Pages

Showing posts with label மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ். Show all posts
Showing posts with label மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ். Show all posts

Sunday, October 27, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -3

வணக்கம் நட்புகளே...

சிலர் பங்கு சந்தை முதலீடு என்றாலே பேயை கண்டது போல் அலருவார்கள். புரியாமல் முதலீடு செய்தோ... அல்லது முதலீட்டு முகவர்களால் காப்பீடு திட்டங்கள் மூலம் ஏமாற்ற பட்டவர்களாய் இருப்பார்கள். இப்படி ஏமாற்ற பட்டதினாலே பங்கு சந்தையை குறை கூறி கொண்டிருப்பார்கள்.

நான் கவனித்த வரையில் பங்கு சந்தை அப்படி ஒன்றும் மோசமானது இல்லை.  ஏமாற்ற பட்டவார்கள் குறை கூற வேண்டுமானல், அவர்கள் குறை கூற வேண்டியது அந்த சமந்த சம்மந்தபட்ட முதலீடு முகவர்களை தான். நான் இந்த பதிவிற்காக குறிப்புகளை தேடி கொண்டிருக்கும் பொழுது, தங்க முதலீட்டுகள் மற்றும் தங்க முதலீடு இணைய வர்த்தக (commodity trading & MCX market trading) பயிற்ச்சி வகுப்பில் எனக்கு தரபட்ட குறிப்பில் இந்திய பங்கு சந்தை 1979 வாக்கில் 100 புள்ளிகள் இருந்துள்ளது....  இப்பொழுது இந்த வெள்ளிகிழமை பங்கு சந்தை 20,725.43 புள்ளிகளில் முடிந்துள்ளது.

இப்பொழுது இதை வைத்து கணக்கு போட்டு பாருங்கள்.... 1979ல் ஒருவன் அதிகமில்லாமல் குறைவான பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து வைத்து இருந்தால்... அவனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று. ஆனால் இன்றோ சில நூறு புள்ளிகள் குறைந்ததிற்காக பலர் சலித்து கொள்கிறார்கள்.

இந்த மாதிரி நீண்ட காலத்தில் பங்கு சந்தையில் வளமையான லாபத்தை தருவது ஒன்று தான் பரஸ்பர நிதி திட்டங்கள்.

ஆனால் என்ன ஒரு குறை என்றால் எவ்வளவு லாபம் என்பது நிச்சயம் இல்லை பங்கு சந்தையில்.

அப்படி குறைகளை தவிர்க்க விரும்புவோர்கள், போன பதிவில் சொன்ன கலவையான பரஸ்பர நிதி திட்டங்களுக்கு போவார்கள்.

இந்த கலவை பரஸ்பர நிதி திட்டங்களில் ஏன் கடன் பத்திர முதலீடும் பங்கு சந்தை முதலீடும் கலந்து இருக்கிறது என்றால்.... லாபத்தை அதிக படுத்த தான்.

உதாரணதிற்கு .....

முழுமையான கடன் பத்திர முதலீடுகளில் முதலீட்டாளர்களுக்கு 8.5 % சதவிகிததில் லாபம் கிடைக்கிறது என்றால் .... கலவை முதலீட்டு முறையில் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் இந்த 8.5 % சதவிகிதம் என்பது 11.25 % சதவிகிதமாக உயரும்.

இது போன்ற கலவை பரஸ்பர நிதி திட்ட கட்டமைப்பு எப்படி இருக்குமென்றால்...

50 % கடன் பத்திர முதலீடு: 50 % பங்கு சந்தை முதலீடு,
60 % கடன் பத்திர முதலீடு: 40 % பங்கு சந்தை முதலீடு,
65 % கடன் பத்திர முதலீடு: 35 % பங்கு சந்தை முதலீடு,
80 % கடன் பத்திர முதலீடு: 20 % பங்கு சந்தை முதலீடு,

மேல் சொல்லபட்டவை எல்லாம் சந்தையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் சில பரஸ்பர நிதி திட்டங்களின் கட்டமைப்புகள் தான். இவை எல்லாம் திட்டத்துக்கு திட்டம் மாறுபடும்.

