Pages

Saturday, July 18, 2009

நூறாவது பதிவும் பதிவாளர்கள் சந்திப்பும் - தொகுப்பு

மயிலாப்பூர் யில் நான் சென்ற வாகனம் பழுது ஆகிவிட்டது; ஆதனால் கடற்க்கரைக்கு செல்ல அதிக நேரம் ஆகிவிட்டது. இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் ; என்வென்றால் எனக்கு இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாது.
காந்தி சிலை பின்னாடி போய் பார்த்தேன் பிளாக்கர் மீட் நடக்கிற மாதிரியே எனக்குதெரியல. நானும் நவகிரகத்தை சுத்தற மாதிரி காந்தியை சுத்தி வந்தேன். அந்தபக்கமும் இந்த பக்கமாய் சுற்றி பதிவாளர்களை தேடுகிறேன் என்ற பெயரில்அங்கே இருந்த பெண் பிள்ளைகளை பார்த்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் போன பின் உடல் வலிக்க ஆரமித்து விட்டது. அந்த நேரத்தில் பிரபு தான் என் நினைவுகளில் நிறைந்து இருந்தான். அவன் இந்த சமயத்தில் இங்குஇருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

மாமா
"நீ இல்லாமல் எது நிம்மதி"

அந்த நேரத்தில் சோகமாய் உணர்ந்தேன். சரின்னு வானவில் வீதி கார்த்திக் கிட்டமெசேஜ் பண்ணி கார்கி நம்பர் வாங்கினேன். அந்த numberkku நான் டயல் செய்த போது.

ஆவலுடன் காத்து இருந்தேன் கார்கி குரல் கேட்க. எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை எனக்கு நானே பேசி பார்த்து கொண்டேன். ஏனென்றால் "FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" ல.

எதோ ஓர் புரியாத ஹிந்தி பாடல் ஓன்று எனது செவியை சவுல்ஆகிக்கொண்டு இருந்தது. பார்வையை சுழல விட்டேன்.
காதலர்கள்.
இளம் ஜோடி.
அவன் மடியில் அவள்.
இடது தோள்பட்டை இருந்த அவன் கையை சற்றே இறக்கினான்.
மனம் பொறுக்கவில்லை.
கண்கள் நேர் கோட்டில் வந்தது.

சிறுது நேரம் கழித்து.
ஹிந்தி பாடல் நின்றது.
தேவதை குரல் ஓன்று கேட்டேன்.
கார்கி ஒரு பெண்பாலா....????
அதை கூட யோசிக்கவில்லை என் அறிவு.
"ஹலோ"
உடனே என் மனம் உடல் வலி எல்லாம் மறந்தது.
ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் .........

" ஹாய். I am mayvee. ........"
உடனே உள்ளே இருக்கும் சாத்தான் சொன்னது....." டேய் ஏன்டா இந்த கொலை வெறி "
"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் முழக்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வான்நிலை
பெண்ணே நீ வைசுயிருக்கிறது புளியோதரை"

என்ன திடிர்ன்னு மனசுக்குள்ள இருக்கிற மன்மதன் சாப்பட்டு ராமனா மாறுகிறானே என்று கண்ணை தெறந்து பார்த்தேன் ; பக்கத்தில மாயாண்டி குடும்பத்தார் மாதிரி ஒரு குடும்பம் கட்டம் கட்டி புளியோதரை காலி பண்ணிட்டு இருந்தாங்க. அதானே பார்த்தேன்.

இப்போ தேவதை
"ஆப் கௌன் ஹாய் ???"

அவளின் குரலை கேட்ட உடன் எனக்கு திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களை விட அவளது குரல் சிறந்ததாக தோன்றியது. குரல்ன்ன குரல், அப்படி ஒரு குரலுங்க. 45% லத மங்கேஷ்கர், 25% ஆஷா ப்ஹொஸ்லெ, மீதி 30% ஜானகி என ஒரு அருமையான கலவையான குரல். அப்படியே உருகி போயிட்டேன்.

"ஒன்ற இரண்டாய்
உயிர் தின்ன பார்க்குதே
உணர்வுகள்......"

திடிர்ன்னு ஒரு பொண்ணு ஹிந்தி ல பேசவும் எனக்கு என்ன பேசுவதுன்னே தெரியல. சரின்னு நாம தான் "Hum Aapke Hain Kaun" படத்தை பல தடவை DVD யில் பார்த்து இருக்கோமே அதை வைச்சு சமாளிக்கலாம் என்று பார்த்தால் ஒரு ஹிந்தி வார்த்தை கூட தோன்றவில்லை அந்த சமயத்தில்.

ஹிந்தி எதிர்ப்பு பண்ணின எல்லா ஆளுகளையும் நல்ல திட்டினேன் மனதார. என்ன தான் ஹிந்தி படித்திருந்தாலும் பத்தாவது பிறகு அந்த மொழியை நான் அவ்வளவா பயன்படுத்த வில்லை.

திடிர்ன்னு ஒரு குயில் என் காதுல குவுச்சு. ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். என்னன்னு பார்த்த நாம தேவதை.
"ஹரே..... போல்லுன"

எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. ஆனால் ஹிந்தி மொழி எவ்வளவு அழகான மொழி என்று அன்று தான் தெரிந்து கொண்டேன். ஆனா எனக்கு Aradhana பட ஹீரோ ராஜேஷ் கண்ணா மாதிரி "மேனே சப்னோகி ராணி" ன்னு பாட்டு பாட தோனுச்சு.

ஐயோ.... என்ன செய்ய.
இவள் ஹிந்தி பேசுற. பிறகு எப்படி தமிழ்யில் பதிவு எழுதுகிறாள்ன்னு ஒரே குழப்பம். சரி எது எப்படி இருந்தாலும் ; இவளை ஓகே பண்ணி விடவேண்டும் என்று முடிவு கட்டினேன். அப்பன்னு பார்த்து வழக்கம் போல் networrk பிஸி ஆகி கால் கட் ஆகிருச்சு.

"தென்பாண்டி சீமையில
மான் போல் வந்த உன்னை
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ ......"

மனசுக்குள்ள நாம் ராஜா சார் BGM ஏதும் இல்லாமல் சோலோவாக sympathy create பண்ணிட்டு இருந்தார். இப்போ வனம் முழுமையாக இருட்டின் அணைப்பில் வந்துருச்சு.

சுத்தி நிறைய மக்கள் இருந்தாலும் மனசில் வெறுமையாக உணர்ந்தேன். சற்று தள்ளி ஒரு சின்ன பொண்ணு ஐஸ்கிரீம் வாங்கிட்டு இருந்ததை பார்த்தேன். நீல நிற டிரஸ்யில் அழகாக இருந்தாள். ஒரு குச்சி ஐஸ்யை சாப்பிட்டு, அவள் கை எங்கும் ஐஸ் உருகி வழிந்து கொண்டு இருந்தது. எனக்கு மீண்டும் அந்த குழந்தை பருவத்துக்கே போய்விட ஆசை வந்தது.

"முத்தான முத்து அல்லவோ
முடிந்து வைத்த முத்து அல்லவோ"

என்ன செய்ய "The Curious Case of Benjamin Button" கதை போல் சாத்தியம் இல்லாத நிலை. என் பார்வையை சுழல விட்டேன்.
ஐஸ் கிரீம் கடை, பஜ்ஜி கடை, yellow கலர் சுடிதார்........

yellow கலர் சுடிதார்யில் இருந்த பெண்யின் முகம் எனக்கு தெரிந்த முகமாய்இருந்தது. சற்று உற்று நோக்கினேன்.
அப்போ பின்னாடி ஒரு குரல் கேட்டுச்சு,
" டேய் பச்ச சட்டை. உன்னை கொல்லாமல் விட மாட்டேன்டா......"


என் சட்டையை பார்த்தேன். அது பச்சை நிறத்தில் இருந்தது.
எனக்கு ஒரே பயமாக போகிவிட்டது. என்னடா இது சென்னை வந்து இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு பிரச்னை. ரொம்ப weiredயாக உணர்ந்தேன் .

பின்னாடி ஒரு குரல் ; பல குரல் ஆனது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவைகள் என் அருகே வந்து கொண்டு இருந்தது. ஒன்றும் தோன்றவில்லை அதனால் அப்படியே அங்கேயே நின்றேன்.

