கையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நண்பர் கேட்டார் “பூவோட வறாங்களே. அது தான் கோழியா சகா?” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ கோழியோட வர மாட்டா சகா. ஏன்னா அவளே ஒரு கோழி தான்”
______________________________________________________
கரிக்கட்டை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் கோழி தான்டா. நீ வெட்டினால் சிக்கன் ஆவேன்”.
____________________________________________________
தோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட சிக்கன் பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் கோழி வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.
______________________________________________________
அண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “மையால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்
______________________________________________________
காலியாய் இருந்த சமயலறையில் இருவரும் கோழி சமைத்து பார்க்கலாம் என அழைத்தாள் தோழி. ”எப்படியும் நாம் சமைக்கணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் நான் கோழி உரிப்பதில் கைதேர்ந்தவன் என்று .
______________________________________________________
 
 
 
 Posts
Posts
 
 
10 comments:
நாட்டுகோழியா, பிராய்லர் கோழியா!?
ஹிஹிஹி..இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன்..
4வது மேட்டருக்கு நிஜமா அர்த்தம் பிரிலபபா
//அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் நான் கோழி உரிப்பதில் கைதேர்ந்தவன் என்று .//
என்னதிது?
அப்புறம் நீ போட்டு இருக்கிறழ்து சேவலோட ஃபோட்டோ... யாராவ்து தப்பா நினைக்கிறதுக்குள்ல மாத்திடு :)
நீ
கோழியா
என் காதலியா
யாரடீ என் கண்ணே??
ஹி ஹி ஹி..
இன்னும்.. இன்னும்...
எதிர்ப்பாக்குறோம்.
ஸப்பா முடியல! :)
அசைவம் ;)
:-)))
@ வால்ஸ் : காட்டு கோழிங்க இது
@ கார்க்கி : கட்டாயம் ட்விட்டர் ல வரும். 4 லாவது மேட்டர் புரியவில்லையா... என் கொடுமை சார் இது ???
@ ஸ்ரீ : அது ரொம்ப டபுள் மீனிங் ங்க
@ கார்க்கி : மாத்தி போட்டாச்சு
@ மோனி : இன்னுமாடா இந்த உலகம் நாமள நம்புது
@ கார்த்திக் : எது முடியல ??? சொன்ன நல்ல இருக்கும்
@ ஜமால் : இல்லைங்க, நான் சைவம். சரவணா பவனுக்கே போகலாம்
நல்லாத்தான் இருக்கு அப்டேட்ஸ் - கோழி உரிக்கறதுல கை தேர்ந்தவனா - சரி சரி - பாவம் தோழி - இல்ல கோழி
Post a Comment