1980களில் தொலைகாட்சி செய்திகள் என்றால் அது அரசு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு ஒளிபரப்ப பட்ட தூர்தர்ஷனின் செய்திகள் மட்டும் தான். அதிலில் எந்த செய்தியை ஒளிபரப்பலாம், எவை எல்லாம் ஒளிபரப்ப கூடாது, எத்தனை விரிவாக செய்தியை சொல்லலாம் என்ற கட்டுபாடு எல்லாம் இருந்தது.
1933 ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தின் படி தனியார் நிறுவன செய்தி ஒளிபரப்பு எல்லாம் இயலாத ஒன்றாக இருந்தது.
அப்பொழுது தூர்தர்ஷனில் "The World This Week" என்னும் வாராந்திர தொடர் வந்து கொண்டு இருந்தது. இதனை தொகுத்து வழங்கியவர் பிரணாய் ராய். பின்னாட்களில் பிரணாய் ராய் மற்றும் இவரது மனைவி இருவரும் இணைந்து என்.டி.டிவி என்னும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை தழுவி தான் சன் டிவி 1990களில் "இந்த வார உலகம்" என்னும் நிகழிச்சியை ஒளிபரப்பினார்கள், பிற்பாடு இது 15 நிமிட செய்திகளாக தினமும் வந்து கொண்டு இருந்த சன் செய்திகளின் ஒரு பகுதியாக மாற்றியது.
தூர்தர்ஷனது செய்தி நிகழ்ச்சிகளில் மேம்போக்கான தன்மையே பெரிதும் இருந்தது. நுனிப்புல் செய்திகள். இவற்றில் எல்லாம் ஒரு வெற்றிடம் இருப்பதை இந்திய டுடே நிறுவன குடும்பத்தை சேர்ந்த அரூன் புரி மற்றும் அவரது சகோதரி மது புரி ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் புலனாய்வு காணொளி இதழான நியூஸ்ட்ராக் (News track) கொண்டு வந்தார்கள். இந்தப்செய்திகள் எல்லாம் 90நிமிட படமாக எடுக்க பட்டு Video Cassette வடிவில் விற்க பட்டது.
அதுவரையில் நுனிப்புல் செய்தி தகவல்களாக இருந்த பல செய்திகள் விரிவாக மக்கள் பார்வைக்கு வைக்க பட்டது. இத்தனை தொடர்ந்து தமிழிலும் கலாநிதி மாறன் பூமாலை என்னும் காணொளி செய்தி இதழ் தொகுப்பை கொண்டு வந்தார்.
இது அப்பொழுது VHS Wave காரணமாக வசதி படைத்தோர் பலரது வீடுகளில் VHS player இருந்தது, அதனால் விற்பனை மற்றும் வாடகை தான் காணொளி இதழின் மூல வருவாய். அப்பொழுது பரவலாக இருந்த கள்ள காணொளி பதிப்பு (Video Piracy) மற்றும் கள்ள ஒளிபரப்பு (Cable Piracy) காரணமாக காணொளி இதழ் முயற்சி இந்தியாவில் பெரிய அளவில் வெற்றியடையவில்லை.
இப்பொழுது நியூஸ்ட்ராக் செய்தி தளமாக (https://english.newstrack.com) இணையத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது.
கலாநிதி மாறன் அவர்கள் தொடங்கிய பூமாலை காணொளி இதழும் தோல்வியே அடைந்தது. அவர் சன் டிவி நிறுவனத்தை ஆரம்பிக்க அது கூட காரணமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் இந்த காணொளி இதழ் முயற்சி பரவலான வெற்றியை அடைந்ததென்றே சொல்லலாம். வாடிக்கையாளர் பயன்படுத்த கூடிய மின்னணு பொருட்கள் பற்றி 1976ஆம் ஆண்டு தொடங்கி 1999ஆம் வரைக்கும் Video என்னும் பெயரில் இதழ்களாக வெளிவந்தது.
தற்காலத்தில் 24 மணி நேரமும் செய்திகளும் நினைத்த நேரத்தில் தகவல்களும் கிடைக்கும் சூழலில் பலருக்கு புரிய போவது இல்லை இந்த காணொளி இதழ்களின் முக்கியத்துவத்தை.
முக்கிய குறிப்பு - பூமாலை இதழ் வடிவை பிற்காலத்தில் சன் டிவி செய்திகளின் ஒரு அங்கமாக வந்த சிறப்பு பார்வை பகுதிக்காக பயன்படுத்தி கொள்ள பட்டது.
பிற சேர்க்கை - 1991ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வர தாராளமயமாக்கல் கொள்கையால் இந்திய தந்தி சட்டத்தில் திருத்த மசோதா கொண்டு வர பட்டது. இதனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சமாக இருந்த காணொளி இதழுக்கான சந்தையும் பலியானது.