Pages

Sunday, October 17, 2010

நினைவுகள் ஒரு தொடர்கதை



இரண்டு பெண்கள் நிர்வாணமாய் என்னை கட்டிபிடித்து இருப்பது போல் உணர்தேன். இடது பக்கம் நின்ற கௌஷிக்கை ஏளனமாய் பார்த்தேன் ; அவன் என்னை வெறுப்பாய் முறைதான்.

"ok guys ... listen " என்றாள் திக்க்ஷா எதிரே நின்ற கூட்டத்தை பார்த்து . வழக்கமாய் நடக்கும் வெளிக்கிழமை COMMON SALES MEETING அது.

திக்க்ஷா பக்கத்தில் நான் நின்றதால் எல்லோரும் கொஞ்சமாய் ஆர்வமுடன் பார்த்தார்கள்.

"MAYVEE HAS DONE A BUSINESS FOR EIGHT CRORES .... GIVE HIM A BIG CLAP "

ஆரவாரம் அடங்கிய பின் அவள் "THEN MAYVEE .... WHAT DO YOU WANT ???"
"A WEEK OFF ..."
"OK DONE ....."
"AND ....."
"AND "
என்ன கேட்பது என்று தெரியவில்லை . "AND SOME THOUSAND BUGS AS INCENTIVES ...."

= = = = =

அடுத்தது ஒரு வாரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று என் டீம்க்கு சொல்லிவிட்டு பெருங்களத்தூர் நோக்கி பைக்கில் பயணமானேன் . ஒரு வாரம் லீவ் கேட்டு விட்டேனே தவிர ; அந்த ஒரு வாரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அறைக்கு வந்த பின்னும் யோசனை தொடர்ந்தது.

புத்தகம், சினிமா, போதை...... .... முடிந்தால் ....

இரவும் யோசனையில்லாமல் கடந்தது.

"டேய் ..ஆபீஸ் இல்லையா " யுவனுடன் ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்த அப்பாஸ் கேட்டான். தகவல் அறிந்த பின்பு கிளம்பி போனார்கள் : தனிமை திரும்பி வந்தது .

கணேஷ் பவனில் ரவா தோசையை மென்றுக் கொண்டிருக்கும் போது ரேடியோ "நண்பனை பார்த்த தேதி மட்டும்" பாடலை துப்பி கொண்டிருந்தது. கல்லூரி ஞாபகங்கள் வந்து இனித்த பொழுது அவளின் நினைவுகள் வந்ததுடனே தோசையையும் கசத்தது.

மணி பத்து.

வெறுமையின் கண்ணாடியில் வெறுமையை தவிர வேறெந்த பிம்பமும் தெரியாது. அதை போல கவலை கொண்ட மனம் இழந்த காதலை தவிர வேறெதுவும் யோசிப்பதில்லை .

பைக்கில் கிளம்பினேன் . இருபது நிமிஷத்தில் கல்லூரி வந்தது. மனம் ஒரே நேரத்தில் லேசாகவும் பாரமாகவும் இருந்தது. அதைவிட பாரமாக இருந்தது வாட்ச்மேன் கேட்டை திறக்க மறுத்த பொழுது. பணத்தால் அடித்தேன் : வலியில்லாமல் சிரித்துக் கொண்டே கேட்டை திறந்து விட்டான்.

நண்பர்களும் சேட்டைகளுமாய் சுற்றி திரிந்த நாட்கள் ஒரு முறை கண்முன்னே வந்து போனது . சூரியன் கோவமாய் இருந்தான், வேர்வை அதிகம் வந்தது, கல்லூரி வளாகத்தை சுற்றிய கால்களும் வலித்தது, அந்த இடமும் வந்தது. ஜூனியர்ஸ் காண்டீனில் அருகே இருக்கும் அந்த சிமென்ட் பெஞ்ச். என் காதலியாய் வந்த அவள், வேறொருவனை கல்யாணம் கட்டிக் கொள்ளும் பெண்ணாய் என்னை விட்டு பிரிந்த இடம்.

"நல்ல படிச்சு இருக்காரு ...நல்ல சம்பாதிக்கிறாரு ..... "
வேறேதேதோ பேசினாள், எதுவும் ஞாபகம் இல்லை. அன்று முதல் அவளது நினைவுகளும் அவள் பேசிய வார்த்தைகளும் தந்த வலி தான் என் மனதை புணர்ந்து கொண்டே இருந்தது.

கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டேன் , நினைவுகளை சுமக்க முடியாமல் டி கடையில் நின்றுக் கொண்டிருந்த பொழுது ரேடியோ "சொர்கமாக நான் நினைத்தது, இன்று நரகமாக மாறி விட்டது" என்று 
பாடிக்கொண்டிருந்தது.

பிறகு வந்த நாட்கள் வெறுமையாய் போனது. அப்பாஸ், யுவன் வேலை விஷயமாய் வெளி ஊர் போனார்கள். ஆணுறைக்கு கொஞ்சம் செலவானது. திக்க்ஷா இரண்டு முறை வந்து போனாள்.

மீண்டும் வெளிக்கிழமை வந்தது. ஆபீஸ்க்கு போக இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபடியால் உலக பொருளாதார ஆடுகள் என்னென்ன பண்ணி இருக்கிறார்கள் என்று படித்துக் கொண்டிருந்தேன். யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. கொஞ்சம் குழம்பி போன பின், அது என் போன் தான் என்று அதை எடுக்க போனேன்.

"சார் ...." என்றான் சிவா : மூன்று மாதம் டார்கெட் முடிகாதவன்.

"சொல்லுப்பா..."

" CHENNAI PROPERTY FAIR போட்டு இருக்காங்கல ..... அதுல நம்ம ஸ்டால் போடுறோம் சார் ..."

"அப்படியா ..ரைட்டு போடுங்கப்பா .... திக்க்ஷா மேடம் இல்லாட்டி பிரவீனை...."

"சார் நீங்க வருணும் ......"

"அப்படிங்கிற ..ஆமா PRPOERTY FAIR ல INVESTMENT பத்தி கேட்க ஆளுங்க...... சரி விடு நாளைக்கு வரேன்."
= = = = =

சனிகிழமை.

காலை முதல் டீம் பசங்களுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தேன்.

"ஆமா சார் ...ஏன் MBA வுல MARKETING & HR எடுக்கணும்ன்னு சொல்லுறீங்க ??"

"ஏன்ன்ன நாளைக்கு நீ ஒரு டீம் லீடர் ஆகிட்டன்னு வைச்சுக்கோ...ஒரு இருபது பேரை ஹான்டில் பண்ண உனக்கு நிச்சயம் ஹுமன் ரிசௌர்ஸ் ஸ்கில்ஸ் தேவைப்படும்."

நேரம் போனது. மதிய உணவும் உள்ளே போனது எல்லோருக்கும் என் செலவில். மாலை நேரம் நெருங்க அதிகமான பேர் வந்தார்கள்.

கொஞ்சம் பிஸியாக டீம் பசங்களுக்கு அவர்கள் கிளைன்ட் உடன் பேசும் போது உதவி செய்து கொண்டிருக்கும் பொழுது ...

"மேவி ...." பழகிய குரலில் என் பெயர் கேட்டது. என்னுடைய அன்றைய அவள். திரும்பி பார்த்த பொழுது

இன்று வேறு ஒருவனின் மனைவி என்பது அவள் பதட்டத்துடன் திரும்பி பார்ப்பதில் இருந்தே தெரிந்து கொண்டேன். கல்லூரி நாட்களில் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் வரும் அழகிய அவஸ்தைகள் எதுவுமில்லை ஏனென்றால் நானும் அவளுடைய அவனாக இல்லை. காயம் பட்ட உணர்வுகள் எதுவும் தலைகாட்டவில்லை.

அருகே வந்தாள்.

"மேவி... அப்படியே வா ....அங்க உட்கார்ந்துகிட்டு என் கிட்ட கிளைன்ட் கிட்ட பேசுற மாதிரியே பேசு...."

"காயத்திரி ...." ஒருவன் ஐந்து வயது சிறுவனை கையில் பிடிபதபடி வந்தான்

"ஒரு INVESTMENT PLAN பத்தி கேட்டுட்டு வரேன் .நீங்க FOOD COURTக்கு போய்அவனுக்கு எதாச்சு சாப்பிட வாங்கி  தாங்க . நான் இதோ வரேன்."

நான் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன், பார்வையில் இருந்து அவன் மறைந்தான். திரும்பி அவள் என்னை பார்த்தாள்.

எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. வேலை விஷயமாய் உட்கார்ந்து இருந்ததால் ரொம்ப உணர்ச்சியை காட்ட முடியவில்லை. வேஷமிட்டு பழகி பல வருடங்கள் ஆகிவிட்டது, அதனால் சாதரணமாய் உட்கார்ந்து இருந்தேன். அவள் தான் தவிப்பாய் தவித்து கொண்டிருந்தாள். எனக்கு டார்கெட்யை பற்றி தான் கவலையாக இருந்தது. டீம் பசங்களை அப்பப்பொழுது பார்த்து கொண்டிருந்தேன்.

