ஒரு புகைபடம் போதும் உங்களது கைரேகையை பிரதியெடுக்க. அதுவும் நீங்கள் ஃபேஸ்புக்கில் போடும் செல்ஃபிகளில் கை தெரிந்தால் அதை வைத்தே உங்கள் கைரேகையின் போலியை தயரிக்க முடியும்.
இதை மேலும் எளிமை படுத்த, மேம்படுத்தபட்ட HD கேமராக்கள் கொண்ட மொபைல் போன்கள் எல்லோரிடமும் கிடைக்கிறது.
இதை பற்றி கேள்விபட்ட பொழுது, இது சாத்தியமா என்று சோதித்து பார்க்க எனது கை விரல்களை புகைபடம் எடுத்து பார்த்தேன்.... ரேகைகள் அவ்வளவு துல்லியமாக தெரிந்தன. இதை வைத்து மெழுகில் எனது கைரேகைகள் பிரதி எடுக்க முடியும். அதனை வைத்து தவறான காரியங்களுக்கு பயன் படுத்த முடியும்.
இது போக அதிநவீன பிரிண்டர்களும் இப்பொழுது சந்தையில் கிடைக்கிறது.
இது போன்ற குற்றங்கள் நடைபெற இந்தியா இன்னும் அந்தளவிற்கு முன்னேறவில்லை என்றாலும் ..... இன்றைய நிலவரப்படி எல்லாவற்றுடனும் ஆதார் எண்ணையை இணைக்க வேண்டி இருப்பதால் .... எதிர்காலத்தில் ஒரு மாபெரும் பொருளாதார குற்றம் நடக்க வாய்ப்புள்ளது.
ஜெர்மனியில் நடந்த Hackers Conferenceல் சமூக தளத்தில் பகிரபட்ட போட்டோவில் இருந்து கைரேகை / கண் கருவிழி படலத்தின் போலி பிரதிகள் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி எல்லாம் விவாதிக்க பட்டன, இவை அனைத்தும் யூ டியூப்பில் பார்க்க கிடைக்கிறது.
இந்தியாவில் இப்பொழுது தான் கைரேகை மூலம் அடையாளம் காணுதலை நடைமுறை படுத்தி கொண்டு வருகிறார்கள். அதனால் இது போன்ற குற்றங்கள் இந்தியாவில் நடக்க இன்னும் பத்து வருடங்களாவது ஆகும்.
இந்த வாரத்தில் அமெரிக்காவில் எல்லோருக்கும் கொடுக்க படும் Social Security Numberகளை கொண்ட Data Base systemயை திருடி இருக்கிறார்கள். இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ஒன்று என்று நம்ப பட்டொன்று. இந்த நம்பரை வைத்து தான் ஒருவர் வங்கி கடன் பெற முடியும். இது திருடு போய் இருக்கிற பொழுது, திருடிய நபர் இந்த தகவல்களை வைத்து கடன் பெற முடியும். சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரிய போவதில்லை. என்ன ஒன்று இதில் ஆதார் போல் கைரேகை, கண் கருவிழி படல பதிவு எல்லாம் சேர்க்க படவில்லை. அமெரிக்கா அரசாங்கம் நினைத்தால் அனைத்து SSN சோஷியல் செக்கியூரிட்டி நம்பர்களையும் ரத்து செய்து விட்டு புது எண்களை விநியோகித்துவிட முடியும்.
ஆனால் கைரேகை, கண் கருவிழி படல பதிவுடன் இணைக்க பட்ட AADHAAR DATA BASE திருடு போனால் என்னவாகும். புது எண்களை கொடுக்க முடியாது இந்திய அரசாங்கத்தால், ஏனென்றால் திருடு போனது மாற்றவே முடியாத கைரேகை, கண் கருவிழி படல பதிவுகள்.
No comments:
Post a Comment