Pages

Friday, January 29, 2010

தேவதையின் கை - தொகுப்பு

தீபாவளிக்கு சில நாட்கள் முன் திருச்சி காற்றை சுவாசிக்க இரவு EGMORE ல ரயிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். செமையான கூட்டம். அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.

(-)

இருக்கையில் அமர்ந்து இருந்தேன். பையில் இருந்து KARL MAX எழுதிய DAS KAPITAL படிக்க எடுத்தேன். TTR வருகிறாரா என்று பார்க்க தலை நிமிர்ந்தேன். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் ஏதோ ஒரு சத்தம் என் காதில் கேட்டது.

(-)

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சில பெண்கள் "இது தானா!!??? இது தானா!!??" என்று ஒரு ரொமான்டிக் பாட்டு பாடி முடித்து இருந்தார்கள். அந்த பெர்த்யில் என்னை தவிர எல்லோரும் பெண்கள்.

(-)

கையில் CHETAN BHAGAT எழுதிய 2 STATES வைத்த படி எதிர் இருக்கையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தேன். DAS KAPITAL பையில் தூங்கி கொண்டு இருந்தது.

(-)

அவள் ஏதோ நாவல் படித்து கொண்டு இருந்தாள். ரயில் இப்பொழுது EGMORE க்கு விடை தர தயாராகி கொண்டு இருந்தது. இடது கை கொண்டு வலது புருவத்தை சொரிந்து கொண்டே இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன். எப்படி பார்த்தாலும் அழகாய் இருந்தாள்.

(-)

அவள் நான் பார்ப்பதை பார்த்து விட்டாள். பிறகு என்ன என்பது போல் முக பாவனை செய்தாள். ஒரு சிலை உயிர் பெற்றது இருந்தது. அவள் கையில் லியோ டால்ஸ்டாய் சிறுகதை தொகுப்பு. அதை பார்த்த உடனே அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை தலை தூக்கியது.

"AGATHA CHRISTIE எனக்கும் பிடிக்கும்........" என்றேன் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தபடி.
"ஹலோ!!! நல்ல பாருங்க இது லியோ டால்ஸ்டாய் எழுதின புக்கு"
"அப்படியா??"
"ஆமா"
"இல்ல, உங்க முகத்தை பார்த்த அப்படி தெரிஞ்ச்சு"
"எப்புடி தெரிஞ்ச்சு"
"ரொம்ப சீரியஸ் ஆ"
"ம்ம்ம்"

(-)

ரயில் கிளம்ப ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது நாங்கள் நல்ல பேச ஆரமித்து இருந்தோம். அவள் தனியாக வந்து இருக்கிறாள் என்னை மாதிரி.

"காபி சாப்பிடலாமா"
"டைம் ஆகிருச்சு"
"அதனால என்ன"
"TRAIN ஸ்டார்ட் ஆச்சுன்னா"
"எல்லாம் நான் பார்த்துக்குறேன்"
"இல்லை வேண்டாமே"

(-)
ரயில் திநகர் தண்டி போய் கொண்டு இருந்தது. கையில் காலியான காபி கப்களுடன் நானும் அவளும் கதவின் அருகே நின்று பேசி கொண்டு இருந்தோம். பெர்த்க்கு வந்த பிறகு ஏசி குளிரை விட அவளின் பேச்சு ரொம்ப.........

(-)

ரயில் தாம்பரம் தண்டி கொண்டு இருந்தது. TTR வந்தார். அவளுடைய டிக்கெட்யை வாங்கி என் டிக்கெட் உடன் சேர்த்து கூடுதேன். அவளுடைய டிக்கெட்யை முதலில் திருப்பி தந்தார். பிறகு என் டிக்கெட்யை இரண்டாவதாக. அவளிடம் டிக்கெட் திரும்ப தரும் போது அவளுடைய வயது 24 என்று எனக்கு தெரிந்து இருந்தது.

(-)

ரயில் செங்கல்பட்டுயை கடந்து கொஞ்சம் நேரம் ஆகிருக்கும். கதவின் அருகே நின்று கொண்டு இருந்த பொழுது எங்கள் பேச்சு பல விஷயங்கள் கடந்து வந்து இருந்தது.

