Pages

Friday, January 22, 2010

கோழி

நானும் அப்பாஸும் அன்று பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்து கொண்டு இருந்தோம். அப்பாஸ் காரோட்டி கொண்டிருக்க நான் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்தப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

எந்த இடம் என்று தெரியவில்லை.......மகாபலிபுரம் அருகே ஓர் கோழியை பார்த்தேன்.

சென்னையில் கோழிகளை பார்ப்பது அரிது.

காரை நிறுத்தச் சொல்லி ...... பிறகு இறங்கி, கோழி அங்கும் இங்கும் சுகந்திரமாய் போவதைப் பார்த்தேன்.

ஏதோ கல் தடுக்கி விட அது தனது சிறகுகளைப் பட பட என்று அடித்தபடி வேங்கமாய் ஓடி என் கண்களில் இருந்து மறைந்து போனது.

"எவ்வளவு அழகா இருந்துச்சுல ....??" என்று கேட்டப்படி அப்பாஸ்யை முகத்தை திருப்பி தேடினேன்.

அவன் இது எதுவும் அறியாமல் யாருடனோ அந்த பக்கம் காரின் மீது சாய்ந்தப்படி செல்போனில் பேசி கொண்டு இருந்தான்.

அற்புதங்களுக்காக வேண்டி, காத்துக் கொண்டு இருக்கும் மனிதன் , அது நிகழும் பொழுது தூங்கி விடுகிறான்.

"என்னடா ....."

"ஒண்ணுமில்ல ........"

மீண்டும் பயணம் தொடர்ந்தது.

சற்று அசதியில் தூங்கி போனேன். தூக்கத்தில் கோழியின் சுகந்திரம், அதன் அழகு போன்றவை கனவாய்......

விழி திறந்தப் பொழுது ....... சாந்தோம் கடந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதும் கோழிக்கும் மனிதனுக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்று வியந்தவாறு இருந்தது என் யோசனை.

சாந்தோம் அதே இடத்தில தான் இருந்தது ...நாங்கள் தான் அத்தனை கடந்து கொண்டு இருந்தோம் ....ஆனால் ஆணவம் பிடித்த மனிதனின் யோசிக்கும் திறமை அப்படி தான் வளர்ந்து இருக்கு.

"டேய் .....சிட்டி சென்டர் போயிரு ....சாப்பிட்டிட்டு போவோம் ......." என்று சொன்னேன்.

சிட்டி சென்டர் .....

KFC ....பார்த்த உடனே கால்கள் அதனை நோக்கி போனது ....

"சரி ....ஆர்டர் ....பண்ணு ..." என்றான் அப்பாஸ்.


"FRIED CHICKEN ".....

அப்பொழுது தான் நினைவு வந்தது , எனது பசி தான் அந்த கோழியை ரசிக்க வைத்தது என்று.

அப்பாஸ் அசைவ சாப்பாட்டை விட்டு மூன்று மாதங்களாகி இருந்தன.

15 comments:

எறும்பு said...

வாவ்...அருமை...

:)

எறும்பு said...

சில நேரம், இல்ல இல்ல எப்பவுமே நாம பெண்கள ரசிக்கிறோமே, அதுக்கு என்ன தலைவா காரணம்??

சங்கர் said...

எஸ்.ரா ரேஞ்சுக்கு ஆரம்பிக்கும்போதே சந்தேகப்பட்டேன் :))

சங்கர் said...

@எறும்பு

போற இடத்திலெல்லாம் குசும்பு பண்றதே வேலையா போச்சு :))

வால்பையன் said...

நமக்கு ஒன்லி மட்டன் லெக்பீஸ்!

Karthik said...

தல எனக்கு இப்போ ரெண்டு சந்தேகம்..

Why did the chicken cross the road?

Which came first, chicken or the egg?

கண்ணகி said...

ஹ்...ஹா....ஹா...

நட்புடன் ஜமால் said...

மெய்யாலுமே கோழி தானா ...

முரளிகண்ணன் said...

\\சில நேரம், இல்ல இல்ல எப்பவுமே நாம பெண்கள ரசிக்கிறோமே, அதுக்கு என்ன தலைவா காரணம்??\\

:-)))))

மேவி... said...

@ எறும்பு : நீங்க ஆணாக இருப்பதால் thaan நீங்க அவங்களை ரசிக்குரிங்க

@ சங்கர் : பார்த்து... எஸ்ரா அடியாள் ஒருத்தர் மதுரை ல இருக்கிறாரு

@ வால்ஸ் : நீங்க யாரு ....இலக்கியவாதி ல அப்படி தான் சாப்பிடுவிங்க

@ KARTHIK : because road has two sides ......egg came first

@ கண்ணகி : ரைட்டு ...முதல் பின்னூட்டத்திற்கு நன்றி

@ ஜமால் : அரசியல் வேண்டாமே ....நான் சின்ன பையன்

@ முரளி கண்ணன் : நீங்க சத்யமா யூத் தான்

ஹேமா said...

அப்போ அழகை ரசிக்கல.
பசி...அட.

எப்பவும்போல ஒரு வார்த்தை வருது. வேணாம் டம்பி.

angel said...

we are human !!!

நட்புடன் ஜமால் said...

அரசியலா - அப்படின்னா?

MT said...

why we look at chicken is because usually a potato doesnt cross the road..

மேவி... said...

@ ஹேமா : ரைட்டு ...விடுங்க

@ ஏஞ்சல் : ரைட்டு ...சரியாய் சொன்னிங்க

@ ஜமால் : அது எனக்கும் தெரியாதே

@ MT : " :)"

Related Posts with Thumbnails