Pages

Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Monday, April 17, 2023

போர்கள் : வணிகம் : மதம் : சோழர்கள் - அத்தியாயம் 3


ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க பல காரணங்கள் இருக்கிறது, அதில் முக்கிய காரணம் அந்த நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க தான் என பலரால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக பாட திட்டத்தில் நாடோடி மன்னர்களான தைமூர், செங்கிஸ் கான் ஆகியோரது வெறிதனமான செயல்களை படித்ததினால் தான். 

ஆனால் வெற்றிவேல் வீரவேல் என சொல்லி கொண்டு நிலையான ஒரு நாட்டின் மன்னனால் அப்படி சாதாரணமாக போர் தொடுத்துவிட முடியாது. முக்கிய காரணம் அதற்கான செலவு.

ஆயுதம் தயாரிப்பது, நாட்டின் உள்ளோர் மற்றும் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு ஆகிய செலவுகள் எல்லாம் கணக்கில் கொண்டு தான் ஒரு போர் தொடுப்பதை பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்க முடியும். ஒரு அரசன் படையெடுத்து நமது நாட்டை நோக்கி வருகிறான் என்றால், அந்நாட்டின் செல்வங்களை தான் முதலில் பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைப்பார்கள். படையெடுத்து வரும் அரசனுக்கு கொள்ளையடிப்பது மட்டும் தான் லட்சியம் என்றால், அப்படையெடுப்பில் பெரிய லாபம் இருக்காது.

செல்வங்களை தவிர்த்து ஒரு நாட்டின் வணிக வளமே அந்நாட்டின் மீது படையெடுப்பை பற்றி தீர்மானிக்க முக்கிய காரணியாக அமைகிறது.

அக்காலத்தில் கடல் பட்டுவழி சாலை வழியை பார்த்தால் அது அரேபிய தேசத்தில் இருந்து காயல்பட்டினம் (இன்றைய கன்னியாகுமரி) வந்து அங்கிருந்து ஸ்ரீலங்காவின் (அன்றைய சிலோன்) அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வழியாக கலிங்க நாட்டு துறைமுகத்திற்கு (இன்றைய புரி துறைமுகம்) செல்லும்.

கலிங்க நாட்டில் இருந்து தான் ஜாவா, மலாய், சுமத்திரா, ஸ்ரீவிஜயம் ஆகிய நாட்டுகளுக்கு வணிக கப்பல்கள் செல்லும். 

சோழர்கள் போர்களில் ஈழத்து போர், கலிங்க போர் முக்கியமானதாக கருதுவேன். கலிங்க நாட்டு போரில் நடந்தவற்றை 12ஆம் நூற்றாண்டின் பரணி வகை நூலான கலிங்கத்துப்பரணி நூலில் ஒட்டக்கூத்தர் மற்றும் செயங்கொண்டார் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். 

முதலாம் கலிங்கத்துப்பரணி பாடல்கள் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னன் வீமனை வென்றதை பாடுகிறது. இரண்டாம்   கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் கருணாகர தொண்டைமான் கலிங்க போரில் வென்றதை பேசும். 

கருணாகர தொண்டைமான் என்ற பெயரை கேட்டதும் சரித்திர நாவல் பிரியர்களுக்கு ஆனந்தம் பொங்கி இருக்கும். சாண்டில்யன் அவர்கள் எழுதிய கடல் புறா நாவலில் தலைமை கதாபாத்திரமாக வருவார்.

இந்த காலகட்டத்தில் தான் தமிழகத்தில் சைவமா வைணமா சண்டை வலுப்பெற்றது. 

சமண மதத்தில் இருந்து மன்னர்களை சைவ சமயம் பக்கம் கொண்டு வந்தார்கள் அப்பொழுது இருந்த  தீவிர சைவ துறவிகள்.  அதற்கு சாட்சியாக இந்நாளும் பலரால் பட பெறும் ஒரு பாடல் .

அந்த பாடல் "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு....".

இது யாரால் எதனால் பாட பெற்றது ? அதில் பின்னால் என்ன வணிக செயல்பாடு இருந்திருக்கும் ?

இப்பொழுது 12ஆம் நூற்றாண்டின் சோழர்களின் போர் பக்கம் இருந்து 19ஆம் நூற்றாண்டிற்கு வருவோம்.

திருபாய் அம்பானி செயதது போல் ஜாம்ஷெட்ஜி டாடா என்பவர் 1868ல் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். பிறகு 1874ல் ஒரு ஜவுளி நிறுவனத்தை ஆரம்பித்தார்.

ஜவுளியும் சோழர்களின் காலத்தில் முக்கிய வணிக பொருளாக இருந்தது. மஸ்லின் துணிக்கும் சோழர்களுக்கும் சம்பந்தம் இருக்குமா ?

திருப்பதிக்கும் சோழர்களுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்கும் ?

கடல் பட்டுவழி சாலையில் அந்த வைணவ பெரியவரின் பங்கு என்னவாக இருந்திருக்கும் ?

தொடரும்

#indianbusinessseries
#rajarajacholan 
#rajendracholan 
#Srilanka
#dhirubhaiambani

சோழர்களின் வணிக ராஜ்ஜியம் / BACKWARD INTEGRATION - ரிலையன்ஸ் - அத்தியாயம் 2

இந்தியாவின் நவீன வணிக போக்கில் வெற்றி பெற்ற நிறுவனங்களில் முக்கியமானது திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கதை.  அவர் அவ்வாறான மிக பெரிய வணிக ராஜ்ஜியத்தை அமைக்க காரணமாக இருந்தது BACKWARD INTEGRATION என்கிற முறையில் அவர் தொழிலை மற்றும் அதனை சார்ந்த வியாபாரத்தை விருத்தி செய்தது தான். 

அதென்ன Backward Integration ?

அதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் கடந்து வந்த பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

1950கள் - அம்பானி அவர்கள் ஜவுளி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். 10 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்தமாக துணி வாங்கி அதனை தேவைக்கேற்றது போல அல்லது வியாபார வாய்ப்புகள் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். வெளிநாட்டு துணி வகைகளையும் இங்கு விற்பனைக்காக இறக்குமதி செய்தார்.

