=
மார்க்கெட்டிங் ல இருப்பதால சினிமாவை நான் என்றுமே ஒரு end product யாக பார்த்தே பழகி விட்டேன். அப்படி பார்த்தால் இந்த படம் customers யை satisfy செய்யும் ஒரு நல்ல product தான். என்ன அங்கங்க கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணிருக்கலாம். என்ன ஒரே ஒரு குறைன்ன மதராசபட்டினம்ன்னு பெயரை வைச்சுட்டு பழைய மதராஸ் யை கொஞ்சம் தான் கட்டிருக்காங்க. அது மக்கள்ஸ்க்கு தெரியாத மாதிரி super screenplay ......
பொதுவா நான் படிச்ச வரைக்கும் 1945 இந்தியாவுல பல ரகசிய வன்முறை இயக்கங்கள் freedom க்காக போராடி இருக்காங்க. அவங்களையெல்லாம் தீவிரவாதின்னு சொல்லி ஜெயில்ல போட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை டைரக்டர் ஊறுகாய் மாதிரி use பண்ணிருக்காரு. அந்த scene ல நாசர் ஒரு மாதிரி அதர்ச்சி காட்டுறாரு....அதுயேதுக்குன்னே புரியல.
முக்கியமா ஒரு period film ன்ன அதுல வர எல்லா character களுக்கும் சரியான character justification தந்து இருக்கணும்.... ஆனா இதுல பெப்பறப்பேன்னு இருக்கு.
ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும் ..timing comedy நல்லாவே இருக்கு படத்துல. அதுவும் ஆர்யா இங்கிலீஷ் வாத்தியார் வீட்டுக்கு தனது சககளுடன் போகும் காட்சி செம தூளுங்க.
தொடரும் படத்தை பார்த்து இருக்கீங்களா ?? அதுல ரமேஷ் கண்ணா ஒரு வித editing யை use பண்ணிருப்பார்..... அதே concept யை நல்ல பயன்படுதிருக்காங்க। நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் மாறி மாறி போகும் காட்சி அமைப்பு .....simply supereb . அதுவும் கடைசில bridge சீன் ...... ம்ம்ம் சென்னை எவ்வளவு குப்பையாக போயிருச்சுன்னு காட்ட அது ஒன்னே போதும்.
எல்லா பாடல்களும் நல்ல இருக்கு। ஆனா ஒரு பாட்டு மட்டும் படத்தோட ஒட்டவே மாட்டேனுங்குது .... அதுவும் செகண்ட் half ல ஒரு பாட்டு ....காதலும் போராட்டமும் கலந்த கலவையாக செம சுவை.
ஆர்யா ...மனுஷன் அடிச்சு விளையாடி இருக்காரு. இந்த படதிற்க்காகவே குஸ்தி LEARN பண்ணிருப்பார் போல....சண்டை காட்சிகள் அருமையா இருக்கு. அதுவும் அந்த CLOCK ROOM சண்டை ......ரொம்ப லாஜிக் ஆ அமைச்சு இருக்காங்க.
SETS ...... தூள் தான். ஆனால் செயற்கை தனம் ரொம்பவே தெரியுது.
கதாநாயகி ...... அழகு சிலை (இன்னைக்கு என் கனவுல கட்டாயம் வருவாங்கன்னு நினைக்குறேன்..... அப்படி வந்த கும்த்லக்கிகடி கும்மா தான்) . வயதான கதாபாத்திரத்துல வர நடிகையும் நல்ல நடிச்சு இருக்காங்க. கிளைமாக்ஸ் ல வர டயலாக்யை கேட்டா எங்கே தாலி செண்டிமெண்ட் தமிழ் சினிமாவுக்கு திரும்ப வந்துருமோன்னு பயமா இருக்கு.
ரன் படத்துல "கதல் பீச்சே" ன்னு தமிழை கடிச்சு குதறின உதித் நாராயண் தான் இந்த படத்துல ஒரு பாட்டு பாடி இருக்காரு। கேட்க நல்ல இருக்கு. (அந்த நிமிஷத்துல தமிழ் செம்மொழி ஆச்சுன்ற விஷயத்தை கொஞ்சம் மறந்துட்டு பாட்டை கேட்கணும்)....
