Pages

Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Sunday, September 4, 2011

**கலவை - மங்காத்தா ::: வலசை ::: ஸ்திரீபிரியன் அனுமன்**


மங்காத்தான்ன உள்ள-வெளியன்னு சொல்லி விளையாடுவாங்க. இதுக்கும் படத்துக்கும் என்ன சமந்தம்ன்னு நமக்கு தியேட்டர் உள்ள போகும் போது தெரியாது, ஆனா வெளிய வரும் போது தெரிஞ்சு இருக்கும். அப்படி தெரிஞ்சுக்குற நேரத்துல படத்தையும் நமக்கு பிடிச்சு இருக்கும், ஏன்ன 500 கோடி ரூபாய் யாருக்கு கிடைச்சுதுன்னு வெளிய வரும் யாரு கிட்டையும் சொல்லாம, ஒரு சஸ்பென்ஸோட படம் நல்ல இருக்கு போய் பாருங்கன்னு சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்குதுல :))).

வாலி படத்துல, ஊமை அஜித் மழைல கார் உள்ள உட்கார்ந்துகிட்டு தன்னோட இயலாமைய நினைச்சு அழுவாரு, தேவி தியட்டர் ல அந்த சீன் பார்த்ததுல இருந்து நானும் அஜித் ரசிகன். அதுக்கு அப்பரும் அஜித் படம்ன்னாலே கண்டிப்பா முத நாள் முத ஷோ தான். அப்படி கடசிய பார்த்த படம் ஜி, அதுக்கு பிறவு அந்த மாதிரி பார்க்க முடியல. லீவ் நாள்ல இந்த படம் வருதுன்னு தெரிஞ்ச பிறவு தான், எப்படியாச்சு முத ஷோ பார்த்துடுணும் வெறி வந்துருச்சு. வழக்கம் போல டிக்கெட் பயம், அதை போக்கினான் ஆபீஸ் நண்பன் சிவா.

வழக்கமா அஜித் படம்ன்ன டிக்கெட் புக் பண்ணி படம் பார்க்க எல்லாம் எனக்கு பிடிக்காது, அப்படி பார்த்தாலும் படம் பார்த்த மாதிரி இருக்காது.இந்த படத்துக்கு தான் புக் பண்ண டிக்கெட் ல போய் பார்த்தேன் ஐநாக்ஸ்ல, முத நாள் முத ஷோ.

படம் முழுக்க அந்த வில்லத்தனத்தை அருமையா body - language ல காட்டி இருக்கார் தல. அதுவும் அந்த சிரிப்பு - ஐயா அசிது இத எல்லாம் என்கையா இத்தன நாள் ஒளிச்சு வைச்சு இருந்தீரு. முத வாட்டி பார்க்கும் பசியோட இருந்ததால முத பாதியா ரசிக்க முடிய, இண்டர்வல் கொஞ்சம் நொறுக்குதீனிய நொறுக்குன பிறவு இரண்டாவது பாதிய நல்ல ரசிச்சேன். இப்ப யோசிச்சு பார்த்த, பட்டாசான இரண்டாவது பாதிக்கு முத பாதி இப்படி தான் இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.

