கண்ணாடி .....
தனி ஒருவனாய் அந்த அறையில் தங்கிருந்த அவன் வைத்து இருந்தது ஒரே ஒரு கண்ணாடி மட்டும் தான். காலையிலும் மாலையிலும் தன் முகத்தை அதில் பார்த்து பெருமைப்பட்டு கொள்வான்.
வேறு கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க அவனுக்கு அப்படி ஒரு தயக்கம். தனது கண்ணாடி காட்டின மாதிரி வேறு கண்ணாடி தனது முகத்தைக் காட்டுமா என்ற சந்தேகம் தான்.
அவனது கண்ணாடி அவனுக்கென்று ஓர் பிம்பத்தை உருவாக்கி தந்து இருந்தது. அந்த பிம்பம் வேறு கண்ணாடி தருமா என்ற கேள்வியே அவனை பிற கண்ணாடியை பார்க்க விடாமல் செய்தது.
ஒரு நாள் சுவரில் மாட்டிருந்த கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. அந்த ஒரு நாள், காலையில் கிளம்பும் அவசரத்தில் தனது பிம்பத்தை உறுதிப் படுத்தி கொள்ள மறந்து விட்டான்.
பிறகு வந்த மூன்று நாட்களில் , அவன் கண்ணாடியை பார்க்காமல் இருந்ததால் அவனுக்குள் இருந்த கர்வம் கொஞ்சம் உடைந்ததுப் போனது போல் உணர்ந்தான்.
வேறு கண்ணாடியாக இருந்தாலும் பரவில்லை .... வேறு பிம்பத்தை உருவாக்கி கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்திருந்தான், தனிமையை அவனால் பொறுக்க முடியவில்லை. பிம்பமில்லாமல் அவனால் இருக்க முடியவில்லை.
அந்த பிம்பம் தான் அவனை வாழ வைத்துக் கொண்டு இருந்ததாய் நம்பினான்.
பிம்பம் இல்லாத மனிதனுக்கு கோவம் வருவதில்லை. அவனுக்கு கோவப்பட சந்தர்ப்பங்கள் நிறைய இருப்பதாய் அவன் நினைத்தான். அதானால் வேறு கண்ணாடி வாங்குவது அவசியம் என்று கருதினான்.
கடை வீதியில் நடந்துச் செல்லும் பொழுதுப் பல கண்ணாடிக் கடைகளை பார்த்தான். வெறுமையாய் கடந்து சென்றான்.
வித விதமாய், பல விலைகளில் கண்ணாடிகளை பார்த்தான். வாங்கும் சக்தி அவனுக்கு நிறையவே இருந்தது. ஆனால் வாங்குவதற்கு தான் மனம் வரவில்லை.
பழைய கண்ணாடி தந்த அதே பிம்பத்தை வேறு எந்த கண்ணாடி தரும் என்று அவனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
அவனுக்குள் இருந்த பிம்பத்தை அவன் மாற்ற விரும்பவில்லை. அந்த பிம்பம் அவன் மனதிற்குள் ஒரு ராஜ்யத்தை உருவாக்கி அதற்க்கு அவனை ராஜாவாக்கி இருந்தது.
வேறு கண்ணாடியை வாங்கி இன்னொரு முறை சாதாரண குடிமகனாய் இருந்து ராஜா என்ற நிலைக்கு போக விரும்பவில்லை. அவன் புதுக் கண்ணாடி வாங்கவில்லை. அறைக்கு வந்து விட்டான்.
உடைந்த கண்ணாடியில் அவன் முகம் தெரியவில்லை. பிம்பமில்லாத மனிதனுக்கு கோவம் வருவதில்லை. பிம்பம் இல்லாமல் அவன் தவித்தான். புதுக் கண்ணாடியில் அவன் முகம் சரியாய் தெரியவில்லை.
-
7 comments:
பிந? எஸ்கேப்ப்ப்...:))
@ கார்த்திக் : இது தான் பின் நவீனமா ????? தெரியாமல் போயிருச்சே
புரியாத மாதிரி எழுதினா அப்படிதான் சொல்லுவோம். :)
அநியாயமா ஒரு கண்ணாடிய கொலை செஞ்சுட்டு, என்ன பேச்சு வேண்டி கெடக்கு, உங்களுக்கு?
நல்லாருக்கு...நல்ல முயற்சி! :-)
ஹி ஹி அந்த கண்ணாடி அத்தனை நாள் நம்ம மூஞ்சியை சகிச்சுக்கிட்டு இருந்ததே பெரிய விஷயம் மேவி :)
நல்லா இருக்குப்பா :). நான் அன்னிக்கு சொன்னது போல நீ ஒரு இலக்கியவாதியாக மாறிக்கொண்டு இருக்கிறாய் மேவி
@ கார்த்திக் : ரைட்டு
@ நாடோடிகள் : அதானே
@ சந்தனமுல்லை : ரொம்ப நன்றிங்க
@ தாரணி பிரியா : நல்ல வேளை என் கண்ணாடிக்கெல்லாம் வாய் இல்லை ....... நான் இலக்கியவாதியா ...ரொம்ப தேங்க்ஸ் அக்கா
Post a Comment