Pages

Friday, January 15, 2010

கலவை

ஹாய் எல்லோரும் எப்புடி இருக்கீங்க ???? பொங்கல் எல்லாம் எப்புடி போச்சு ??? முக்கியமா நான் இந்த வாட்டி டிவில எந்த சிறப்பு நிகழ்ச்சியும் பார்க்கல அதனால கொஞ்சம் நிம்மதியா தான் போச்சு நம்ம பொங்கல் . கோவா படத்தை பத்தி ஒரு நிகழ்ச்சி மட்டும் விஜய் டிவில பார்த்தேன். அம்புட்டு தான்.

= = = = = =

எல்லோரையும் போல் நானும் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்தேன் (ஐ..பார்த்துகோங்க நானும் ரவுடி தான்) . பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பதிவாளர்கள்ன்னு நல்ல தான் போச்சு. முக்கியமாக எஸ்ரா மற்றும் யுவகிருஷ்ணா கிட்ட பேசினதை ஒரு தனி பதிவாக போடலாம்ன்னு இருக்கேன்.

ஒரு கடைல இருந்து 1940 களில் வந்த பல புத்தகங்களை ரொம்ப கம்மியான விலைக்கு வாங்கினேன். எல்லாம் மூன்று ரூபாய் , இரண்டு ரூபாய் ன்ற அளவில் தான் இருந்தது. பிறகு பில் போடும் போது இதற்கு எல்லாம் DISCOUNT உண்டா என்று கேட்டதற்குக் கடைக்காரர் ரொம்ப முறைத்து பார்த்தார் . ஏன்னு புரியல.

= = = = = =

சீனா ல செய்யல படுகிற GOOGLE SEARCH ENGINE ல அருணாச்சல பிரதேஷ் சீனா ல இருப்பாதாய் காட்டுதாம். என்னக் கொடுமை சார் இது. இதைப் பற்றி NDTV ல வந்த பொழுது கொஞ்சம் அரை தூக்கத்தில் இருந்தேன் அதனால சரியாய் பார்க்க முடியல.

= = = = = =

"ராஜீவ் காந்தி கொலை வழக்கு" ன்னு ஒரு புத்தகம் வந்து இருக்கு, அது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனா அந்த குண்டு வெடிப்பில் ஏதோ ராஜீவ் காந்தி மட்டும் தான் இறந்ததாக நினைச்சிகிட்டு சிபிஐ அவ்வளவு தீவிரமாய் விசாரிச்சு இருக்காங்க போல் இருக்கு. அவரோடுச் சேர்ந்துப் பரலோகம் போன பலரை அவங்க கண்டு கொண்டதாக தெரியல.

ராஜீவ் காந்தி கொலைக்கு இரண்டு பக்கமும் என்னதான் எதிர் தரப்பின் மீது குற்றம் சாட்டினாலும் , அந்த அப்பாவி மக்களின் இறப்புக்கு அந்த பக்கமிடம் எதாச்சு பதில் இருக்கிறதா ?????

அந்த அப்பாவி ஜீவன்களை வைத்து புத்தகம் எழுதினால் காசும் வராது, அவர்களை வைத்து அரசியலும் பண்ண முடியாது என்பதினால் தான் அவர்களை லூஸ் ல விட்டு விட்டார்களா ??????

ராஜீவ் காந்தி இறப்புக்கு மட்டும் வருத்தம் கொள்வோரை கண்டால் எனக்குக் கோவம் வருகிறது.

காங்கிரஸ் கூட அவங்க குடும்பத்திற்கு பெருசா செய்த மாதிரி தெரியல .......அப்படி செய்து இருந்தால் யாராச்சு சொல்லுங்க ....

= = = = = =

துபாய் நியூஸ் பேப்பர் ல பொங்கலுக்கு அந்த நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் ஓன்று வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்காங்க. கொஞ்சம் சந்தோஷமாய் இருக்கு தமிழர்களின் வளர்ச்சியைக் கண்டு.

= = = = = =

"99 " ன்னு ஒரு ஹிந்தி படம், செமையா இருக்கு. சமீபத்தில் டிவில தான் பார்த்தேன். SCREENPLAY CHANCE LESS . கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து தான் கதை...... சும்மா விறு விறுன்னு போகுது.

= = = = = =

AGATHA CHRISTIE எழுதின "AND THERE WERE NONE " (பெயர் சரியாக ஞாபகமில்லை). அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அழைப்பை ஏற்று ஓர் ஆள் நடமாட்டம் இல்லாத தீவுக்கு செல்லும் பத்து பேர், ஒருவருக்கு பின் ஒருவராய் கொலை செய்ய படுறாங்க. அந்த பத்து பேரை தவிர அந்த தீவில் யாரும் இல்லை . அவர்களுக்குள் தான் கொலைக்காரன் இருக்கிறான் என்று எல்லோரும் நம்புகிறார்கள். இப்படியே கதை போகும். சந்தேகங்கள், அவநம்பிக்கை, துப்பறிதல் என்று நல்ல போகும். படிக்க படிக்க சுவாரசியம் தான்.

(கடைசில கதைல எல்லோரும் இறந்துவிடுவார்கள். ஆனால் திரைப்படத்தில் முடிவு வேறு மாதிரி இருக்கும்.)

= = = = = =

5 comments:

அன்புடன் நான் said...

எண்ணமும்... எழுத்தும் நல்லாயிருக்குங்க...

மேவி... said...

@ கருணாகரசு : ரொம்ப நன்றிங்க ......... உங்க கவிதையை படிச்சேன்...நல்ல இருக்குங்க

நட்புடன் ஜமால் said...

கலவை

சலவை

Think Why Not said...

/*... "99 " ன்னு ஒரு ஹிந்தி படம், செமையா இருக்கு. சமீபத்தில் டிவில தான் பார்த்தேன். SCREENPLAY CHANCE LESS . கிரிக்கெட் சூதாட்டத்தை வைத்து தான் கதை...... சும்மா விறு விறுன்னு போகுது.
...*/

நானும் பார்த்தேன்... சூப்பர்...

மேவி... said...

@ jamal : pin naveena cmd yaa ithu

@Thinks Why Not : aamanga...athuvum konjam comedy konjam tension entru iruppathu padathukku plus


anyways thanks for your comment. keep visiting

Related Posts with Thumbnails