குறைகள் ஆயிரம் இருந்தாலும் - அஜித்துக்காக நிச்சயம் இரண்டு முறை பார்க்கலாம்.
= = = = =
கோஷிஷ் (koshish - 1972 ) பார்க்க வேண்டிய படம். அதிலும் "காதல் கதைன்னு இதுக்கு மேல சினிமாவுல காட்ட என்ன இருக்கு, அதான் எல்லாத்தையும் காட்டியாச்சே"ன்னு சொல்லுற சில திரைத்துறை அப்பாடக்கர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். இதுல எண்ணன் விசேஷம்ன்ன கதைல நாயகன் - நாயகி இரண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. இருந்தும் இரண்டும் பேர் உள்ளையும் காதல் வருது, இரண்டு பெரும் ரோமன்ஸ் பண்ணுறாங்க. அதிலும் கதாநாயகன் தன்னோட திறமைகளை கதாநாயகிக்கு காட்டி கவர் பண்ணுற சீன் எல்லாம் செமையா இருக்கும். அதிலும் குறிப்பாக யார் யாருக்கோ இரண்டு பேரும் போன் பண்ணி கலாய்குற சீன் :))
= = = = =
சமீபத்துல தாய்லாந்து ராமாயணமான ராமகியனை பத்தி கொஞ்சம் வாசிச்சேன். அப்படி வாசிக்கும் போது என்னுடைய favorite character ஆனா அனுமனை பத்தி என்ன சொல்லிருக்காங்கன்னு ஒரு ஆவல்ல பார்த்தேன் : பார்த்து படிச்சதும் அதிர்ச்சி தான். ஏன்ன அனுமனை ஒரு ஸ்திரீபிரியன்னு போட்டிருந்தாங்க. சின்ன வயசுல நான் பயப்படும் பொழுதெல்லாம், எங்கம்மா எனக்கு அனுமார் கதை சொல்லி தைரியம் தருவாங்க. அப்படிப்பட்ட வால்மீகி ராமாயண அனுமன், இந்த ராமகியனுல இராவணன் பொண்டாட்டி, பொண்ணு, இந்திரஜித் பொண்டாட்டின்னு பல பெண்களுடன் உறவு வைச்சுகிறார், அதிலும் ஒரு முறை மண்டோதிரியை இராவணன் கண் முன்னாடியே கற்பழிகிறாராம். இதெல்லாம் படிச்ச பிறவு ஒன்னு மட்டும் நல்ல தெரியுது, புராணங்கள் ஊர் விட்டு ஊர் போகும் போது, அந்த இடத்துக்கு தேவையான அலங்காரங்கள் செய்து கொள்ளும்.

ஆதாரம் - ஆனந்த் ராகவ் எழுதின "ராமகியன் - தாய்லாந்து ராமாயணம்"
= = = = =
வாசிப்பின் போது புத்தகத்தின் ஏதொரு பக்கத்தையும், உறவின் போது பெண் உடலின் ஏதொரு பாகத்தையும் விட்டுவிட்டு அந்த நிகழ்வுக்கான முழு இன்பத்தையும் அனுபவித்து விடலாம். ஆனால் இசை என்பது அப்படி இல்லை, மழையை போல அதனுடைய ஒவ்வொரு துளியும் நம்மை பரவச படுத்தும். இத்தாலிய நாட்டு இசை அமைப்பாளர் என்னியோ மோர்ரீகோணி (Ennio Morricone) சினிமா பாரடிஸோ (Cinema Paradiso )வுக்கு அமைத்த இசை நமக்கு பரவசத்திலும் ஒரு பரவசத்தை குடுக்கும். நான் படம் பார்த்த பிறவு தான் இந்த இசை கோர்வையை கேட்டேன், படத்தை அனுபவித்த பிறவு முதல் முறை கேட்ட போது : நெகிழ்ந்து விட்டேன் : லேசாக அழுதேன். நீங்களும் கேட்டு பாருங்க.
= = = = =
படித்ததில் பிடித்தது -

"நான் ஏதோ ஒரு விளையாட்டுக்காக நாய் வேஷம் போட்டேனென்று என்னை அந்த வேஷத்திலேயே நிரந்தரப்படுத்தப் பார்க்கிறாள்". - என் பெயர் ராமசேஷன் - எழுதியவர் ஆதவன். எல்லோரும் படிக்க வேண்டிய நூலிது.

= = = = =
கூகிள் பஸ் ஸ்பெஷல் :-

இன்று செட்டிநாடு அலுவலக நோட்டீஸ் போர்டு ல பார்த்தேன். 1936 , 1937 , 1962 களில் வெளிவந்த இந்திய சட்டதிட்டங்களில் FORM க்கு தமிழில் நமூனா என்று இருக்கிறது. ஆனால் இதே 2001 ல வந்த சட்டதிட்டங்களில் FORM க்கு தமிழில் படிவம் என்று பயன்படுத்தி இருக்காங்க.