"தேவி. DO U READ TAMIL BLOGS"
"ya."
"எந்த மாதிரியான பிளாக்ஸ்"
"POPULAR பிளாக்ஸ் அப்பரும் FRIENDS லிங்க் குடுக்கிறது"
"ம்ம்ம். ஒன்னு தெரியுமா"
"என்னது"
"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.... அதுகுள்ள ????"
"ஓ அப்படியா"
"ஆமா அப்படி தான்"
"நான் கார்கியோட எல்லா போஸ்ட்யையும் படிப்பேன். ஆமா நீ பிளாக் எழுதுவியா?"

(-)

அவள் எனது ஐ-போன்யை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். நான் திறந்த கதவின் வழியாக நச்ச்திரங்களை பார்த்தேன். அதை பார்த்த பொழுது எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன குபீர் ராஜாவின் கதை ஓன்று ஞாபகம் வந்தது. ஒரு சமயம் குபீர் வாலிபனாய் இருக்கும் பொழுது அவரது கிராமத்தில் இருந்து இரவில் சில திருடர்கள் தப்பித்து குதுரையில் சென்று கொண்டு இருந்தனர். குபீரும் அவர்களை தனது குதுரையில் துரத்தி கொண்டு இருக்கும் பொழுது ;அவரின் குதுரையின் வேகத்திலே மற்றொரு குதுரையை செலுத்திய படி இன்னொருவன் வந்து கொண்டு இருந்தான். இதை பார்த்த குபீருக்கு ஆச்சிரியம் தங்க முடியவில்லை. படளிபுரத்தில் அவனை போல் குதுரையை செலுத்த யாரும் இல்லை. அந்த அளவுக்கு பெயர் பெற்று இருந்தான். தன் வேகத்திற்கு இணையாக வருவது யாராக இருக்கும் என்ற கேள்விகளோடு திருடர்களை தொரத்தி கொண்டு இருந்தான். திருடர்களை நெருங்கிய சமயம் ; தன்னோடு போட்டியாக வந்தவனின் முக்காடு ஓர் மரத்தின் கிளையில் மாட்டி முகம் வெளிப்பட்டதை கவனித்தான். ஆச்சிரியம் தாங்க முடியவில்லை அவனால். போட்டி குதுரை மேல் வந்தது ஓர் பெண். அந்த வேகத்திலும் அவளின் முகம் பௌர்ணமி நிலவாய் அவனுக்கு காட்சி தந்தது.அதே மாதிரி தான் இருந்தது எனக்கு அப்பொழுது. அங்கு வெவ்வேறு குதுரை : இங்கு நாங்கள் இருவரும் ஒரே ரயில் பெட்டியில்....

(-)

"ஐய்யோ......." என்று அவள் அலறியது என் காதுகளில் கேட்டது. காயம் பட்ட விரலை பிடித்து கொண்டு இருந்தாள். வலியை விட அவள் என் கையை பிடித்து கொண்டுயிருக்கிறாள் என்ற நினைவே வலியை மறக்க செய்தது. அந்த நொடி ஓர் பெண்ணிடமிருந்து முதல் முறை காதல் கடிதம் வாங்கினது போல் உணர்ந்தேன். என் அறிவு மங்கி, மனம் வேலை செய்ய ஆரமித்தது. வார்த்தைகள் தங்களின் ஒலியை மறந்து வெறும் காற்றை மட்டும் வெளியேற்றி கொண்டு இருந்தது. அது என்ன வடிவங்களில் அவள் காதுகளில் கேட்டதோ தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து சிரித்த படியே ஏதோ சொன்னாள்.

(-)

விழுப்புரம் நெருங்கி கொண்டு இருந்தது நான் காதலில் விழுந்து ; அந்த நிகழ்வு சரித்திரமாகி கொஞ்ச நேரம் ஆகிருந்தது. அந்த அனுபவம் மீண்டும் கிடைக்க கதவின் வழியே கையை வெளியே நீட்டலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தாய்மை உணர்வு இருக்கிறது என்று என்றோ சதீஷ் சொன்னது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது தேவையில்லாமல் கூடவே சதீஷும் வந்தான். ஒரு பெண் பக்கத்தில் இருக்கும் பொழுது நண்பன் நினைவுக்கு வந்தால் எவ்வளவு பெரிய கொடுமை என்று உணர்ந்தேன்.