1960கள் - அம்பானி அவர்கள் என்னதான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வந்தாலும் உற்பத்தியாளர்கள் தான் அதிக லாபமடைந்தார்கள். அவர்களுக்கு அம்பானி சம்பளம் வாங்காமல் வேலை செய்து போல உணர்ந்தார். இந்நிலையை மாற்ற மிக பெரிய முடிவினை எடுத்தார். அது வரைக்கும் இந்தியாவில் செயல்படும் ஏற்றுமதியாளர்கள் யாராவது அப்படிபட்ட துணிச்சலான முடிவை எடுத்திருப்பார்களா என தெரியவில்லை. 

உற்பத்தியாளர்களின் கைக்கு போகும் லாபம் தனக்கு வர வேண்டும் என்றால் தானும் ஒரு உற்பத்தியாளராக உருவாக வேண்டும் என முடிவெடுத்து ஜவுளி உற்பத்தியில் ரிலையன்ஸ் நிறுவனம் அடியெடுத்து வைத்தது.

1970கள் - இன்னும் பெரியளவிலான தொழில் செய்ய பங்கு சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் பட்டியலிட பட்டது. 

அதன் பிறகான ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு வியாபார யுத்திகள் கையாள பட்டதால் ...

அதென்ன Backward Integration ?

ஒரு தொழிலுக்கு தேவையானவற்றை ஒரு நிறுவனமே தயாரித்து கொள்வது தான் அது. 

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு  ரிலையன்ஸ் நிறுவனத்தை 1970களில் விட்டு விட்டு ஆயிரம் வருடம் பின்னோக்கி இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்திற்கு போகலாம். 

அக்காலத்தில் பட்டுவழி சாலை என்பது நில வழி மற்றும் கடல் வழி என இரண்டு வழிகள் இருந்தன. 

இராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் சோழ தேசம் எனது ஒரு வளம் நிறைந்த தேசமாக உருவாக வேண்டும் என்ற கனவு இருந்தது.

தந்தை அக்கனவை கண்டார், மகன் கனவை செயல்படுத்தி காட்டினார். 

அரேபிய வியாபாரிகள் அக்காலத்தின் உலக வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றினார்கள். (அவர்களை பற்றி தெரிந்ததை வரும் நாட்களில் எழுதுகிறேன்)

அவர்களது முக்கியமான வர்த்தக மையமாக அக்காலத்தில் இந்திய நிலப் பரப்பு இருந்துள்ளது (இந்தியா என்னும் தேசம் அப்பொழுது இல்லை).

இந்தியாவை தாண்டி சீனா, சுமத்திரா,பர்மா, தாய்லாந்து, மலாய் , ஜாவா, வியட்நாம், ஸ்ரீவிஜய ஆகிய நாடுகளில் அவர்களுக்கு வர்த்தகம் இருந்தது. இதற்காக இலங்கை, இந்தியா பர்மா ஆகிய துறைமுகங்களை பயன்படுத்தி வந்தனர். இவற்றில் மூலம் வரிபணம் அதிக அளவின் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கிடைத்து கொண்டு இருந்தது. அவற்றை எல்லாம் ராஜேந்திர சோழன் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்.

(இதனை ராஜேந்திர சோழர் காலத்து சோழ ராஜ்ஜிய நிலப்பரப்பையும் கடல் வணிகத்தின் பட்டுவழி சாலையும் ஒப்பிடுகையில் நாம் புரிந்து தெரிந்து கொள்ளலாம்)

இதன் மூலம் கடல் வணிகத்தில் வியாபார கப்பல்கள் நிற்கும் எல்லா முக்கியமான துறைமுகங்களும் சோழ ராஜ்ஜியத்தின் கீழ்  இருந்தது. அவற்றின் மூலம் கிடைத்த வரி பணம் சோழ தேசத்தை வளமான தேசமாக இருந்தது. 

எல்லாம் சரி .... திருபாய் அம்பானி கையாண்ட யுத்தியை பல வருடங்களுக்கு முன்பே வேறொருவர் கையாண்டு பெரும் வெற்றி பெற்று இருந்தார்.

அவர் யார் ?

தொடரும்...

#IndianBusinessSeries
#Reliance 
#dhirubhaiambani 
#Chozhakingdom
#rajarajacholan 
#Rajendracholan

Sunday, June 6, 2021

நீச்சல் II தொடர்கதை II அத்தியாயம் - 2 II தெய்வ தன்மைகள் இல்லாத ராமாயண கதை II Real Life Ramayanam

நீச்சல் II தொடர்கதை II 

அத்தியாயம் – 2

உளவு என்பது சக்கரவர்த்தியின் நேரடி கண்காணிப்பில் வருவதால், அது தொடர்ப்பான எந்த சந்திப்பிலும் அனுமதியின்றி யாரும் கலந்துகொள்ள கூடாது என்பது யாரும் மீற கூடாது சட்டம். ஆதலால் சூர்ப்பனகை ஞானமுருகு இலங்காதிலகம் மற்றும் அதிமலையனது அமைதியை புரிந்து கொண்டு இராவணன் சொல்லும் முன் தானே வெளியில் வந்துவிடுவது நல்லது என வெளியில் வரும் பொழுது தான் அதிமலையனது கையில் இருந்த ஏட்டில் இருந்த பெயரை கண்டுடன் ஸ்தம்பித்து நின்று விட்டாள். 

அப்படி அவள் நிற்கவும், அதிமலையன் ஏதோ விவரங்களை சொல்லி கொண்டபடியே ஏட்டை இராவணனது கையில் கொடுக்கும் பொழுது தான் அந்த யாரும் எதிர் பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
இராவணனது அரண்மனை சிகிரியா நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது.

 பொது மக்கள் வாழும் குடியிருப்பு பகுதி,  கோட்டை சுவர், கோட்டை சுவரில் இருந்து அரண்மனை வரைக்கும் காலி இடம். ஒரு பதின் பருவ ஆண் அரண்மனைக்கு போக வேகமாக ஓட ஆரம்பித்தால், அவன் அரண்மனை கோட்டை சுவரை சுற்றியுள்ள அகழி பகுதியை அடைய இருபது நிமிடங்களாகும். இந்த காலி இடத்தினை திருவிழா,வெளிநாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான மாத சந்தை, போர் பயிற்சி ஆகியவை நடந்த பயன் படுத்த பட்டது. மேலும் நகர குடியிருப்பு பகுதிக்கு சென்று வர  ஒரு வழி தான். நகரத்தை சுற்றி அடர்ந்த காடு.

