன். அதோட போய் பேசினாலே சரியா பதில் சொல்ல மாட்டாங்க, ஆணி இல்லாம போன முஞ்சி குடுத்து கூட பேச மாட்டாங்க,
ஆணி எதுல இருந்து வந்திருக்கும் யோசிச்சு பார்த்தா, பல வாய்ப்புகள் மனசுல தோனுச்சு.
அதனால நட்புகளே...... உங்கூட்டு குழந்தைகளுக்கு சாப்பிட தள்ளு வண்டி / அல்லது ரோட்டோர கடைல இருந்து கடலை வாங்கி தரும் போது, கவனமா பார்த்து செக் பண்ணின பிறவு குழந்தைங்க கையாண்ட குடுங்க.
6 comments:
நானும் அவதிப்பட்டிருக்கிறேன்
பெரியவர்கள் எப்படியும் சமாளித்து கண்டுபிடித்து
எடுத்துவிடுவோம்.குழந்தைகள் விசயத்தில் நீங்கள்
சொல்வது போல நாம்தான் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
சிறு கற்கள் வரும்... இப்போது ஆணிகள் வேறே...! எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி...
கடலைய பார்த்து வாயில போடுங்க
கடலை (வாயில்) போடும்போது கவனம் தேவை!
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் மிகவும் பயன்னுள்ள பதிவு முன் எச்சரிக்கையாக உள்ளது பதிவு பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_20.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Aahaaa. Ingaeyuma?
Post a Comment