(-)

பிளாட்பாரத்தை பார்த்தேன். வலது பக்கம் பார்த்துவிட்டு இடது பக்கம் பார்த்தேன். தூரத்தில் டீக்கடை திறந்து இருந்தது.டி மிகவும் சூடாக இருந்தது. இரண்டு கைகளில் கோப்பைகளை பிடித்து நடந்து கொண்டு இருந்தேன்.இரண்டாம் விரல் பிறகு மூன்றாம் விரல் அதன் பிறகு நான்காம் விரல் மீண்டும் பழையபடி இரண்டாம் விரல் ; எப்புடி வைத்து பிடித்தாலும் சுடு பொறுக்க முடியவில்லை. கட்டை விரலை தான் மாற்றி வைக்க முடியவில்லை. அதனால் அதில் சுடு அதிகமாக தெரிந்தது.ரயில் கிளம்பியது.

(-)

எதிர் மேல் பெர்த்தில் அவள்.தூக்கம் வரவில்லை. வரவும் நான் விரும்பவில்லை. நச்சத்திரங்களை கொண்டு இருளில் வண்ணமயமாய் தெரியும் அவள் முகத்தில் வைத்து அழகிற்கு அழகு சேர்க்கலாம் என்று நினைத்த பொழுதில் அவள் அழகை கடன் வாங்கி நச்சத்திரங்கள் அழகாகி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்துவிட வெறும் அவள் கண்களை பார்த்து கொண்டு இருந்தேன். அவை இரண்டும் என்னை பார்ப்பது போல் ஓர் பிரம்மை. பிரம்மை பிரம்மையாக இல்லாமல் நிஜமாக இருக்க கூடாத என்று ஆசை வந்தது.

(-)

எது அவள் மேல் காதல் கொள்ள வைத்தது....???? அவளது குணமா, அறிவா இல்லை என்றால் அவளது அழகா ???அவள் என்னை பற்றி என்ன நினைக்கிறாள் ????என்று சில எண்ணங்கள் அலை மோதியது தூக்கத்தில் நினைவிழக்கும் முன்பு.

(-)

ரயிலை விட்டு இறங்கி நின்று கொண்டுயிருந்த போதும் அவளை காணவில்லை. இறங்கும் முன்பு அவள் டாய்லட் சென்று இருப்பாள் என்று எண்ணி கொண்டேன் அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து எழுந்தபடியால்.
"பாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.திடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது. வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று; உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன."

அவள் பரிசாக குடுத்த புத்தகத்தை படிப்பதை நிறுத்தி விட்டு ஜன்னல் வழியே பார்த்தேன். ஸ்ரீரெங்கம் ரயில் நிலையத்தை ரயில் தண்டி கொண்டு இருந்தது. அப்பொழுதிருந்து ரயிலை விட்டு இறங்கும் முன்பு வரை அவளை காணவில்லை.

(-)

அவளோடுயான நட்பை என்னால் ரயில் சிநேகமாக கருத முடியவில்லை. அவள் என்னை தேடி வருவாள் என்று காத்து கொண்டுயிருந்தேன்.நொடிகள் நிமிடங்களானது. ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. திருச்சி காற்றை சுவாசித்த பிறகும் என் மனதில் அமைதி தோன்றவில்லை.காத்து இருப்பது வீண் என்று தோன்றவே சப்-வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது"ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"

(-)

என்னை நானே வெறுத்தேன். அஞ்சினேன் வாழ்வில் முதன் முறையாக தோற்று விடுவோமோ என்ற பயத்தில் உணர்வுகள் தடுமாறியது.ஸ்வீட் வாங்கி வா என்று அம்மா சொன்னது நினைவுக்கு வரவே.டிக்கெட் கவுன்ட்டர் எதிரே உள்ள அடையாறு அனந்த பவனுக்கு போய் ஏதோ பெயர்களை சொல்லி, பணத்தை கட்டிய பிறகு தன கவனித்தேன். எப்படி வாங்கினேன் என்று தெரியவில்லை. அத்தனையும் எனக்கு பிடிக்காத ஸ்வீட்கள்; அவளுக்கு பிடித்தவை. அந்த அளவுக்கு மனதில் அவளிருந்தாள்.

(-)

ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமாய் பஸ்யில் தான் பயணம் செய்வேன். சிறிது தனிமை தேவைப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை.
"திருவெறும்பூர்...."
"திருவெறும்பூர்ல எங்க........"
"சாந்தி தியேட்டர் எதிருல..... கரை மேல ஒரு கிலோ மீட்டர் போகனும்...."
"250 ....."

