இலக்கியமாய் கவிதை எழுத
தோன்றியே எண்ணங்களை திரட்டி
தலைப்பை எழுத "இ" யை தேடி "ஈ" யில் நின்றேன்
இலக்கு இல்ல பறவை பறக்க திரும்பி விரும்பி
தேடினேன் "இ" யை ........
"அ" வாகவும் இல்லாமல் "ஆ" வாகவும் இல்லாமல்
உயிரெழுத்தின் கடைசி மூச்சாய் இருந்துவிடவே
கவிதையின் முழுமையை எண்ணி முன்னேறினேன்
சிதைந்த உணர்வுகளின் உருவமாய் "ல"
"கி" முன் "கோ" வாய்
"ய" வரும் முன்னே மணியோசையாய்
வந்தது "ம்" மென்மையாய் இல்லாமல் வன்மையாய்
அதனால் பயந்து இலக்கியம் எழுத முடியாமல்
முடிவில்லாமல்
இந்த கோணலின் வட்ட நேர்கோடான
தவிக்கிறது இந்த கவிதை
-
7 comments:
கலக்ஸ் ...
ரைட்டு நீ கவிஞர் ஆயிட்ட
இனி நீங்க கவிஞர் டம்பிமேவீ...
ரைட்டு விடுங்க.
எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com
அன்பின் ராஜன் ராதாமணாளன்.
எப்பிடியோ கவிதை ஒண்ணு வந்தாச்சுதானே !
சில சமயம் வாழ்க்கையும் இப்பிடித்தான் மேவீ.கிடைக்கிறதை வச்சு அழகுபடுத்த வேண்டியதுதான்.
எங்கே நம்ம வாலு ?
@ ஜமால் : நன்றி அண்ணே
@ கேபிள்ஜி : அப்ப காலச்சுவடு ல புக் போட்டுருவோமா ???
@ சங்கவி : நன்றி சகா
@ ஸ்ரீ : சரிங்க ...ஆனா எங்கே விடனும்
@ ராஜன் : வரேனுங்க
@ ஹேமா : கரெக்ட் யா சொன்னிங்க ...வால் தெரிலையே
Post a Comment