பங்கு சந்தை என்றாலே நீண்ட காலத்தில் லாபம் என்றாகிவிட்ட பிறகு குறுகிய காலத்தில் லாபம் நோக்கம் கொண்டவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம்.

அது என்ன லாப நோக்கம் ???

ஒரு ஐந்து வருடங்கள் கழித்து சந்திக்க போகிற ஒரு செலவுக்கு இப்பொழுதே சேமித்து வைப்பதை தான் லாப நோக்க் முதலீட்டு என்று அழைக்க படும். இதற்கு சேமிப்பு நோக்கம் என்று தான் பெயர் வைத்து இருக்க வேண்டும்....  ஆனால் நாளைய விலை ஏற்றத்தை பற்றி இன்றே கணிக்க முடியாததால் ... லாப நோக்கம் தேவை படுகிறது.

சந்திக்க போகிற செலவுக்கு கடன் வாங்கி கொண்டால் ஆச்சு என்று நினைக்க கூடியவர்கள் நினைக்கிறவர்கள் நிறைய பேர் உண்டு.... அப்படி செய்தால் கடனுக்கு வட்டி கட்டி சுமை தான் அதிகமாகும்.

இன்றைய காலகட்டத்தில் யாரும் சேமித்து வைத்து பொருள் வாங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு டிவி வாங்க வேண்டுமானலும் கூட கடன் தான் வாங்குகிறார்கள். புஜ்ஜிய சதவிகித கடன் வட்டி முறை என்று பல கடைகள் கூவி கூவி விற்றாலும், அதில் செயல் பாடு கட்டணங்கள், வரிகள் என்று மறைக்க பட்ட பல விலைகள் அடங்கி இருக்கும்.

ஒருவர் சேமித்து வைத்து ஒரு பொருளை வாங்கினால், அவருக்கு ரூ.1000 லாபம் கிடைக்கிறது என்றால்..... கடன் வாங்கினால் அவருக்கு ரூ.6500 வரைக்கும் நஷ்டம் ஏற்படும்.

ஆனால் சந்தை மயமாக்க பட்ட இந்திய விற்பனை உலகில், சேமிப்பை பற்றி மக்களை யோசிக்க விடாமல் பொருட்களின் மீதான மக்களின் தேவையை / ஆசையை குறைந்து போக விடாமல் ... நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலம் தேவையை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றன. அப்படிபட்ட தேவை ஏற்கனவே இருந்தால், அத்தேவையை இன்னும் பலபடுத்த விளம்பரங்கள் செய்ய படுகின்றன.

ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.....

முதலீடு, கடன் ..... இவை இரண்டுமே உங்களுக்கு சுமையாக இருக்க கூடாது. அப்படி சுமையாக இருந்தால், அது உங்களது இயக்க சக்தியை பாதிக்கும். கடன் எடுப்பதாய் இருந்தால், அதனுடைய கடைசி தவணை வரைக்கும் எப்படி கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுவிட்டு கடன் வாங்குங்கள்.

பிறவு முக்கியமாக, முதலீடு திட்ட தன்மை அறிந்து முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு இந்தியாவில். முதலீட்டு தன்மையும் உங்களது லாப நோக்கமும் ஒரே கோட்டில் வரும் பொழுது தான் முதலீடு செய்யுங்கள்.


தொடரும் 

Wednesday, October 16, 2013

*மியூச்சுவல் ஃப்ண்ட்ஸ்* - எளிய அறிமுகம் -2

வணக்கம் நட்புகளே.

போன பகுதியை தொடர்ந்து இந்த பகுதியை எழுத முடியாமல் போனதற்கு அதிகமான வேலை பழுவும், கணினியில் எற்பட்ட தொழில் நுட்ப பிணக்கும் தான் முக்கிய காரணம். யாராவது எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்து இருந்தால்....  மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

தொடருக்குள் போவோம்.