(-)

மன்னார்புரம், அந்த பழைய RTO ஆபீஸ் கட்டடத்தை பார்த்த உடனே ........
"நானும் திருச்சில கொஞ்ச நாள் இருந்திருக்கேன்..... தெரியுமா?"
"நிஜமாவா ......"
"அப்பா, திருச்சி RTOல கொஞ்ச நாள் இருந்தாரு....."சிரித்தேன். மேற்கொண்டு நடந்த சம்பாஷனை நினைவுக்கு வந்ததால்.

(-)

ஜமால் மொகமத் காலேஜ்யை கடக்கும் போது. டூ வீலரில் தாயின் மடியில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்து சிரித்தேன், பிறகு குழந்தையின் தாய், தந்தை எல்ல்லோரையும் சேர்த்து ஒரு குடும்பமாக பார்த்த பொழுது ஏன்னோ காணமல் போன சோகம், மனதின் விலாசம் அறிந்து, மனதிற்குள் குடி வந்தது.

(-)

குளித்த பின்பு குளியலறையில் இருந்த கண்ணாடியில் இருந்த நீர் துளிகளை துடைத்த பின் பார்த்தேன். அவள் என் தோள் மேல் சாய்ந்து, நின்று கொண்டு இருந்தாள்.

அவளது மேனியை சற்று வருடி, முகத்தை முடிருந்த முடியை பின் தள்ளி விட்டு, முத்தம் கூடுக்க உதடுகளை குவித்து, முத்தமிட போகும் முன், அவள் வெட்கத்தில் கண்களை முடி கொண்டாள். அதை ரசித்த படியே நின்று கொண்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் போன பின், அவள் என் காதுகளை பிடித்து.....
கொஞ்சும் குரலில்....
"இன்னும், என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க .....?"

நீ வெட்கப்படும் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் என்று சொல்லும் முன்.அவள் இன்னும் கோவமாக கண்களை திறந்து,"இன்னும் என்ன செய்ஞ்சு கிட்டு இருக்க....." என்று கத்தினாள்.நான் திடுக்கிடுது பார்த்த பொழுது, அவள் இல்லை.கற்பனை.வெளியே கதவை பலமாக தட்டிய படி அப்பாஸ் கத்தி கொண்டு இருந்தான்."இன்னும் என்ன செய்சு கிட்டு இருக்க....."

(-)

நண்பர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களும் கொஞ்சம் ஆச்சிரியமாக பார்த்தனர். ஏன் என்று தெரியவில்லை. ரசனை முதல் எல்லாவற்றிலும் அவளின் ஆளுமையை உணர்ந்தேன். அது என் சுயமாக இல்லாவிட்டாலும், அதை நான் ரசித்தேன்.

(-)

பகலில் விழித்து கொண்டே கனவு கண்டேன். சன் மியூசிக்கில் காதல் பாடல்கள் வரும் பொழுது எல்லாம் என்னை அறியாமல் சிரித்தேன், கொஞ்சம் வெட்க பட்டேன். அப்படியே காற்றில் பறப்பது போல், மேகங்களை தண்டி நச்சத்திர வீதியில் அவளோடு கை கோர்த்து கொண்டு ; மகிழ்ச்சின் உச்சத்தில் இருப்பதாய் மனம் சொல்லியது. ஆனால் நான் பெல்பூர் மூன்றாவது தெருவில், முதல் வீட்டில் தான் இருந்தேன். எதிர் வீட்டில் மாமி துணி காய போட்டு கொண்டு இருப்பதை பார்த்தேன்.

(-)

நான் எப்பொழுதும் இப்படி எல்லாம் உணர்த்து இல்லை. பெண்களை பார்த்ததும் மயங்கி, காதல் கொள்பவனும் அல்ல. ஆனால் ஒரே இரவில் ஒரு பெண் என்னை இந்த அளவுக்கு வசியம் செய்ய முடியுமா என்று எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. எது.... எது... எது என்னை மயக்கியது என்று என் மனதை கேள்வி கேட்கும் தருணங்கள் சிலது கிடைத்த பொழுதிலும், அவளின் நினைவுகள் என்னும் வலையில் இருந்து என்னை மீட்க முயற்சிக்கும் முன்னரே, அதே நினைவுகள் அவள் மேல் நான் காதல் கொண்டு, பைத்தியமாகி விட்டேன் என்பதை உணர்த்தி விட்டு, அப்ப அப்ப சென்றது .........வந்த உடனே.

