Pages

Tuesday, July 6, 2010

மெரினாவின் சின்ன வயதினிலே - ஓர் இனிமையான அனுபவம்

ஹாய் மக்கள்ஸ், எப்புடி இருக்கீங்க ? நலமா இருக்கீங்களா ??? புது வேலையில் ரொம்ப பிஸிங்க. அதனால அதான் சரியா பதிவு எழுத முடியல.. படிக்கும் பதிவுகளெல்லாம் பின்னோட்டம் கூட போட முடியல. இதற்க்கிடைய நம்ம கார்த்திகை பாண்டியன் வேற போன் பண்ணி "உங்க வாசிப்பு நேரத கொஞ்சம் கம்மி பண்ணி எதாச்சு எழுதுங்கண்ணே....நீங்க நிறைய படிக்குறீங்கல" அப்படின்னு சொல்லுறாரு. ச்சே இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது. ஹ்ம்ம்.

எனக்கு இன்னொன்னு புரியல மட்டேனுங்குது. ஏன் எல்லோரும் ரொம்ப சீரியஸ் யான புத்தகங்களை பத்தியே எழுதுறாங்கன்னு.


நீங்க எப்பவாச்சு குழந்தையாகவே இருந்திருக்கலாமோன்னு நினைச்சு இருக்கீங்களா ???? வாழ்க்கைல நிறைய stress வரும் பொழுதெல்லாம், அடடா நம்ம சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தோம், இப்ப அந்த சந்தோசம் எல்லாம் எங்கடா போச்சுன்னு யோசிச்சு இருக்கீங்களா ????

இந்த மாதிரி நீங்க கொக்கு மக்கா யோசிக்கும் பொழுது படிக்க வேண்டிய book தான் இது. அப்படி weekdays ல டைம் இல்லாட்டி weekend ல படிங்க ....... நிச்சயம் உங்களுக்கு சின்ன வயசுல பண்ணின மொள்ளமாரி தனம் எல்லாம் ஞாபகம் வரும். அப்பப்ப நீங்களே சிரிப்பிங்க ....


சரி சரி .... book பெயரை சொல்லுறேன் ....சின்ன வயதினிலேநம்ம தல மெரினா / பரணீதரன் எழுதினது. இவரோட இந்த புத்தகத்தை படிச்ச பிறகு தான் நான் இவரோட மத்த books யை எல்லாம் வாங்கி படிக்க ஆரம்பிச்சேன். உங்களுக்கே தெரியும் சுவாரசிய எழுத்துக்களுக்கு இவர் சொந்தகாரர்ன்னு. அப்படிபட்டவர் தனோட சின்ன வயசு அனுபத்தை எல்லாம் எவ்வளவு colourful ஆ சொல்லிருப்பார்ன்னு நீங்களே யோசிச்சு பார்த்துகோங்க. அதுவும் கோபுலு sketch ஓட படிச்ச இவ்வளவு சுவைய இருக்கும்ன்னு கணக்கு போட்டு பார்த்துகோங்க. (நீங்க ஒரு வேளை என்னை மாதிரி கணக்குல weak ன்ன, முயற்சி பண்ணுங்க, விடாம முயற்சி பண்ணுங்க, முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான் இந்த அலெக்ஸ்சாண்டர்ன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே முயற்சி பண்ணுங்க)

இந்த சீலி பய இருக்கானே ......(மெரீனாவை சின்ன வயசுல அப்படி தான் கூப்பிடுவாங்க) அவனோட ஒரே அக்கப்போர் தானுங்க. முத பக்கத்தில் இருந்து கடைசி பக்கத்துக்கு முன் பக்கம் வரைக்கும், கடைசி பாகத்துல நம்மள cry பண்ண வைச்சுடுறான்.....

முக்கிய்மா ஒன்னு சொல்ல மறந்துட்டேன், இதுல அவர் எழுதிக்கிரதேல்லாம் அவரோட சிறு வயசு நினைவுகள் .....அதனால் படிக்குற நம்மளையும் கையை பிடிச்சு 50 years back புரசவாக்கதுக்கு கூட்டிட்டு போயிடுறாரு.

எடுத்த உடனே ....சீலி பய அவனோட பெயரை கண்டுபிடிச்ச அனுபவம் ....நிச்சயம் ஒரு ரஜினி பட opening scene மாதிரி இருக்கும். பிறகு அவனோட வாத்தியார் அவனை அடிச்சிட்டு, பிறகு அவனோட அப்பா கிட்ட மொக்கை வாங்குன விஷயம், ஹீரோ மாதிரி முடி வளர்க்க எப்புடி எல்லாம் முடி வெட்டுறவன் கிட்ட தப்பிச்ச கதையும் பிறகு அந்த முடியை பறி குடுத்த விதமும் ..... சத்யம அந்த பகுதியை படிக்கும் பொழுது சிரிச்சு சிரிச்சு ....முடியல .


(இந்த புத்தகத்தை நான் வாங்கி ஒரு இரண்டு மூணு வருஷம் ஆகிருக்கும், இப்பவும் மனசு ரொம்ப STRESS ஆ இருக்குற சமயத்துல எல்லாம் இந்த BOOK யை தான் எடுத்து படிப்பேன்.)

அப்படியே சின்ன வயசுல மெரீனா அவர் பண்ணின லூட்டி, திருட்டு தனம், பயந்த விஷயங்கள், சின்ன வயசு சிறி சிறு வருமானங்கள்....ன்னு நிறைய சொல்லுறார் ....அதெல்லாம் செம கிளாஸ்.