நமூனா (FORM ) என்று சொல் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறதா ??? விளக்கம் ப்ளீஸ்

= = = = =
டிவிட்டரில் சொன்னது :-

பெண் என்பவள் புகுந்த வீட்டில் இடதுசாரியாகவும், பிறந்த வீட்டில் வலதுசாரியாகவும் இருக்கிறாள்.
கடவுள் நமபிக்கை இல்லாதவனுக்கு கூட, மூட நம்பிக்கைகள் மீது கோவபட கடவுள் தேவை படுகிறார்.
திருவிழா முடிந்த கிராமம் போல் காண படுகிறது செய்தித்தாள் கடை இரவு நேரத்தில்.
நகரங்களில் மழை அனாதையாக பெய்ந்து கொண்டிருக்கிறது. நகர மக்களுக்கு மழை தேவை இல்லாத அழையா விருந்தாளி.
= = = = =
காலச்சுவடு
கூட
ஆரம்பத்தில் காலாண்டிதழ் ஆகா வந்ததென்று கேள்வி பட்டிருக்கிறேன். நண்பர் கார்த்திகை பாண்டியன் நேசமித்ரன் உடன் சேர்ந்துக்கொண்டு வலசை என்ற பெயரில் காலாண்டு சிற்றிதழ் வெளியீட்டு உள்ளார். உலக இலக்கிய அளவில் வாசிப்பனுவத்தை பெற விரும்பும் எல்லோரும் வாங்க வேண்டியதொன்று. நூறு ரூபாயில் ருஷ்யா, சீனா, ஈராக், இலங்கை இங்கிலாந்து, ஆஸ்திரியா மற்றும் பல நாடுகளென்று வாசிப்பனுபவ இன்ப சுற்றுல்லா.

ழ கபே வலசை நாளுக்கு பிறகு வாந்த ஞாயிற்று கிழமை டிஸ்கவரி புக் பேலஸில்
காமராஜ், ராஜ சுந்தரராஜன், பத்மஜா கிருஷ்ணமூர்த்தி, விதூஷ் ஆகியவர்களை சந்தித்து பேசியதில் ரொம்ப சந்தோஷம்.
இதற்கிடையில் டிஸ்கவரி புக் பேலஸ் பற்றி சொல்லிய ஆகணும், சென்னையில் பெரும்பாலும் பல பிரபல புத்தக கடைகளில் கிடைக்காத தமிழ் புத்தகங்களெல்லாம் இங்கன்ன கிடைக்குது. புத்தக கடை வைத்திருப்பவர்கள் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கடையை சிறப்பான முறையில் நடத்த முடியும் : இதற்க்கு டிஸ்கவரி புக் பேலஸ் நல்ல உதாரணம்.

வலசை - கார்த்திகை பாண்டியனுக்காக நேற்று தான் வாங்கினேன். வலசையில் சில திசைகளில் குறை இருப்பதாய் உணர்கிறேன். முழுமையாக படித்த பின் ஒரு வேளை அதெல்லாம் தேவையான குறைகளாக தோன்றலாமென்று நினைக்கிறேன். பார்போம்.
= = = = =

Keep Smiling

Enjoy Living

Thursday, July 22, 2010

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்


நான் SALES ல இருக்குறதல நம்ம மானா சூனா (என்னோட மேனஜர் ) மேல அடிக்கடி கோவம் வரும். அப்ப எல்லாம் நினைச்சுப்பேன் இந்த ஆளுல எப்புடிவது குத்தோ குத்துன்னு குத்தனும்ன்னு. நேத்து பரிசல் எழுதின பதிவை படிச்சபோதே இந்த மாதிரி எழுதணும்ன்னு தோனுச்சு, ஆனா வழக்கம் போல டைம் தான் இல்லை. ....

சரி சரி ..இதுக்கு மேல மொக்கை போட நான் விரும்பல. என்னொன்னு இந்த பதிவு மானா சூனா கண்ணுல படகூடாது. அப்படியே பட்டாலும் எனக்கொண்ணும் பிரச்சனையில்லை....நான் தான் டம்பி மேவீன்னு அவருக்கு தெரியவா போகுது. ஹி ஹி ஹி ஹி ஹி ..OK LETS START THE MUSIC ....


