விளிம்பு நிலை மனிதர்களுக்கு இருக்கும் ஒரே சந்தோசம் உடல் உறவு தான் என்று ஜெயகாந்தன் ஏதோ நாவலில் கூறிருக்கிறார். நான் ஒற்று கொள்கிறேன் ஆனால் என்னை பொறுத்த வரை பிள்ளை பெற்று கொண்டால் அவர்களுக்கு குறைந்த பட்சம் வாழ்வியல் நிலை தர வேண்டும். இல்லையென்றால் பிள்ளை பெற்று கொள்ளாமல் இருப்பதே மேல்.
விளிம்பு நிலை மனிதர்களின் சில நிமிஷ சந்தோசத்திற்காக அவர்களின் பிள்ளைகள் ஏன் வாழ்க்கை முழுவதம் கஷ்ட பட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்து குடுக்க முடியாத விளிம்பு நிலை மனிதர்கள் உடல் உறவு உடன் மட்டும் நிறுத்தி கொண்டால் நல்லது.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நேற்று ஒருத்தர் என்னிடம் "ஏன்தான் கடவுள் எனக்கு இவ்வளவு குழந்தைகளை தந்து கஷ்ட பட வைக்கிறாரோ" என்று வருத்தப்பட்டார். அரசாங்கம் கூடுகின்ற குடும்ப கட்டுபாடு சாதனங்களை உபயோக படுத்தி இருந்தால் ஏன் கடவுள் இவ்வளவு குழந்தைகளை அவருக்கு தர போகிறார்.
இதை பற்றி ஜெயகாந்தன் ஐயா எதாவது சொல்லி இருக்காரா???
=============================================================
கொஞ்ச நாள் முன்னாடி HIGGINBOTHAMS சென்று இருந்தேன். ஓசில எதாவது சின்ன புக் படிக்கலாம் ன்னு தான். அப்ப யாரோ ஒரு ஆளு வந்து சும்மா அப்படியே 10000 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிட்டு போனாரு. என் கேள்வி என்னவென்றால்..... அவ்வளவு புக்ஸ் எல்லாத்தையும் எப்போ படிச்சு முடிப்பாருன்னு தான்.
==============================================================
மர்ம தேசம்ன்னு ஒரு தொடர் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சன் டிவி ல புதன்கிழமை புதன்கிழமை போடுவாங்க. சூப்பர் சீரியல் அது. அந்த மாதிரி சீரியல் எல்லாம் ஏன் இப்போ சன் டிவி ல வருவதில்லை???? சீரியஸ் பார்க்கும் மக்கள் அழுதால் போதும் என்று முடிவு செய்து விட்டார்களோ???
===============================================================
உலக சினிமா பார்க்கும் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் "THE SEVENTH SEAL " . மரண தேவனுடன் ஒருவன் CHESS ஆடி கொண்டே தனது மரணத்தை தள்ளி போடுவது தான் கதை. SUB TITLE உடன் CD கிடைக்குது.
=================================================================
ஒரு கவிதை -
நவீனமாய் வாழ்வுக்கு
ஆசைப்பட்டு
விளிம்பு நிலை உலகத்தில்
பின்நவீன துன்பங்களுடன் நான்.
===============================================================
14 comments:
மர்ம தேசம் ஹிட்டானவுடன், அதே பாணியில் பல மொக்கை நாடகங்கள் வந்து தோல்வியடைந்ததே காரணம்.. அந்த இயக்குனர் நாகா இப்போது ஷங்கர் தயாரிப்பில் ஒரு படம் செய்கிறார்
விளிம்புநிலை மனிதர்களுக்கு கருத்தடை சாதனம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது,
எல்லாம் கடவுள் கொடுத்தது என்பான், மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துவான் என்பான், நீ ஊத்துன தண்ணியில தாண்டா இந்த மரமே முளைச்சதுன்னு சொன்னா நம்பமாட்டான்!
//சந்தோசத்திற்காக அவர்களின் பிள்ளைகள் ஏன் வாழ்க்கை முழுவதம் கஷ்ட பட்ட வேண்டும். //
எனது கேள்வியும் இதேதான்.
