காமம் என்றால் என்ன ????
நான் சின்ன பையன் என்னால் ஒரு முழுமையான பதிலை தர முடியுமா என்பது சந்தேகம் தான் அதனால் எனக்கு தெரிந்த வரைக்கும் காமம் என்பது உணர்வு + உடல் இரண்டும் சேர்ந்து உறவு கொள்வது. பொதுவாக காமம் என்பது உணர்வின் வெளிபாடு தான் ஆனால் இன்றைய காலத்தில் காமம் என்பது உணர்வின் வெளிபாடாக இல்லாமல் வெறும் இச்சைகளின் வெளிபாடாக தான் இருக்கிறது.
இச்சைகள். ஒரு ஆண் அல்லது பெண் காமம் பற்றிய விழிப்புணர்வு பெறுவது 12 - 15 வயதில் தான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ; "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION".அந்த மாதிரி ஒருவன் அல்லது ஒருத்திக்கு "அந்த விஷயம்" பற்றி எந்த மாதிரி அறிமுகம் கிடைக்கிறோதோ அது தான் வாழ்நாள் முழுவதும் காமம் பற்றியே அவனது/ அவளது பார்வையாக இருக்கும். பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.
அந்த வயதில் அவனுக்கு காமம் பற்றிய அறிமுகம் கிடைப்பது எல்லாம் ஒரு மூன்றாம் தர ஊடகம் முலமாக தான். அந்த ஊடகமும் வியாபார நோக்கத்திற்க்காக வன் புணர்வை மையமாக கொண்டு தான் எழுத பட்டு இருக்கும். அதில் எழுத பட்டு இருக்கும் விஷயங்கள் பெரும்பாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவை தான். இந்த விஷயங்களை படிக்கும் அவனும் "சரி இது தான் மேட்டர் போல் இருக்கு" என்று எண்ணி கொண்டு அந்த எண்ணத்தோடு வளர்வான். அவனோடு சேர்ந்து அவன் மனதில் இருக்கும் எண்ணங்களும் மிருக தனமாய் வளரும்.
அப்படி வளரும் பொழுது சாத்தியம் இல்லாத சில உடல் உறவு முறைகளை பற்றியே யோசித்து ; ஒரு வெறி தனமான மிருகமாய் மாற்றி விடும். பல ஆண்கள் முதல் இரவின் பொழுது அசுரத்தனமாய் இயங்க இது தான் காரணம்.
அந்த காலத்தில் கிராமங்களில் . ஒரு நம்பிக்கை உண்டு ; முதல் இரவு முடிந்து மறுநாள் காலையில் மணப்பெண்ணுக்கு இரவு கொண்ட உடல் உறவால் இடுப்பு வலி வந்தால் தான் மணமகன் முழுமையான ஆண் என்று நம்பினார்களாம். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டில் முதல் இரவு முடிந்து கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் வந்த பெண்ணை ஏதோ குற்றவாளியை போல் வீட்டு பெண்கள் விசாரித்த கதையும் உண்டு. காரணம் என்வென்றால் நன்றாக புரிந்து கொண்ட பின் அந்த விஷயத்தை வைத்து கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள்.
மூன்றாம் தர ஊடங்களில் இருந்து கதைகளை படித்து வளரும் ஒருவன் படுக்கையில் தன்னை ஒரு சகலகலா வல்லவனாய் நினைத்து கொண்டு வளர்கிறான். அப்படி வளரும் பொழுது பொதுவாக ஒரு எண்ணமும் அவன் மனதிற்குள் வந்து விடும் ; படுக்கையில் அவனது மனைவியோ காதலியோ அந்த நேரத்தில் அவனுக்கு அடிமை. உறவு கொள்ளும் நேரத்தில் பெரும்பாலும் ஆண்களின் ஆளுமையே இருக்கும். சரி தமது மனைவிமார்களும் நம்மை அனுபவித்து கொள்ளட்டுமே என்று "அந்த நேரத்தில்" எந்த ஆணும் நினைப்பது இல்லை.
இதே மாதிரியான எண்ணங்களோடு ஒருவன் வளரும் போது அவன் மனதிற்குள் இருக்கும் சில மெல்லிய உணர்வுகள் அடிப்பட்டு போகும்.
இந்த மாதிரியான மெல்லிய உணர்வுகள் பற்றிய விவாதங்கள் வரும் போது எல்லாம் சிலர் xx yy chromosomes களின் வேலை தான் காதல் என்பார்கள்.
சரி அப்படியே வைத்து கொள்வோம். ஒரு ஆண் பெண் இடையே தோன்றுவது காதல் இல்லை எல்லாம் xx yy chromosomes வேலை தான். இவர் கூற்று படி காதல் என்ற உணர்வே பொய் :
காதல் பொய் . அன்பு பொய் .... ரைட்டு ஓகே.
