Pages

Thursday, July 22, 2010

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்


நான் SALES ல இருக்குறதல நம்ம மானா சூனா (என்னோட மேனஜர் ) மேல அடிக்கடி கோவம் வரும். அப்ப எல்லாம் நினைச்சுப்பேன் இந்த ஆளுல எப்புடிவது குத்தோ குத்துன்னு குத்தனும்ன்னு. நேத்து பரிசல் எழுதின பதிவை படிச்சபோதே இந்த மாதிரி எழுதணும்ன்னு தோனுச்சு, ஆனா வழக்கம் போல டைம் தான் இல்லை. ....

சரி சரி ..இதுக்கு மேல மொக்கை போட நான் விரும்பல. என்னொன்னு இந்த பதிவு மானா சூனா கண்ணுல படகூடாது. அப்படியே பட்டாலும் எனக்கொண்ணும் பிரச்சனையில்லை....நான் தான் டம்பி மேவீன்னு அவருக்கு தெரியவா போகுது. ஹி ஹி ஹி ஹி ஹி ..OK LETS START THE MUSIC ....


= = = = =

தினந்தோறும் காலையுல ஏழு மணிக்கே இன்றைய டார்கெட் (எங்களுக்கு DAILY TARGET ) எவ்வளவுன்னு கேட்டு SMS அனுப்பும் பொழுது. அந்த நேரத்துல நான் கக்கா கூட போயிருக்க மாட்டேன்....அப்ப அவரு முகத்த பார்த்து ...
-
ஆபீஸ் உள்ள வந்த உடனே "இன்னைக்கு மார்க்கெட் எப்புடி இருக்கும்ன்னு கேட்கும் பொழுது.. நான் ரிப்போர்ட் கூட படிச்சு இருக்க மாட்டேன் ...அப்ப ஒன்னு
-
DAILY மூணு TEAM MEETING வைக்கும் போது....
-
காலைல இருந்து நம்ம கூடவே சுத்திட்டு, சாயங்காலம் யான உடன், இன்னைக்கு என்னப்பாச்சுன்னு கேட்கும் பொழுது.....ஒன்னு
-
மொக்கையான ஒரு LEAD தந்துட்டு , பெரிய பணக்கார ஆளை காட்டிவிட்ட மாதிரி பந்தா பண்ணும் பொழுது ...
-
கஷ்ட பட்டு ஒரு LOGIN பண்ணிட்டு, பெருமையா அவர பார்க்கும் பொழுது, "ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க??"ன்னு கௌண்டமணி செந்தில் காமெடி கணக்கா அடுத்த LOGIN பத்தி கேட்கும் போது ....ஓங்கி ஒன்னு ....
-
சனிகிழமையான எதாச்சு பெரிய ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போய், சாப்பாடு வாங்கி தந்து, மொக்கை போடும் போதும், சாப்பிட்டு விட்டு வெளில வந்த உடனே அடுத்த வார டார்கெட்யை பத்தி பேசும் பொழுது.....ஒன்னு
-
ரிப்போர்ட் பண்ணும் போது, "CLIENT க்கு இஷ்டம் இல்ல போல இருக்கு மானா சூனா" (எங்க ஆபீஸ் ல யாரையும் சார் கிர்ன்னெல்லாம் கூப்பிட மாட்டோம்) ன்னு சொன்ன, நீ சரியாய் பேசிருக்க மாட்டன்னு பதில் வரும் பொழுது.....அப்படி ஒரு கோவம் வரும் பாருங்க ...அப்படியே ஆபீஸ்ன்னு கூட பார்க்காம ஓங்கி ....
-
ரஜினி நடிச்ச சிவாஜி படத்துல ஆபீஸ் ரூம்ன்னு ஒன்னு வருமுல, அதே மாதிரி எங்க ஆபீஸ்ல MEETING ROOM ன்னு ஒன்னு இருக்கு, அதுக்குள்ளே மானா சூனா கூப்பிடும் பொழுது .......
-
"இந்த சிஸ்டம் ல கோளாறு போல் இருக்கு" ன்னு சொல்லும் பொழுது, ஏன் எதுன்னு கூட பார்க்காம, LKG ல இருந்து காலேஜ் வரைக்கும் நான் படிச்ச படிப்பை விமர்சிக்கும் போது....(கட்டாயம் TOTAL DAMAGE தான்) அப்போன்னு

-
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + +
இன்னும் நிறைய இருக்குங்க, இதை விட அதெல்லாம் பயங்கரமா இருக்கும், சரி யாராச்சு படிச்சு மார்க்கெட்டிங் துறையை பார்த்து பயந்துற போறங்களேன்னு எழுதல.

= = = = =

இவ்வளவு அடிக்குறாங்க, அப்பரும் எதுக்கு வேலை பார்க்குறன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது....அடிச்ச அப்பரும மானா சூனா "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...இவன ரொம்ப நல்லவன்" ன்னு சொல்லுவாரு..அந்த அந்த ஒரு வார்த்தைகாகவே ..ஹி ஹி ஹி ஹி......
= = = = =
இப்படி தானுங்க நம்மபளை ASM ....AVP ....VP ....DIRECTOR ன்னு மும்பை ல இருந்து எல்லாம் போன் பண்ணியோ இல்லாட்டி நேர்ல வந்தோ அடிச்சிட்டு போவாங்க.. ஒவ்வொருத்தரும் அடிச்சு முடிச்சதுக்கு பின்ன இன்னொரு ஆடு ஓட ரூம்க்கு அனுப்பி வைப்பாங்க ...ஹி ஹி ஹி ஹி .
வாழ்க்கையே ஒரு போர்க்களம் ; வாழ்ந்து தான் பார்க்கணும் ..

20 comments:

இராகவன் நைஜிரியா said...

:-) சிரிச்சுகிட்டே இருக்கேன்... அதிலேயும் அந்த வடிவேலு ஜோக்கை இதில் பொருத்தி இருக்கீங்க பாருங்க அதுதான் சூப்பர்..

இராகவன் நைஜிரியா said...

ஓ மீ த பர்ஸ்ட்... சூப்பரோ சூப்பர்

உஜிலாதேவி said...

வடிவேலு ஜோக் சூப்பர்..

Vijay said...

அட இதுக்கெல்லாம் பயந்தா பொழப்பு நடத்து முடியுமா?
உங்க டாமேஜரைக் கேட்டால் அவரும் இது மாதிரி ஒரு பட்டியல் வச்சிருப்பார் :)

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

அமுதா கிருஷ்ணா said...

மேனேஜர் டேமேஜரானார்..http://amuthakrish.blogspot.com..இந்த குத்துக்களையும் பார்க்கவும்..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஹா ஹா
வடிவேல் காமெடிக்கு

வேலைக்கு போகாததால சிலது புரியல

நல்ல கற்பனை :)

ஸ்வர்ணரேக்கா said...

//DAILY மூணு TEAM MEETING வைக்கும் போது.... //

உண்மையிலேயே குத்து விட தோன்றும் தருணம் ...

வால்பையன் said...

டார்கெட் அச்சிவ் பண்ணாத ஆட்களை மேனேஜர் எப்பவெல்லாம் குத்தலாம்!

ஹேமா said...

ம்ம்ம்....நல்ல மனநிலைல இருக்கீங்கன்னு தெரியுது மேவீ !இப்பிடியே எப்பவும்
சந்தோஷமா இருங்க !

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))

டம்பி மேவீ said...

@ இராகவன் நைஜிரியா : வாங்க தல ...ரொம்ப நன்றிங்க .. வடிவேல் காமெடியா அது உண்மையா நடக்குது

@ உஜிலாதேவி : முதல் வருகைக்கு நன்றிங்க ..அடிக்கடி வாங்க ...

@ விஜய் : நாங்க எல்லாம் யாரு ......மேனஜருகும் ஒரு பாஸ் இருக்காரு ல ..நாங்க எல்லாம் நடுநிலை ஆளுங்க

@ கார்க்கி : அதே தான் அதே தான்

@ அமுதா கிருஷ்ணா : வாங்க வாங்க ..படிச்சேனுங்க நல்ல இருக்கு

@ ஜில்தண்ணி - யோகேஷ் - போக போக தெரியும் ...இந்த பூவின் வாசம் தெரியும் ஹி ஹி ஹி

@ ஸ்வர்ணரேக்கா : உண்மைங்க உண்மைங்க ....அப்ப செம கடுப்ப்ஸ் அப் இந்தியாவாக இருக்கும்

@ வால்பையன் : பாஸ் ...டார்கெட் அச்சீவ் பண்ணியாச்சு இரண்டு HNI CLIENTS

@ ஹேமா : நன்றி ஹேமா ..கரெக்ட் ஆ சொன்னிங்க

@ கார்த்தி : என்ன சொல்லுறீங்க ???? இந்த அடியாளுங்க தொல்லை தங்க முடியலப்பா

செந்தழல் ரவி said...

அருமையா வந்திருக்கு !!

அத்திரி said...

நீ இப்படி பதிவு எழுதின மேட்டர் உங்க மானா சூனாவுக்கு தெரியுமா தெரிஞ்சா உன்னை எங்க குத்துவார் தம்பி??

டம்பி மேவீ said...

@ செந்தழல் ரவி : ரொம்ப நன்றிண்ணே ....

@ அத்திரி : அண்ணே . பிதிய கிளப்பாதீங்க ....நான் ஏதோ கம்ப்யூட்டர் ல நோண்டிகிட்டு இருப்பேன்ன்னு ங்கிற அளவுக்கு அவருக்கு தெரியும்....இதை மட்டும் படிச்சர்ன்ன .....என்னோட முகத்துல தான் குத்துவாறு ...டென்ஷன் பார்ட்டி ஹி ஹி ஹி ஹி

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஆஹா.... கிளம்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்கைய்யா !!! ;-) செம காமெடி ;-)

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் குத்து தான் போங்க...ஹா ஹா ஹா

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

குத்துவிட நினைக்கும் தொத்துவியாதி இங்கேயும் வந்தாச்சா..!

ஆண்டவா! இதுக்கெல்லாம் தடுப்பூசி எதையும் காணோமே!

தாரணி பிரியா said...

இதை அப்படியே உங்க மேனேஜருக்கு பார்வேர்டு செஞ்சுட்டேன். என்னால முடிஞ்ச நல்ல காரியம் :)

டம்பி மேவீ said...

@ கருந்தேள் கண்ணாயிரம் : இல்லைங்க ஊருக்கு இன்னும் இரண்டு நாளகழிச்சு தான் போறேனுங்க ஹி ஹி ஹி ...வந்தமைக்கு நன்றிங்க

@ அப்பாவி தங்கமணி : நன்றிங்க

@எஸ். கிருஷ்ணமூர்த்தி : சார் ...எல்லமொரு ஜாலிகாக போட்டதுங்க (எல்லா பதிவும் நான் அப்படி தானே போடுறேன்)

@ தாரணி பிரியா : ஏனுங்க ஏன் ????? ஒரு பச்ச புள்ள சந்தோஷமா இருந்த பொறுக்காதே :)

Related Posts with Thumbnails