Pages

Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Monday, October 4, 2021

Couch Potato

Couch Potato - இன்றைய கார்ப்பரேட் உலகில் தவிர்க்க முடியாத ஒன்று கம்ப்யூட்டர் முன்னாடி எந்தவித நடமாட்டமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பது. 

சரி அது வேலை ஒன்று பண்ண முடியாது, என பலர் சொல்லி கொண்டு அதுக்கு தானே காலை அரை மணி நேரம் இராஜராஜ சோழன் கணக்காய் வீராவேசமாக நடக்கிறோம் என்று சமாதானம் செய்து கொள்கிறார்கள். 

அந்த அரை மணி நேரம் மட்டும் இல்லாமல் அலுவலகத்தில்  ஒவ்வொரு அரை மணி நேரமும் கொஞ்ச நிமிடங்கள் நடக்க வேண்டும். 

நீடித்த தொலைபேசி அழைப்புகளை நடத்தவாறு பேசுவது நலம்.

முக்கியமாக எந்நேரமும் போனில் வெப் சீரிஸ் பார்த்து கொண்டு இருப்பது உடல் நலத்திற்கு நல்லது இல்லை.  முக்கியமாக இதயத்திற்கு. 

மனிதர்களுடன் பழகுவது அவசியம் தான், உரையாடலும் மனத்திற்கு நல்லது தான், ஆனால் அந்த பழகுவது என்பதினை நிஜ உலகில் இல்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் மேற்கொள்கிறார்கள். 

உலக சுகாதார மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகில் மனிதர்களின் இறப்பு எண்ணிக்கை அடுக்கேற்றம் முறையில் தான் கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

இது உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உள்ள சார்ந்த மன அழுத்தம் போன்றவற்றை கொண்டு வரும். 

அதே போல் உட்கார்ந்தே இருப்பதை விட நிற்பது உடலுக்கு நன்மை தரும் விஷயம்.

சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான் வேலை என்பதற்காக உட்கார்ந்தே இருப்பது நல்லது இல்லை.

எடுக்க வேண்டிய நகல் பிரதியை நீங்களே போய் நகல் பிரதியெடுப்பு இயந்திரத்தில் எடுக்கலாம். 

அலுவலகத்தில் இன்னொருவரை கைபேசியில் அழைத்து பேசுவதை விட நேரில் சென்று பேசலாம்.

இந்த முறை தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு இல்லை என்று இல்லை இது ஒரு ஆரம்பம் தான்.  

குறிப்பு - கடந்த நான்கு வருடங்களாக சமூக ஊடக பயன்பாட்டை முற்றிலும் குறைத்து கொண்டு விட்டேன். யூ டியூப் மட்டும் தான் தொடர்கிறது. அதனையும் குறைக்கும் முயற்சியில் இருக்கிறேன். தொலைகாட்சி தொடர்களை பார்ப்பதை விட்டு 20 வருடங்கள் ஆக போகிறது. வெப் சீரிஸ் வெளி வந்து விட்டது என்பதற்காக பார்த்தே தீர்வது என இருப்பது இல்லை, பொறுமையாக இரண்டு வருடம் எடுத்து கொண்டு கூட பார்ப்பேன்.

Thursday, March 6, 2014

சரித்திர நாவல்கள் :: சாண்டில்யன் ஸ்பெஷல்

தினசரி வாழ்விலிருக்கும் அபத்தங்களோடு வாழ்ந்து பழகிய நமக்கே ஒரு கட்டத்தில் அவற்றில் இருந்து விடுபட்டு, கால இயந்திரத்தில் பயணித்து ராஜா காலத்தில் வாழ ஆசைபடுவோம். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, நான் அப்படி தான் ஆசை படுகிறேன்.

நம் எல்லோருக்கும் அக்காலக்கட்ட ராஜ்ஜிய வாழ்க்கை முறையிலொரு ஈர்ப்பு இருக்கிறது. கட்டுபாடு இல்லாத அதிகாரம், செல்வம் ..... இன்னும் பிற. இதை எல்லாம் நினைத்து பார்க்கவே முடியும், வாழ்ந்து பார்க்க வேண்டுமானால், நமக்கு இருக்கும் ஒரே வழி சரித்திர நாவல் படிப்பது தான்.

