Pages

Wednesday, September 11, 2013

**பழந்தண்டலம்** - }கிராம தரிசனம்{



இன்று உடல் நிலை சரியில்லை என்று விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்தேன். மாலையில் செய்வதற்கு எதுவுமில்லாமல் வெறுமையை உணர தொடங்கிய பொழுது தான் ... பார்க்க வேண்டிய கிராமங்களின் வரிசையில் பழந்தண்டலம் இருப்பது நினைவுக்கு வந்தது. 

ஐம்பது வருடங்கள் முன்பு இந்திய கிராமங்கள் எப்படி இருந்திருக்குமென்று கற்பனை செய்து கொண்டு இருப்பவர்கள் அதை நேரில் பார்க்க  கண்டிப்பாக இங்கு போக வேண்டும். 

எருமையூரில் இருந்து நடுவீரபட்டு போகும் வழியில் சோமமங்களத்திற்க்கான திருப்பத்துக்கு எதிர் திருப்பத்தில் திரும்பினால் பழந்தண்டலம் போகும் வழி வருகிறது.

போகும் வழியே காட்டிற்குள் புகுந்து போவது போல் இருக்கிறது. அவ்வழியில் முன்பு ஒரு காலத்தில் குளமொன்று இருந்திருக்கும் போல. புஞ்சை நிலம். 

தாம்பரத்துக்கும் எருமையூருக்கும் இடைய ஒரு காலத்தில் இருந்த குளத்தின் தொடர்ச்சியாக இருக்குமென்று நினைக்கிறேன். 

நான் போகும் பொழுது மழை பெய்து முடிந்திருந்த சமயம் என்பதால் குளிர் தன்மை அதிகமாக இருந்தது.

சற்று நேர பயணத்துக்கு பிறவு பழந்தண்டலத்திற்குள் நுழைந்தேன். தெரு முழுக்க ஒரே சேறும்  சகதியுமாய் இருந்தது. தாரை பார்த்து இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. அப்பொழுது எதிரில் பேருந்து. வழுக்கும் தெருவில் எப்படியோ சமாளித்து வழியை விட்டேன். 

கொஞ்ச நேர கஷ்டத்துக்கு பிறகு குண்டும் குழியுமான பாதைக்கு வந்து, பழந்தண்டலத்துக்குள் இருந்தேன். 

இக்கிராமம் பார்க்கையில் மிகவும் பின் தங்கியது போல் தெரிகிறது. சிஎஸ்ஐ தொடக்க பள்ளி ஓன்றை மட்டுமே பார்க்க முடிந்தது. இரண்டு பெட்டி கடையை தவிர்த்து பெரிய வியாபார ஸ்தாபனம் என்று ஒன்றும் இல்லை. 

என்னை ஆச்சரிய பட வைத்த முக்கியமான விஷயம்... இந்த பகுதியில் டாஸ்மாக் கடை எதுவும் இல்லை.  வருத்த பட வைத்த விஷயம் மருத்துவ வசதியும் இல்லை.  மக்கள் மருத்துவ தேவைக்காக நடுவீரபட்டுக்கோ இல்லை திருமுடிவாக்கதிற்கோ தான் போக வேண்டிருக்குமென்றினைக்கிறேன். 

குறிப்பீட்டு சொல்ல வேண்டிய இக்கிராம சிறப்பென்று பார்த்தால் இங்கு பக்கத்தில் இருக்கும் மலை தான். மலையேற்ற பிரியர்கள் இதற்காக ஆர்வம் கொள்ளலாம்.

இங்கு இருக்கும் மக்களின் பொருளீட்டும் மூலமென்று பார்த்தால் தாம்பரம், குன்றத்தூர், போருர் ஆகியவை தான் என்று தெரிகிறது. 

இப்பகுதியில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் லாபம் பார்க்கும் நிறுவனம் இருக்கிறது. 

முக்கிய வருத்தம்..... பிலாஸ்டிக் அதிகம் இருப்பதால் அங்கங்கே பிலாஸ்டிக் பொருட்கள் விரவி கிடக்கிறது.
 

"TODAY CITIES DOMINATE AND DRAIN VILLAGES : SO THAT THEY ARE CRUMBLING TO RUIN" - MAHATMA GANDHI  

3 comments:

இரசிகை said...

nallaayiruke...
:)

இரசிகை said...

nallaayiruke...
:)

துளசி கோபால் said...

டாஸ்மாக் இல்லைன்னு சந்தோஷப்படுவதா? இல்லை மருத்துவ வசதி, கல்வி வசதி இல்லைன்னு கலங்குவதா?

அங்கே வசிக்கும் மக்கள்தொகை எவ்வளவு ? அதிக ஓட்டு இருக்குன்னால்
அரசியல் வியாதிகள் பாயாதோ?

Related Posts with Thumbnails