Pages

Monday, September 7, 2009

கடவுளாகிய சாத்தான் - 2


எதிரே எதிர் இனம்
அவள் அழகு ஐந்து அடி துரத்தில்
கடவுள் மனதில் இச்சைகளின் சீம்பால்
நான் கடவுள் உருவத்தில் சாத்தானின்
உணர்வுகள் கொண்ட கலவை நான்
பிறழ்வு நினைவுகளின் பிதறல் ......

நாங்கள் இருவர் தனி அறையில்
உணர்வுகளில் இன்னும் இரண்டு
அவர்கள் என் கடவுளும் என்
சாத்தானின் பார்வை அவளின்
வளைவுகள் கடவுளின் கண்களில்
என் சாத்தானை அடக்கி கொண்டு
ஓர் உணர்வு தீவிரவாதம் நடக்கிறது

கடவுளின் காதலுக்கும் சாத்தானின் காமத்திற்கும்
காதலின் முடிவு காமம் கடவுளுக்கு
சாத்தானின் காமம் காதலின் சாட்சி
இரண்டுக்கும் அழைப்பிதழ்
அவளின் வெட்கம் ; சிரிப்பு
===
புதிது எனக்கு இந்த மாதிரியான களம்
காலத்தின் விருப்பம் என்னவோ
எனக்கு தெரியவில்லை ....
கடவுளாய் இருப்பதா இல்லை சத்தனாய் இருப்பதா ???
கேள்விகள் என் மனதில் ....
பதில்கள் கிடைக்கவில்லை .....
காலத்தின் களம் கடந்து போனது
உணர்வுகளில் சாத்தானுக்கு வெற்றி
வெளி உலகில் கடவுள் வேடமிட்ட சாத்தான்
முகம் காட்ட காத்து இருப்பான்
இன்னொரு வாய்ப்புக்கு....

5 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி நான்கு வரிகள் நச்.. வார்த்தைகளை ஒழுங்கு படுத்துவதில் கோட்டை விட்டு இருக்கிறீர்கள் நண்பா.. ஆனால் கவிதையின் கரு அம்சம்..

வால்பையன் said...

//சாத்தானின் பார்வை அவளின்
வளைவுகள் //

கடவுள் கண்களுக்கு மட்டும் வளைவுகள் தெரியாதா!?

Karthik said...

எனக்கு பயமா இருக்கு தல. இலக்கியவாதி ஆகிட்டீங்களோ? :))

நல்லாருக்கு!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

ஹேமா said...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற கடவுள் இல்லாட்டி மிருகம் போல சாத்தானுக்குள்ளும் கடவுளா?அப்போ இதையெல்லாம் கடவுள் கண்டுக்க மாட்டாரா !கடவுள் சக்தியுள்ளவர்ன்னா !கடவுளையும் மீறினதா சாத்தான் ?

Related Posts with Thumbnails