பத்தாயிரத்துக்கு புக் வாங்கினாலும் படிச்சாத்தான் நல்லது கெட்டத தெரிஞ்சிக்க முடியும்.
சேத்தனுக்கும், அந்த அம்மாவுக்கும் கல்யாணம் அயிட்டதால நிப்பாட்டி இருக்கலாம்.
கடைசியா கவிதை நன்று... ஆரம்பத்துடன் தொடர்புபடுத்தி.
//சேத்தனுக்கும், அந்த அம்மாவுக்கும் கல்யாணம் அயிட்டதால நிப்பாட்டி இருக்கலாம். //
பிரபுநேபால்-குட்டி பத்மினின்னு நினைக்கிறேன்!
\\தேசம்ன்னு ஒரு தொடர் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி சன் டிவி ல புதன்கிழமை புதன்கிழமை போடுவாங்க. சூப்பர் சீரியல் அது. அந்த மாதிரி சீரியல் எல்லாம் ஏன் இப்போ சன் டிவி ல வருவதில்லை???? சீரியஸ் பார்க்கும் மக்கள் அழுதால் போதும் என்று முடிவு செய்து விட்டார்களோ??\\
அது மெகா சீரியல் வராத காலம்.
எல்லா மெகா தொடர்களையும் வாரத்தொடர்களாக மாற்றி ஒவ்வொன்றும் அதிக பட்சம் 50 எபிசோடுக்கு மேல் இருக்கக் கூடாது என்று செய்தால், இப்போது ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் கூட சுவாரஸ்யமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மர்ம தேசம் ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் ஒலி/ஒளியாக்கம் :)
நவீனமாய் வாழ்வுக்கு
ஆசைப்பட்டு
விளிம்பு நிலை உலகத்தில்
பின்நவீன துன்பங்களுடன் நான்.
///
நல்லாயிருக்கு மேவி!
ஜெயகாந்தன் சொன்னது உண்மைதான்!
விளிம்பு நிலை மனிதர்கள்.. ஏதாவது எதிர்வினையாப்பா?
the seventh seal - சீடி இருந்தால் கொடுக்கவும்..:-)
எழுதுற எல்லாப் பதிவுமே கலவை மாதிரிதான் இருக்கு. வாஸ்ஸப்? :)
நல்ல பதிவு.
எழுத்துப்பிழைகளைத் தவிர்த்திருக்கலாமே? எல்லா இடங்களிலும் க்,ச்,ப்,ட்,த் போன்றன விடுபட்டிருக்கின்றன.
//நான் ஒற்று கொள்கிறேன்// - ஏற்று?
//முழுவதம் கஷ்ட பட்ட வேண்டும். // - முழுவதும் கஷ்டப்பட வேண்டும்?
//அமைத்து குடுக்க முடியாத// - அமைத்துக் கொடுக்க முடியாத
//அரசாங்கம் கூடுகின்ற குடும்ப கட்டுபாடு// -
அரசாங்கம் கூறுகின்ற குடும்பக் கட்டுப்பாடு
எழுதும் போது எழுத்துப் பிழைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். வாசகர்களின் கவனத்தை அவை திசைதிருப்பி விடும் நண்பரே !
நாடு நல்லாயிருக்க பாடாய் உழைப்பவனை நாடு நடுத்தெருவில் விடுகிறது அதனால்த்தான் எல்லாமே
நல்ல பகிர்வுகள் தல... :)
சீரியல்.. அதெல்லாம் ஒரு கனாக்காலம் :(
/இதை பற்றி ஜெயகாந்தன் ஐயா எதாவது சொல்லி இருக்காரா???/
சொன்னா மட்டும் கேட்டுக்கவா போறோம்?
@ karki : athu theriyumunga.. avar thane ponniyin selvanai direct seivathu
@ vaals : amanga
@ balagi : thanks thala
@ vijay : athu vikatan publications la vanthu irukka
@ karthigai : raittu
@ karthik : appadiyaa
@ sherif : thanks
@W kanagu : thanks
@ krishnamurthi: he he he
@ thevanmayam : thanks dude
Post a Comment