Couch Potato - இன்றைய கார்ப்பரேட் உலகில் தவிர்க்க முடியாத ஒன்று கம்ப்யூட்டர் முன்னாடி எந்தவித நடமாட்டமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பது.
சரி அது வேலை ஒன்று பண்ண முடியாது, என பலர் சொல்லி கொண்டு அதுக்கு தானே காலை அரை மணி நேரம் இராஜராஜ சோழன் கணக்காய் வீராவேசமாக நடக்கிறோம் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள்.
அந்த அரை மணி நேரம் மட்டும் இல்லாமல் அலுவலகத்தில் ஒவ்வொரு அரை மணி நேரமும் கொஞ்ச நிமிடங்கள் நடக்க வேண்டும்.
நீடித்த தொலைபேசி அழைப்புகளை நடத்தவாறு பேசுவது நலம்.
முக்கியமாக எந்நேரமும் போனில் வெப் சீரிஸ் பார்த்து கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு நல்லது இல்லை. முக்கியமாக இதயத்திற்கு.
மனிதர்களுடன் பழகுவது அவசியம் தான், உரையாடலும் மனத்திற்கு நல்லது தான், ஆனால் அந்த பழகுவது என்பதினை நிஜ உலகில் இல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் மேற்கொள்கிறார்கள்.
உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகில் மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அடுக்கேற்றம் முறையில் தான் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.
இது உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உள்ள சார்ந்த மன அழுத்தம் போன்றவற்றை கொண்டு வரும்.
அதே போல் உட்கார்ந்தே இருப்பதை விட நிற்பது உடலுக்கு நன்மை தரும் விஷயம்.
சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான் வேலை என்பதற்காக உட்கார்ந்தே இருப்பது நல்லது இல்லை.
எடுக்க வேண்டிய நகல் பிரதியை நீங்களே போய் நகல் பிரதியெடுப்பு இயந்திரத்தில் எடுக்கலாம்.
அலுவலகத்தில் இன்னொருவரை கைபேசியில் அழைத்து பேசுவதை விட நேரில் சென்று பேசலாம்.
இந்த முறை தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு இல்லை என்று இல்லை இது ஒரு ஆரம்பம் தான்.
குறிப்பு - கடந்த நான்கு வருடங்களாக சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலும் குறைத்து கொண்டு விட்டேன். யூ டியூப் மட்டும் தான் தொடர்கிறது. அதனையும் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். தொலைகாட்சி தொடர்களை பார்ப்பதை விட்டு 20 வருடங்கள் ஆக போகிறது. வெப் சீரிஸ் வெளி வந்து விட்டது என்பதற்காக பார்த்தே தீர்வது என இருப்பது இல்லை, பொறுமையாக இரண்டு வருடம் எடுத்து கொண்டு கூட பார்ப்பேன்.
No comments:
Post a Comment