அவளின்னும் பேசவில்லை. எனக்கு வேறொருவன் மனைவியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

ஐந்து நிமிடம் போயிருக்கும்.

"கல்யாணம் ஆகிருச்சா ?"

அப்பொழுது தான் கண்களை பார்த்தேன். கலங்கி இருந்தது. கன்னங்களில் இரண்டு கண்ணீர் துளி. சிவா ஏதொரு ஆளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு இருந்தான்.

திக்க்ஷாவை பற்றி சொல்லலமா என்று யோசித்தேன்.

"இன்னுமில்லாம்மா".

தலையை குனிந்து அழுக ஆரம்பித்தாள். முக்கு சிந்தினாள்.

"சார் இரண்டு LOGIN ...." என்று சொல்லியபடி திரும்பிய சிவா இவள் அழுவதை பார்த்தவுடன் மேற்கொண்டு பேசாமல் திரும்பி கொண்டான்.

முகத்தை திருப்பி பார்த்தேன். அவளை காணவில்லை தூரத்தில் நடந்து போய் கொண்டு இருந்தாள். அவள் பின்னாடியே தொடர்ந்து போக என்னோ தோன்றவில்லை.


கொஞ்சம் நேரம் கழிந்து காப்பி சாப்பிட போனேன். டோக்கன் வாங்கிவிட்டு காப்பிக்காக காத்திருந்த போது. அவளை பார்த்தேன்.

கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள். குழந்தையை போட்டு அடித்து கொண்டு இருந்தாள்.

"ஏம்மா இன்னைக்கு மட்டும் குழந்தையை போட்டு இப்படி அடிக்குற ?" அவளுடைய கணவன் என்பவன் கேட்டு கொண்டிருந்தான். அவள் முகத்தில் ஏதொரு சொல்லமுடியாத வலி தெரிந்தது.

அன்றைய நாள் பொழுதின் டார்கெட் முடித்த பிறகு : இரவு பெருங்களத்தூர் கணேஷ் பவனில் சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

"உறவுகள் தொடர்கதை ; உணர்வுகள் சிறுகதை ...." ரேடியோ பாடிக் கொண்டு இருந்தது.

ஒரு இட்லி மிச்சம் இருந்தது. கை கழுவி, காசு தந்துவிட்டு அறைக்கு வந்தேன்.

மீண்டும் அவளின் நினைவுகள். நிஜத்தில் வேறொருவனில் மனைவியாக இருந்தாலும் : நினைவுகளில் இன்னும் அவள் என் காதலியாக தான் இருந்தாள் .

ஜன்னல் வழிய வானத்தை பார்த்தேன். இருள். நான் தேடி கொள்ளாத இயலாமைகளின் வலி வலித்தது. தனிமை. அப்பாஸ் யுவன் இன்னும் வரவில்லை.

காகிதம் எடுத்து எதாவது எழுதி மனதை திசை திருப்பலாம் என்று பார்த்தேன். எழுத்துக்களாய் ஒன்றும் வரவில்லை .

"MAYVEE ..... BE ... MBA ... MS ...." பட்டங்கள் இருந்தது...ஆனால் அவள் இல்லையே என்ற எண்ணம் அழுகையில் முடிந்தது.

கண்களை மூடினேன். திக்க்ஷா, காயத்திரி, அவள் கணவன், அவளின் குழந்தை, அம்மா அப்பா ; எல்லோரும் கண்முன்னே வந்தார்கள்.

பல குழப்பத்துடன் தூங்காமல் இரவை கழித்தேன்.


