வணக்கம் நட்புகளே...
சிலர் பங்கு சந்தை முதலீடு என்றாலே பேயை
கண்டது போல் அலருவார்கள். புரியாமல் முதலீடு செய்தோ... அல்லது முதலீட்டு
முகவர்களால் காப்பீடு திட்டங்கள் மூலம் ஏமாற்ற பட்டவர்களாய் இருப்பார்கள். இப்படி
ஏமாற்ற பட்டதினாலே பங்கு சந்தையை குறை கூறி கொண்டிருப்பார்கள்.
நான் கவனித்த வரையில் பங்கு சந்தை அப்படி
ஒன்றும் மோசமானது இல்லை. ஏமாற்ற
பட்டவார்கள் குறை கூற வேண்டுமானல், அவர்கள் குறை கூற வேண்டியது அந்த சமந்த சம்மந்தபட்ட முதலீடு
முகவர்களை தான். நான் இந்த பதிவிற்காக குறிப்புகளை தேடி கொண்டிருக்கும் பொழுது, தங்க முதலீட்டுகள் மற்றும் தங்க முதலீடு
இணைய வர்த்தக (commodity trading & MCX market trading) பயிற்ச்சி வகுப்பில் எனக்கு தரபட்ட
குறிப்பில் இந்திய பங்கு சந்தை 1979 வாக்கில் 100 புள்ளிகள் இருந்துள்ளது.... இப்பொழுது இந்த வெள்ளிகிழமை பங்கு சந்தை
20,725.43 புள்ளிகளில் முடிந்துள்ளது.
இப்பொழுது இதை வைத்து கணக்கு போட்டு
பாருங்கள்.... 1979ல் ஒருவன் அதிகமில்லாமல் குறைவான பணத்தை பங்கு சந்தையில்
முதலீடு செய்து வைத்து இருந்தால்... அவனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று. ஆனால்
இன்றோ சில நூறு புள்ளிகள் குறைந்ததிற்காக பலர் சலித்து கொள்கிறார்கள்.
இந்த மாதிரி நீண்ட காலத்தில் பங்கு
சந்தையில் வளமையான லாபத்தை தருவது ஒன்று தான் பரஸ்பர நிதி திட்டங்கள்.
ஆனால் என்ன ஒரு குறை என்றால் எவ்வளவு லாபம்
என்பது நிச்சயம் இல்லை பங்கு சந்தையில்.
அப்படி குறைகளை தவிர்க்க விரும்புவோர்கள், போன பதிவில் சொன்ன கலவையான பரஸ்பர நிதி
திட்டங்களுக்கு போவார்கள்.
இந்த கலவை பரஸ்பர நிதி திட்டங்களில் ஏன்
கடன் பத்திர முதலீடும் பங்கு சந்தை முதலீடும் கலந்து இருக்கிறது என்றால்....
லாபத்தை அதிக படுத்த தான்.
உதாரணதிற்கு .....
முழுமையான கடன் பத்திர முதலீடுகளில்
முதலீட்டாளர்களுக்கு 8.5 % சதவிகிததில் லாபம் கிடைக்கிறது என்றால் .... கலவை
முதலீட்டு முறையில் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் இந்த 8.5 % சதவிகிதம் என்பது
11.25 % சதவிகிதமாக உயரும்.
இது போன்ற கலவை பரஸ்பர நிதி திட்ட
கட்டமைப்பு எப்படி இருக்குமென்றால்...
50 % கடன் பத்திர முதலீடு: 50 % பங்கு சந்தை முதலீடு,
60 % கடன் பத்திர முதலீடு: 40 % பங்கு சந்தை முதலீடு,
65 % கடன் பத்திர முதலீடு: 35 % பங்கு சந்தை முதலீடு,
80 % கடன் பத்திர முதலீடு: 20 % பங்கு சந்தை முதலீடு,
மேல் சொல்லபட்டவை எல்லாம் சந்தையில்
விற்பனை ஆகி கொண்டிருக்கும் சில பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டமைப்புகள் தான். இவை
எல்லாம் திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.
பங்கு சந்தை என்றாலே நீண்ட காலத்தில் லாபம்
என்றாகிவிட்ட பிறகு குறுகிய காலத்தில் லாபம் நோக்கம் கொண்டவர்கள் இந்த திட்டத்தில்
முதலீடு செய்து பயனடையலாம்.
அது என்ன லாப நோக்கம் ???
ஒரு ஐந்து வருடங்கள் கழித்து சந்திக்க
போகிற ஒரு செலவுக்கு இப்பொழுதே சேமித்து வைப்பதை தான் லாப நோக்க் முதலீட்டு என்று
அழைக்க படும். இதற்கு சேமிப்பு நோக்கம் என்று தான் பெயர் வைத்து இருக்க
வேண்டும்.... ஆனால் நாளைய விலை ஏற்றத்தை
பற்றி இன்றே கணிக்க முடியாததால் ... லாப நோக்கம் தேவை படுகிறது.
சந்திக்க போகிற செலவுக்கு கடன் வாங்கி
கொண்டால் ஆச்சு என்று நினைக்க கூடியவர்கள் நினைக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு....
அப்படி செய்தால் கடனுக்கு வட்டி கட்டி சுமை தான் அதிகமாகும்.
இன்றைய காலகட்டத்தில் யாரும் சேமித்து
வைத்து பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு டிவி வாங்க
வேண்டுமானலும் கூட கடன் தான் வாங்குகிறார்கள். புஜ்ஜிய சதவிகித கடன் வட்டி முறை
என்று பல கடைகள் கூவி கூவி விற்றாலும், அதில் செயல் பாடு கட்டணங்கள், வரிகள் என்று மறைக்க பட்ட பல விலைகள்
அடங்கி இருக்கும்.
ஒருவர் சேமித்து வைத்து ஒரு பொருளை
வாங்கினால், அவருக்கு ரூ.1000 லாபம் கிடைக்கிறது என்றால்..... கடன் வாங்கினால்
அவருக்கு ரூ.6500 வரைக்கும் நஷ்டம் ஏற்படும்.
ஆனால் சந்தை மயமாக்க பட்ட இந்திய விற்பனை
உலகில், சேமிப்பை
பற்றி மக்களை யோசிக்க விடாமல் பொருட்களின் மீதான மக்களின் தேவையை / ஆசையை குறைந்து
போக விடாமல் ... நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தேவையை உற்பத்தி செய்து கொண்டே
இருக்கின்றன. அப்படிபட்ட தேவை ஏற்கனவே இருந்தால், அத்தேவையை இன்னும் பலபடுத்த விளம்பரங்கள்
செய்ய படுகின்றன.
ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து
கொள்ளுங்கள்.....
முதலீடு, கடன் ..... இவை இரண்டுமே உங்களுக்கு
சுமையாக இருக்க கூடாது. அப்படி சுமையாக இருந்தால், அது உங்களது இயக்க சக்தியை பாதிக்கும்.
கடன் எடுப்பதாய் இருந்தால், அதனுடைய கடைசி தவணை வரைக்கும் எப்படி கட்ட வேண்டும் என்று
திட்டமிட்டுவிட்டு கடன் வாங்குங்கள்.
தொடரும்