Pages

Wednesday, July 29, 2009

நம்முடைய பஜாஜ்





இந்த விளம்பரம் தான் இந்தியாவின் முதல் மாபெரும் சந்தையிடுதாளுக்கான முயற்சி என்று கூட சொல்லலாம். ஒரு தலைமுறையையே பஜாஜ் வாங்குவதற்கு பெருமை பட வைத்த விளம்பரம் இது. இதன் முலம் வந்த அடித்தளம் தான் பஜாஜ்யின் நிரந்தர சந்தைக்கு வழிவகை செய்தது என்று சொன்னால் அது மிகை அல்ல .


இதன் சிறப்பு அம்சம் என்று பார்த்தால் ; எந்த கலாச்சாரத்துக்கும் பொருந்தி போகும். பஜாஜ்யை பல குடும்பங்களில் ஓர் அங்கமாக ஆக்கியது இந்த விளம்பரம் முலமாக தான்.

branding என்ற தத்துவம் வேருன்றியது இந்த விளம்பரத்தால் தான் ; பிற கம்பெனிகளும் இதே போன்று முயற்சி செய்து தோல்வி அடைந்தது. பிறகு வருடங்கள் பல கழிந்த பின் TVS 50 யும் இதே போன்று முயற்சித்து பார்த்து ; ஆனால் ஒரு அப்பீல் இல்லை ; அது வெறும் அந்த வாகனத்தின் பெருமையே பேசியது.

அப்பொழுது லைசென்ஸ் ராஜ்யம் நடந்து கொண்டு இருந்த நேரம் ; ஒரு வண்டி வாங்க பல நாட்கள் காத்து கொண்டு இருக்க வேண்டும் ; மக்களின் வருமானமும் பஜாஜ் ஸ்கூட்டர்யை ஒரு ஆடம்பர பொருளாக தான் வைத்து இருந்தது. இத்தனை இடர்பாடுகளையும் தண்டி மக்களை ஏதோ ஒரு வகையில் வசியம் செய்தது இந்த விளம்பரம். இந்திய மொழிகளில் எல்லாவற்றியும் பெரும் வெற்றி. ஏன் இந்திய விளம்பரத்துறையின் முதல் மாபெரும் வெற்றி என்று கூட கூறலாம். அதற்க்கு சாட்சி இன்னும் இந்த விளம்பரம் கொண்டாட படுவது தான்.


இன்னுமும் ஞாபகம் இருக்கிறது பசுமையாய் சிறு வயதில் அப்பாவை நான் பஜாஜ் வாங்க சொல்லி நான் அழுதது. ஆமாம் குழந்தைகள் தான் இதற்க்கு டார்கெட். இன்றைய காலக்கட்டத்தில் இதன் மதிப்பு என்று பார்த்தால் இந்த விளம்பரம் ஏற்படுத்திய தாக்கம் வேறு யாரும் ஏற்படுத்தவில்லை இன்று வரையில்.

சரிந்த மார்க்கெட்யை மீண்டும் உயிர்பிக்க இந்த விளம்பரத்தையே ரீமிக்ஸ் செய்து வெளியிட்டது ; வெற்றி. ஆனால் அதில் இளைய தலைமுறையின் கலாச்சார நம்பிக்கைகள் பற்றி கூறியது. அந்த விளம்பரம் இதோ





இது கையாண்ட சித்தாந்தம் ; நான் இந்தியன் அதனால் நான் பஜாஜ்யின் உரிமையாளன்.

11 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான இசையுடன் கூடிய விளம்பரம்..:-))))

நட்புடன் ஜமால் said...

பழைய நினைவுகள்.

ஹூம் நல்லாயிருக்குப்பா

prabhu said...

"மலரும் நினைவுகள்"

விளம்பரம் என்பது பொருளை பற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் கலாச்சாரத்தையும் கலந்து கொடுத்திருப்பதால் வெற்றி பெற்றது.

கலாச்சாரத்தை கலந்து சொன்ன அத்தனை விளம்பரமும் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த விளம்பரம் சொல்லப்பட்டவிதம் அருமை.

எனது மாமா அவனது second Innings - ஐ தொடங்கிவிட்டான்...

வாழ்த்துக்கள் மாமா....

பிரபு சேது...

Divyapriya said...

பழைய ad தான் super :))

கார்க்கிபவா said...

ஆனால் பஜாஜின் இந்த தலைமுறையினர் அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயலாமல், first time buyers மட்டும் குறி வைக்கிறார்கள். இப்போதெல்லாம் இரண்டாவது பைக்கும் பஜாஜையே வாங்க நினைப்பவரக்ள் சொற்பம்..

Vijay said...

ஹமாரா பஜாஜ் விளம்பரம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சொல்லலாம்.ஆனால் இப்போ வரும் pulsar விளம்பரம், சகிக்கலை :-)

Karthik said...

எனக்கு சுமாரா இருக்கிற மாதிரி தோணுது. கண்டுக்காதீங்க நம்ம டேஸ்ட் கொஞ்சம் அப்படி. :-(

பாப்புலரான விளம்பரம் என்று தெரியும். நன்றி தல! :-)

ஹேமா said...

மேவி,நல்லா இருக்கு.ரசிச்சேன்.

வால்பையன் said...

மேவி உங்களுக்கு அம்புட்டு வயசாயிருச்சா!?

நாஞ்சில் நாதம் said...

பழைய நினைவுகள்.

ஹூம் நல்லாயிருக்கு

MT said...

berther..

actually the bike you are driving is mine!

so actual urimayallan is me.. but you can take the credit!

Related Posts with Thumbnails