Sunday, October 10, 2010

கனவொன்றில் உறைந்த அபலை - அய்யப்பமாதவன்

எந்தப் பெண்களும் இல்லாத பொழுதில்
பிரபஞ்சமே நிர்மூலமானதாக
முதன்முதலாக முத்தமிட்டவளை உருவாக்கிக்கொள்கிறான்
கற்றோ படிரென சன்னலை அறைந்துமூடுகிறது
விழித்துக்கொண்டவளின் முழுக்காதலுடன்
வீர்யமிக்க காமத்தை
களையும் உடல் வழியே துய்க்கிறான்
கெட்ட சொப்பனத்தின் இடையூறில்
மங்கி மறையும் நிர்வாணம்
சபிக்கப்பட்ட நகரத்தில்
பித்தம் முற்றிய நிலையில்
ஒழுங்கற்ற வறண்ட பாழ் மனதுடன்
அபலை போன்ற தோற்றத்தில் நிற்கிறான்
வீசுகின்ற காற்றில் காதோரம் அசையும் முடிகளில்
அவள் விரல்கள் கோதிய ஞாபத்தில்
ஏதோ ஒரு நிழல் தொடர பயந்து
சாய்ந்து படுத்தான் சிதைவுற்ற கட்டிலில்
கேலிச் சிரிப்புகள் பெருகும் வெளியினை மூட
தனிமைக்குள் புகுந்து சென்றான்
வெளியில் அலறும் காற்றில் துர்தேவதைகள்
தாழிட்ட கதவை உடைக்கின்ற வேளை
பெண்களுள்ள பிரதேசங்களை தேடும் கனவொன்றில்
உறைந்துபோனான்



எழுதியவர் - அய்யப்பமாதவன்
புத்தகம் - நிசி அகவல்
பதிப்பகம் - ஆழி
விலை - ரூ. 60
நன்றி - கார்த்திகை பாண்டியன்

Sunday, October 3, 2010

தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம்




எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் தேவன். இத்தனைக்கும் அவரது நாவல்களை நான் அதிகம் படித்ததில்லை. அவரோட விச்சுவுக்கு கடிதங்கள், ரங்கூன் பெரியப்பா , போக்கிரி மாமா, பார்வதியின் சங்கல்பம் , சீனு பயல் போன்ற கட்டுரை + சிறுகதை தொகுப்பை தான் படித்திருக்கேன். so ஸ்ரீமான் சுதர்சனம் தான் நான் படித்த தேவனுடைய முதல் நாவல்.

படிக்க ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் பயமாக தான் இருந்துச்சு, ஏதோ சிறுகதை ல அடிச்சு எழுதிட்டாரு, அதையையே நாவலையும் கையாண்டு இருப்பாரான்னு.
பிறகு இந்த புத்தகம் வாங்கின்ன போது, புஸ்தகத்தை திறந்து அதிகம் படிக்கல : சும்மா அட்டையை பார்த்தே வாங்கிட்டேன். அதுவே முக்காவாசி கதையையும் சொல்லிரும். ஏழை குமாஸ்தாவான சுதர்சனத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளும் , அத்தனை அவன் சமாளிக்கும் வழிகளும் தான் மொத்த கதைக்கும் அடிநாதம்.

தேவன் அவர்கள், தனிமனித உணர்வு போராட்டம் ன்னெல்லாம் போகாமல் : ரொம்ப சாதாரணமாய் , ஒரு சாமானிய மனிதனின் பார்வையில் சொல்லிருக்காரு. பிறகு இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும், என்னதான் கதை 1930 களில் நடப்பது போல் இருந்தாலும், அந்த காலத்தை ஆவண படுத்த முயற்சிக்காமல் நம்மை கதையின் நாயகனான சுதர்சனதுடன் பயணிக்க வைக்கிறார் தேவன், இது சுதர்சனம் ஸ்ரீமான் சுதர்சனம் ஆகும் வரைக்கும் ...முதலில் இருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட விலகாமல் : சுவாரசியம் அப்படியே இருக்கிறது.

சுதர்சனம் ரொம்ப பாவமுங்க. வீட்டுலையும் சரி, ஆபீஸ்லையும் சரி இரண்டு பக்கமும் அவனுக்கு பயங்கர இடி கிடைக்குது. அவனுடைய மனைவி கோமளத்தை சந்தோஷ படுத்த வசதிக்கு மீறிய வீட்டிற்கு ஜாகை மாறுகிறான், அதற்க்கு தேவையான பணத்தை : அக்கவுண்டண்ட் கங்காதர பிள்ளை அசந்த நேரத்தில் திருடி விடுகிறான். புது வீடிற்கு போன கோமளம் கொஞ்ச குஷியாகி தனது வீடிற்கு லெட்டர் போட்டு விடுகிறாள். பிறகு அவளுடைய அப்பா அம்மா வருகிறாங்க : ஆஸ்பத்திரி செலவுகள். இதை கேள்வி படும் சுதர்சனத்தின் அம்மா கோவத்துடன் சுதர்சனத்தின் தங்கையை பிரசவம் பார்க்க அழைத்து வந்து விடுகிறாள்.... இதனால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க சம்பள உயர்வு கிடைக்காத காரணத்தால் மீண்டும் மீண்டும் ஆபீஸ் பணத்தை திருடுகிறான் அதுவும் சிறு சிறு தொகைகளாக, ஏனென்றால் அவனுக்கும் மனசாட்சி இருக்கிறதல்லவா . ஒவ்வொரு முறையும் எப்படியோ தப்பி விடுகிறான்.