இரவாணன் உளவு துறை சம்பந்தமான ரகசிய கூட்ட சந்திப்பை எல்லாம் தென் பகுதியில் இருந்த ஆலோசனை கூட்ட மாளிகையில் வைத்து கொள்வான். இந்த ஆலோசனை மாளிகை அரண்மனை கோட்டையின் தெற்கு வாசலை ஒட்டி இருந்தது. உளவாளிகள் எப்பொழுதும் காட்டின் வழியாக  வந்து தென் பகுதியில் இருந்த ரகசிய வாயில் வழியாக வந்து போவார்கள். இந்த வழியில் வந்து போகிறவர்களது பாதுகாப்பிற்காக பலவகையான மரங்கள் மற்றும் பூச்செடிகள் கொண்ட அடர்ந்த தோட்டம் அமைக்க பட்டு இருந்தது.
உள்நாட்டு பதவி பூசல்கள், அயல் நாட்டு அபாயங்கள் என இலங்காபுரியை சுற்றி ஆபத்து நிறைந்திருந்தது. இவைகளை சமாளிக்க இராவணன் மற்றும் ஞானமுருகு இருவரும் சேர்ந்து ஒர் வலிமையான உளவுப்படையை உருவாக்கி இருந்தார்கள்.

அடிமையாய் விற்கப்பட்டு புரட்சி நிகழ்த்தி போர் புரிந்து உலகளவில் மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை ஆக்கிய நாள் வரையில் இருவரும் அவர்களது சுவாசமாக இலங்கை இருந்தது.
மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் உளவு அமைப்புகள் பல வற்றை இராவணன் ஏற்படுத்தி இருந்தான். அதனை இருவரும் தங்களது நேரடி கண்காணிப்பில் வைத்திருந்தனர். அப்படி ஒரு அமைப்பு தந்த குறிப்பை பற்றி பேசும் பொழுது தான்அந்த பயங்கரமான நிகழ்வு நடந்தது. 
மறைவில் நின்ற சூர்பனகை தான் அதனை கவனித்தாள். காற்றை கிழித்தபடி அந்த அம்பு இராவணனை நோக்கி வந்தது. 

“அண்ணா ..... “ என சூர்பனகை சத்தம் போடவும் சுதாரித்த இராவணன் சட்டென்று குனிந்தான் , அவ்வாறே மற்ற இருவரும் குனிந்தனர்.
அம்பு வந்த திசையை நோக்கிய சூர்பனகைக்கு சாளரத்தின்  வழியாக தெரிந்த மர கிளையில் இருந்து யாரோ குதித்து ஓடியது போல் தெரிந்தது. 

அறையில் இருந்த அவசரகால மணியை அடித்தான். இரவின்  ஆழ்ந்த அமைதினூடே அந்த ஒசை கோட்டை வாயிற்காவலர்களுக்கு கேட்டது.  அப்படி மணி கேட்ட உடன் என்ன செய்ய வேண்டும் என முன்பே படை தளபதியால் சொல்ல பட்டு இருந்ததால் கோட்டை கதவுகளை மூடினார்கள்.மூடிய  உடன் பத்து பேர் கொண்ட சிறுபடை வேல்கம்புகளுடன் தயாராக இருந்தனர். அப்படி தயாரான உடன் தலைமை காவலாளி இரட்டை தீப்பந்தங்களை பற்ற வைத்து இரு கைகளில் பிடித்தபடி அரை வட்ட முறையில் காற்றில் சுழற்றினான். அவ்வாறு சுழற்றினால் தயார் நிலையில் இருக்கிறோம் என்று பொருள். 

கோட்டையின் தலைமை காவலாளி ஔதடனுக்கு இன்று நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருந்தது.

 வழக்கத்திற்கு மாறாக அமைச்சர் ஞானமுருகு இரவில் சக்கரவர்த்தியை சந்திக்க வந்தது.

 உடன் ஒரு ஆளை அழைத்து வந்தது, அந்த ஆளும் அமைச்சர் உடன் வராமல், அமைச்சர் வந்து சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு வந்தான். 

அவன் வந்த உடன் அமைச்சரின் உத்தரவு கிடைக்காமல் உடனே எதோ பேச ஆரம்பித்து கையில் இருந்த ஏட்டினை காட்டியது. 

அப்படி காட்டிய ஏட்டை பார்த்த உடன் அமைச்சரின் முகத்தில் கலவரம் படர்ந்தது என எல்லாம் புதிதாக இருந்தது. 

அவர்கள் ஆலோசனை மாளிகைக்கு போனதை தனது அறையில் இருந்து பார்த்ததை எல்லாம் ஒரு முறை நினைத்து பார்த்தார். 

அவர்கள் போன கொஞ்ச நேரத்தில் மணி ஓசை கேட்டது, எந்த ஆபத்தும் வந்துவிட கூடாது என திருக்கோணமலையில் கோயில் கொண்டு இருந்து திருக்கோணேஸ்வரரை வேண்டி கொண்டார். 

சாளரத்தின் வழியாக பார்த்தபடி சூர்பனகை அதிரும் குரலில் ”இளவேந்தா ...... “ என அழைத்தாள்.

அந்த குரலின் சத்தம் அடங்கும் முன்னரே ஒரு உருவம் வந்தது. அந்த உருவம் வந்ததை கூட திரும்பி பார்க்காமல் சாளரத்தின் வழியாக தெரிந்த தோட்டத்தை பார்த்தபடி  “தேய்பிறை வியூகம்... வில் அம்பு படை ...பத்து ரோஜா அம்பறாத்தூணி ....” என்றாள்.

அப்படி சொன்னவள் பின்னால் இருந்த மூவருக்கு என்ன ஆனது என்ற நினைப்பு இல்லை. யார் அவன் என்ற கேள்வி தான் அவள் மனதில்  ஓடி கொண்டு இருந்தது. 

அடுத்த சில நொடிகளில் மாளிகையின் இரண்டாம் அடுக்கில் இருந்த திறந்தவெளி மேல்தளத்தில் இளவேந்தன் நின்று கொண்டு இருந்தான். 

அவன் முன்பு ஐந்து வில்லாளி வீரர்கள் கொண்ட இரண்டு படை இருந்தனர். 