(-)

"ஒரு bhel puri ......" என்று யுவன் ஆர்டர் பண்ணினான்.அப்பாஸ் உடனே
" டேய் மேவி நீ சொல்லுறா...."
"எனக்கு.....ஹாய்... மகேஷ் இதிலைய வந்த..... பஸ் ல போறேன்ன்னு சொன்னே ??"
அவர்கள் இருவரும் புரியாமல் என்னை பார்த்து கொண்டு இருந்தனர்.

(-)

"டேய் கதையே கூடுகாத ..."
"சொல்லவே இல்ல ..."
"ஆள் எப்புடிரா இருப்பா ...."என்று அவர்கள் என்னை ஏதோ ஏதோ கேட்டு கொண்டு இருக்க......
நான் அந்த நினைவுகளிலே மீண்டும் மீண்டும் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.

(-)
வெளிக்கிழமை.....
நாளை தீபாவளி.நங்கள் எல்லோரும் .......
BHEL TOWNSHIP .......
கோவில்கள்.....
வழக்கமாய் நாங்கள் செய்யும் வேலை தான்.
ஆனால் ......யுவன், அப்பாஸ் என்னோடு இல்லை.
"என்ன தம்பி......" என்று கேட்டார் ஸ்ரீராம் அண்ணன். வக்கீல்.சில நேரங்களில் அவருடைய அப்பாவின் கடையை பார்த்து கொள்வார்.
"ஒன்னும் இல்லண்ணே..... லெமன் டி போடுங்கண்ணே ....."
லெமன் டி. சூடாக இருந்தது.
"மலைகோவில் கடை எப்புடி ண்ணே போகுது...." என்று கேட்ட படியே புதுசாக வந்து இருந்த புது பட டிவிடிகளை......
ஒவ்வொரு டிவிடி அட்டையிலும் நாயகன், நாயகியாய் நானும் அவளும்.
"நைட் வரேண்ணே.......''
"தம்பி... நைட் ஜமாவா வந்துருங்க ....."
"நைட்ன்ன மொட்டை மாடில நின்னு வானத்தை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்"
(-)
இரவு உறக்கம் பிடிக்கவில்லை. ரூம்லில் லைட் போட்டு, சுவரில் ஒரு பல்லி அங்கும் இங்கும்.....
FACEBOOK கில் புதிதாய் ரேணுகா தேவி என்ற பெயரில் FRIEND REQUEST வந்து இருந்தது. ஒரு வேளை அவளாக இருக்குமோ .....
இல்லை வேறு யாரவது .......கண்களை முடி யோசித்து பார்த்தேன்...... பள்ளியில் பெங்களூர் பெண்.....
நண்பர்கள் வட்டம்....
கல்லூரி.........
ரேணுகா ஸ்பரிசம் இல்லை...தேவி ...ஒரு வேளை அவளாக இருக்கும்மோ.....பிரொபைல் போட்டோ வேறு இல்லை. தூக்க கலக்கம்.
(-)
கோவிலுக்கு போய் கொண்டு இருந்தேன்....
இரண்டாம் தெருவை தண்டி கொண்டு இருக்கும் பொழுது ...ராஜு அப்பா .....
"எப்புடி இருக்கடா ...."
"நல்ல இருக்கேன் ஆன்டி...."அப்பொழுது ஏதோ ஒரு புகைப்படத்தை கவரில் இருந்து வெளியே எடுத்த படி ராஜு அப்பா என் அருகே வந்தார்.
(-)
"ஒரு KINGS ....."
" .....DO YOU SMOKE .....??"

