Pages

Thursday, November 4, 2021

அண்ணாத்த - மகாநடிகன்

2004ல் சத்யராஜ் நடிச்சு மகாநடிகன்னு ஒரு படம் வந்துச்சு. ஞாயித்து கிழமை அதுவுமா ஊர் சுத்த நண்பர்கள் யாரும் இல்ல, அதனால இந்த படத்துக்கு போகலாமுன்னு கிளம்பியாச்சு.

வெள்ளிகிழம தான் படம் வந்துச்சு, காலேஜ் இரண்டு நாள் லீவ்ங்குறதால படத்த பத்தி யார் கிட்டையும் எதுவும் கேக்க முடியல.

சத்யராஜ் நடிச்சு நடிகன் படம் செம காமெடியா இருக்கும், அதே மாதிரி மகாநடிகன்ன காமெடி இன்னும் இரட்டிப்பா இருக்குமுன்னு கிளம்பிட்டேன்.

காலைலேயே சோனா மீனா போயிட்டு முத ஆளா டிக்கெட் வாங்கிட்டு போயிட்டேன். டிக்கெட் வாங்க ஜாஸ்தியா ஆள் இல்லாதப்பவே உஷார் ஆகிருக்கணும். கூட்டம் நிறைய இருக்குமுன்னு நம்பி 30ரூபா கொடுத்து பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டேன்.

படம் ஆரம்பிச்சதும் பாக்குறேன்... பர்ஸ்ட் கிளாஸ் எண்ணி 20 பேர் தான்.

நான் உட்கார்ந்து இருந்த வரிசை ல நான் மட்டும் தான் இருந்தேன்.  

படம் கதற கதற வைச்சு செஞ்சுருச்சு. முழு படம் முடிஞ்ச பிறவு தான் கதவ திறந்து விடுவான். வேற வழியில்லாம முழு படத்தையும் பார்த்துட்டு வந்தேன்.

மதியம் வீட்டு வந்தும் படம் பார்த்த தலைவலி போகல. 

வழக்கமா காலேஜ் ல ஒரு கூட்டமா தான் படத்துக்கு போவோம். இந்த படத்துக்கு நான் மட்டும் போய் மாட்டிகிட்டேன். 

சரி ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமுன்னு எல்லா நண்பர்களும் போன் பண்ணி மகாநடிகன்னு ஒரு படம் போனேன் செம காமெடி சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துருச்சுன்ன பார்த்துக்கோன்னு பிட் போட்டு விட்டேன். 

எதிர் பார்த்த மாதிரியே எல்லோரும் கூட்டம் போட்டு ஈவினிங் ஷோக்கு போயிட்டாங்க.

அடுத்த நாள் கிளாஸுக்கு போனப்ப ரவுண்ட் கட்டிட்டாங்க.... ஏண்டா படம் நல்ல இல்லன்ன சொல்லிற வேண்டியது தானே எதுக்கு கோர்த்து விட்டன்னு பஞ்சாயத்து.

அதுக்கு அப்பறம் ஒரு படத்த நான் நல்ல இருக்குன்னு சொன்னாலே இரண்டு வாட்டி யோசிச்சுட்டு தான் கிளம்புவாங்க.

சரி இப்ப என்ன அதுக்கு...?

அண்ணாத்த படம் வந்திருக்கு.... சும்மா நெகடிவ் கமெண்ட்ஸ் எல்லாம் கண்டுக்காத, போய் பாரு செம படமுன்னு உங்க கூட்டாளிங்க உங்களை உசுப்பேத்தி விடுவாங்க .

நம்பி வீக்யெண்ட்க்கு டிக்கெட்ட போட்டுறாதீங்க.

No comments:

Related Posts with Thumbnails