மின்மினியாய் alarm
சீனா நாட்டு தொழில் நுட்பம்
நுட்பமாய் ஆராய்ந்து புரிந்து
கொள்ள முடியாத நிலையில் நான்
சத்தத்தை நிறுத்த வலது கையின்
ஜோடி இடது கை கொண்டு
மேல் பட்டனை அறைய போன்னேன்
ஐந்நூறு ரூபாய் அதன் விலை தெரிந்து
ஊமை ஆனது எனது கைகள்
பொருளாதார பின்னடைவு நாட்டில்
யாசிக்கும் பிச்சைக்காரனாய் நான்
===================================
சீனா நாட்டு தொழில் நுட்பம்
நுட்பமாய் ஆராய்ந்து புரிந்து
கொள்ள முடியாத நிலையில் நான்
சத்தத்தை நிறுத்த வலது கையின்
ஜோடி இடது கை கொண்டு
மேல் பட்டனை அறைய போன்னேன்
ஐந்நூறு ரூபாய் அதன் விலை தெரிந்து
ஊமை ஆனது எனது கைகள்
பொருளாதார பின்னடைவு நாட்டில்
யாசிக்கும் பிச்சைக்காரனாய் நான்
===================================
காலை கடனை கடமையாய்
வயிற்றுக்குள் களையெடுக்க
கழிவறைக்குள் நுழைந்த பொழுது
மனதிற்க்குள் நாய்களும் பேய்களும்
சாத்தானும் கடவுளும் நாட்டியம்
ஆடுகிறதே என்மேல்: கழிவறை தனிமை
ஏளன பார்வை
மறக்க முடியவில்லை பழைய நினைவுகளை
முடியாமல் வெளி வந்தேன்
==================================
பேருந்து நிறுத்தம்
காணாத கனவுகளுக்கான தேடல்களுடன் மனிதர்கள்
அதில் நான் ஒருவன்
பொருள்கள் வாங்க உதவும் பொருளாதார தேடல்
தந்து விடுமோ என் மகிழ்ச்சிக்கான பொருளை.....
==============================================
டிஸ்கி - மூன்று கவிதைகளையும் இன்னும் நான் முழுமையாய் எழுதி முடிக்கவில்லை .......
13 comments:
நான் தான் மொத போனியா :)
ஆனாலும் ரிஸஷன் உங்கள ரொம்ப தான் பாதிச்சிருக்கு ;)
//மூன்று கவிதைகளையும் இன்னும் நான் முழுமையாய் எழுதி முடிக்கவில்லை .......//
இங்க தாம்ல நீ நிக்க!
இரண்டாவது கவிதையை இன்னும் கொஞ்சம் செதுக்குனா சூப்பரா வரும்..
மேவீ,கவிதைகள் மூன்றுமே ஒவ்வொன்றைச் சொல்கிறது.
என்றாலும் இரண்டாவதும் மூன்றாவதும் இன்னும் அழகாக்கலாம்.மூன்றாவது கவிதையில் இன்னும் சொல்ல இருக்கு.என்றாலும் எல்லாமே அருமை.முழுமையாக்குங்கள்
கவிதைகள் எப்ப முடிந்தது?
நாமே முடித்தாத்தான் உண்டு!!! எல்லாமே நல்லாயிருக்கு!!
இது சும்மா ட்ரெய்லர் தாம்மா..மெய்ன் பிக்சர் நீ இன்னும் பாக்கல.
அடுத்த வரியை நான் சொல்லல தல! :)))
நல்லா இருக்கு, எல்லாக் கவிதையும்.
முதலாவது நன்றாக இருக்கிறது.
"பொருளாதார பின்னடைவு நாட்டில்
யாசிக்கும் பிச்சைக்காரனாய் நான்"
இது எவ்வளவு தூரம் மனிதனைப் பாதிக்கிறது என்பதைக் காட்டியுள்ளீர்கள்.
நல்லகவிதைகள் முழுமையாக்குங்கள்.
காலை நேர கவிதையில்
காலை கடனைகூட முடிக்கமுடியாமல்
பொருளாதார தேடலில்
சிக்கிக்கொண்டேதேன்!!
சிந்திக்க மனம் படைத்தவன்
சந்திக்க வேண்டியது ஆயிரம் உண்டு.
விழியற்ற சாத்தான்களின்
ஏளன பார்வை,
வழியற்றவர்களை தீண்டுவதேன்!
தனிமையில் நீயே உலகம்.
உலகமே தனிமைப்பட்டு இருக்கின்றது.
உன் முன்னால்...
பொருளாதாரமே
வாழ்வின் ஆதாரமாகிவிட்டதால்
கிடைக்க பெறாத பொருளெல்லாம்
கனவு பொருளாய்...!!
உங்களைபோல் இன்னும்
யாவருக்கும்...
நன்றி.
அவனா நீயீ..?
Cable Sankar said...
அவனா நீயீ..?
ஹே..ஹே......ஆமாமுல்ல....
மே.வீ....அதிகம் வாசிக்க வேண்டும்.
பாடுபொருள் அருமை...வரிகள் அமைப்புத்தான் மேம்பட வேண்டும்.
சித்திரமும் கைப்பழக்கமல்லவா..
சொல்ல வந்த விஷயம் நல்லாயிருக்கு.
நிறைய வாசிங்க அப்போதுதான் வார்த்தைகள் வசப்படும்.மூன்றையுமே மீண்டும் ஒருமுறை செதுக்குங்க இன்னும் அழகான கவிதைகள் கிடைக்கும்.
நானும் இன்னும் முழுமையாய் படிக்கவில்லை முழுமையாய் எழுதி முடிங்கள் வந்து படிக்கிறேன்.
Post a Comment