முதல் முறையாக இழுத்த பொழுது கொஞ்சம் நெஞ்சுக்குள் எரிச்சல் .....
சூடாக ஏதோ ஓன்று ....
கொஞ்சம் காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன்.
"இல்லை ....எனக்கு அது எல்லாம் பிடிக்காது"
வாயில் புகையை சேமித்து வைத்து.....
அடி நாக்கை சற்று அழுத்தி .....பலமாக இழுத்தேன்......
"இதுதானப்பா ராஜூவுக்கு பார்த்து இருக்கிற பொண்ணு ......"
அடுத்த முறையிலிருந்து menthol புகைக்க வேண்டும் ....... எரிச்சல் கம்மியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
(-)
அவள் மேலிருந்த காதல் ....
அது காதல் தானா என்ற சந்தேகம் இப்பொழுது ....
மேல் இருந்த காதல் இப்ப காமம் என்ற நிலையில் இறங்கி. எனக்கே என் மேல் எரிச்சலாக இருந்தது. வரும் நாட்களில் எப்புடி அவள் முகத்தை பார்ப்பேன். ராஜூவை அண்ணன் என்ற நிலையில் வைத்தே பார்த்து பழகி உள்ளேன். வருங்காலத்தில் அண்ணி.இந்த நினைவே என்னை கொன்று விடும் போல் இருந்தது.

எரிச்சல், கோவம், காதல்,காமம் என்று பல்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வந்த வண்ணம், நிலை தெரியாது அறிவு மங்கி,மயங்கி பேதலித்து .......
சுய-இன்பம் கொண்டேன் அவள் நினைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று அழமாக எண்ணியதால். உடல் சோர்வு அடைந்ததே தவிர அவள் நினைவு லேசாக இருந்தது. உடல் வலு பெற பெற, அவளின் நினைவும் பலம் பெற்றது.
(-)
அடுத்த வாரம். வெளிக்கிழமை இரவு.திருச்சி நோக்கிய பயணத்தில் ஏதோ ஒன்றை தொலைத்து, அதை தேடுவது போல் என் நினைவுகள்.
ராஜூ அண்ணன். குடும்ப நண்பர் என்ற நிலையில் இருந்து நண்பர் என்ற நிலைக்கு போய், அதன் பிறகு தெரிந்தவர் ஆகிருந்தார் இந்த ஒரு வாரத்திற்குள்.எல்லாம் என் செயல் திறனுக்கு மீறிய வேகத்தில் நடந்து கொண்டு இருந்தது. எல்லாம் சொன்ன அவள் இதை ஏன் சொல்லாமல் விட்டுவிட்டாள் என்ற கேள்வியே என்னை மிகவும்......
பெண்களிடம் பிடிக்காத ஓன்று அது தான்.
"MARKETING STRATEGIST OF THE YEAR "
கண்களில் வந்த கண்ணீரை துடைத்து கொண்டேன்.
(-)
"ராஜூ அந்த மோதிரத்தை அவ கைல போடுறா ..."
நான் வெளியே வந்து விட்டேன். இனிமேல் வாழ்வில் ராஜூ அண்ணனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். கார் எடுக்க வந்த நான், கடைசியாக அவள் முகத்தை பார்க்க முடியுமா என்ற கேள்விக்குள் மாட்டி கொண்டேன்.
(-)

18 comments:

Sangkavi said...

அழகான அனுபவம்.....

டம்பி மேவீ said...

@ sangkavi : தல ...என்னது அனுபவமா ........சகா சிறுகதைங்க இது

vinu said...

மிக அருமையாக இருக்கு .. என்னுள் பல நினைவுகளை கிளறி விட்டது . எதோ , எனக்கே , என்னால் மட்டும் , உணர முடிந்த எதோ ஒன்று , என் நெஞ்சில்.
தொலைந்து போன பல நிகழ்வுகளை , கீறி எடுத்து வந்து விட்டது . காயங்கள் ஆறி, தழும்பே மறைந்து போன இடத்தில , மீண்டும் லேசான காயம்.
வலிகளை மட்டுமே சுவாசித்து, வாழ்த காலங்களை , திரும்பி பார்க்கவைத்துவிட்டது . வாழ்த்துக்கள் ...

சங்கர் said...

பாதிதான் படிச்சிருக்கேன், மூச்சு முட்டுது, அப்புறமா வந்து படிக்கிறேன்

வால்பையன் said...

//அழகான பெண்கள் இருந்தபடியால் மார்கழி மாதமாக இருக்குமா என்று கொஞ்சம் சந்தேகம் மனசுக்குள் வந்ததென்னமோ உண்மை தான்.//

மேவி, நீங்க பேசினா லொள், லொள்ளுனு குலைக்கிர மாதிர்யே இருக்குமா!?

வால்பையன் said...

