இள நிலை கல்லூரி வாழ்க்கை நினைவிற்கு வருகிறது எனக்கு இந்த
பாடலை பார்க்கும் பொழுதெல்லாம். தொடர்ப்பு விட்டு போன நண்பர்கள் என்றாவது ஒரு நாள் என்னை அழைப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் 6 வருடங்களாய் ஒரே மொபைல் நம்பரை வைத்திருக்கிறேன். யாரும் என்னை அழைக்க காணோம்.
மறக்க முடியாத நாட்கள் அவை. விவாதம், சினிமா..... அந்த நாட்களில் உடன் இருந்த நண்பர்களை இந்த பாடல் நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறது. எத்தனை கொண்டாட்டமான காலம் அது. அந்த நாட்கள் எல்லாம் திரும்ப வாழ்வில் ஒரு முறையாவது வந்துவிடாத என்று ஏங்க வைக்கிறது.
வெளி நாட்டிற்கு போனாலும் போய்விடுவேன், கல்யாணம் நடக்க வேறு நடக்க போகிறது. அதற்கு முன்பு எல்லைகள் இல்லாத அந்த சுதந்திர வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை வாழ ஆசை.

= = = = =
+2 ல பெயில் ஆகிட்டு டுடோரியல் ல படிக்கும் போது அடுத்தது என்னனு, எதிர்காலம் பத்தி யோசிக்க தெரியாம சுத்தினேன்.
இப்ப முதலீட்டு ஆலோசகரா சுத்திட்டு இருக்குறப்பவும் ஒரு யோசனையும் இல்லாம இருக்கேன்.
ஆனா வருங்காலமுங்குற சிற்பம் சூப்பரா இருக்கணும்ன்ன, இன்னைய செதுக்குதல் நல்ல இருக்கணும்ன்னு நம்புறவன் நான்.
அதனால வருங்காலத்த பத்தி யோசிக்காம புதுபுது விஷயமா காத்துகிட்டே இருங்க. எப்பவும் மத்தவங்களை விட அறிவால பலமா இருக்கணும். அப்படி இல்லாட்டி பல படுத்திக்கணும்.
தவறுகள் தான் ஆசான். ஆனா ஒரே ஆசான் கிட்ட படிச்ச போர் அடிக்கும். புதுபுது ஆசானை தேடுங்க. தவறு செய்யுங்க. ஆனா திரும்ப அதே தவற செய்யாம பாத்துகொங்க.

இன்னைக்கு ரயில் ல உதவி கேட்டுட்டு வந்த திருநங்கையை ஒருத்தங்க கிட்ட உதவி காசு தந்துட்டு பெயர் என்னன்னு கேட்டேன். இளையநதின்னு சொன்னாங்க. அருமையான பேரா இருந்துச்சு. என் பேர் விஸ்வான்னு சொன்னேன். அதுக்கு அவங்க நைஸ் நேம்ன்னு சொன்னாங்க. கை குலுக்கலுக்கு நீட்டினேன். அவங்களும் கை நீட்டி குலுக்கினாங்க.
பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஆச்சரியமா பாத்தாங்க.
இந்த மாதிரி திருநங்கை தோழிங்களை பாக்குறப்ப எல்லாம் அவங்ககிட்ட நட்பு பாராட்ட ஆரம்பிச்சா .... கண்டிப்பா சமூகத்துல மாற்றம் வரும்ன்னு நினைக்குறேன்.
திருநங்கையை சமூகத்துல இயல்பான ஒரு மனுஷியா பாக்க இது உதவும்ன்னு நினைக்குறேன்.
காந்தியடிகள் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது . சமூகத்தில் எந்த மாற்றத்தை பார்க்க ஆசை படுகிறாயோ, அந்த மாற்றமாகவே நீ இருன்னு சொல்லி இருக்காரு.
இன்னொரு ஆளுகிட்ட உதவி கேட்டப்ப அவன் ஒன்னும் சொல்லாம இருந்தான். அதுக்கு அவங்க "சார் இந்த மாதிரி ஒன்னும் சொல்லாம இருந்தீங்கன்ன தான் வலிக்கும்... காசு கொடுக்க முடியாதுன்ன முடியாதுன்னு சொல்லிருங்க. அதுக்குன்னு முகத்த திருப்பி வைச்சுக்காதீங்க... அது தான் எங்களுக்கு வலிக்கும் ..."ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.

2007
சென்னை ...
இரவு அறைக்கு பெரியம்மாவும் பெரியப்பாவும் வந்திருந்தனர். பெரியப்பா சீக்கிரம் தூங்கிவிடவே நானும் பெரியம்மாவும் குடும்ப பிரச்சனைகளை பற்றி நடு இரவு வரை பேசிவிட்டு தூங்க போனோம்.
காலை ஒரு ஏழு மணி இருக்கும் திருச்சியில் அப்பா தொலைபேசித்து "அம்மாவுக்கு செஸ்ட் பெயின்... ஹாஸ்பிடல் ல சேர்த்திருக்கேன்....மாமா வருவாரு... அவர் கூட வந்திரு" என்று சொன்னார்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஆரோக்கியமாக இருந்த அம்மாவிற்கு நெஞ்சு வலி என்றதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் அழுவதை பார்த்த பெரியம்மா பதறி போய்.... பெரியப்பாவை பார்த்து "யார் அவர் கிட்ட இதை எல்லாம் இவன் கிட்ட சொல்ல சொன்னது" என்று சத்தம் போட்டார்.
உடனே பெரியம்மா எங்கெங்கோ தொலைபேசினார், கொஞ்ச நேரத்தில் ஆட்டோ வந்தது. அதில் மூவரும் பயணித்து மாமா வீட்டிற்கு போனோம். அங்கு சேர்ந்த பொழுது துபாயில் இருந்து அண்ணன் அழைத்து "டேய் ... கவலபடாத நாயிருக்கேன்...நீ போ... நா நைட்க்குள்ள வந்துருரேன்...." என்று சொன்னான்.
காலை நேர பசி, தாகம் எல்லாம் சேர்ந்து எனக்குள் பயத்தை கிளறி விட்டது. அம்மாவின் சிரித்த முகம், அப்பாவின் கம்பீரம், உதவிக்கு யார் இருக்கிறார்களோ என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து கண்களில் இருந்து வந்து கொண்டு இருந்த கண்ணீரை நிறுத்த விடவில்லை.
இரவில் அவளது முகம் கனவில் வந்து செழிப்பில் வண்ணமயமாக இருந்த மனது இருள் சூழ்ந்து கொண்டது.
விஷயம் கேள்வி பட்டு மாமா வீட்டிற்கு வந்த சொந்தகார அண்ணி என்னை "சாப்புடு விச்சூ ... அப்ப தான தனியா இருக்குற அப்பாவுக்கு சப்போர்ட்டா இருக்க முடியும்... நீயே சோங்கி போயிருந்த எப்புடி ??" என்று சொல்லி தட்டில் மூன்று இட்லி மற்றும் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட கொடுத்தார்கள். இரண்டிற்கு மேல் சாப்பிட முடியாமல், வைத்துவிட்டேன்.
அப்பாவோடு இருந்த அவரது நண்பர், அம்பி மாமாவை அழைத்து அம்மாவின் நிலை பற்றி கேட்டுக்கொண்டே இருந்தேன். தகவல்கள் நிலைக்கொள்ள வைக்காமல் நிலையை கொன்று கொண்டு இருந்தது.
அதற்குள் மாமா கார் எடுத்து கொண்டு தயாராக இருந்தார். கிளம்பினோம், பயங்களுடன் திருச்சி நோக்கி.

No comments:
Post a Comment