Pages

Tuesday, September 24, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -1

தொடரை ஆரம்பிக்கும் முன், இந்த தொடரை எழுத உற்சாக படுத்திய தமிழ் இணைய நட்புகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

= = =
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், உங்களுக்கு பிடித்தமான பக்தி குறியீட்டை மனதிற்குள் நினைத்து கொண்டு மேற்கொண்டு படிக்க ஆரம்பிக்கவும். ஒரு வேளை கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லையென்றால் இந்த நான்கு வரிகளை படிக்கவில்லை என்று நினைத்து கொள்ளுங்கள்.

தொடர் உள்ள போறரதுக்கு முன்னாடி ஒரு சின்ன கணக்கை பார்ப்போம். ( "அவ்வ்வ்... அப்ப இன்னும் நம்ம தொடருக்குள்ள போகலையா ??" ன்னு சொல்லுற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது..)

பொதுவா நம்ம ஆளுங்க ஆபீஸுக்கு போன பிறவு ஒரு நாளைக்கு மூன்னு டி கிட்ட குடிப்பாங்க.... காலைல ஒன்னு, சாய்ங்காலம் ஒன்னு...கடைசியா வீட்டுக்கு கிளம்புறப்ப ஒன்னு.

இன்னய தேதில ஒரு டி ரூ.6 க்கு விக்குது.

ஒரு நாளைக்கு மூன்னு டி ங்குற கணக்கு ல, ஒரு நாள் டி செலவு ரூ.18.

ஒரு வாரத்துக்கு ஆகுற செலவு ரூ.108

அப்ப ஒரு வருஷதுக்கு டிக்கு மட்டும் நம்ம ஆளுங்க செலவு ரூ.5616. இதுல பண்டிகை நாள், அரசு விடுமுறைன்னு கணக்கு போட்டு குத்துமதிப்பா ரூ.600 கழிச்ச கூட டி செலவு ரூ.5000 கிட்ட நிக்குது.

இதுல சில ஆளுங்களுக்கு இருக்குற சிகரட், தண்ணி பழக்கத்தை எல்லாம் சேர்த்த இன்னும் அதிகமா இருக்கும் தொகை.

நினைப்பு தெரியாம ஆகுற இந்த செலவு மாதிரியே நமக்கு தெரியாம கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்ந்து வட்டியோட நம்ம கைக்கு கிடைக்குற மாதிரியான முதலீட்டு திட்டம் தான் மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்.

(சரியா சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்,,,,,)

"ப்ண்டின்னு சொல்லுற .... வட்டி செலவுன்னு சொல்லுற .... நீ என்ன டிவில கோட் சூட் போட்டுகின்னு பேசுறவங்களை விட பெரிய அப்பாடக்கரா ??"

கண்டிப்பா நான் அப்பாடக்கர்  எல்லாம் இல்லைங்க. அவங்க எல்லாம் இந்த துறைல மலை மாதிரி, நான் அவங்களுக்கு கால் தூசு கூட வர மாட்டேன். நான் இந்த தொடர் ல சொல்ல நினைக்கிறது எல்லாம் இந்த திட்டதை பத்தி எனக்கு தெரிஞ்சது புரிஞ்சது பிறவு இது எவ்வளவு அருமையான திட்டம்ன்னு தான்.

இன்னோரு விஷயம்... என்னால் முடிஞ்ச வரைக்கும் ரொம்ப எளிமையா மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ் பத்தி சொல்லணும் தான்.

= = =
மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  என்றால் என்ன ???

இதை பற்றி சொல்லுவதென்றால் முழு தொடரையும் இந்த ஒரு பகுதியிலேயே சொல்ல வேண்டிய நிலை வந்துவிடுமென்பதால் இப்போதைக்கு பெயர் காரணத்தை சொல்லிவிடுகிறேன். 

இரண்டு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டவரோ ஒன்றிணைந்து இணைந்து கூட்டாக ஒரு குறிபிட்ட இலக்கை அடைவதற்க்காக முதலீட்டு செய்வது. இங்கே இலக்கு என்பது லாபம் என்று எடுத்து கொள்ளலாம். இதைய தான் நம்ம தாத்தா பாட்டி எல்லாம் "ஊரை கூட்டி, தேரை இழுக்குறது"ன்னு சொல்லுவாங்க.

இந்த திட்டதின் முக்கிய செயல்பாடு மக்களிண்டமிருந்து பணம் பெற்று ; அதை வெவ்வேறு இடங்களில் (பங்கு சந்தை, கடன் பத்திரம்) மூலம் முன் தீர்மானிக்க பட்ட இலக்கை அடைவது என்றாலும் ..... பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் இருக்கும் மக்களை இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற செய்வது தான் இத்திட்டத்தின் இன்னொரு அம்சம்.

பெரும் பணகாரனையும், சாதரணனையும் ஒரே குடைக்குள் இந்த திட்டம் கொண்டு வருவதால் இது ஒரு சோஷலிசம் திட்டம் தான். { இத தான் சூப்பர் ஸ்டார் அப்பவே சொன்னாரு ... அஜக்குன்ன அஜக்கு தான், குமுக்குன்ன குமுக்கு தான்.}

உலகமயமாக்கலுக்கு பின் இந்தியாவில் தோன்றிய முதலீட்டு நிறுவனங்கள், சில்லறை முதலீட்டு இலக்கணத்தை லாப நோக்கில் மாற்றி அமைத்தன. அதில் தப்பித்து பிழைத்த ஒரு திட்டம் தான் இந்த மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்.  

இந்த முதலீட்டு இலக்கணம் என்றால் என்ன ???

நல்ல கேள்வி.... இதுக்கான பதிலை நான்காம் பகுதியிலோ ஐந்தாம் பகுதியிலோ சொல்கிறேன். மறக்காம ஞாபக படுத்துங்க.

இந்த மியூச்சுவல்  ஃப்ண்ட்ஸ்  திட்டம் எப்படி இயங்குகிறது ???

அதை சொல்ல எங்கூர் திருச்சில இருந்து வெள்ளச்சாமி, அவரது மனைவி முத்துபேச்சி, முத்துபேச்சியின் தம்பி முருகன் ஆகியோரை அழைக்கிறேன்......


தொடரும்.....

4 comments:

ப.கந்தசாமி said...

தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. இரண்டு பேர் சந்திச்சாங்களாம். ஒருத்தன் சொல்றான். "நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வரேன், இரண்டையும் கலக்கி இரண்டு பேரும் ஊதி ஊதி திங்கலாம்" என்றானாம்.

நான் இதை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.

"நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலக்குவோம். நீ ஊது, நான் திங்கறேன்."

இதுதான் ம்யூசுவல் பண்டின் தத்துவம்.

திவாண்ணா said...

உம், எழுதுங்க. புரியும் போல இருக்கு.
பயாஸ்டா இல்லாம சாதக பாதகம் ரெண்டையும் எழுதுங்க.

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

திட்டம் நல்லாத்தான் இருக்கு (இருந்தது...!)

Related Posts with Thumbnails