மொக்கை போடாம சுருக்கமா எழுதுறேன் இல்லாட்டி கார்த்திகை பாண்டியன் வந்து இலக்கிய வகுப்பு எடுதுவிடுவரோ என்ற பயம் தான்.
================================================================
எனக்கு மறதி ஜாஸ்தி என்பதால் அங்கே யார் யார் என்ன பேசினார்கள் என்பதை மறந்து விட்டேன். ஆனால் இந்த தடவை யாரும் எனக்கு டி வாங்கி தரவில்லை என்பது மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு.
=================================================================
"பதிவுலக அஜித்குமார்" கேபிள் சங்கர் அவர்களை சந்தித்தேன். குறைவாக தான் பேச முடிந்தது. உண்மையிலே அவர் யூத் தானுங்க.
===============================================================
அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினேன்.
===============================================================
கார்கி வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார். காரணம் மழை என்று சொன்னார். அதே மாதிரி வால்பையன் அருண் அவர்களும் வரவில்லை. கார்கி அவர் வந்தாலும் வருவர் என்று அவர் பதிவில் கூறி இருந்ததே காரணம்.
===============================================================
நிறைய அறிவாளிகள் இருந்தார்கள் அதனால் அது எனக்கான இடம் இல்லை என்று தெரிந்து அமைதியாக இருந்தேன். எல்லோரும் பெரிய பெரிய விஷயமாக பேசினார்கள். கொஞ்சம் மேர்சு ஆகிட்டேன்.
================================================================
பலருக்கு என்னை தெரிந்து இருக்கு ஆனா எனக்கு தான் யாரையும் தெரியவில்லை.
===============================================================
எனக்கு புதிதாய் மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள்.
===============================================================
நான் என் அறிமுக பேச்சின் பொழுது எனது பதிவுகளை திரட்டியில் சேர்ப்பது இல்லை என்று கூறினேன். அதற்க்கு முரளிகண்ணன் பிரபலம் அடைய திரட்டிகள் முக்கியம் என்று கூறினார். ஆனால் திரட்டியில் சேர்க்கும் அளவுக்கு நான் எழுதுகிறேனா என்று எனக்கு ரொம்ப நாளாய் சந்தேகம். பிரபு தான் எனது பதிவுகளை திரட்டியில் சேர்ப்பதாய் சொன்னான்.
==============================================================
இலங்கை தமிழர் ஒருவர் வந்து இருந்தார். எனக்கு இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்பினேன் ஆனால் முடியவில்லை.
==============================================================
தண்டோராவின் முகம் தெரியாமல் ; நான் அவரை தேடி கொண்டு இருந்தேன். வால்பையன் கிட்ட ஒரு தடவை பேசும் பொழுது அவரிடம் பேசி இருக்கிறேன். பிறகு கேபிள்ஜியின் பதிவு பார்த்து தான் அவரை தெரிந்து கொண்டேன்.
=============================================================
வெங்கிராஜா அவர்கள் பல இங்கிலீஷ் திரட்டிகளை பரிந்துரை செய்தார். நான் கொஞ்சம் மெர்ஸு ஆகிட்டேன். பெரிய ஆட்டக்காராய் இருபார் போல.
==============================================================
மழை எனக்கு ஒன்னும் பெரிய விஷயமாய் தெரியவில்லை.
==============================================================
நர்சிம் ரொம்ப நாளாய் கீற்று காற்று வாங்குவதாய் யாரிடமோ சொன்னார். சரி ஏதோ பதிவுலக அரசியல் போல் இருக்கு என்று நான் அங்கு காது கூடுக்கவில்லை.
=============================================================
காவேரி கணேஷ் பேசும் பொழுது பேச்சில் கொஞ்சம் butter சேர்த்து பேசியதாய் எனக்கு தோன்றியது. ஒரு வேளை அவர் கலந்து கொல்ளும் முதல் சந்திப்பாய் இருக்கலாம் அதனால் தான் இப்படி பேசி இருப்பார் என்று பின்னர் ஒரு எண்ணம் வந்தது.
