நான் சிறுவயது முதல் புத்தகங்கள் மீது எனக்கு பெரிய அபிமானம் இருந்தது இல்லை. பிறகு எப்பொழுது, என்று, எவ்வாறு, எதிலிருந்து படிக்கும் பழக்கம் வந்தது என்று எல்லாம் என்னால் சொல்ல முடியாது. என் அம்மா, அப்பா, அண்ணன் என்று என்னை சுற்றி இருந்த அனைவரும் நிறைய படிபவர்களாக இருந்தார்கள் அதனால் கூட அந்த தாக்கம் வந்து இருக்கலாம்.
எனக்கு படம் பார்ப்பதில் தான் அதிகமாக விருப்பம் இருந்தது, சின்ன வயதில் சென்னைக்கு KPN ல தான் வர வேண்டும் என்று அடம் பிடிப்பேன், ஏனென்றால் அப்பொழுது எல்லாம் அதில் தான் நல்ல படங்கள் போடுவார்கள், அதுவும் நல்ல QUALITY யாக இருக்கும். அப்படி போகும் பொழுது, KPN ல போட்ட ஒரு படத்தின் முலம் சுஜாதா அறிமுகம் ஆனார் (அந்த படத்திற்கு அவர் தான் வசனம் எழுதிருந்தார்).
வழக்கத்தை விட அவரின் வசனங்கள் வித்த்யாசமாக இருந்தது. பிறகு அவர் வசனம் எழுதின படங்களை மிகவும் விரும்பி பார்க்க ஆரமித்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ...இவ்வாறு தான் எழுத்தாளர்களுடன் யான அறிமுகம் ஏற்பட்டது. என்னுடைய தீவிர வாசிப்பு என்பது புத்தகங்களிருந்து ஆரமிக்கவில்லை. அவை செய்திதாள்களிருந்து தான் ஆரமித்தது.
அப்ப எங்க குடும்ப நண்பர் ஹிந்து ல கங்காதர் என்பவர் எழுதும் பகுதிகளை அறிமுக படுத்தினார். இதிலிருந்து தான் நான் செய்திகளை தவிர்த்து பிறவற்றை படிக்க ஆரமித்தேன்.
அதன் பிறகு அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க ஆரமித்தேன். பிறகு அந்த நூல்களில் தலைவர்கள் படித்ததாய் சொல்லப்பட்ட புத்தகங்கள் புரட்டி பார்க்க ஆரமித்தேன். இது எல்லாம் நான் +2 எக்ஸாம் எழுதிய பிறகு வந்த லீவ் நாட்களில் நடந்தது. பிறகு UG சேர்த்த பிறகு பட புத்தகங்களை தவிர்த்து பெரிதாய் படிக்கவில்லை.
UG படிக்கும் பொழுது ஒரு இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆகும் முன் ரொம்ப பரபரப்பாய் பேசப்பட்டது. அதனால் அதனுடைய கதையை அறிந்து கொள்ள ஓர் இங்கிலீஷ் நாவலை தேடி பிடித்து புரட்டி பார்த்தேன்(அப்பொழுதும் முழுசாய் படிக்கல).
UG முடித்த பின் ரொம்ப மன குழப்பத்தில் இருந்தேன், அதற்காக பல சமய நூல்களை படித்தேன்.....(இந்தியாவில் பெரியதாய் வேர் விட்டிருக்கும் மூன்று மத நூல்கள் மட்டும் தான்).......என்னுடைய படிக்கும் பழக்கத்திற்கு அது முதல் படியாக அமைத்தது.
MBA entrance exam எழுதின பிறகு ......மேலாண்மை வகுப்புகள் குறித்து ரொம்ப பயந்து போயிருந்தேன். அதற்காக மேலாண்மை குறித்து பிரபல CEO க்கள் எழுதின (பலது குப்பை தான்) படித்தேன். அது தன்னம்பிக்கை புத்தகங்களில் போய் முடிந்தது.
