ஒரிஜினல் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என்பது ஆர்தர் கானன் டயல் எழுதிய 56 சிறுகதைகளும் 4 நாவல்களையும் அடங்கியது. இது தவிர ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் வாட்சன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து பல எழுத்தாளர்கள் பல கதைகள் எழுதி இருக்கிறார்கள்.
இது எல்லாம் இப்படி இருக்க
தமிழில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் சாயலில் ஒரு படம் என்று சொல்லி இருக்கும் மிஷ்கின் அதில் எந்த கதையை கள்ள பிரதியெடுத்திருப்பார் என்பதை யூகிக்க முடியவில்லை. இதில் விஷால் வேறு.
இருவரது டிராக் ரெக்கார்ட்டும் அப்படி ஒன்றும் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.
மிஷ்கினின் முகமூடி படத்தை யாருன் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். படத்திலிருந்து எதையுன் எதிர்பார்க்க வேண்டாம், இது ஒரு எம்.ஜி.ஆர். படம் போலிருக்கும் என்று கடைசி நேரத்தில் பல்டீ அடித்தார்.
ஏற்கனவே ரசனை கோழி இந்த வாரம் தான் ஜாதகம் குறித்து கூவிய புண்ணியத்தில் விக்ரம் வேதாவும், விவேகமும் பார்த்தேன். இனிப்பை தொடர்ந்து கசப்பை உண்டது போல் ஆகிவிட்டது. விக்ரம் வேதாவை மட்டும் பார்த்து இருக்கலாமென்று கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமாய் இப்பொழுது தோன்றுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே பல்ப் நாவல்கள் மூலம் பல துப்பறியும் நாயகர்கள் அறிமுகமாகியுள்ளார்கள். அவர்களது சாயம் கொஞ்சம் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தில் வந்தால் கூட அவ்வளவு தான்.
மேலும் துப்பறியும் இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் இன்னும் பால்வாடியை கூட தாண்டவில்லை. அதனால் படம் எப்படி வர போகிறது என்று தெரியவில்லை.
ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் எல்லாம் 140 வருடங்களுக்கு முந்தைய இலண்டனில் நடப்பது போல் எழுத பட்டு இருக்கும். அந்த கதாப்பாத்திரத்தை எவ்வாறு இந்த நவீன யுகத்தில் மிஷ்கின் பொருத்திருப்பார் என்று யோசித்து பார்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment