Pages

Friday, June 12, 2015

வேளச்சேரி டூ சென்னை பீச்

சென்னை புறநகரில் வாழும் மக்களுக்கு தான் தெரியும் அவர் நம்புகிற பக்தி மார்கத்தை விட ரயில் மார்கத்தில் பயணிப்பது எவ்வளவு முக்கியம் என்பது.

நான் வாழும் பெருங்களத்தூரில் இருந்து திநகர் வரை செல்ல வேண்டுமானால் மின்சார ரயிலே உகந்தது. ஏனென்றால் அதில் சென்றால் வெறும் நாற்பது நிமிடங்கள் தான் ஆகும். இதே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் பேருந்தில் பயணித்தால் குறைந்தது இரண்டு மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரம் வரைக்கும் ஆகும் திநகர் போய் சேர.

பைக்கில் சென்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரைக்கும் ஆகும்.

2005
ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய வழி தடங்களில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்தது. அப்பொழுதும் சில வழி தடங்களில் பேருந்து இயக்க படாமல் இருந்தது என்று கேள்வி.

2011
ஆம் ஆண்டுக்கு முன்பு ஒருவர் கூடுவாஞ்சேரியில் இருந்து திருவான்மியூர் வரை செல்ல வேண்டுமானால் அவர் தாம்பரம் வந்து பிறவு அங்கு இருந்து T51 (தற்பொழுது அது 95) பிடித்து திருவான்மியூர் போக வேண்டும். தற்பொழுது கூடுவாஞ்சேரியில் இருந்தே திருவான்மியூருக்கு போகும் நேரடி பேருந்து செல்கிறது.

அதே போல் சைதாப்பேட்டை வரைக்கும் தான் சென்னை என்று இருந்த காலத்தில் செங்கல்பட்டுக்கும் காஞ்சிபுரத்திற்கும் நேரடி பேருந்து இருந்தா என்று தெரியவில்லை. வெறும் ரூட் பஸ் என்று சொல்ல பட்டவையே இருந்துள்ளது. ஆனால் இன்றோ நேரடி பேருந்து மற்றும் மின்சார ரயில் எல்லாம் இருக்கிறது.

சென்னை மின்சார ரயில் வழி தடங்கள் மக்களின் வேலை வாய்ப்புகளை அதிக படுத்தியுள்ளது. எனக்கு தெரிந்த ஒருவர் காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் நுங்கம்பாக்க அலுவலகத்திற்கு வந்து வேலை பார்த்துவிட்டு போகிறார். பயண நேரம் இரண்டு மணி நேரம் தான் ஆகிறதாம். Fast service ரயில் தான் அதற்கு காரணம். நானும் அந்த வழி தடத்தில் பயணித்து இருக்கிறேன்.

இது இப்படியாக இருக்க இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா செய்திதாளில் வேளச்சேரி சென்னை பீச் இடையான ரயில் வழி தடத்தை குறை கூறி பேருந்து வழி தடமே போய் வர சிறந்தது எனவும் அதில் தான் பயண நேரம் குறைவு என்று எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து வேளச்சேரியில் பாரிஸ் கார்னர் வரையிலான பேருந்துகள் இரண்டு வழி தடங்களில் இயக்க படுகிறது ஒன்று அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சாலை, சிந்தாரிபேட்டை வழியாக போகும் ஒன்று. மற்றொரு வழி தடம் பெசன்ட் நகர், அடையாறு, மெரினா வழியாக போகும் மற்றொன்று. இதில் இரண்டு வழி தடத்திலும் அதிக முறை பைக்கில் பயணித்திருக்கிறேன் என்ற முறையில் சொல்கிறேன் ; இரண்டுமே வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழி தடங்கள்.

செய்தித்தாள் சொல்லும் வழி தடமான இரண்டாம் வழி தடத்தில் அடையாறு பகுதியை விட்டு வெளி வரதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நேற்று தான் எனக்கு அப்படி ஆனது. இவர்கள் எந்த அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு இந்த முடிவை சொல்லி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அக்கட்டுரையில் சென்னை பீச் நிலையத்தில் இறங்கி விட்டு பாரிஸ் கார்னர் போக அதிக நேரம் எடுக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். சென்னை பீச் நிலையத்தில் இருந்து பர்மா பஜார் வழியாக போனால் தான் அதிக நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக நிலையத்தின் எதிரே இருக்கும் அன்னபிள்ளை தெரு வழியாக போனால் நேரம் குறைவாக தான் எடுக்கும்.

அந்த கட்டுரையாளர் பாரிஸ் கார்னர் போக வேண்டுமானால் எதற்கு சென்னை பீச் நிலையம் வரைக்கும் போக வேண்டும் என்று தெரியவில்லை. சென்னை ஃபோர்ட் நிலையத்தில் இறங்கினாலே குறைவான நேரத்தில் பாரிஸ் கார்னர் போய் விடலாமே ???

அதிலும் குறிப்பாக பறக்கும் ரயில் நிலையங்கள் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் இருக்கிறது என்று சொல்கிறார். உண்மை தான் பய படும் அளவிற்கு இல்லை என்பதே என் கருத்து. சில நிலையங்கள் சேரி பகுதி நடுவில் ரயில் அமைந்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.. எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை

ஒரு தரம் அலுவலக வேலை முடித்து விட்டு கிளம்ப நடு இரவாகி விட்டது. பைக்கில் வேளச்சேரி பகுதியை கடக்கும் பொழுது வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது. என்ன பண்ணுவது என்று தெரியாமல் நின்ற பொழுது அங்கிருந்த சேரி பகுதியில் இருந்து யாரோ ஒரு அண்ணன் வந்து வண்டியை சரி செய்து கொடுத்தார். அவர் மட்டும் வரவில்லை என்றால் என்ன பண்ணி இருப்பேன் என்று இது நாள் வரைக்கும் யோசிக்க முடியவில்லை. இது நடந்து ஏழு வருடங்களாகி இருக்கும்

இது இப்படியாக இருக்க கட்டுரையாளருக்கு சேரி பகுதியை கண்டு என்ன பயம் என்று புரியவில்லை.

2 comments:

Nasar said...

It's true...well said bro...

அணில் said...

காஞ்சிபுரம் மட்டுமா, விழுப்புரத்திலிருந்தும் வேலூரிலிருந்தும் கூட தினம் சென்னையில் வேலைக்கு வருவோர் உண்டு. புதுவையை சேர்ந்த என் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள் "ECRஐ ஒட்டி ரயில் தடமும், தினசரி ரயில் சேவை மட்டும் இருந்தால் நாம எதுக்கு சென்னையில வீடெடுத்து தங்கனும்?"
சென்னையிலிருந்தபோது வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை ஒவ்வொரு வாரமும் இடைப்பட்ட ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி சென்னையின் பன்முகத்தன்மையை ரசித்திருக்கிறேன். ஒருமுறை கையில் ஒருநாள் சிறப்பு பேருந்து பயணச்சீட்டு இருந்தும் வேளச்சேரி ரயில் நிலையத்தை பார்த்துவிடவேண்டுமென்ற ஆரவத்தில் அங்குவரை பேருந்திலும், வேளச்சேரியிலிருந்து கோட்டூர்புரம் வரை மின் தொடர்வண்டியிலும் பின்னர் மறுபடி பேருந்தில் ஊர் சுற்றுவதுமாக இருந்த அனுபவங்களை மறக்க முடியாது.

Related Posts with Thumbnails