பிறகு அவங்க சித்தப்பா பத்தி சொல்லும் போது, ஒரு சிறு பையனுக்கு இருக்கிற HERO WORSHIP தெரியுது...அட படிக்குற நம்மளையும் அதே பார்வைல யோசிக்க வைக்குறார்.....(அது தான் அவரோட எழுத்துக்களின் வெற்றி என்றே நினைக்கிறேன்)....


ஒரு பாட்டுல ஒரு வரி வரும் (என்ன படம்ன்னு தெரியல....) "இந்த நிமிஷம் நிமிஷம் அப்படியே நின்று விட கூடாத"ன்னு, அதே மாதிரி தான் இந்த புத்தகத்த படிக்கும் பொழுது நான் நினைச்சேன். ஆனா அப்படியே அழகாய் பறக்குற ஒரு பறவையை கல் எடுத்து அடிச்ச எப்புடி இருக்கும் நமக்கு .....அதே மாதிரி தான் புத்தகத்த ஓட முடிவையும் ஆசிரியர் வைச்சு இருக்குறார்.

அப்படி தான் "காஞ்சனமாலா இங்கே வரமாட்டார்" ங்கிற பாகத்துல ஒரு சிறு பையனுக்குரிய குறும்பு தனத்தை சொல்லுற ஆசிரியர்...அப்படியே U - TURN அடிச்சு "ஆஸ்பத்திரியில் அண்ணா" விலும், "புரசைவாக்கம் TO நுங்கம்பாக்கம்" விலும் நம்மளை அழ வைச்சுடுறார். நான் இந்த புத்தகத்தை எப்ப படிச்சாலும், இந்த பகுதியை மட்டும் படிக்கவே மாட்டேன்.

இதுல ஒரு surprise என்னன்னா இந்த புத்தகத்தை publish பண்ணிருப்பது விகடன். வழக்கம அவங்க first time readers யை தான் டார்கெட் பண்ணுவாங்க......ம்ம்ம்


டிஸ்கி - சலிசு விலை தான். பிறகு கவனமாக வாசித்தால் இன்னும் சில பல மேட்டர் களை தெரிந்து கொள்ளலாம். முக்கியமா நான் இந்த வாங்கின கொஞ்சம் நேரம் கழிச்சு தமிழ் நாட்டுல மிக பெரிய பிரபலம்ன்னு கொண்டாட படுற ஒரு ஆடு கிட்ட இருந்து autograph வாங்கினேன். அந்த ஆடும் சந்தோஷமா போட்டு தந்துச்சு

சரிங்க இப்பவே 4:50am Tuesday (IST) - Time in Chennai, India ஆகிருச்சு ..... இப்ப walking போயிட்டு அப்படியே newspaper வாங்கிட்டு ....வரணும்.

இன்னும் நிறைய புத்தகம் படிச்சு இருக்கேன், படங்களும் நிறைய பார்த்து இருக்கேன். டைம் கிடைச்ச எழுதுறேன்...இல்லாட்டி மொக்க தான்.

சந்தோஷமா இருங்க ...

ENJOY LIVING


பிறகு பார்போம் ......

9 comments:

rk guru said...

நல்லா எழுதுருக்கிங்க...வாழ்த்துகள்.

கமலேஷ் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே...

dondu(#11168674346665545885) said...

பழைய கால இனிய நினைவுகள் பற்றி நான் இட்டப் பதிவு இதோ:

http://dondu.blogspot.com/2007/05/blog-post_10.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கார்க்கி said...

picture semaya irukku boss

நிலாவும் அம்மாவும் said...

புது வேலைக்கு வாழ்த்துகள்
சின்ன வயசு ஞாபகம் வராம இருக்குமா?
ஆனாலும் அம்மா அடியும் அக்காவோட அராஜகமும் நினைச்சா இந்த வயசு தான் தேவலைன்னு தோணுது....

pinkyrose said...

mave sir nice pathivu...
net la kidaikuma antha book ipdi neenga vaasikra nalla books sollunga kastapadama select panrathukku coz books select pannalamna kanla padratha edithutu vanthurran.. so carry on...

டம்பி மேவீ said...

@ ஆர்கே குரு : நன்றிங்க சார் ...மீண்டும் மீண்டும் வாங்க

@ கமலேஷ் : நன்றிங்க....இதுக்கு முன்னாடி நீங்க நம்ம பிளாக் பக்கம் வந்திருக்கீங்கல ??? உங்க சுயம் தேடும் பறவை எப்புடிண்ணே இருக்கு. கொஞ்சம் layout மாத்துங்கண்ணே

@ டோண்டு : சார் படிச்சேன் ...கருத்து தான் சொல்ல முடியல

@ கார்க்கி : நீங்க ஒரு இலக்கியவாதி பாஸ்

டம்பி மேவீ said...

@ நிலாவும் அம்மாவும் : நன்றிங்க ..... நான் சின்ன வயசுல நிறைய அடி வாங்கி இருக்கேனுங்க ..நானும் சின்ன வயசுல இருந்ததை விட இப்ப தான் சந்தோஷமா இருக்கேங்க

@ பிங்கிரோஸ் : அப்படில்லைங்க ...ஒரு விமர்சனத்தை வைச்சு தீர்மானம் பண்ண முடியாது...... நான் படிக்கும் பல புத்தகங்கள் ரொம்ப dry ஆ இருக்கும். இருந்தும் முச்சு போட்டு படிப்பேன் ..ஆர்வம் தான் காரணம்

ஹேமா said...

அழகான படத்தோடு நினைவலைகளும் எழுத்து
நடையும் நல்லாயிருக்கு மேவீ.

Related Posts with Thumbnails