Pages

Sunday, November 7, 2021

பொன்னியின் செல்வன் II நந்தினி II ஊமை ராணி மந்தாகினி

ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி / மாதரசி மந்தாகினி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்.

நந்தினி தன்னை சுற்றி இருக்கும் எல்லோரையும் தனது எண்ணப்படி யோசிக்க வைப்பார், ஒரு வித உளவியல் ரீதியான விளையாட்டு விளையாடுபவர். எப்பொழுதும் ஒரு மர்ம புன்னகையில் இருப்பார். அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு நடிப்பு திறன் அதிகமாக தேவை படாது, ஆனால் திறன் இல்லாமலும் அதில் நடிக்க முடியாது.

ஆனால் ஊமை ராணி தனது வாழ் நாள் முழுக்க காடுகளில் தனிமை வாழ்க்கையை வாழ்ந்தவர், பேச முடியாவிட்டாலும் கை அசைவு குறிப்புகளால் கோடிக்கரை பூங்குழலி இடம் மட்டும் பேசுவார். இதில் நடிக்க அதிக நடிப்பு திறன் வேண்டும். ஊமை ராணி ஒரு சிறந்த போராளி, உடல் வலிமை மிக்கவர்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வழங்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் அப்படியான சவாலான வேடங்களில் நடித்திருக்கிறாரா என தெரியவில்லை.

பொன்னியின் செல்வனை முழுமையாக வாசித்தவர்கள் எல்லோருக்கும் தெரியும் கல்கி தான் முழு கதையையும் சொல்வார். அவரது வார்த்தைகள் மூலமாகவே எல்லா கதாபாத்திரங்களுக்கும் வாசித்தவர்கள் அவர்களது மனதில் கற்பனை உருவம் ஒன்றினை தந்து அவற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

படத்திற்காக நாவலின் திரைவடிவத்தை எழுதி இருப்பவர்கள் மணிரத்னம், ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமாரவேல் ஆகியோர்.

இதில் இளங்கோ குமாரவேல் மட்டும் பொன்னியின் செல்வனின் நாடக வடிவத்தை எழுதிய அனுபவமுண்டு. 

ஜெயமோகன் மற்றும் மணிரத்னம் பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. 

இந்த மூவரும் இணைந்து பொன்னியின் செல்வனை ஐ.ஆர்.20 பையன் என எடுத்து வைக்காமல் இருக்க வேண்டும்.

No comments:

Related Posts with Thumbnails