இதனிடையில் எனக்கு தமிழ் மேல் திடீர்ன்னு ஒரு வித காதல் தோன்றியது. (தமிழுக்கு பிடித்த சாபம்)........காரணம் சொல்ல மாட்டேன்.பிறகு முறையாக எப்படியோ தமிழ் தெரிந்து கொண்ட பின் .....தமிழ் சரளமாக வர சில புத்தகங்களை படிக்க ஆரமித்தேன், ஆனால் அந்த முயற்சி பெரும் தோல்வி தான் அதற்குள் மேலாண்மை வகுப்புகள் துடங்கி விட்டது. PG விடுதியில் தங்கிருந்த பொழுது நண்பன் முலம் ஆங்கில இலக்கியம் அறிமுகமானது.
அப்படி அவன் தந்த புத்தகங்களை படித்து கொண்டு இருக்கும் பொழுது தான் .......ஓர் கதையோட மொழி பெயர்ப்பு தமிழில் வந்து இருப்பதாக அவன் சொன்னான். சரி இங்கிலீஷ் க்கும் தமிழுக்கும் கதை எப்படி வித்தயச படுதுன்னு பார்க்க தான் தமிழ் இலக்கியம் பக்கம் தான் வந்தேன்.
ஆனால் தமிழ் என்னை அப்பொழுது அவ்வளுயாக சுவாரசிய படுத்த வில்லை....... அதனால் ஆங்கில இலக்கியத்தோடு நிறுத்தி கொண்டேன். ஆனால் தமிழை தப்பு தப்பாக எழுத ஆரமித்து இருந்தேன்.
இந்த நிலையில் தான் நான் தமிழ் பதிவுலகத்தை படிக்க ஆரமித்தேன். ......... பிறகு பதிவு எழுதவும் ஆரமித்தேன்.
ஆனால் படிக்கும் பொழுது எனக்கு தமிழ் பெரிய பிரச்சனை பண்ணவில்லை, ஆனால் தமிழில் பதிவு எழுதும் பொழுது தான் ரொம்ப கஷ்ட பட்டு போன்னேன்.........
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழில் எனது அறிவின் எல்லையை பதிவுகள் மூலமாகவும் தமிழ் புத்தகங்கள் மூலமாகவும் விரிவு படுத்தி கொண்டேன். இன்று அளவும் எனக்கு தமிழ் கொஞ்சம் தகராறு தான்......
டிஸ்கி - ஆங்கிலமும் எனக்கு கொஞ்சம் தகராறு தான் ......(தமிழ் அளவுக்கு இல்லை)
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது கார்த்திகை பாண்டியன் , கரிசல்காரன் , ஸ்ரீ , மஹா
தொடர் பதிவுக்கான விதிமுறைன்னு பார்த்த பெருசா ஒன்னும் இல்லைங்க ........கட்டாயமான முறையில் நாலு பேரை கூப்பிடனும் அவ்வளவு தான்.
10 comments:
தம்பி.. இது தொடர்பதிவா இல்லை பதிவு தொடரா வருமா?
எப்படியோ.. படிக்கிற நல்ல பழக்கம் இருக்கே.. அது போதும்...
//இன்று அளவும் எனக்கு தமிழ் கொஞ்சம் தகராறு தான்....//
நீங்க எழுதுறத பாத்தா அப்படி தெரியலையே,
புத்தாண்டு வாழ்த்துக்கள், தொடர்ந்து படிங்க
ஆரம்பிச்சாட்ட்டீங்களா..?
நடத்துங்க..நடத்துங்க..
ஆஹா !!!!!!!!!
ஆஹா !!!!!!!!
உங்க திருச்சி தமிழ் பேராசிரியர் பத்தி சொல்லலியே?! ;)
@ கார்த்திகை : அது போதுமா ?????
@ சங்கர் : இல்லைங்க இப்ப முன்னேறிருச்சு ன்னு நினைக்கிறேன்
@ ராஜூ : ஓகே ரைட்டு
@ ஸ்ரீ & மஹா : ஏன் இந்தக் கொலை வெறி
@ கார்த்திக் : அவரை பற்றி சொல்ல போனால் ஒரு பெண்ணை பற்றியும் சொல்ல வேண்டி வரும் ....அதான் விட்டுட்டேன்
:) aha thambiyin tamil arvam ippadithan arambichatha :)
//தொடர் பதிவுக்கான விதிமுறைன்னு பார்த்த பெருசா ஒன்னும் இல்லைங்க ........கட்டாயமான முறையில் நாலு பேரை கூப்பிடனும் அவ்வளவு தான்.//
:) :) :)
Post a Comment