நின்றேன்...
மஞ்சள் நிற சுடிதாரை தேடினேன். அங்கும் இங்கும் கண்கள் அவளின் பின்பத்தை முத்தமிட அலையாய் தேடின.
கண்களுக்கு சுகம் கிடைக்கவில்லை.
நின்றேன்.....
நோடிகள்.... வினாடிகள்.....


அடி ஏதும் விழ வில்லையே என்று திரும்பி பார்த்தேன். அச்சம் கொண்ட திரையாய் கண்கள் பார்த்து. இரண்டு கும்பல் கலைந்து கொண்டு இருந்தது. ஆக்ஸிஜன் எடுத்து கொண்ட நுரையிரல் நிம்மதியாய் ஆக்ஸிஜன் இல்லாத காற்றை வெளியிட்டது.

விட்ட இடத்தை பார்த்தான். சுடிதாரில் மஞ்சள் இல்லை நீல நிறம் குடி கொண்டு இருந்தது. அந்த மஞ்சள் சுடிதாரை எங்கே பார்த்து உள்ளோம் என்று யோசித்தவரே அங்க இருந்த ஒரு பஜ்ஜி கடையை பக்கத்தில் ஒரு plate பஜ்ஜி உடன் அமர்ந்தேன்.
கை கழுவிட்டு. சற்று நகர்தேன்.எதிரே அவள்.

அவள் இடுப்பில் கை வைத்த படி ஒருவன் நின்று கொண்டு இருந்தான். என் நண்பன் முகமத்தை எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி. முகம் என் நண்பனுடையது இல்லை.
" இவனோடு தான் என் வாழ்க்கை. இவன் இல்லாமல் நான் இல்லை." சில வருடகள் முன்பு யாரோ சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

வேறு பக்கம் போய் அமர்தேன்.
எனது கைப்பேசி சத்தம் போட்டது.
எடுத்து டிஸ்ப்ளேவில் நம்பர் பார்த்தேன். அந்த ஹிந்தி பொண்ணு கிட்ட இருந்து மெசேஜ் வந்து இருந்தது.

தகவலை அறிய பட்டனை அழுத்தினேன்......
அழுத்திய பின் மெசேஜ்யை பார்த்தேன் " who is this" என்று அவள் கேட்டு இருந்தாள். அதற்க்கான பதிலை அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து "sorry. i dont know anyone by this name".
சில நிமிடம் பூமி சுழல்வது நின்று போனது.

இடது கை மற்றும் வலது கைகளில் என் இரண்டு மொபைல் போன் வைத்து பார்த்தேன். தவறான நம்பர்க்கு டயல் செய்து இருந்தேன். மீண்டும் ஒரு முறை என் அம்மாவுக்கு ஒரு அழகான மருமகளை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

சரியான numberக்கு இப்பொழுது முயற்சித்தேன் ....
டயல் டோன் வந்தது .....
வந்து கொண்டு இருந்தது.
சற்று நேரம் கழித்து டயல் டோன் தனது உயிரை விட்டது.
யாரை பார்க்க கூடாது என்று நினைத்து இந்த பக்கம் வந்து அமர்தேனோ அவள் அவனோடு என்னை கடந்து போனாள்.

அவளை எவ்வளவு உயிருக்கு உயிராக என் நண்பன் காதலித்தான் என்று எனக்கு தெரியும். அவர்கள் பார்த்த பிறகு தான் எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
ஆனால் இப்பொழுது நான் காதலித்து இருந்தால் என் காதலி கூட இப்படி தான் அந்நியனோடு சுற்றி கொண்டு இருப்பாளோ என்ற எண்ணம் ஒரு மின்னல் மாதிரி என் மனசில் வந்து போனது.

ச்சே ச்சே .....
அப்படி எல்லாம் இருக்காது.
இதில் வேற எதோ ஒரு விஷயம் இருக்கு என்று தோன்றியது.
அப்ப பார்த்து காற்று சற்று பலமாக விசியது.
அந்த மாலை பொழுதில் அந்த குளிர்ந்த காற்று விசிய போது ; எனக்கு நான் வாழ்ந்த அழகான நாட்கள் நினைவுக்கு வந்தது.
சற்று ஆனந்தமாய் உணர்ந்தேன்.