காதலர்களிடம் தோன்றுவது xx yy chromosomes என்றால் அப்ப
தாய் - மகள்
அப்பா - மகன்
மாமியார் - மருமகன்
அண்ணன் - தம்பி - சகோதரி
போன்ற உறவுகளிடையே தோன்றுவதும் xx yy chromosomes வேலை தானா????
(தொடரும்......)
(நண்பர்கள் கேட்டதற்காக தலைப்பை மாற்றி விட்டேன்)
-
8 comments:
/இச்சைகள். ஒரு ஆண் அல்லது பெண் காமம் பற்றிய விழிப்புணர்வு பெறுவது 12 - 15 வயதில் தான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ; "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION".அந்த மாதிரி ஒருவன் அல்லது ஒருத்திக்கு "அந்த விஷயம்" பற்றி எந்த மாதிரி அறிமுகம் கிடைக்கிறோதோ அது தான் வாழ்நாள் முழுவதும் காமம் பற்றியே அவனது/ அவளது பார்வையாக இருக்கும். பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.
//
இதில் நான் கொஞ்சம் மாறு படுகிறேன். டம்பி..
/ சரி தமது மனைவிமார்களும் நம்மை அனுபவித்து கொள்ளட்டுமே என்று "அந்த நேரத்தில்" எந்த ஆணும் நினைப்பது இல்லை.//
மெஜாரிட்டி அப்படித்தான் இருக்கிறார்கள்..
/இந்த மாதிரியான மெல்லிய உணர்வுகள் பற்றிய விவாதங்கள் வரும் போது எல்லாம் சிலர் xx yy chromosomes களின் வேலை தான் காதல் என்பார்கள்.
சரி அப்படியே வைத்து கொள்வோம். ஒரு ஆண் பெண் இடையே தோன்றுவது காதல் இல்லை எல்லாம் xx yy chromosomes வேலை தான். இவர் கூற்று படி காதல் என்ற உணர்வே பொய் ://
ஹைப்போதலமாசில் ஏற்படும் கெமிக்கல் இம்பாலன்ஸ்தான் என்பது ப்ரூவன் தியரி.. டம்பி..
அது நல்லா இருக்கிறதுனால யாரும் அதை பத்தி கவலை படறது இல்ல.. அது உணர்வா, இல்லை கெமிக்கல் ரியாக்ஷனான்னு..
//காதல் பொய் . அன்பு பொய் .... ரைட்டு ஓகே.
காதலர்களிடம் தோன்றுவது xx yy chromosomes என்றால் அப்ப
தாய் - மகள்
அப்பா - மகன்
மாமியார் - மருமகன்
அண்ணன் - தம்பி - சகோதரி
போன்ற உறவுகளிடையே தோன்றுவதும் xx yy chromosomes வேலை தானா????//
இம்மாதிரியான பல உறவுகளின் உணர்வுகள்.. நமக்கு சொல்லி கொடுக்கப்பட்டது.. டம்பி.. அதற்கு நான் துணைக்கு கூப்பிடுவது.. ஃபிராய்ட்...
// பிறகு என்ன தான் அறிவு வளர்த்தாலும் ; அனுபவம் பெருகினாலும் காமம் பற்றிய அவனது கருது மாறாது.//
இது அனைவருகும் பொருந்தாது மேவீ..
செக்ஸீல் ஆண்கள் ஆளுமை செலுத்துவதைத்தான் பெரும்பாலான பெண்களும் விரும்புகிறார்கள். இயற்கையே அபப்டித்தான் வைத்திருக்கு. ஆணுக்கு முடிந்தவுடன் சோர்வு வரும். பெண்ணுக்கு அந்த நேரத்தில்தான் அரவணைப்பும் அன்பான பேச்சும் தேவைப்படும் என்ன செய்ய?
அதே போல் முதலாக செய்யும் ஆணுக்கு சில நிமிடங்களே போதும். பெண்ணுக்கு அப்படியல்ல. இந்த வேறுபாடுகள் களைந்து உறவு மேம்ப்ட காலமெடுக்கும். அதற்கு ஒரே துணையுடன் பல காலம் வாழ வேண்டும்.
டம்பீ!
சின்னபையன்னு சொல்லிட்டு பெரிய பெரிய மேட்டர் பேசுறயே
நல்ல அலசல். பின்னூட்டங்களும் அருமை. தொடர்க
நோ கமெண்ட்ஸ்...:))
nalla alasal mayvee...
sikkalana palarum pesa payapadukira vishayathai patri sirappaga ezhuthi irukkireergal.. :)
thodarka.. :)
Post a Comment