//இடது கண்ணை முடி வலது கண்ணால் பார்த்தேன் ; பின்பு வலது கண்ணை முடி இடது கண்ணால் பார்த்தேன். பிறகு இரண்டு கண்களையும் கொண்டு பார்த்தேன்.//

சென்னையில் சந்திர நேத்ரலாயா!
மதுரையில் அரவிந்த்!

எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க மேவி!

வால்பையன் said...

//"நான் கார்கி......."
"என்னது நீ கார்கியா ???? பொய் சொல்லாத..... நான் கார்கி பிளாக்கில் அவருடைய போடோஸ் பார்த்து இருக்கிறேன்..."
"அட பாவமே.... நான் கர்கியோட FRIEND ன்னு சொல்ல வந்தேன்.//

சகா பேர் சொல்லியெல்லாம் பிகர் மடிக்க முடியாது கண்ணு!
சகா எல்லாத்துக்கும் போட்டோ அனுப்பி வச்சிருக்கார்!

வால்பையன் said...

இந்த பயணத்துல நீங்க பேசுனதை விட தின்னது தான்யா அதிகம்!
தாரணிபிரியா கூட சேராதன்னா கேக்குறியா! பாரு ரெண்டு மாசத்துல அடையாளம் தெரியாம ஆகப்போற!

அன்புடன் அருணா said...

அழகழகா!!!

ஹேமா said...

காதல் கதையா மேவீ !நிறைய எழுதியிருக்கீங்க.நல்லாயிருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரே புளோல படிக்க நல்லாயிருக்குமா..

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவிக்கு வினுனு ஒரு புனைபெயர் இருப்பதாகவும் தனக்குத்தானே திட்டத்தில் அனானி பின்னூட்டம் போட்டுக்கரதாகவும் பட்சி, பஜ்ஜி,குச்சி எல்லாம் சொல்லுதுங்கோ..:-))))

ஸ்ரீ said...

நல்லாருக்கு பாஸ்.

டம்பி மேவீ said...

@ வினு : கவலை வேண்டாம் ..... சில வலிகளை மறந்தால் தான் உயிர் வாழ முடியும்

@ சங்கர் : சிக்கிரம் படிச்சு முடிங்க

@ வால்ஸ் : இல்லை ...நான் பேசின கழுதை கத்துற மாதிரி இருக்கும்

@ வால்ஸ் : கட்டாயம் ...நீங்க அழகாய் தெரிந்த பொழுதே முடிவு பண்ணிட்டேன்

@ வால்ஸ் : ஆமா ......உங்க பெயரை சொல்லி முயற்சித்து பார்க்கலாம் ன்னு இருக்கிறேன்

@ வால்ஸ் : ஹி ஹி ஹி ஹி

@ அருணா : நன்றிங்க

@ ஹேமா : எப்புடி :))))

@ கார்த்திகை : அப்பவே சொன்னோம்ல

@ கார்த்திகை : சத்யமா அது நான் இல்லைங்க ...ஆனா யார்ன்னு guess பண்ணிட்டேன்

@ ஸ்ரீ : ரைட்டு

தாரணி பிரியா said...

ம் நல்லாதான் இருக்கு ஆனா இதை நீ புனைவுன்னு சொல்லறதுதான் சிரிப்பா இருக்கு

தாரணி பிரியா said...

// வால்பையன் said...

இந்த பயணத்துல நீங்க பேசுனதை விட தின்னது தான்யா அதிகம்!
தாரணிபிரியா கூட சேராதன்னா கேக்குறியா! பாரு ரெண்டு மாசத்துல அடையாளம் தெரியாம ஆகப்போற!//

மேவி என் கூட சேர்ந்தபிறகுதான் ஒழுங்கா சாப்பிடறதா மேவி அம்மா ரொம்ப சந்தோசபடறாங்க வால். கண்ணு வைக்காதிங்க.

டம்பி மேவீ said...

@ தாரணி ப்ரியா : சரி சரி ......கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளில சொல்லாதிங்க :))))))))))))))))))))))))

@ தாரணி ப்ரியா : ஆமாங்க ...சரியா சொன்னிங்க

உமாஷக்தி said...

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

கவிதை ஆர்வலர்கள் www.tamilsangamamonline.com என்ற இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும்.


மேலும் விபரங்களுக்கு திருமதி உமா ஷக்தியை 98409 78327 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Posts with Thumbnails