Pages

Sunday, November 7, 2021

இளைய பிராட்டி குந்தவை II ஒவியர் பத்மவாசன் II பொன்னியின் செல்வன்

பெரும்பாலும் பொன்னியின் செல்வனை தொடராக வாசித்தவர்கள் பெரும்பாலும் பத்மவாசன் ஓவியங்களுடன் தான் வாசித்திருப்பார்கள். (மின் பதிப்பு, மொத்த நாவல் எல்லாம் இப்பொழுது தான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது)

முதலில் மணியம், பின் பத்மவாசன் தற்பொழுது சமீபத்தில் வேதா என்பவரது ஓவியங்களோடு பொன்னியின் செல்வன் தொடராக கல்கி வாரயிதழில் வந்தது. 

நான் என் பெரியம்மா சேகரித்து வைத்திருந்தவையில் இருந்து பத்மவாசன் ஒவியங்களோடு இந்நாவலை படித்தேன். அவர் மணியம் ஓவியங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் தொகுப்பும் ஒன்று வைத்திருக்கிறார் (தற்பொழுது என்னிடமிருக்கிறது). 

மூவர் ஒவியங்களோடும் வாசித்திருக்கிறேன் அதில் எனக்கு பத்மவாசன் ஓவியங்கள் தான் மிகவும் பிடித்த ஒன்று.

கோயில்களை கடவுள் சிறைகள் வரைவதில் சில்பியின் ஒவியங்களை மற்றும் பத்மவாசனின் ஒவியங்களோடு ஒப்பீட்டு பார்த்து ரசித்து லயித்தே இருக்கிறேன். 

அதிலும் இளைய பிராட்டி குந்தவை தனது மன கிடங்கை வல்லவரையன் வந்தியத் தேவனிடன் பகிரும் இரு சிறைகள் அத்தியாயத்தில் பத்மவாசன் அற்செல்வன்   வரைந்திருப்பார். சிறை கம்பிகள் வழியாக குந்தவை தனது கையை வந்தியத்தேவனிடம் தருவார். வாசிக்கையில் மயிர்கூச்சம் ஏற்பட்டது. படித்து 17 வருடங்களாக போகிறது இன்னும் பசுமையாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் கதையை முற்றிலும் வேறொரு தளத்திற்கு கொண்டு போகும் பத்மவாசன் ஓவியங்கள். 

கம்பீரம், அழகு, அறிவு ஆகிய குணங்களை கொண்ட குந்தவையை அப்படியே தனது ஒவியங்களின் கொண்டு வந்திருப்பார். நந்தினிக்கும் அவ்வாறே. 

அப்படியான நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு குந்தவையாக த்ரிஷா நடிக்க போகிறார் என கேள்வி பட்டதிலிருந்து பயமாக இருக்கிறது. பலரது கற்பனையில் உயிருடன் இருக்கும் படைப்பை என்ன என்ன செய்து வைக்க போகிறார்களோ ?

No comments:

Related Posts with Thumbnails