ஒரு படையில் இருந்த ஐந்து வீரர்கள் தேய்பிறை வியூகத்தின் படி அம்புகளை பூட்டி வரிசையாக நின்றார்கள். தேய்பிறை நிலவு வரிசைபடி முதலில் நின்றவன் ஐந்து அம்புகள், இரண்டாமானவன் நான்கு அம்புகள்..... என கடைசி ஆள் ஒற்றை வில் உடன் இருந்தான். எக்கணமும் பூட்டிய அம்புகளை எய்து விட தயாராக இருந்தார்கள்.

சாளரத்தின் வழியாக பார்த்த சூர்பனகைக்கு யாரோ ஓடுவது புரிந்தாலும், அவன் எங்கே இருக்கிறான் தெரியவில்லை.வில் அம்பு படை மட்டும் போதுமா என யோசித்து கொண்டு இருந்தவள், அறையில் இருந்த விளக்கை எடுத்து வட்டமாக இருமுறை சுற்றி அடுத்த தகவல் குறிப்பை ஔதடனுக்கு தெரிய படுத்தினாள். 

போர் நாய் படைக்கான குறிப்பு அது ஔதடனுக்கு தெரியும். அவர் இருந்த தென் பகுதி கோட்டை வாயிலில் தான் போர் நாய்கள் கட்டி வைக்க பட்டு இருக்கிறது. மொத்தம் இருபது நாய்கள். அவைகளை கழற்றி விட தயாராக வைத்திருக்கும் படி அதன் ரோமானிய பயிற்சியாளருக்கு உத்தரவிட்டார்.

காதுகளை கண்களையும் முழு கவனத்துடன் வைத்தபடி சாளரத்தின் வழி தெரிந்த இருளை பார்த்தபடி நின்று இருந்தாள் சூர்பனகை. மற்ற மூவரை எதுவும் பேச வேண்டாம், அரியணையில் அமர்ந்திருக்கும் படி சொல்லிருந்தாள். 

இருளில் அந்த உருவம் மூச்சு இறைத்தபடி என்ன செய்வது என யோசித்து கொண்டு இருந்தாள். சூர்பனகை அங்கு இருக்கிறாள் என்று தெரிந்ததும் தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என தன்னை தாணே நொந்து கொண்டான். அவள் வைகை நதி அருகே இருக்கும் பாண்டிய மாளிகையில் தனது தோழி இளவரசி மீனாட்சி உடன் இருப்பதாக தானே தகவல் கிடைந்ததென யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே  போர் நாய் படையில் இருந்த நாய்கள் குரைப்பது கேட்டது. 

அப்பொழுது  மாளிகையில் இருந்து சங்கோசை கேட்டது. மாட்டி கொண்டாலும் “அந்த” பெயரை சொல்லிவிட கூடாது என்று தீர்மானித்த நொடி. அவன் காலில் ஒரு அம்பு வேகமாக வந்து பாய்ந்தது. 

வலியில் சத்தம் போட முடியாமல் வந்த வழியில் திரும்ப பாதுகாப்பாய் போய் விட முடியுமா என பார்க்க தொடங்கிய நொடி ....

அந்த பயங்கரம் நிகழந்தது...

தொடரும் ....

Sunday, May 23, 2021

*நீச்சல்* II தொடர்கதை II அத்தியாயம் -1II தெய்வ தன்மைகள் இல்லாத இராமாயண கதை II Real Life Ramayana

அத்தியாயம்– 1

(முழுவதும் கற்பனையான கதை)

4000 ஆண்டுகளுக்கு முன்பு.

வசதி , படை பலம் என்று எவ்வளவோ இருக்க தனது அண்ணன் ஏன் பிடிவாதமாக ஒரு குரங்கு கூட்டத்தை அழைத்து கொண்டு வந்து இந்த கடற்கரையில்  அமர்ந்திருக்கிறார், ஆயிரம் போர் வித்தைகள் கற்றவராக இருந்தாலும் ஒரு பலம் பொருந்திய அரசனை வீழ்த்த எப்படி இவரால் முடியும், நான் துணைக்கு இருந்தாலும் எப்படி எங்கள் இருவரால் முடியும் ?என்று யோசித்தபடி மீண்டும் மீண்டும் தனது கால்களை தொட்டுவிட்டு போகும் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்த இராமனை நோக்கி இலக்குமணன் வந்து, பக்கத்தில் அமர்ந்தான்.

“அண்ணா எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை, அண்ணியாரின் தந்தை சனகரும் உங்களது கொள்கைகளை வெள்ளி தட்டில் பொரித்து, அதனை நிருபாசனத்தில் வைத்து ஆட்சி செய்யும் தம்பி பரதனும் இருக்கையில், நீங்கள் ஏன் ஒற்றை மனிதராய், விலங்கினமா மனித இனமா என தெரியாத ஒரு கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு எல்லா வலமும் மிக்க இலங்கை அரசன் இராவணனை  எதிர்த்து அண்ணியாரை மீட்க போர் புரிய கிளம்பி இந்த தனுஷ்கோடி கடற்கரை வரையில் எந்த தைரியத்தில் வந்து இருக்கிறீர்கள் ?”

வழக்கம் போல இராமன் பலமான சிந்தனைக்கிடையில் வட்ட சிந்தனையாளன் இலக்குமணனை பார்த்து சிரித்தான். வாசிப்பு பழக்கம் இல்லாததால் கோபங்களை கையாள தெரியா பருவத்தில் இருக்கிறான் என தனக்குள் நினைத்தப்படி பேச ஆரம்பித்தான்.

“தம்பி நமது தந்தையின் ஆணையிட்ட படி தென்திசை நாட்டுகளுக்கு  அதிக வருமானத்தை ஈட்டி தரும் கடல்சார் வணிகத்தை நமது வசமாக வேண்டும் .....”
பேசி கொண்டு இருந்த இராமனை இடைமறித்து இலக்குமணன்
“சரி வர்த்தகத்தை வசமாக்க ஏன் இந்த தனி நபர் போர், சனகரின் படை  இல்லையா நமது நாட்டு போர் படைகள் இல்லை.. வாடகைக்கு வரும் கூர்கா போர் படை இல்லையா ?”

“இருக்கிறது இல்லையென சொல்லவில்லை, திராவிட ஆட்சியை பிடிப்பது மட்டும் தான் நமது இலட்சியம் என்றால் அவர்களது உதவியை நாடி இருக்கலாம். ஆனால் அது வணிகர்களது நம்பிக்கையை பெற்று தராது. ஆட்சியை வசமாக்கிவிட்டு போனால் வரி மட்டுமே வரும், இலாபம் வராது. மீண்டும்  யாராவது கலகம் செய்து திராவிட நாட்டை நமது கைகளில் இருந்து மீட்கலாம்... வணிகர்களது நம்பிக்கையை வென்று விட்டால் நமது பரம்பரையில் கடைசி வரைக்கும்  திராவிடம் நம் வசம்.”