= = = = =

தினந்தோறும் காலையுல ஏழு மணிக்கே இன்றைய டார்கெட் (எங்களுக்கு DAILY TARGET ) எவ்வளவுன்னு கேட்டு SMS அனுப்பும் பொழுது. அந்த நேரத்துல நான் கக்கா கூட போயிருக்க மாட்டேன்....அப்ப அவரு முகத்த பார்த்து ...
-
ஆபீஸ் உள்ள வந்த உடனே "இன்னைக்கு மார்க்கெட் எப்புடி இருக்கும்ன்னு கேட்கும் பொழுது.. நான் ரிப்போர்ட் கூட படிச்சு இருக்க மாட்டேன் ...அப்ப ஒன்னு
-
DAILY மூணு TEAM MEETING வைக்கும் போது....
-
காலைல இருந்து நம்ம கூடவே சுத்திட்டு, சாயங்காலம் யான உடன், இன்னைக்கு என்னப்பாச்சுன்னு கேட்கும் பொழுது.....ஒன்னு
-
மொக்கையான ஒரு LEAD தந்துட்டு , பெரிய பணக்கார ஆளை காட்டிவிட்ட மாதிரி பந்தா பண்ணும் பொழுது ...
-
கஷ்ட பட்டு ஒரு LOGIN பண்ணிட்டு, பெருமையா அவர பார்க்கும் பொழுது, "ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க??"ன்னு கௌண்டமணி செந்தில் காமெடி கணக்கா அடுத்த LOGIN பத்தி கேட்கும் போது ....ஓங்கி ஒன்னு ....
-
சனிகிழமையான எதாச்சு பெரிய ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போய், சாப்பாடு வாங்கி தந்து, மொக்கை போடும் போதும், சாப்பிட்டு விட்டு வெளில வந்த உடனே அடுத்த வார டார்கெட்யை பத்தி பேசும் பொழுது.....ஒன்னு
-
ரிப்போர்ட் பண்ணும் போது, "CLIENT க்கு இஷ்டம் இல்ல போல இருக்கு மானா சூனா" (எங்க ஆபீஸ் ல யாரையும் சார் கிர்ன்னெல்லாம் கூப்பிட மாட்டோம்) ன்னு சொன்ன, நீ சரியாய் பேசிருக்க மாட்டன்னு பதில் வரும் பொழுது.....அப்படி ஒரு கோவம் வரும் பாருங்க ...அப்படியே ஆபீஸ்ன்னு கூட பார்க்காம ஓங்கி ....
-
ரஜினி நடிச்ச சிவாஜி படத்துல ஆபீஸ் ரூம்ன்னு ஒன்னு வருமுல, அதே மாதிரி எங்க ஆபீஸ்ல MEETING ROOM ன்னு ஒன்னு இருக்கு, அதுக்குள்ளே மானா சூனா கூப்பிடும் பொழுது .......
-
"இந்த சிஸ்டம் ல கோளாறு போல் இருக்கு" ன்னு சொல்லும் பொழுது, ஏன் எதுன்னு கூட பார்க்காம, LKG ல இருந்து காலேஜ் வரைக்கும் நான் படிச்ச படிப்பை விமர்சிக்கும் போது....(கட்டாயம் TOTAL DAMAGE தான்) அப்போன்னு

-
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + +
இன்னும் நிறைய இருக்குங்க, இதை விட அதெல்லாம் பயங்கரமா இருக்கும், சரி யாராச்சு படிச்சு மார்க்கெட்டிங் துறையை பார்த்து பயந்துற போறங்களேன்னு எழுதல.

= = = = =

இவ்வளவு அடிக்குறாங்க, அப்பரும் எதுக்கு வேலை பார்க்குறன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்குது....அடிச்ச அப்பரும மானா சூனா "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்...இவன ரொம்ப நல்லவன்" ன்னு சொல்லுவாரு..அந்த அந்த ஒரு வார்த்தைகாகவே ..ஹி ஹி ஹி ஹி......
= = = = =
இப்படி தானுங்க நம்மபளை ASM ....AVP ....VP ....DIRECTOR ன்னு மும்பை ல இருந்து எல்லாம் போன் பண்ணியோ இல்லாட்டி நேர்ல வந்தோ அடிச்சிட்டு போவாங்க.. ஒவ்வொருத்தரும் அடிச்சு முடிச்சதுக்கு பின்ன இன்னொரு ஆடு ஓட ரூம்க்கு அனுப்பி வைப்பாங்க ...ஹி ஹி ஹி ஹி .
வாழ்க்கையே ஒரு போர்க்களம் ; வாழ்ந்து தான் பார்க்கணும் ..

Saturday, May 29, 2010

மணமகள் தேவை - கார்த்திகை பாண்டியனுக்கு

மேல போட்டோல பழம் மாதிரி இருக்காரே அவரு தான் கார்த்திகை பாண்டியன். என்ன தான் பாக்க பழம் மாதிரி இருந்தாலும் அவரு ஒரு பலாபழம். அந்த அளவுக்கு உள்ளுள்ள நிறைய விஷயத்தை வைச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சீன் போடுவாரு. ஒரு டி, இரண்டு பஜ்ஜி வாங்கி தந்த போதும் எங்க வேண்டுமானாலும் நின்னு மத்தவங்க காதுல இருந்து ரத்தம் வருகிற அளவுக்கு இலக்கியம் பேசுவாரு. அந்த அளவுக்கு இவரு ஒரு இலக்கிய பீஸ். (என்னை மாதிரி காமெடி பீஸ் கூட ,.... நல்ல படிங்க காம பீஸ்ன்னு எழுதல)

அடடடா.... பதிவு எழுத வந்த மேட்டரையையே மறந்துட்டேன் பாருங்க. நேத்து இவரோட பிறந்த நாளை இவரு கொண்டாடி இருக்காரு. அது சரி இவரோட பொறந்த நாளை இவரு கொண்டாடாம பக்கத்துக்கு வீட்டுகாரன் ஆ வந்து கொண்டாடுவான். எத்தனை குஜிளிக்கள், எத்தனை இலக்கிய பீஸ்கள் ......... அந்த கொண்டாடத்தில் கலந்து கிட்டாங்கன்னு தெரியாது, ஏன்ன அந்த அளவுக்கு மதுரையில நம்ம உளவு துறை இல்லை என்பது தான் உண்மை. ஹி ஹி ஹி

நேத்து இவருக்கு நான் போன் பண்ணும் போது தான் இந்த விஷயத்த சொன்னாரு. அப்பவே ஒரு பதிவு போட்டு இருப்பேன். ஆனா என்ன ஒன்னு பாருங்க சம்பளம் வாங்குறேன் ன்ற ஒரே காரணத்துக்காக என்னை வேலை பார்க்க சொல்லிட்டாரு முதலாளி. நானெல்லாம் ஆபீஸ் வர்றதே ஒரு பெரிய புண்ணியம்ன்னு அவருக்கு தெரியல. ஓகே அவரை ப்ரீயா விட்டுருவோம்.

இவருக்கும் என்னனாவோ சொல்லி பார்த்துட்டாரு அவங்க வீட்டுல அவரோட கல்யாண பேச்சை யாரும் எடுக்க காணல. சரி ஒரு பொண்ணு ஓட வாழ்க்கை தப்பிச்சுதுன்னு பார்த்த, காபா ரொம்ப பழகிய ஆளா போயிட்டாரு. மனசை கல் ஆக்கிகிட்டு ...... இந்த பதிவோட டைட்டில்யை எழுதினேன் ...... மணமகள் தேவை.

பொண்ணுக்கு எது தெரிஞ்சு இருக்கோ இல்லையோ கட்டாயம் மொக்கை தனமா இலக்கியம் பேச தெரிஞ்சு இருக்க வேண்டும். பொண்ணு பார்க்க வரும் போது காபா பொண்ணுக்கு எஸ்ரா எழுதின துணையெழுத்து ல இருந்து டெஸ்ட் வைப்பாரு. அதுல அவங்க பாஸ் ஆனா தான் கல்யாணம். இல்லாட்டி வெறும் friends .....


முக்கியமாக பொண்ணு கார்த்திகை பண்டியானோட கல்யாணமான பின்னாடி எஸ்ரா ஓட அடியாளாக மாறணும். யாமம், நெடுங்குருதி .... இன்னும் என்னன்னா இருக்கோ அதெல்லாம் தினசரி வாழ்க்கை ல பொண்ணு படிக்கணும்.

டிஸ்கி - இன்னும் நிறைய எழுதிருப்பேன், ஆனால் "i am பாவம்" என்று அவரே சொன்னதினால் இதோடு விட்டுவிட்டேன் (எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் ரொம்ப நல்லவருங்க) . பிறந்த நாள் வாழ்த்துக்களோடு அவர் தனது துறை சார்ந்த மேற்படிப்பில் முயற்சித்து வருவதினால் அதற்கும் சேர்த்தே வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.


"எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், அதை விட சந்தோசம் தரும் விஷயம் வேறு எதுவுமில்லை. இயசு சொன்னது போல (அல்லது சொன்னார் என்று நம்ப படுகிற) உன்னை போல் பிறரையும் நேசி" ( இதை எதுக்கு சொல்லுறேன் என்றால் வர வர என்னோட பதிவில் கருத்தே இல்லைன்னு நிறைய பேர் சொல்லுறாங்க, அதுக்கு தான். மேலும் இந்த மாதிரி கருத்து சொன்ன ஒரு மொக்கை பதிவு கூட இலக்கிய பதிவு ஆகி விடும் என்று பதிவுலக பெருசுகள் பலர் சொன்னாங்க )



Thursday, December 31, 2009

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010









அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ........

2009 உங்களுக்கு மறக்கவே முடியாதளவுக்கு ஓர் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்


சோகங்களை மறப்போம் ......

சந்தோஷங்களை உருவாக்குவோம்....

பிறரை சந்தோஷபடுத்தி நாம் சந்தோஷமாக இருப்போம்......

எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம்.



தினம் தினம் தீபாவளி தான்......

நமக்கு மனசு இருந்தால் எல்லா நாளையும் தீபாவளியாக கொண்டாட முடியும்......

மனசு இருந்தால் மார்க்கம் உண்டு....




யாதும் ஊரே ...யாரும் கேளிர்



கலவை - 2009

மனுஷன் கொடுத்து வைச்சவன். இந்த வயசிலும் இப்படி போட்டு தக்குரரே.....மச்சம் தான். நம்ம ND திவாரி யை தான் சொல்லுறேன். த்ரிஷா குளியலுக்கு பிறகு இவரது வீடியோ தான் செம டாப் தமிழ் நாட்டில். ஆன இவ்வளவு செய்த பின்னாடி "நான் ஒன்னும் பெரிய குற்றம் செய்யலன்னு......அப்படி நான் செய்து இருக்கிறேன் என்று நீங்க நினைச்ச அதுக்கு மன்னிப்பு கேட்குறேன்" ன்னு டயலாக் விட்டு இருக்கார். எதர் எடுத்தாலும் பொங்கி எழும் மாதர் சங்கம் என்ன செய்றாங்கன்னு தெரியல.

இன்னொரு கொடுமை என்னா இவரது வீடியோ யூ டுப் ல செம ஹிட். ஐ ஐ மன்மத ராசா மன்மதராசா ..நேத்து நியூஸ்பேப்பர் கடைக்காரர் சொன்னார் ...ஜூவீ ல இவரது விளையாட்டுகளை அட்டையில் போட்டதினால் செம சேல்ஸ்....ன்னு

= = = = = = = = = =

எழுத்தாளர் முகிலின் "அகம், புறம், அந்தப்புரம்" என்கிற சரித்திர புத்தகம் இந்த புத்தக கண்காட்சியில் வருகிறதாம். இது அவர் ரிபோர்ட்டர் ல தொடராக எழுதினதோட தொகுப்பாம். அது குறித்த அவர் எழுத்துக்களை இங்கே கிளிக் பண்ணி பாருங்க.

= = = = = = = = = =

நான் ரொம்ப தேடி அலைந்து லியோ டால்ஸ்டாய் யின் போரும் அமைதியும் வாங்கிட்டேன் (ஆங்கிலத்தில் தான்) அதுவும் ரொம்ப குறைந்த விலையில்..... இன்னொரு ஆச்சிரியம் என்னவென்றால் அதை விட விலை குறைவாக ரூபாய் 125 க்கெல்லாம் கிடைக்கிறது . இந்த கதை wikisource ,classic reader போன்ற வெப்சைட்களில் இருந்தாலும், அதை புத்தகமாக படிப்பதில் தான் சுகம் அதிகம். அதுவும் classic reader ல காண கிடைக்காத சிறுகதைகளெல்லாம் இருக்கிறது. நன்றாகவே align பண்ணி இருக்காங்க அதில். அதே மாதிரி வெண்ணிற இரவுகள் சிறுகதையை ஆன்லைன் ல தேடி பார்த்து கொண்டு இருக்கிறேன்........ யாராச்சு வெப்சைட் URL சொன்ன நல்ல இருக்கும்.

= = = = = = = = = =

நண்பர் கார்த்திகை பாண்டியனின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்து இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அதே மாதிரி அடுத்த மாசத்தில் அந்த யூத் பதிவாளரின் புத்தகம் வர போகிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.

= = = = = = = = = =

வர வர திரையரங்கு போக வேண்டிய அவசியமே இருக்காது போல் இருக்கு. ரிலீஸ் யான எல்லா படத்தையும் மூன்று மாசத்தில் டிவி ல போட்டுருரங்க. என்ன கொடுமை சார் இது.

= = = = = = = = = =

இப்பொழுது எல்லாம் கேபிள்ஜி அவர்களின் பதிவை படிக்க ஆரமித்த பிறகு, நான் படம் பார்ப்பது ரொம்பவே குறைஞ்சு இருக்கு. அதனால் காசும் ரொம்ப மிச்சம். அதனால் அவருக்கு இந்த பதிவை DEDICATE செய்றேன்.

= = = = = = = = = = =

Wednesday, December 30, 2009

புத்தகங்கள் : பிரபல பதிவர் பேட்டி அல்ல

1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூறமுடியுமா?



அப்படி ஒன்றும் பெரியதாக இல்லை. ஏற்கனவே எனக்கு மறதி அதிகம்...... இதில் மனசில் வாடகை தராமல் தங்கிய புத்தகங்கள் எதுவும் இல்லை. அதற்குன்னு புத்தகங்கள் படிப்பதை குறைத்து இல்லை. அது பட்டு போயிட்டே இருக்கும். சில நேரங்களில் படித்தே புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படித்த அனுபவம் எல்லாம் இருக்கு.

என்னை சோறு தண்ணி இல்லாமல் வெறி பிடிச்ச மாதிரி படிக்க வைத்த ஒரு புத்தகம்
உண்டென்றால் அது பொன்னியின் செல்வன் தான். ஓர் வாரத்துக்குள் படித்து முடித்தேன். அதே மாதிரி படிக்க முடியாமல் தவித்த ஒரு நாவல் உண்டென்றால் "வீர பாண்டியனின் மனைவி ".......அப்பரும் அமெரிக்க நாட்டில் நடந்த அடிமை வார்தகதை பற்றிய ஓர் புத்தகம்......பிறகு ஓர் ஆய்வு கட்டுரை உலக நகரங்களின் வளர்ச்சியை பற்றியது. இப்போதைக்கு இவ்வளவு தான் நியாபகம் வந்துச்சு.



2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்?

திட்டம் போட்டு செய்யும் வழக்கம் என்னிடம் என்றுமே இருந்தது இல்லை. திட்டம் போட வேண்டுமென்றால் நல்ல ஞாபக சக்தி வேண்டும், அது தான் நம்ம கிட்ட இல்லையே. நண்பர்களின் பரிந்துரையின் பெயரில் தான் அதிகமாக புத்தகங்களை வாங்குவேன். இல்லாட்டி புரட்டி பார்த்து ...பிடித்து இருந்தால் வாங்குவேன்.


3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா? உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா? (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்?

சுஜாதா சாரை ரொம்பவும் பிடிக்கும். அவரை நான் பார்த்தது இல்லை.

மற்றபடி தமிழில் நான் விரும்பிய சில எழுத்தாளர்களை பார்த்து பேசி இருக்கிறேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என்றால் சார்லஸ் டிக்கன்ஸ் தான். ஸ்கூல்ல இவரது கதைகள் தான் பாடமாக வரும். SO சிறுவயது முதலே என்னை மிகவும் கவர்ந்தவர் அவர் தான்.



4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.? (சில வரிகளில்)

கல்லூரி நாட்களில் என்னிடம் அதிகமாக காசு இருக்காது. இருக்கும் கொஞ்சம் காசில் எதாவது புத்தகம் வங்கி படிப்பேன்.

மறக்க முடியாத அனுபவம் என்றால் .......... கல்லூரி சேர்ந்த புதுசுல CLASS கட் அடித்து விட்டு பயத்தோடு கல்லூரி நூலகத்தில் படித்த மேலாண்மை புத்தகங்கள் தான்.



டிஸ்கி : நேற்று ஆதி அவர்களின் பதிவை படித்த பின் எனக்கும் அந்த மாதிரி ஒரு பதிவு எழுத ஆசை வந்தது...அதனால் தான்
Related Posts with Thumbnails