ஒரு பள்ளி செல்லும் சிறுவனையோ சிறுமியையோ பார்த்தால் நம்மில் பெரும்பாலனோர் "என்ன படிக்குற... ஃபஸ்ட் ரேங்கா என்ன மார்க்கு ... உனக்கு எந்த நடிகர பிடிக்கும்... பெருசாயிட்டு பிறவு என்னவா ஆக போற ..." போன்ற கேள்விகளை தான் கேட்கிறோம்.
அதில் தான் அவர்களது உலக இருப்பதாய் நினைக்கிறோம்.
நகர்ந்து செல்லும் வானம் எந்த ஊருக்கு போகிறது, பசுவுக்கு எல்லாம் யார் சாப்பாடு போடுவாங்க, கடலுக்கு அந்த பக்கம் எவ்வளவு பெரிய விசிறி இருந்தா இவ்வளவு காத்து அடிக்கும் போன்ற விஷயங்களை பற்றி தான் அதிகம் யோசித்து கொண்டு இருப்பார்கள் குழந்தைகள்.
ஆனால் பெரியவர்கள் யாரும் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதில்லை. ஏனென்றால் அவர்கள் பெரியவர்களுக்கான உலகத்தில் இருந்து கொண்டு சிறுவர்களை பார்க்கிறார்கள். பெரியவர்களுக்கான உலகத்தில் வானம் எந்த ஊருக்கு போகிறது போன்ற ஆச்சரியங்களுக்கு இடம் இல்லை. சொல்ல போனால் பெரியவர்களில் உலகத்தில் இதற்கெல்லாம் மதிப்பே இல்லை.
வளரும் வயதில் சக நண்பர்களிடம் நட்பு கொள்ள, தங்களது குழந்தை உலகத்தை கொன்றுவிட்டு அல்லது அழித்து விட்டு அதில் பெரியவர்களுக்கான உலகத்தை உருவாக்கி கொள்கிறார்கள். இதை தான் இக்காலத்தில் பெற்றோர்களும் பள்ளிகளும் வெற்றிகாரமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
புத்தக கண்காட்சியில் ஒரு பத்து வயது சிறுவனுக்கு அவனது அப்பா அம்பானி, பில் கேட்ஸ் ஆகியோரது வாழ்க்கை வரலாறு புத்தகமும் தன்னம்பிக்கை புத்தகமும் வாங்கி தந்து கொண்டு இருந்தார். பத்து வயது சிறுவனுக்கு எதற்கு இந்த புத்தகம் எல்லாம் என்று புரியவில்லை. பத்து வயது என்பது கற்பனை காற்றாற்று வெள்ளம் போல் மனதில் வந்து கொண்டு இருக்கும் வயது, அந்த வயதில் வரலாறு புத்தகமும் தன்னம்பிக்கை புத்தகமும் ஏன் தேவை பட போகிறது.
தப்பி தவறி யாராவது குழந்தை மனதோடு வளர்ந்து ஆளாகி விட்டால் இந்த உலகம் அவர்களுக்கென்று ஒரு பெயர் வைத்திருக்கிறது "பொழைக்க தெரியாதவ"னென்று.
நான் பள்ளி படிக்கும் காலத்தில் பரீட்சையில் பெயிலாகி விட்டால் எல்லார் முன்னாடியும் நிற்க வைத்து எவ்வளவு மதிப்பெண் குறைவாக இருக்கிறதோ அத்தனை அடி விழும் கைகளில் பிரம்பால். இப்படி அடி திட்டு வாங்கி தான் முதுநிலை வரை படித்தேன். அப்படி படித்தது ஏதுவும் இப்பொழுது ஞாபகம் இல்லை. அவ்வளவு கஷ்ட பட்டு மதிப்பெண் வாங்கியதை பற்றி யாரும் இப்பொழுது கேட்பதில்லை. ஆனால் குடும்ப நிகழ்வுகளில் நான் எதிர் கொள்ளும் கேள்விகள் வேறு விதமாக இருக்கிறது. "எங்க வேல பாக்குற.. எவ்வளவு சம்பளம் ..". அங்கு நான் கஷ்ட பட்டு வேலை பார்பது பற்றியும் என் மேலாளரிடம் நல்ல பெயர் எடுத்து இருப்பதை பற்றியும் யாருமிடமும் சொல்ல முடிவதில்லை. அதை பற்றி எல்லாம் யாரும் கேட்பதில்லை.பெரியவர்களின் உலகத்தில் அதற்கெல்லாம் இடமில்லை போலும்.

2 comments:
உண்மை தான்....எல்லாருமே போலியான உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - chudachuda.com
பெரியவர்களுக்கான உலகத்தில் வானம் எந்த ஊருக்கு போகிறது போன்ற ஆச்சரியங்களுக்கு இடம் இல்லை//
உண்மைதான் மே.வி.
Post a Comment