இலக்குமணன் தான் எவ்வளவு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன்  சாட்சியாக இருக்கிறோம் என்பதனை நினைத்து பெருமிதம் பட்டான் .இந்த திட்டம் மட்டும்  வெற்றி பெற்றால் சீன, சுமாத்திரா, சிங்கைநகரம் போன்ற நாடுகளுக்கு போகும் கப்பல்கள் நிற்கும் துறைமுகம் நமது வசம் ஆகும்.... அப்படியானால் என யோசிக்க யோசிக்க இலக்குமணன்  கடந்த சில மாதங்களில் நடந்தவை எல்லாம் கண்கள் முன்னால் காட்சிகளாக விரிந்தது.

= = =

சூர்ப்பனகை  ஆயிரம் வித்தைகள் கற்றவள், எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் ஒற்றை ஆளாக சமாளித்து கலப்பை வில்லை கொண்டு வெற்றி பெற்று விடுவாள்.

 இராவணனது ஒரே தங்கை. 
தனக்கும் தனது தங்கைக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் வித்தியாசம் என்பதால் அவள் கற்க ஆசை பட்டத்தை எல்லாவற்றையும் கற்க தகுந்த ஏற்பாடுகள் செய்தான். ஞானிகள் அறிஞர்கள் இருந்த சபையில் எல்லோரிடமும் விவாதம் செய்வது சூர்ப்பனகைக்கு பிடித்த ஒன்று. பல தரப்பு கொள்கைகளுடன் விவாதம் செய்யும் பொழுது அறிவு தெளிவு ஏற்படும் என்பது அவளெண்ணம். 

அவளது அறிவு தேடலுக்கு தடை போடாமல் தஞ்சை, காஞ்சி ,மிதிலை, நாளந்தா மற்றும்  பல சிறந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பிடித்த விஷயங்களை சிறந்த ஆசிரியர்கள் மூலம் கற்க வழி செய்தான். 

அப்படி ஒரு தரம் பருவகால ஓய்வு விடுமுறைக்கு வந்த சூர்ப்பனகை எங்கோ பல தேசங்கள் கடந்து அறியப்படாத எகிப்து என்ற நிலப்பரப்பில் இறந்தவர்களது சடலங்களை பதப்படுத்தும் புதைப்பதை வழக்கமாக இருப்பதை பற்றி இராவணனிடம் ஆர்வம் பொங்க சொல்லி கொண்டு இருந்தாள். 

அறிவும் அழகும் ஒருங்கிணைந்தவளை இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படி தன்னை அறிவு தேடலில் தன்னையே தொலைத்து கொண்டு இருப்பாள். தனது வளர்ப்பில் ஏதேனும் தவறிருக்குமோ, அம்மை அய்யன் இல்லாத குழந்தையை ஒரு சக்கரவர்த்தியை தயார் செய்வது போல் வளர்த்து விட்டோமோ என கவலையில் மாலை நேரத்து மேகங்களை பார்த்து கொண்டு இருந்தான். 

அந்த கவலையென்னும் தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல .....

“அண்ணா வங்காள தேசத்தில் மரக்கலம் கட்டுவதை பற்றி கொஞ்சம் கற்று கொண்டு வந்திருக்கிறேன்... நாளை அயல்நாட்டு வணிகர்களை சந்திக்க கந்தார துறைமுகத்திற்கு போகிறோம் அல்லவா .... அங்கு போர் மற்றும் வணிக மரக்கலம் கட்டுவதை பற்றி அவர்களிடம் பேச வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கிறது.... அதனை பற்றி போகும் வழியில் உங்களுக்கு விவரித்து விடுகிறேன் .....” என சூர்ப்பனகை சொன்னதும் அப்பொழுது தான் இராவணனுக்கு அவள் தனது அன்பு தங்கை மட்டும் அல்ல இந்த இலங்காதிபதி அரசாட்சியில் வணிக அமைச்சர் என்றதும் நினைவும் வந்தது. 

கொஞ்சம் நேரம் போக உளவுத்துறை அதிகாரிகள் தர போகும் பரத நாட்டு பற்றிய அறிக்கைகளை படிக்க காத்து கொண்டு இருந்தான். 

சூர்ப்பனகை மெல்லிய குரலில் ..”அண்ணா ஒரு விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும்...”. இது வரையில் இல்லாத தயக்கம் கவனிக்க செய்தான் . முகத்தின் மொழியோ அவள் வாழ்வின் முக்கியமான ஒன்றை சொல்ல  இருக்கிறாள் என்பதை சொல்லியது. மனத்தில் அதுவாக இருக்குமோ என்ற சந்தோஷம் ஏற்பட்டாலும் இராவணன் எதையும் காட்டி கொள்ளாமல் ...

“இராமர் என்று ஒரு இளவரசர்... “
என்று சூர்ப்பனகை சொல்ல ஆரம்பிக்கும் பொழுது உளவுத்துறை அமைச்சர் ஞானமுருகு இலங்காதிலகம் தனது படை தளபதியான அதிமலையனோடு உள்ளே வந்தார். வந்தவர் முகத்திலுள்ள கலக்கத்தை கண்டு எதோ முக்கிய விஷயம் போலிருக்கிறது என யூகித்து,
“அரசே நான் உத்தரவு வாங்கி கொள்கிறேன் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

 பொதுவில் அண்ணனுக்கு சக்கரவர்த்திக்குரிய மரியாதை தர வேண்டும் என்பதில் சூர்ப்பனகை கவனமாக இருந்தாள்.

அப்படி வெளியே போகும் பொழுது அதிமலையன் கையில் இருந்த ஏட்டில் அயோத்தி என்று தலைப்பு இருந்ததை பார்த்தாள்.

தொடரும்.....

Sunday, October 27, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -3

வணக்கம் நட்புகளே...

