Special Ops முதல் சீசன் பார்த்த எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் ஹிம்மத் சிங் தான்.
உலகளவில் இந்திய ரா படையினரால் மேற்கொள்ள படும் பல்வேறு நிகழ்வுகளில் மூளையாக இந்தியாவில் உட்கார்ந்து செயல்ப்பட்டு கொண்டு இருப்பார்.
பார்க்கும் எல்லோரையும் வியப்பூட்டும் விதமாக அமைந்திருக்கும் அந்த கதாபாத்திரம்.
அதில் அவரது இளம் பருவத்தை பற்றி அதிகம் காட்டிருக்க மாட்டார்கள்.
Special Ops 1.5 - நான்கு எபிசோட்களை கொண்ட சீசன்.
இதில் ஹிம்மத் சிங்கின் இளம் பருவத்தை பற்றி பேசுகிறது.
அதுவும் கதை சொல்வது அவராக இல்லாமல் மூன்றாம் நபரது பார்வை மூலமாக திரைகதை அமைத்திருப்பது காட்சிகளை பரபரப்புடன் நகர்த்துகின்றன.
முக்கியமாக ஹிம்மத் சிங் வாழ்க்கையை பற்றி யாருமே எதிர் பார்க்காத ஒரு ரகசியத்தை இந்த சீசனில் சொல்லி இருக்கிறார்கள்.
சீசன் எத்தனை சுவாரசியமானது என்று கேட்டால்..... முதல் அத்தியாயத்தை பார்ப்போம் நன்றாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாரத்தில் பார்த்து முடிப்போம் என தான் ஆரம்பித்தேன், ஆனால் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஹிம்மத் சிங் பற்றி ஒருவர் கதை சொல்லும் போக்கில் போவதால் நாமும் கதை கேட்கும் சிறுவர்களாக மாறிவிடுகிறோம். மொத்தமாக பார்த்து முடித்து விட்டேன்.
முக்கியமாக பாராட்ட பட வேண்டியது திரைகதை மற்றும் படத்தொகுப்பும்.
முதல் சீசனை நீரஜ் பாண்டே சிவம் நாயர் என்பவருடன் இணைந்து இயக்கி இருந்தார். இந்த கிடைக்கிறது.
பாண்டே தனித்து இயக்கி இருக்கிறார்.
நாளை ஞாயிறு தவற விடாமல் பாருங்கள். உங்களுக்காக பிரச்சனைகளெல்லாம் திங்கட்கிழமையில் காத்து கொண்டு இருக்கின்றன.
ஹாட்ஸ்டாரில் காண கிடைக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மளையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் வசன உதவி கிடைக்கிறது. இலவசமாக பார்க்க உதவிய முகேஷ் அம்பானி மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு நன்றி.
No comments:
Post a Comment