இதனிடைய அவனது முதலாளி பரமேசுவர முதலியாரின் நல்ல உள்ளதை கண்டு வருந்துகிறான். ஆனால் என்ன செய்ய வருஷ ஆடிட்டிங் செய்வதற்கு ஆடிட்டரின் இரண்டு உதவியாளர்கள் வறாங்க..... ஆடிட்டிங் நேரத்துல நடக்கும் பெரிய பண கொள்ளை ..அதனால் ஒரு விபத்து.. பிறகு என்ன என்பது தான் கதை.

இதில் ஆபீஸ் அரசியல், வேலை செய்பவர்களிடைய இருக்கும் விரோத மன போக்கு...... சத்யமாக தேவன் அவர்கள் தனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதி உள்ளாரோன்னு எண்ண தோன்றும்.

என்னதான் கங்காதர பிள்ளையை ஆரம்பம் முதல் ஒரு வில்லன் மாதிரி காட்டி இருந்தாலும், கடைசில் அவர் பரமேசுவர முதலியாரிடம் சுதர்சனதிற்காக பேசும் பொழுது அவருடைய நல்ல மனசு தெரியுது. பிறகு பரமேசுவர முதலியார் - இந்த கதையிலையே மிகவும் அருமையான பாத்திர படைப்பு.
= = = = =

இதை நான் ஆபீஸ் போகும் பொழுதும் திரும்ப வரும் பொழுதிலும் எலெக்ட்ரிக் ரயிலில் தான் படித்தேன். FIRST CLASS வகுப்பு என்பதினால் ; 50 வயதை கடந்தவர்கள் கொஞ்சம் நிறைய இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இந்த புஸ்தக அட்டையை பார்த்துட்டு , என்கிட்டே பேசுவாங்க. நிறைய சுவாரசியமான தகவல்கள் எல்லாம் சொல்லுவாங்க. அதையெல்லாம் கேட்டு கேட்டே ரொம்ப ஆர்வமாக படிச்சு முடிச்சேன் .


அதுவும் அந்த காலத்துல இந்த கதை மவுண்ட் ரோடு, வடபழனி முருகன் கோவில் என்று சுற்றி வந்ததால் அப்பொழுதைய சென்னை மக்கள்ஸ் கொஞ்சம் குஷியாக படிப்பார்கள்ன்னு ஒருத்தர் சொன்னாரு.
= = = = =
அங்கங்கே முருகன் பக்தி பாடல்கள் கொஞ்சம் வருது ...தேவன் அவர்களுக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தின்னு தெரிஞ்சுக்க முடிது.


அதே போல் .... சுதர்சனம் குடி போகும் அந்த ஏரியாவாக தேவன் எதை சொல்லி இருப்பாருன்னு நாவலை படிச்சு முடிக்குர வரைக்கும் யோசிச்சுகிட்டே இருந்தேன் .


இந்த நாவலை வெளியிட்டு இருப்பது கிழக்கு பதிப்பகம். விலை நூறு ரூபாய்

கடைசியா முடிக்குறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் - நகைச்சுவை கதைகள்ன்னாலே அதற்க்கு வயசு ரொம்ப கம்மி தான். ஏன்ன அன்னைக்கு நகைச்சுவைன்னு இருந்த எழுத்தக்கள் இன்னைக்கும் நகைச்சுவையாக பார்க்க படுமான்னு தெரியாது. நான் இதை படிக்கும் பொழுது விழுந்து விழுந்து சிரிக்க விட்டாலும் ; I ENJOYED READING .

இந்த நாவல் வாரயிறுதி நாட்களில் படிக்க ஏற்றது ....
= = = = =
டிஸ்கி - நாவலை படிச்ச பிறகு ; ஒரு தொழிற்சாலையில் சாதாரண ஊழியரான எங்க அப்பா எப்புடி நாங்க கேட்டதை எல்லாம் வாங்கி தந்து , எப்புடி ஒரு பணகார தன்மையான சந்தோஷங்களுடன் எங்களை வளர்த்தார்ன்னு ஆச்சரியமா இருக்கு. EAST OR WEST : MY DAD IS BEST . MA DAD ALWAYS ROCK ....

Related Posts with Thumbnails