சிலர் பங்கு சந்தை முதலீடு என்றாலே பேயை கண்டது போல் அலருவார்கள். புரியாமல் முதலீடு செய்தோ... அல்லது முதலீட்டு முகவர்களால் காப்பீடு திட்டங்கள் மூலம் ஏமாற்ற பட்டவர்களாய் இருப்பார்கள். இப்படி ஏமாற்ற பட்டதினாலே பங்கு சந்தையை குறை கூறி கொண்டிருப்பார்கள்.

நான் கவனித்த வரையில் பங்கு சந்தை அப்படி ஒன்றும் மோசமானது இல்லை.  ஏமாற்ற பட்டவார்கள் குறை கூற வேண்டுமானல், அவர்கள் குறை கூற வேண்டியது அந்த சமந்த சம்மந்தபட்ட முதலீடு முகவர்களை தான். நான் இந்த பதிவிற்காக குறிப்புகளை தேடி கொண்டிருக்கும் பொழுது, தங்க முதலீட்டுகள் மற்றும் தங்க முதலீடு இணைய வர்த்தக (commodity trading & MCX market trading) பயிற்ச்சி வகுப்பில் எனக்கு தரபட்ட குறிப்பில் இந்திய பங்கு சந்தை 1979 வாக்கில் 100 புள்ளிகள் இருந்துள்ளது....  இப்பொழுது இந்த வெள்ளிகிழமை பங்கு சந்தை 20,725.43 புள்ளிகளில் முடிந்துள்ளது.

இப்பொழுது இதை வைத்து கணக்கு போட்டு பாருங்கள்.... 1979ல் ஒருவன் அதிகமில்லாமல் குறைவான பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து வைத்து இருந்தால்... அவனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று. ஆனால் இன்றோ சில நூறு புள்ளிகள் குறைந்ததிற்காக பலர் சலித்து கொள்கிறார்கள்.

இந்த மாதிரி நீண்ட காலத்தில் பங்கு சந்தையில் வளமையான லாபத்தை தருவது ஒன்று தான் பரஸ்பர நிதி திட்டங்கள்.

ஆனால் என்ன ஒரு குறை என்றால் எவ்வளவு லாபம் என்பது நிச்சயம் இல்லை பங்கு சந்தையில்.

அப்படி குறைகளை தவிர்க்க விரும்புவோர்கள், போன பதிவில் சொன்ன கலவையான பரஸ்பர நிதி திட்டங்களுக்கு போவார்கள்.

இந்த கலவை பரஸ்பர நிதி திட்டங்களில் ஏன் கடன் பத்திர முதலீடும் பங்கு சந்தை முதலீடும் கலந்து இருக்கிறது என்றால்.... லாபத்தை அதிக படுத்த தான்.

உதாரணதிற்கு .....

முழுமையான கடன் பத்திர முதலீடுகளில் முதலீட்டாளர்களுக்கு 8.5 % சதவிகிததில் லாபம் கிடைக்கிறது என்றால் .... கலவை முதலீட்டு முறையில் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் இந்த 8.5 % சதவிகிதம் என்பது 11.25 % சதவிகிதமாக உயரும்.

இது போன்ற கலவை பரஸ்பர நிதி திட்ட கட்டமைப்பு எப்படி இருக்குமென்றால்...

50 % கடன் பத்திர முதலீடு: 50 % பங்கு சந்தை முதலீடு,
60 % கடன் பத்திர முதலீடு: 40 % பங்கு சந்தை முதலீடு,
65 % கடன் பத்திர முதலீடு: 35 % பங்கு சந்தை முதலீடு,
80 % கடன் பத்திர முதலீடு: 20 % பங்கு சந்தை முதலீடு,

மேல் சொல்லபட்டவை எல்லாம் சந்தையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் சில பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டமைப்புகள் தான். இவை எல்லாம் திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.

பங்கு சந்தை என்றாலே நீண்ட காலத்தில் லாபம் என்றாகிவிட்ட பிறகு குறுகிய காலத்தில் லாபம் நோக்கம் கொண்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.

அது என்ன லாப நோக்கம் ???

ஒரு ஐந்து வருடங்கள் கழித்து சந்திக்க போகிற ஒரு செலவுக்கு இப்பொழுதே சேமித்து வைப்பதை தான் லாப நோக்க் முதலீட்டு என்று அழைக்க படும். இதற்கு சேமிப்பு நோக்கம் என்று தான் பெயர் வைத்து இருக்க வேண்டும்....  ஆனால் நாளைய விலை ஏற்றத்தை பற்றி இன்றே கணிக்க முடியாததால் ... லாப நோக்கம் தேவை படுகிறது.

சந்திக்க போகிற செலவுக்கு கடன் வாங்கி கொண்டால் ஆச்சு என்று நினைக்க கூடியவர்கள் நினைக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.... அப்படி செய்தால் கடனுக்கு வட்டி கட்டி சுமை தான் அதிகமாகும்.

இன்றைய காலகட்டத்தில் யாரும் சேமித்து வைத்து பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு டிவி வாங்க வேண்டுமானலும் கூட கடன் தான் வாங்குகிறார்கள். புஜ்ஜிய சதவிகித கடன் வட்டி முறை என்று பல கடைகள் கூவி கூவி விற்றாலும், அதில் செயல் பாடு கட்டணங்கள், வரிகள் என்று மறைக்க பட்ட பல விலைகள் அடங்கி இருக்கும்.

ஒருவர் சேமித்து வைத்து ஒரு பொருளை வாங்கினால், அவருக்கு ரூ.1000 லாபம் கிடைக்கிறது என்றால்..... கடன் வாங்கினால் அவருக்கு ரூ.6500 வரைக்கும் நஷ்டம் ஏற்படும்.

ஆனால் சந்தை மயமாக்க பட்ட இந்திய விற்பனை உலகில், சேமிப்பை பற்றி மக்களை யோசிக்க விடாமல் பொருட்களின் மீதான மக்களின் தேவையை / ஆசையை குறைந்து போக விடாமல் ... நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தேவையை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. அப்படிபட்ட தேவை ஏற்கனவே இருந்தால், அத்தேவையை இன்னும் பலபடுத்த விளம்பரங்கள் செய்ய படுகின்றன.

ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.....

முதலீடு, கடன் ..... இவை இரண்டுமே உங்களுக்கு சுமையாக இருக்க கூடாது. அப்படி சுமையாக இருந்தால், அது உங்களது இயக்க சக்தியை பாதிக்கும். கடன் எடுப்பதாய் இருந்தால், அதனுடைய கடைசி தவணை வரைக்கும் எப்படி கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டு கடன் வாங்குங்கள்.