சரித்திர நாவல் என்றாலே ராஜதந்திரம் மற்றும் போர் காட்சிகள் தான் சிறப்பு. அவை மகுடத்தில் இருக்கும் மாணிக்கம் போல.

என்னதான் தீவிர இலக்கியத்தை வாசித்தாலும், ராஜதந்திரம் மற்றும் போர் காட்சிகளுக்காகவே இவைகளை வாசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அதிலும் போர் காட்சி என்று வந்தால் கல்கியின் படைப்புகளில் பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளி விட்டு சிவகாமியின் சபதம் முன்னுரிமை பெற்று விடும். வார்த்தைகளின் மூலம் காட்சியின் பிரமாண்டத்தை காட்டி இருப்பார்.

ஆனால் இந்த பகுப்பில் கல்கியை விட சாண்டில்யன் தான் முன்னிலையில் இருக்கிறார். அதற்கு கடல் புறா நாவலே உதாரணம்.

அதிலும் புகாரில் இருந்து இளையபல்லவன், காஞ்சனை, அமீர் அகுதாவின் உதவியோடு தப்பிக்கும் இடத்தை படிப்பவர்களுக்கு மயிர்கூசும்.அதற்கு முன்பாக அநபாயன், காஞ்சனை ஆகியோரின் உதவியோடு புகார் நீதிமன்றத்தில் இருந்து தப்பிக்கும் காட்சி, ரன் படத்தில் மாதவன் சுரங்கபாதையின் ஷட்டரை  இழுத்து மூடும் காட்சிக்கு நிகரானது. அந்த காட்சியை படிக்கும் பொழுது அநபாயன் பக்கத்தில் காஞ்சனை வில்லேந்தி புகார் மன்னனின் நெற்றியை குறி பார்த்து நிற்ப்பது.... நேரில் பார்ப்பது போலிருக்கும்.

அதன் பிறகு கடல் புறாவின் முதல் போரான விஜயசந்திரனோடு இளையபல்லவன் போதும் இடமும் விறுவிறுப்பான கட்டம் தான். அதிலும் சீனத்து வெடி ஆயுதங்களை விஜயசந்திரன் பயன் படுத்தும் பொழுது, இளையபல்லவம் தடுமாறி போவான். நமக்கு பதைபதைக்கும், ஏனென்றால் அந்த நேரத்தில் இளையபல்லவனின் படையில் நாமும் ஒரு மாலுமியாக மாறி இருப்போம்.

அந்த வெடியினால் கடல் புறாவிற்கு ஏற்பட்ட சேதாரம், எதோ நம் வீட்டில் சேதாரம் ஏற்பட்டது போல் பதற்றம் அடைவோம். ஆனால் அந்த நேரத்திலும் நம் தலைவனின் கம்பீரத்தை கண்டு அமைதி கொள்வோம். அப்படி கொள்ள வைப்பதில் தான் சாண்டில்யன் வெற்றி பெறுகிறார்.

கடைசியில் ராஜேந்திர சோழன் காட்டிய அறையினுள் நுழைந்து மஞ்சள் அழகியையும் காஞ்சனையையும் இளையபல்லவன் அணைத்து கொள்ளும் பொழுது கடல் புறாவோடு நாமும் வெட்கபடுவோம்.

கடல் புறாவை மூன்று முறை படித்திருக்கிறேன், ஒவ்வொரு தடவையும் அதே சிலிர்ப்பூட்டும் வாசிப்பு தான்.

அடுத்து போர் வியூகம், ராஜதந்திரம் என்று சாண்டில்யன் எழுத்தில் விஸ்வரூபம் எடுத்தது ராஜ திலகம் நாவலில் தான். மிக பிரமாண்டமான கதைகளம். ஆனால் ஏன் இந்த நாவல் கொண்டாட படவில்லை என்று தான் தெரியவில்லை.

 இதில் கதையின் ஆரம்ப நிலையிலேயே நாயகனும் நாயகியும் கடலில் அடி நீச்சல் அடித்து தப்பிப்பார்கள். அந்த காட்சி தான் நாவலின் அட்டை படத்திலும் இருக்கும்.

இந்த நாவலை ஒரு தடவை தான் படித்தேன், ஆனால் இந்த நாவல் தந்த சுவை உணர்விலிருந்து அடங்க பல காலம் ஆனது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் இந்த நாவலின் சுவையை சுவைக்க.

அதிலும் நாயகன் எதிரியின் போக்கை அறிந்து, உடனே படையெடுப்பு வியூகத்தை மாற்றுவது எல்லாம், வாசிப்பில் மட்டுமே உணர முடிகிற பிரமாண்டம்.

வேறு சரித்திர நாவல்களும் படித்திருக்கிறேன், ஆனால் போர் வியூகம், ராஜதந்திரம் என்று வரும் பொழுது இந்த இரண்டு நாவல்களை மிஞ்சிய நாவல்கள் எதுவுமில்லை. அப்படி இருக்கிறது என்றால், நான் அவற்றை படித்ததில்லை.

Thursday, March 28, 2013

கலவை - டுடோரியல் / புணர்வு / பரதேசி / மாரடைப்பு


ஆண்,  பெண் என்று யாராக இருந்தாலும் உடைகளோடு இருக்கும் பொழுது தான் கவர்ச்சியா இருப்பார்கள். நிர்வாணம் என்பது சுவாரசியமற்ற உண்மை போல . 

புணர்வு சாஸ்திரபடி பார்த்தோமானால்..... முதல் புணர்வில் தான் அவயங்கள் காண இருவருக்கும் ஆர்வம் இருக்கும் ....புணர்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய புள்ளியாகவும் அது இருக்கும்....புணர்வு என்பது புணர்வுகள் என்று மாறிய பின் நிர்வாணம் என்பது அறிந்த ரகசியமாகி விடும். அறிந்த ரகசியங்கள் சுவாரசியம் தருவதில்லை. ஆனால் ஒவ்வொரு புணர்வின் பொழுதும் ஒரு வித நெருக்கத்தை உணர நிர்வாணம் உதவும் 

= = = = = 
டுடோரியல் வாழ்க்கை மாதிரி இனிமே வரவே வராது. அப்படி ரகளை பண்ணி வாழ்ந்த காலம் அது. பிட்டு  படம், குஜால்ஸ் சிடி, சைட் அடிக்குறது, எந்த பொண்ணுக்கு / நடிகைக்கு வாழ்க்கை தருவது போன்ற முக்கிய வேலை செஞ்சுட்டு  பொழுது போகலைன்ன அப்பப்ப படிப்போம்.

என்னால் மறக்கவே முடியாத பருவம் அது. அதுல கூட படிச்ச நண்பன், பத்து வருஷம் கழிச்சு எப்படியோ என் நம்பரை கண்டுபிடிச்சு போன் பண்ணினான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.

பேசி முடிச்ச பிறவு கண் மூடினப்ப, அப்ப பண்ணின ரகளை எல்லாம் மனசுல வந்து போச்சு. அந்த மாதிரி சந்தோஷமா பிறவு இருந்ததே இல்லை. இப்ப நினைச்ச ரொம்ப ஏக்கமா இருக்கு.

அதுவும் அவன் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஆளு. என் கூடவே சைக்கிள்ல சுத்திகிட்டு, மூணு ரூவா இருந்தாலே கட்டணம் வாங்காத இடத்துல சைக்கிளை நிறுத்திட்டு, தியேட்டருக்கு நடந்து போய் மூன்றாம் வகுப்புல உட்கார்ந்து பிட்டு  படம் பார்த்துட்டு சந்தோஷமா வருவோம்.

அவனும் நானும் அந்த மூணு ரூவாய தேத்துறதுக்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம்ன்னு நினைச்ச, இப்ப சிரிப்பு தான் வருது. ஆபீஸ் டென்ஷன் எல்லாம் பறந்து போயிருச்சு அவன் கிட்டக்க பேசின பிறவு.

அவன் - என் ஏதுமற்ற பருவத்தில் நட்பின் எல்லாவுமாய் இருந்தவன். அறிவு, அனுபவம் தான் நாம் எப்பொழுதும் ஏங்குகிற குழந்தை தன்மைக்கு எதிரி போல. அவனோடு இயல்பாய் பேசுவதற்கு நடந்த 13 வருடங்களாய் என் மனதை சுற்றி அனுபவமும் கொள்முதல் செய்து கொண்ட அறிவும்  போட்டு இருந்த திரைகளை கலைத்தேன்.... மகிழ்வின் தூய்மையை உணர்ந்தேன்.