மியூசிக் ..ஜீவி பிரகாஷ்ன்னு நினைக்கிறேன்...சரியா தெரியல ....கலக்கி இருக்காரு.
எல்லாமே தூள் தான் படத்துல. காட்சிகளை பத்தி நான் ரொம்ப சொல்ல விரும்பல. நீங்க போய் பாருங்க .... கட்டாயம் ரசிப்பீங்க. சில டயலாக் க்கெல்லாம் செம கிளாப்ஸ் .....தியேட்டர் கலாட்டா -
காலேஜ் படிக்கும் நேரத்துல இருந்தே படம் ஓடிகிட்டு இருக்கும் பொழுது கமெண்ட் பாஸ் பண்ணுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் இருட்டுல யாருன்னே தெரியமே ஒருத்தர் சொல்லுற கமெண்ட்க்கு பதில் கவுன்ட்டர் அடிக்கிறது செம ஜாலிங்க.
இந்த படத்துல ஆர்யா பேசுற மாதிரி ஒரு டயலாக் ஒன்னு வரும், அது என்னனா "நீங்க பெரிய ஆளுங்க ...எதை வேன்னுமனாலும் வாங்கி பரிசாக தருவீங்க...ஆனா நான் ஏழை, நான் என்ன தர முடியும்" ன்னு அவர் பேசிட்டு முடிக்கிறதுக்குள்ளே ..இருட்டுல ஒருத்தன் செம கவுன்ட்டர் அடிச்சான் பாருங்க " குழந்தை தர முடியும்" .... செம ரகள....
டிஸ்கி - எல்லா படத்துக்கும் டிக்கெட் காசை ஏத்தி வைக்குற தியேடார்க்காரன் ...இதுக்கு டிக்கெட் விலை ஏத்தவே இல்லை ....அதிர்ச்சி ஆனாலும் உண்மை...ஒரு வேளை அடி தள்ளுபடி யாக இருக்குமோ
அம்மா தாயே .படிச்சிட்டு vote இல்லாட்டி பின்னோட்டம் போடுங்க ...
8 comments:
நான் நாளக்கி இந்த படம் பாக்க போரனே,விமர்சனத்துக்கு நன்றி
மேவி நம்ம பதிவு பக்கம் வாங்க
www.jillthanni.blogspot.com
ஒரு விளம்பரம் தான்
நீயும் படத்தை ஏவிஎம்ல பார்த்தியா..? அதே கவுண்டர் டயலாக்கை சொல்லுறே.?
@ ஜில்தண்ணி - நன்றிங்க. கட்டாயம் போய் பாருங்க ....செம ரசனையான படம்
@ கேபிள்ஜி - இல்லண்ணே..நான் தாம்பரம் வித்யா ல பார்த்தேன்..... அட விடுங்க பயபுள்ளைங்க எல்லா இடத்துலையும் ஒரே மாதிரியான அராது தான்
என்ன மேவீ சார், இன்னிக்கு கமெண்ட் பண்ணல நீங்க ... சரி உங்களுக்கு கமெண்ட் பண்ணலாம்னா நமக்கு பிடிபடாத சினிமா எப்படியோ கமெண்ட் பண்ணிட்டம்ல...
REVIEW SUPERB.
if you have a time vist my review,
http://feelthesmile.blogspot.com/2010/07/blog-post_10.html
Friend,
Mano
அப்போ ரசிச்சுப் பார்க்கலாம்ன்னு சொல்றீங்க.நன்றி மேவீ.
@ பிங்கிரோஸ் - உங்க படிவ படிச்சுட்டு பின்னோட்டம் கூட போட்டுட்டேனே ...படத்தை போய் பாருங்க முதல பிறகு சொல்லுங்க
@ மனோ - முதல் வருகைக்கு ரொம்ப நன்றிங்க. சந்தோஷமா இருக்குங்க உங்க பதிவை படிச்ச பின்ன
@ ஹேமா : கட்டாயம் பாருங்க...உங்க ஊர்ல வந்துருச்ச ?????
நல்லா எழுதிருக்கீங்க விமர்சனம்...சேம் ஃபீலிங்..நம்ம விமர்சனத்தையும் வந்து படிச்சுட்டு போங்க...
http://rameshspot.blogspot.com/2010/07/2010-madharasapattinam.html
Post a Comment