பிறவு முக்கியமாக, முதலீடு திட்ட தன்மை அறிந்து முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு இந்தியாவில். முதலீட்டு தன்மையும் உங்களது லாப நோக்கமும் ஒரே கோட்டில் வரும் பொழுது தான் முதலீடு செய்யுங்கள்.


தொடரும் 

Wednesday, October 16, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -2

வணக்கம் நட்புகளே.

போன பகுதியை தொடர்ந்து இந்த பகுதியை எழுத முடியாமல் போனதற்கு அதிகமான வேலை பழுவும், கணினியில் எற்பட்ட தொழில் நுட்ப பிணக்கும் தான் முக்கிய காரணம். யாராவது எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்து இருந்தால்....  மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

தொடருக்குள் போவோம்.


இன்றைய தேதியில் மியூச்சுவல் ஃப்ண்ட்ஸின் முதலீட்டு நிபுணர்களுக்கு இந்திய பங்கு சந்தையில் நம்பிக்கை போய் விட்டது போல் தெரிகிறது. வாடிக்கையாளருக்கு லாபம் ஈட்டி தர வேண்டும் என்ற நெருக்கடி நிலையிலுள்ளார்கள். இதனால் தாங்கள் நிர்வாகித்து வந்த முதலீட்டு அட்டவணையில்  வெளி நாட்டு பங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுத்து உள்ளார்கள்.

இதனால் இது வரைக்கும் இந்திய சந்தையில் கட்டமைத்து கொண்டு இருந்த தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிதிகள் கொஞ்சம் குறைந்து போகும். ஆதலால் பங்கு சந்தை பழைய நிலையை போல் நிதி வீரியத்தோடு இயங்குமா என்று தெரியவில்லை. இதன் சாதக பாதகங்களை இனிமேல் வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

இந்திய பரஸ்பர நிதிகளில் முக்கிய முதலீட்டாளர்கள் என்று பார்த்தால், அது வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான். இப்பொழுது இந்தியா இல்லாத மற்ற நாடுகளிலும் இந்த பரஸ்பர நிதிகளின் வீச்சு இருக்கும் பொழுது, அவர்களிதை விரும்புவார்களா என்று தெரியவில்லை.
அதற்கென்று இந்த மாதிரியான திட்டங்கள் தான் சந்தையில் நிழவுகிறது என்று இல்லை. பங்கு சந்தை சாராத அரசு கடன் பத்திரங்கள் மீது முதலீட்டு செய்யும் திட்டங்களும் இருக்கிறது.

ஆனால் பங்கு சந்தை திட்ட முதலீட்டு அளிக்கும் கவர்ச்சிகாரமான லாபத்தை போல் இதில் கிடைக்காது என்றாலும், உறுதியான குறைந்த பட்ச லாபம் இதில் கிடைக்கும். 

முதலீடு என்று வரும் பொழுது..... அவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. சேமிப்பு.
2. முதலீட்டு.

இந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும்... நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அது என்ன்வென்றால்....

சேமிப்பு - இந்த முறையில் முதலீட்டு / சேமித்து வைக்கும் பொழுது, நாம் இதில் பெரியதாக லாபம் பார்க்க ஆசை படுவதில்லை. சம்பாரித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைக்கிறோம். இந்த முறையில் அதிகமான நிலையின்மைகளை நாம் அனுமதிப்பதில்லை.

முதலீட்டு - இதில் போட படும் / முதலீடு செய்ய படும் நிதிகள் யாவும் லாபத்தை நோக்கியே  செய்ய படுகிறது. மைய புள்ளி லாபம் மட்டுமே. நமக்கு தகுந்த அளவில் நிலையின்மைகளை ஏற்று கொள்கிறோம்.

பலருக்கு இந்த நிலையின்மைகளென்றால் என்ன என்று புரியாமல் இருக்கும். அவர்களுக்காக சுலபமாக சொல்ல வேண்டும் என்றால்.....

வடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்றில் மறைந்த பழம்பெரும் நடிகர் கண்ணையா அவர்கள் சொல்வாரே  " வரும் .... ஆனா வராது..." ; அது தான் நிலையின்மை.

ஏன் இந்த நிலையின்மை என்று கேட்டால் .... அவை பங்கு சந்தையில் முதலீட்டு செய்ய படுவதால் தான்.

மியூச்சுவல் ஃப்ண்ட்ஸில் / பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கவும், முதலீடு செய்யவும் திட்டங்கள் கிடைக்கிறது. இவைகள் தனி தனியாகவும், கலந்து கலவையாகவும் கிடைக்கிறது.

இந்த கலவையில் பங்கு சந்தை முதலீடுகள், அரசு கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு விகுதம் திட்டத்துக்கு திட்டம் மாறுப்படும்.



தொடரும்....

Tuesday, September 24, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -1

தொடரை ஆரம்பிக்கும் முன், இந்த தொடரை எழுத உற்சாக படுத்திய தமிழ் இணைய நட்புகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

= = =
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், உங்களுக்கு பிடித்தமான பக்தி குறியீட்டை மனதிற்குள் நினைத்து கொண்டு மேற்கொண்டு படிக்க ஆரம்பிக்கவும். ஒரு வேளை கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லையென்றால் இந்த நான்கு வரிகளை படிக்கவில்லை என்று நினைத்து கொள்ளுங்கள்.

தொடர் உள்ள போறரதுக்கு முன்னாடி ஒரு சின்ன கணக்கை பார்ப்போம். ( "அவ்வ்வ்... அப்ப இன்னும் நம்ம தொடருக்குள்ள போகலையா ??" ன்னு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது..)

பொதுவா நம்ம ஆளுங்க ஆபீஸுக்கு போன பிறவு ஒரு நாளைக்கு மூன்னு டி கிட்ட குடிப்பாங்க.... காலைல ஒன்னு, சாய்ங்காலம் ஒன்னு...கடைசியா வீட்டுக்கு கிளம்புறப்ப ஒன்னு.

இன்னய தேதில ஒரு டி ரூ.6 க்கு விக்குது.

ஒரு நாளைக்கு மூன்னு டி ங்குற கணக்கு ல, ஒரு நாள் டி செலவு ரூ.18.