சட்டை பையில் மூணு ரூபாய் இருந்த பொழுது கிடைத்த சந்தோசம், இப்பொழுது சில ஆயிரங்கள் இருக்கின்ற பொழுது கிடைப்பதில்லையே ???

விருப்பங்களை பறித்து கொண்டு, கட்டாயங்களின் இஷ்டங்களை தந்து... பறி குடுத்தவை பற்றி எப்பொழுது ஏங்க வைப்பதில் என்ன தான் காண்கிறதோ இந்த வாழ்க்கை. :((((

= = = = =
பரதேசி படம் உலக சினிமான்னு சில பல இலக்கியவாதிங்க சொல்லி பொது மக்களை ஏமாத்த பார்க்குறாங்க. நல்ல வேளை நான் படத்தை முன்னமே பார்த்துட்டேன் இல்லாங்காட்டி இந்த இலக்கியவாதிங்க உலக சினிமான்னு சொல்லுறத நம்பில படத்தை பார்த்து ஏமாந்து இருப்பேன் ... தப்பிச்சேன்டா சாமி.

ஏதோ உலக சினிமான்ன என்னனே எனக்கு தெரியாத மாதிரில இந்த இலக்கியவாதிங்க பேசுறாங்க. எங்களுக்கு தெரியாத உலக சினிமான்ன பல உதட்டு உம்மா சீனு,  இரண்டு மூணு குஜால்ஸ் சீனு .... பிறவு கதாநாயகி முண்டமா வர சீனு இருந்த தானே அது உலக சினிமா ?? (முக்கிய குறிப்பு கதாநாயகன் முண்டமா வந்த அது உலக சினிமாவான்னு தெரியல)

இது எல்லாம் ஒன்னும் இல்லாத பரதேசி படத்தை எப்புடி உலக சினிமான்னு ஏத்துக்குறது ??

நியாயமாரே... சீக்கிரம் சொல்லுங்க ,இல்லடி ராசா வண்டிய 

= = = = =
கொஞ்ச நாள் முன்பு மோனி கோயம்புத்தூர் (Mony Coimbatore)  தனது வதன புத்தக பக்கத்தில் "சாவை பற்றி கூட கவலை இல்லை, ஆனால் இனி வாழ போகிற நாட்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது"  என்று எழுதியது தான் இன்று முழுவதும் என் மனதில் ரிங்காரமிட்டபடியே இருந்தது.

அந்த வரிகளை பற்றி யோசிக்க, யோசிக்க தான் அவை எத்தனை பெரும் கருத்தை உடையது என்று தோன்றியது. மனிதன் தான் உருவாக்கிய வாழ்நிலையில் தானே தொலைந்து / தொலைத்து அழிந்து கொண்டிருக்கிறான் என்று தோன்றியது.

வாழ்க்கையில் பணத்தை நோக்கமாய் கொண்ட தேடல், ஒரு சமயத்திற்கு பிறவு பயத்தை நோக்கியதாக மாறுவது எத்தனை நிதர்சனம். வரிகள் மீண்டும் மீண்டும் என் இதயத்தில் ஒலிக்க ... எதொன்றுக்கான தேடல் புரிந்தது போல் இருந்தது. 

= = = = =
வத்திகுச்சி கதை களம் புதிதாய் இருந்தாலும், மோசமான திரைக்கதையினால் நொண்டி அடிக்கிறது. தேவை இல்லாத பல கதாபாத்திரங்கள். அழுத்தம் இன்னும் அதிகமாக தந்திருந்தால் நன்றாய் வந்திருக்க வேண்டிய பல காட்சிகள் ...என்னோ தானோ என்று கடந்து போகிறது.

ஸ்பெஷல் 26 - 1980களில் நடந்த பல வழிப்பறி கொல்லை நிகழ்வுகளை பலவற்றை கேள்விப்பட்டதினால் ஆர்வம் வந்து பார்த்தேன். படம் சூப்பர். பார்க்கவில்லையென்றால் பார்த்துவிடுங்கள். அதுவும் கடைசி அரை மணி நேர காட்சிகளை கண்டிப்பா தவற விடாதீர். 

= = = = =
மாரடைப்பை தவிர்க்க .. - எழுதியவர் - ஜெயச்சந்திரன்  {அவரது வலைப்பூவில் இது போல் நிறைய தகவல்கள் கொண்ட பதிவுகள் படிக்க கிடைக்கிறது}

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??

மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
Related Posts with Thumbnails