நான் படிக்க விரும்பியது சமையல் கலையை. ஆனால் படிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தை இன்றளவும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.
நான் ஒரு தீவிர சோஷலிஸ்ட். ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன்.
மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய மூன்று நூல்களையும் பத்து முறைக்கு மேல் படித்து இருப்பேன். இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
நான் ஒரு தனிமை விரும்பி, அதிகம் பேச பிடிக்காது. எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழ பிடிக்கும். அடையாளம் இல்லாததால் பெரும்பாலும் எனக்கு கோவம் வராது. எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவேன்.
நான் மிக பெரிய செலவாளி. என் கையில் காசு தங்காது.
எனக்கு அழகானவர்களை கண்டால் பொறாமையாய் இருக்கும். நான் அழகில்லை என்ற எண்ணம் எனக்கு சின்ன வயசில் இருந்தே இருக்கிறது.
டிஸ்கி - புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்) எழுதிய பீட்டர் பதிவை படித்த பின் இந்த பதிவிற்க்கான IDEA கிடைத்தது......முக்கிய குறிப்பு - கோழி அப்டேட்ஸ்க்கும் தோழி அப்டேட்ஸ்க்கும் இடைய என்ன நடந்தது ????? விவரம் அடுத்த பதிவில்
9 comments:
வெளிப்படையா இருக்கு.. குட்..:-))
உங்களைப் பத்தி உங்களுக்கே தெரியாத ஏழு விஷயங்களைச் சொல்லியிருந்தாக்க இன்னும் சுவாரசியமா இருந்திருக்குமோ :) :)
அடடே அப்படியா!
வெளிப்படையா தான் இருக்கு!
nampurenga......:)
//..ஆனால் எது சோறு போடுகிறதோ நான் அந்த பக்கம் இருப்பேன். ..//
அதுதான் முக்கியம்.. :-))
@ KARTHIGAI : THANKS
@ KRISHNA MURTHI : APPADIYA SIR... SARI MEVIYIN PAGIRVIL ELUTHUGIREN
@ VAALS : :))) :))))
@ RASIGAI : NAMBANUM
@ THIRUSAMPATH : ATHANE
@ SRI : ALAGA SMILE PANNURINGA. UNGALUKKU NALLA FUTURE IRUKKU
பதில்கள் சூப்பரு தல. அதே மாதிரி அந்த ரஷ்ய பழமொழியும். நிறைய யோசிக்க வச்சுது. :)
//புது வேலையில் ரொம்ப பிஸிங்க. வானவில் கார்த்திக் (நான் அதிகம் பொறமை படும் பதிவாளர்)
நான் வெட்டியா இருக்கேன்னு என் மேல பொறாமையா தல? :))))
ம்ம்ம்ம் படிச்சிட்டேன்
Post a Comment