கேபிடலிசம், சோஷலிசம் போன்ற கோட்பாடுகள் எல்லாம் ஒரு தனிமனிதனின் நம்பிக்கையை காப்பாற்ற வில்லை என்றால் அது இருந்தும் எந்த பயனும் இல்லை. அப்படி பார்த்தால் இந்தியாவில் ஜனநாயகம் இறந்து கொண்டு இருக்கிறது. அதை யாரவது காப்பாற்றினால் நல்ல இருக்கும். மக்கள் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு கோட்பாடுயை நம்பி அது தங்களின் நம்பிக்கையை காப்பாற்றும் என்று நம்பியே ஏமாறுகிறார்கள். என்னை பொறுத்த வரையில் எந்த கோட்பாடும் நிலையானது இல்லை. எல்லாவற்றுக்கும் எதாவது ஒரு குறை இருக்கிறது.
===================================================================
இந்தியாவில் தனியார் துறை முதலாளிகள் பொலி காளைகள் மாதிரி ஆகிடாங்க. காசும் அவங்களுக்கு சுகமும் அவங்களுக்கு ; சுமை மட்டும் தொழிலாளிகளுக்கு. தொழிலாளிகள் உழைத்தால் அவர்களுக்கு வளம் வந்து கொண்டே இருக்கும் என்று 1930 (GREAT DEPRESSION ) முதல் முதலாளிகள் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்...... ஆனால் இன்றும் "RICHER GET RICHER : POOR GET POORER " என்ற விதி தான் பெருமளவுக்கு நடைமுறையில் இருக்கிறது.
==================================================================
தீபாவளிக்கு அப்பாஸ் எனக்கு "Rule The World - The Way I Did " என்ற புத்தகத்தை பரிசாக தந்தான். அதில் இருக்கும் சமஸ்கிரத வார்த்தைகளை படிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
அன்றே சாணக்கியர் ராஜாக்கள் DISASTER MANAGEMENT என்று ஒரு துறை அமைக்க வேண்டும் என்று சொல்லிருக்கார். ஆனால் நமது அரசாங்கம் பல விபத்துக்கள் பிரவாகம் எடுத்து ஓடினாலும் இதை பற்றி பெரிய அளவுக்கு கவலை பட்ட மாதிரி தெரியல. உதரணத்துக்கு மும்பை தகுதலின் போது NSG பிரிவினரை சரியான நேரத்துக்கு கொண்டு வர முடியாமல் போனது.
=================================================================
பழைய ஜகன் மோகினி ல அந்த வெள்ளை பேய்கள் தான் செம மிரட்டலாக இருக்கும். ஆனால் இப்பொழுது வந்துள்ள படத்தில் அந்த பேய்கள் செம மொக்கையா காட்டி இருக்காங்க. போஸ்டர் ல பார்க்கவே தாங்க முடியல. சின்ன வயசில நான் ஜகன் மோகினி பார்க்கும் போது அந்த வெள்ளை பேய்களுக்கு தான் ரொம்ப பயந்து இருக்கிறேன்.
=================================================================
9 comments:
//இந்தியாவில் தனியார் துறை முதலாளிகள் பொலி காளைகள் மாதிரி ஆகிடாங்க. காசும் அவங்களுக்கு சுகமும் அவங்களுக்கு ; சுமை மட்டும் தொழிலாளிகளுக்கு.//
உவமைக்கு வேற மேட்டரே கிடைக்கலையா!?
மேவீ எங்க பேய் பாத்தீங்க ?எனக்கும் பாக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை.
கோட்பாடுகளுக்குப் பின்னுக்குப் போகாமல் நாங்க எங்களுக்குன்னு ஒரு கோட்பாட்டை வச்சிகிட்டு நடந்துகிட்டு இருப்போம் மேவீ.
அதான் நல்லது.
//போஸ்டர் ல பார்க்கவே தாங்க முடியல.//
அதுக்கப்பறமும் அந்த படத்தை பாத்திருக்கீங்களே தலைவா....உங்களுக்கு ரொம்ப தில்லுதான்...
நல்ல பகிர்வுகள் மேவி..
/*அன்றே சாணக்கியர் ராஜாக்கள் DISASTER MANAGEMENT என்று ஒரு துறை அமைக்க வேண்டும் என்று சொல்லிருக்கார். ஆனால் நமது அரசாங்கம் பல விபத்துக்கள் பிரவாகம் */
இப்ப நடந்த ரயில் விபத்த பாத்தீங்களா??? நம்ம அரசாங்க ஊழியர்கள் ரொம்ப பிஸி...
ரொம்பக் கோபமாயிருக்கீங்க!
ஜெகன் மோகினி(பழசு) பார்த்துட்டு இருக்கும் போது என் தம்பி தியேட்டரில் கத்தி விட்டான். நிஜமாவே ரொம்ப பயமாக இருக்கும்.
1. நான் பாலிடிக்ஸ் விரதம்ப்பா.. :)
2. எகனாமிக்ஸ் தெரியாதுப்பா.. :)
3. அவங்க எப்பவுமே அப்படிதான் பாஸு.. :)
4. நான் பழசும் பார்த்ததில்ல. புதுசும் பார்க்கல. :)
எல்லாம் பிரம்மை..
@ வால்ஸ் : ஹி ஹி ஹி ஹி .... பழமொழி சொன்ன அனுபவிக்கனும்
@ ஹேமா : யார் நீ படம் பாருங்க. எனக்கு பிடிச்ச படம் அது. ஆமாம் நீங்க சொல்வதும் சரி தான்
@ க.பாலாசி : தல நான் போஸ்டர்யை மட்டும் தான் பார்த்தேன். படம் இன்னும் பார்க்கல
@ கனகு : ஆபிசர்ஸ் க்கு வேற நிறைய வேலை இருக்கு. இது எல்லாம் அவங்களுக்கு சும்மா
@ அன்புடன் அருணா : ஆமாங்க
@ அமுதா கிருஷ்ணா : ஆமாங்க நானும் பயந்து இருக்கிறேன்
@ கார்த்திக் : ரைட்டு
@ கார்த்திகை : என்னாச்சுங்க
Post a Comment