இன்றைய தேதியில் மியூச்சுவல் ஃப்ண்ட்ஸின் முதலீட்டு நிபுணர்களுக்கு இந்திய பங்கு சந்தையில் நம்பிக்கை போய் விட்டது போல் தெரிகிறது. வாடிக்கையாளருக்கு லாபம் ஈட்டி தர வேண்டும் என்ற நெருக்கடி நிலையிலுள்ளார்கள். இதனால் தாங்கள் நிர்வாகித்து வந்த முதலீட்டு அட்டவணையில்  வெளி நாட்டு பங்குகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுத்து உள்ளார்கள்.

இதனால் இது வரைக்கும் இந்திய சந்தையில் கட்டமைத்து கொண்டு இருந்த தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிதிகள் கொஞ்சம் குறைந்து போகும். ஆதலால் பங்கு சந்தை பழைய நிலையை போல் நிதி வீரியத்தோடு இயங்குமா என்று தெரியவில்லை. இதன் சாதக பாதகங்களை இனிமேல் வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

இந்திய பரஸ்பர நிதிகளில் முக்கிய முதலீட்டாளர்கள் என்று பார்த்தால், அது வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் தான். இப்பொழுது இந்தியா இல்லாத மற்ற நாடுகளிலும் இந்த பரஸ்பர நிதிகளின் வீச்சு இருக்கும் பொழுது, அவர்களிதை விரும்புவார்களா என்று தெரியவில்லை.
அதற்கென்று இந்த மாதிரியான திட்டங்கள் தான் சந்தையில் நிழவுகிறது என்று இல்லை. பங்கு சந்தை சாராத அரசு கடன் பத்திரங்கள் மீது முதலீட்டு செய்யும் திட்டங்களும் இருக்கிறது.

ஆனால் பங்கு சந்தை திட்ட முதலீட்டு அளிக்கும் கவர்ச்சிகாரமான லாபத்தை போல் இதில் கிடைக்காது என்றாலும், உறுதியான குறைந்த பட்ச லாபம் இதில் கிடைக்கும். 

முதலீடு என்று வரும் பொழுது..... அவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. சேமிப்பு.
2. முதலீட்டு.

இந்த இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும்... நுண்ணிய வேறுபாடு இருக்கிறது. அது என்ன்வென்றால்....

சேமிப்பு - இந்த முறையில் முதலீட்டு / சேமித்து வைக்கும் பொழுது, நாம் இதில் பெரியதாக லாபம் பார்க்க ஆசை படுவதில்லை. சம்பாரித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நினைக்கிறோம். இந்த முறையில் அதிகமான நிலையின்மைகளை நாம் அனுமதிப்பதில்லை.

முதலீட்டு - இதில் போட படும் / முதலீடு செய்ய படும் நிதிகள் யாவும் லாபத்தை நோக்கியே  செய்ய படுகிறது. மைய புள்ளி லாபம் மட்டுமே. நமக்கு தகுந்த அளவில் நிலையின்மைகளை ஏற்று கொள்கிறோம்.

பலருக்கு இந்த நிலையின்மைகளென்றால் என்ன என்று புரியாமல் இருக்கும். அவர்களுக்காக சுலபமாக சொல்ல வேண்டும் என்றால்.....

வடிவேலு அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்றில் மறைந்த பழம்பெரும் நடிகர் கண்ணையா அவர்கள் சொல்வாரே  " வரும் .... ஆனா வராது..." ; அது தான் நிலையின்மை.

ஏன் இந்த நிலையின்மை என்று கேட்டால் .... அவை பங்கு சந்தையில் முதலீட்டு செய்ய படுவதால் தான்.

மியூச்சுவல் ஃப்ண்ட்ஸில் / பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை சேமித்து வைக்கவும், முதலீடு செய்யவும் திட்டங்கள் கிடைக்கிறது. இவைகள் தனி தனியாகவும், கலந்து கலவையாகவும் கிடைக்கிறது.

இந்த கலவையில் பங்கு சந்தை முதலீடுகள், அரசு கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு விகுதம் திட்டத்துக்கு திட்டம் மாறுப்படும்.



தொடரும்....
Related Posts with Thumbnails