=============================================================
வழக்கம் போல் அன்றும் நான் தியானத்தில் இருந்தால் யாரிடமும் சரியாக பேசவில்லை. டோண்டு அவர்கள் நான் கிளம்பும் போது வந்தார்.
=============================================================
-
18 comments:
//மொக்கை போடாம சுருக்கமா எழுதுறேன்
இந்த பதிவு மொக்கையில்லைனு உங்களுக்கு யார் சொன்னது? :P
//இந்த தடவை யாரும் எனக்கு டி வாங்கி தரவில்லை என்பது மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு.
அதெல்லாம் ஒருமுறைதான். எனக்கு கோவைல நடந்தபோது கலர்கலரா சாப்பாடே போட்டாங்க. :))
//கொஞ்சம் மேர்சு ஆகிட்டேன்.
மெர்சல் கேள்விப்பட்டிருக்கேன். மேர்சுனா? ;)
//பலருக்கு என்னை தெரிந்து இருக்கு ஆனா எனக்கு தான் யாரையும் தெரியவில்லை.
புது பிரபல பதிவர் மேவி!! :))
தனிப்பட்ட முறையில் பேசுறதுன்னா என்ன?
//மழை எனக்கு ஒன்னும் பெரிய விஷயமாய் தெரியவில்லை.
ப்ளாப் படம்தான். ஒரு பாட்டு நல்லாருக்கும். :)
@ கார்த்திக் :
மெர்ஸு ன்னு கம்மிய மொக்கை போடறது ..... மேர்சு ன்னு அதிகமா மொக்கை போடறது ...
தனிப்பட்ட முறையில் பேசறது ன்ன ....... டார்கெட் பண்ணி மொக்கை போடறது
//"பதிவுலக அஜித்குமார்" கேபிள் சங்கர் அவர்களை சந்தித்தேன். குறைவாக தான் பேச முடிந்தது.
அஜித் கம்மியாதான் பேசுவார். :P
//வழக்கம் போல் அன்றும் நான் தியானத்தில் இருந்தால் யாரிடமும் சரியாக பேசவில்லை.
நம்ப முடியவில்லை.. வில்லை.. ல்லை.. லை..
me the 1st as well as 10th...
//மொக்கை போடாம சுருக்கமா எழுதுறேன் இல்லாட்டி கார்த்திகை பாண்டியன் வந்து இலக்கிய வகுப்பு எடுதுவிடுவரோ என்ற பயம் தான்.//
why this kolaveri?
//நிறைய அறிவாளிகள் இருந்தார்கள் அதனால் அது எனக்கான இடம் இல்லை என்று தெரிந்து அமைதியாக இருந்தேன். //
nice comedy
//வெங்கிராஜா அவர்கள் பல இங்கிலீஷ் திரட்டிகளை பரிந்துரை செய்தார். நான் கொஞ்சம் மெர்ஸு ஆகிட்டேன். பெரிய ஆட்டக்காராய் இருபார் போல.//
என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!
அழகா சுருக்கமா இருக்கு.பெரிசா மொக்கைன்னு இல்ல.
ஓ..மேவீ இப்போதான் பெரிய பையன் ஆனீங்களா!
/மொக்கை போடாம சுருக்கமா எழுதுறேன்//
இதுக்கு மொக்கையே போட்டிருக்கலாம் :))))
கேபிளை அஜித் என்று சொல்லிவிட்டு யூத் என்கிறீர்களே!!!!
நானும் வந்திருந்தேன். வருண பகவான் சிறிது நேரம் கபடி ஆடி விட்டார்.
அடுத்த சந்திப்பில் நிறைய பேசுவோம்.
'உள்ளேன் ஐயா' - நானும் வந்திருந்தேன்.
இத்தப் போய் மொக்கைனு சொன்ன என்த இன்னான்னு சொல்வீங்கோ :)
Post a Comment