அவள்
அவன்
அவர்கள் காதலை எனக்கு உணர்த்தியே சமயம்
அவர்களின் காதலினால் வந்த பிரச்சனைகள் எல்லாம் எதிர் கொண்ட சமயம்....
எல்லாம் நினைவுக்கு வந்தது.

அவனுக்கு போன் செய்தேன்.
பேசினான்.
பேசினேன்.
அழுதான்.
அழுகையாய் வந்தது.
போன் பேசி முடித்த பின்பு .......


" உறவுகள் தொடர்கதை ..
உணர்வுகள் சிறுகதை ...
ஒரு கதை இன்று முடியலாம்...
முடிவிலே ஒரு கதை தொடங்கலாம்....."

மனம் வெறுமை என்னும் ஆடை அணிந்து கொண்டது.
இருப்பிடத்தில் இருந்து கிளம்பிய போது இருந்த சந்தோஷம் அப்ப இல்லை. சரி வந்து விட்டோம் பதிவாளர்களை பார்த்துவிட்டு போகலாமே என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றைய இந்தியாவில் பாவமாய் நிற்கும் காந்தி சிலை நோக்கி நடக்க துவகினேன். அங்கே சென்ற பின் கார்கிக்கு போன் செய்தேன்.
"ஹலோ நான் மேவி பேசுறேன்"
"ஹாய். சொல்லுங்க. "
"நீங்க எங்கே இருக்கீங்க ; நான் காந்தி சிலை கிட்ட இருக்கேன்"
"நாங்க இப்போ பீச் நோக்கி வந்துட்டோம்"
"அப்படியா. இப்ப என்ன செய்யருது"
"சரி. நீங்க அங்கேயே வெயிட் பன்னுரிங்கள. நாங்க வந்துறோம்"
"சரி. நான் வெயிட் பண்ணுறேன்"
"சரி"
போன் பாக்கெட் உள்ளே வைத்தேன்.
கார்கிக்கு வெயிட் பண்ண ஆரமித்தேன்.......

10 comments:

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

தேவன் மாயம் said...

100 ஆவதுக்கு வாழ்த்துக்கள் மேவி!!

ஹேமா said...

மேவி இப்போ எல்லாம் நல்லா யோசிச்சு நிறைய எழுறீங்க.நல்ல விஷயம்.மனப்பாரமும் போகும்.வாழ்த்துக்கள் மேவி.

மேவி எனக்கும் சில தளங்களுக்குப் போக முடியாமல் இருக்கிறது.நான் Firefox மூலமாகவே போகிறேன்.
குறிப்பாக Jamal தளத்திற்கு.இப்போ கொஞ்ச நாடகளுக்கு முந்தி என் தளத்தையே திறக்க முடியாமல் இருந்தது.அதன் பிறகு "பின் தொடர்பவகள்"பட்டியலை நீக்கச்சொல்லி அறிவுறுத்தல் வந்தது.அதன் பின்பே சரியானது.நீங்களும் பாருங்கள்.

Karthik said...

//அவனுக்கு போன் செய்தேன்.
பேசினான்.
பேசினேன்.
அழுதான்.
அழுகையாய் வந்தது.

superb! :)

Karthik said...

//"FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" ல.

lol.

as if you are going for a date! :))))

Karthik said...

//"sorry. i dont know anyone by this name".
சில நிமிடம் பூமி சுழல்வது நின்று போனது.

enna thala ivvalavu appaaviya irukeenga? appadiye continue panna vendama? :P

வால்பையன் said...

படிச்சா மாதிரி தெரியுதே!

//மீண்டும் ஒரு முறை என் அம்மாவுக்கு ஒரு அழகான மருமகளை கண்டுபிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.//

வேதாளம் சற்றும் தளராமல் அடிக்கடி முருங்கை மரம் ஏறட்டும்!

மேவி... said...

@ APPU :

NANTRI

மேவி... said...

@ thevan mayam : thanks

@ hema :

naan yosikkirena....

appadiya theriyuthu

மேவி... said...

@ kathik :

naan ellam chinna paiyan intha vishyathila


@ valpaiyan : amanga munnadiya potathu than

Related Posts with Thumbnails