நீ அங்கு
நான் இங்கு
ஆனால் நிலைமையோ
ஓன்று .....
ராமர் தேசத்தில்
ராமர் ஆட்சி
நடக்கிறது என்று சொன்னார்கள் ....
விபிஷணனாய்
நான் தேடிய அடைக்களம்
தருகிற ராமன்கள்
எல்லாம் ராவணனாய்
இருக்கிறார்கள்.........
ஸ்ரீ படாவில்
நாம் கண்ட மகிழ்ச்சி
இங்கு நான் காண
பாடாய் படுகிறேன்.......
ராவணன தேசத்து
சீதைகள் எல்லாம்
இங்கு இருக்கும்
காவல் தெய்வத்திற்கு
படையலாய் ..........
கதவுயை திற காற்று வரட்டும்
சொன்னார்கள் ;
கதவு இல்லை
கழிவு அறையில்;
காற்று வருகிறது,
அனுபவிக்கிறேன்
ஆண்மையின் அடையாளத்தை
மறைத்தும் மறந்தும் .......
இவர்கள் என்ன
மனனரில் இருந்த
நம்மை
மானம் இல்லாதவர்கள்
என்று
நினைத்து விட்டார்களோ ??
வசதியானவர்கள்
வளர்ந்த நாட்டில்
கணிப்பொறி தட்டி
கொண்டு இருக்க;
நானோ இங்கு
உயிரை வாழவைக்க
எலிக்கறி கூட
அமிர்தம் தான்
இங்கு
சில நேரங்களில்......
நான்காம் தரம்
வாழ்வுக்கு பயந்து
இங்கு
இரண்டாம் தரம்
அரசுடன்
மூன்றாம் தரம்
வாழ்க்கை வாழ்ந்து
கொண்டு இருக்கின்றோம்.........
நண்பா
சில சமயத்தில்
கொடிய நரகத்தை விட
கொடிய இருப்பிடம் மேல் ....
என்னவே நீ
அங்கேயே இருக்கு ;
கொடிய நரகத்தை அனுபவிக்க
விலை தராதே.....
கண்ணீருடன் உன்
நண்பன் ;
தொலைந்து போன
சொர்க்கத்தில் இருக்கும்
உனக்கு ....
(இது தான் தமிழகத்தில் இருக்கும் சில அகதி முகாம்களின் நிலைமை....முடிந்தால் அவர்களுக்கு மனிதனாய் வாழ வழி செய்வோம்)
டிஸ்கி - பல நாள் முன்பு எழுதினது அதனால் சில எழுது பிழைகள் இருக்கும்.
6 comments:
மேவீ,வலியை அப்படியே உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.உங்கள் தமிழ் உணர்வுக்கே முதலில் தலை வணங்குகிறேன்.
தமிழ்மணத்தில் இணைந்துவிட்டீர்கள்.சந்தோஷம்.
//அனுபவிக்கிறேன்
ஆண்மையின் அடையாளத்தை
மறைத்தும் மறந்தும் .......//
இது எதுக்கு இங்க!?
//தொலைந்து போன
சொர்க்கத்தில் இருக்கும்
உனக்கு ....
//
ம்... நிம்மதி என்றால் சொர்கத்தில்தான்...
@ ஹேமா : நன்றி. போன பதிவிலையே சேர்த்தாச்சு
@ வால்ஸ் : சில அகதி முகாம்களில் கழிவறைக்கு கதவு இல்லை. அதை தன இப்புடி சொல்லி இருக்கேன்
@ பிரபாகர் : தேங்க்ஸ்
ம்ம்.. மிச்ச்சத்த ஃபோன்ல சொல்றேன்
nalla kavithai thala..
Post a Comment