ஒரு வாரத்துக்கு ஆகுற செலவு ரூ.108

அப்ப ஒரு வருஷதுக்கு டிக்கு மட்டும் நம்ம ஆளுங்க செலவு ரூ.5616. இதுல பண்டிகை நாள், அரசு விடுமுறைன்னு கணக்கு போட்டு குத்துமதிப்பா ரூ.600 கழிச்ச கூட டி செலவு ரூ.5000 கிட்ட நிக்குது.

இதுல சில ஆளுங்களுக்கு இருக்குற சிகரட், தண்ணி பழக்கத்தை எல்லாம் சேர்த்த இன்னும் அதிகமா இருக்கும் தொகை.

நினைப்பு தெரியாம ஆகுற இந்த செலவு மாதிரியே நமக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்ந்து வட்டியோட நம்ம கைக்கு கிடைக்குற மாதிரியான முதலீட்டு திட்டம் தான் மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்.

(சரியா சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்,,,,,)

"ப்ண்டின்னு சொல்லுற .... வட்டி செலவுன்னு சொல்லுற .... நீ என்ன டிவில கோட் சூட் போட்டுகின்னு பேசுறவங்களை விட பெரிய அப்பாடக்கரா ??"

கண்டிப்பா நான் அப்பாடக்கர்  எல்லாம் இல்லைங்க. அவங்க எல்லாம் இந்த துறைல மலை மாதிரி, நான் அவங்களுக்கு கால் தூசு கூட வர மாட்டேன். நான் இந்த தொடர் ல சொல்ல நினைக்கிறது எல்லாம் இந்த திட்டதை பத்தி எனக்கு தெரிஞ்சது புரிஞ்சது பிறவு இது எவ்வளவு அருமையான திட்டம்ன்னு தான்.

இன்னோரு விஷயம்... என்னால் முடிஞ்ச வரைக்கும் ரொம்ப எளிமையா மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ் பத்தி சொல்லணும் தான்.

= = =
மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  என்றால் என்ன ???

இதை பற்றி சொல்லுவதென்றால் முழு தொடரையும் இந்த ஒரு பகுதியிலேயே சொல்ல வேண்டிய நிலை வந்துவிடுமென்பதால் இப்போதைக்கு பெயர் காரணத்தை சொல்லிவிடுகிறேன். 

இரண்டு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவரோ ஒன்றிணைந்து இணைந்து கூட்டாக ஒரு குறிபிட்ட இலக்கை அடைவதற்க்காக முதலீட்டு செய்வது. இங்கே இலக்கு என்பது லாபம் என்று எடுத்து கொள்ளலாம். இதைய தான் நம்ம தாத்தா பாட்டி எல்லாம் "ஊரை கூட்டி, தேரை இழுக்குறது"ன்னு சொல்லுவாங்க.

இந்த திட்டதின் முக்கிய செயல்பாடு மக்களிண்டமிருந்து பணம் பெற்று ; அதை வெவ்வேறு இடங்களில் (பங்கு சந்தை, கடன் பத்திரம்) மூலம் முன் தீர்மானிக்க பட்ட இலக்கை அடைவது என்றாலும் ..... பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் இருக்கும் மக்களை இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற செய்வது தான் இத்திட்டத்தின் இன்னொரு அம்சம்.

பெரும் பணகாரனையும், சாதரணனையும் ஒரே குடைக்குள் இந்த திட்டம் கொண்டு வருவதால் இது ஒரு சோஷலிசம் திட்டம் தான். { இத தான் சூப்பர் ஸ்டார் அப்பவே சொன்னாரு ... அஜக்குன்ன அஜக்கு தான், குமுக்குன்ன குமுக்கு தான்.}

உலகமயமாக்கலுக்கு பின் இந்தியாவில் தோன்றிய முதலீட்டு நிறுவனங்கள், சில்லறை முதலீட்டு இலக்கணத்தை லாப நோக்கில் மாற்றி அமைத்தன. அதில் தப்பித்து பிழைத்த ஒரு திட்டம் தான் இந்த மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்.  

இந்த முதலீட்டு இலக்கணம் என்றால் என்ன ???

நல்ல கேள்வி.... இதுக்கான பதிலை நான்காம் பகுதியிலோ ஐந்தாம் பகுதியிலோ சொல்கிறேன். மறக்காம ஞாபக படுத்துங்க.

இந்த மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  திட்டம் எப்படி இயங்குகிறது ???

அதை சொல்ல எங்கூர் திருச்சில இருந்து வெள்ளச்சாமி, அவரது மனைவி முத்துபேச்சி, முத்துபேச்சியின் தம்பி முருகன் ஆகியோரை அழைக்கிறேன்......


தொடரும்.....

Monday, September 7, 2009

கடவுளாகிய சாத்தான் - 2


எதிரே எதிர் இனம்
அவள் அழகு ஐந்து அடி துரத்தில்
கடவுள் மனதில் இச்சைகளின் சீம்பால்
நான் கடவுள் உருவத்தில் சாத்தானின்
உணர்வுகள் கொண்ட கலவை நான்
பிறழ்வு நினைவுகளின் பிதறல் ......

நாங்கள் இருவர் தனி அறையில்
உணர்வுகளில் இன்னும் இரண்டு
அவர்கள் என் கடவுளும் என்
சாத்தானின் பார்வை அவளின்
வளைவுகள் கடவுளின் கண்களில்
என் சாத்தானை அடக்கி கொண்டு
ஓர் உணர்வு தீவிரவாதம் நடக்கிறது

கடவுளின் காதலுக்கும் சாத்தானின் காமத்திற்கும்
காதலின் முடிவு காமம் கடவுளுக்கு
சாத்தானின் காமம் காதலின் சாட்சி
இரண்டுக்கும் அழைப்பிதழ்
அவளின் வெட்கம் ; சிரிப்பு
===
புதிது எனக்கு இந்த மாதிரியான களம்
காலத்தின் விருப்பம் என்னவோ
எனக்கு தெரியவில்லை ....
கடவுளாய் இருப்பதா இல்லை சத்தனாய் இருப்பதா ???
கேள்விகள் என் மனதில் ....
பதில்கள் கிடைக்கவில்லை .....
காலத்தின் களம் கடந்து போனது
உணர்வுகளில் சாத்தானுக்கு வெற்றி
வெளி உலகில் கடவுள் வேடமிட்ட சாத்தான்
முகம் காட்ட காத்து இருப்பான்
இன்னொரு வாய்ப்புக்கு....
Related Posts with Thumbnails