அடுத்த வேளை சோற்றுக்கு பிரச்சனை இல்லாத குடும்பத்தில் பிறந்துவிட்டு இந்த வருஷம் இல்லாடி அடுத்த வருஷம் எழுதிக்கலாம் என்று சொல்ல கூடிய நிலைமையில் சகோதரி டாக்டர் அனிதாவின் குடும்பம் இல்லை.
டாக்டர் அனிதாவின் பெயர் வழக்கு பதிவேட்டில் இல்லையே என்று சொல்கிறவர்களுக்கு ... எனக்கு தெரிந்து 18வயதிற்குள்ளவர்கள் எந்த சட்டரீதியான விஷயத்தையும் தனிச்சையாக இந்திய சட்டத்தின் படி செயல் பட முடியாது. அவருக்காக அவரது பாதுகாலவர் தான் வழக்கை நடத்த முடியும்.
காதல் பிரச்சனையாக இருக்கும் என்று சொல்கிறவர்களே .... அந்த குழந்தையின் டிவி பேட்டியை கேட்டு பாருங்கள். அவளது காதல் எல்லாம் டாக்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவின் மேல் தான்.
இதை எல்லாம் அரசியல் ஆகாதீங்க சொல்கிறவர்களுக்கு.... அப்ப வேற எதை அரசியலாக பார்க்க வேண்டும் ??? ஏதாவது அட்டவணை இருக்கிறதா ??? மாட்டிறைச்சியை வைத்து அரசியல் செய்து ஒரு கொலையை செய்து இருந்தார்களே ... அப்பொழுதெல்லாம் என்ன வாசன் ஐ கேரில் சிகிச்சைக்கு போய் இருந்தீர்களா ???
தற்கொலை ஒரு முடிவில்லை ... ஆமாம் நானும் ஏற்றுகொள்கிறேன். ஆனால் எண்ணம் சுவாசம் எல்லாம் டாக்டர் கனவாக வாழ்ந்த, வெளி உலகம் அறியாத குழந்தைக்கு என்ன தெரியும் ??? இந்த முடிவை எடுக்கும் முன் என்னவெல்லாம் மன கஷ்டத்தை அனுபவித்திருப்பாள். தான் டாக்டரானால் கூலி தொழிலாளியான தந்தையை உட்கார வைத்து நிம்மதியாக இருக்க வைக்க வேண்டும், தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசைபட்டு இருப்பாளே ???
தன் குடும்பத்தின் மீது விழுந்த அவமானங்களை எல்லாம் தனது டாக்டர் கனவின் மூலம் போக்கி விட முடியும் என்று கனவு கண்டு இருப்பாரே டாக்டர் அனிதா. அந்த கனவு எல்லாம் நிஜத்தில் நடக்காது உணர்ந்த பொழுது .... அவரது மனத்தில் ஆயிரமாயிரம் அணுகுண்டு வெடித்திருக்குமே ???
ரேஷன் கார்ட், ஓட்டுனர் உரிமை போன்றவை எல்லாம் இந்தியா சுதந்திரமடைந்த நாள் முதல் இருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. அதுவும் எல்லா மக்களும் பயன் படுத்துவது.... அதையையே ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை அரசால். பிறகு ஏன் எதற்கு நீட் தேர்வு ???
Examination is itself a elimination process only என்பதை நான் அறியாதவன் இல்லை. ஆனால் அதற்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை எல்லோருக்கும் கொடுத்து இருக்க வேண்டும். அதாவது 6வது வகுப்பு முதல் ஒரே மாதிரி பாட திட்டத்தில் பயின்றிருக்க வேண்டும். அதாவது இன்னும் 6ஆண்டுகள் கழித்து தான் நியாய படி நீங்கள் நீட் தேர்வு நடந்தி இருக்க வேண்டும்.
நீட் தேர்வை பலர் எழுதி இருக்காங்களே என்று சொல்கிறவர்களுக்கு ..... அவர்களுக்கு வேற வழியில்லை நீங்கள் சொல்வதை கேட்டு தானாகணும்.
இத்தனை நடந்தும் கல்வி தந்தைகள் யாரும் வாயை திறக்கவில்லை. நீட் தேர்வால் பயன் பெறுவது அவர்களாக தான் இருக்கும்.
டாக்டர் அனிதா .... நீங்கள் படித்து தான் டாக்டராக முடியவில்லை, அதனால் வார்த்தைகள் மூலமாவது உங்களை நான் டாக்டர் ஆக்கி இருக்கிறேன்.
ஓட்டு போட்ட மக்களுக்காக எப்பொழுது தான் குரல் கொடுப்பார்களோ ??? பிரபல நடிகர்களின் குரலை போல் பேசும் மிமிக்ரி கலைஞர்களை போல் மத்திய அரசின் குரலாகவே இருக்கும் மாநில அரசு சுய குரலின் பேச ஆரம்பிக்குமோ ???
No comments:
Post a Comment