பத்து லட்சம் ஹிட்ஸ்களை தர போகும் பதிவாளர்களுக்கும் வாசகர்களுக்கும் (அப்படி யாராச்சு இருக்கிங்களா ...இருந்தா சொல்லுங்கப்பா) நன்றி நன்றி ........
சமீபத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரசிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும் தான்னு சொல்லிருக்காரு..அதனால் இனிமேல் படம் வெளிவரும் பொழுது அது கக்கா போக தெரிந்தவர்களுக்கா ...இல்லை முச்சா போக தெரிந்தவர்களுக்கா என்று அவர்கள் சொல்லி விட்டால் நல்ல இருக்கும் ..... அதன்ப்படி நாங்களும் படம் பார்ப்போம் ,விமர்சனம் எழுதுவோம் ல
டிஸ்கி : தமிழில் எழுதும் போது தமிழ் படத்திற்கு தானே பெரும்வாரியாக விமர்சனம் எழுத முடியும். அதுவும் அசலாக இருந்தால் தானே எல்லோரும் படிபங்க.......
கொஞ்ச நாளாய் எல்லா பதிவுகளிலும் எதாவது ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதிகிட்டு இருக்காங்க. சரின்னு புயலாய் புறப்பட்டு விமர்சனம் எழுதியே தீர்வதுன்னு ஒரு முடிவோட எழுத ஆரம்பிச்சு இருக்கேன். நான் இது வரைக்கும் எந்த புதுப் படத்துக்கும் விமர்சனம் எழுதினது இல்லை ....... அப்படியே எழுத தோன்றினாலும் என்ன எழுதுவதுன்னு தெரியல.
சரி ஏதோ ஒப்புக்கு கதை சவாரி அடிக்குது, கேமரா லென்ஸ் ல ஓட்டை, டைரக்டர் சரியாய் குளிக்கல...... ஹீரோவுக்கு ஜெட்டி சைஸ் சரி இல்லைன்னு நானும் நூற்றுக்கு பத்தாய் எழுதிட்டு போகலாம். ஆனால் வருங்கால சமுதாயம் என்னை என்ன சொல்லும்(நமக்கு சரித்திரம், பொருளாதாரம், ஆங்கிலம்........ எல்லா கருமமும் முக்கியம் இல்லையா)......
நம்ம எப்புடி விமர்சனம் எழுதின என்ன .....நூறு வருடம் கழித்து வர போகும் என்னைப் போல் உள்ள மட்டையர்களுக்கு தெரியவா போகுது ?????
நேத்து சாயங்காலம் பிற பதிவாளர்கள் எப்புடி விமர்சனம் எழுதறாங்கன்னு பார்க்கலாம்ன்னு உட்க்கார்ந்த.....முடியல, என்னை தவிர எல்லா பையபுள்ளைகளும் படத்தை விமர்சனம்ங்கிற பெயர்ல விம் சோப்பு போட்டு தோச்சு எடுக்கிறாங்க. நான் அப்படியா ஷாக் ஆகிட்டேன்.
படம் பார்க்க உட்க்காரும் பொழுதே அடியில் கொல்லி கட்டை வைசுக்குவங்க போல் இருக்கு. அவங்க பதிவுகளெல்லாம் படிக்கும் பொழுது தியேட்டர் விட்டு வெளிய வழியே (கவிதை கவிதை .....என்ன கருமம்மோ) வந்துடனே டி குடிக்குரங்களோ (இலக்கியவியாதிகள் மன்னிக்கவும்......சரியான spelling தெரியல) இல்லையோ இன்டர்நெட் செனட்டர்க்கு போய் விமர்சனம் எழுத START பண்ணி விடுறாங்க .......
தமிழ்ல வர பல படங்கள் மொக்கையா தான் இருக்கு ....அதுக்கு டைம் வேஸ்ட் பண்ணினதே பெருசு : அந்த மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதிவேற நம்ம டைம்யை மொக்கை ஆக்க வேண்டுமா ?????
இன்னொரு விஷயம் ....எனக்கு விமர்சனம் எழுத தெரிந்தால் நான் எழுத மாட்டேனா ???? பிறகு படம் பார்க்காமல் விமர்சனம் எழுத எனக்கு தெரியாதே ......(அந்த மாதிரி பின்னோட்டம் வேண்டுமானால் போடா தெரியும்).....
அதுவும் மொக்கை படத்துக்கு மொக்கையா விமர்சனம் எழுதின பிறகு திரட்டில சேர்க்க படும் படு இருக்கே ........இதுல வேற விமர்சனத்துல இடைச்சொற்கள் இல்லைன்னு இலக்கியவாதிகள் complaint பண்ணுறாங்க....அவங்களெல்லாம் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் AGATHA CHRISTIE ஓட தமிழ் மொழிபெயர்ப்பு நாவலை படிக்க வைக்க வேண்டும்.....(அவங்க கிட்ட தான் எப்புடி ஒரு சிறந்த நாவலை மொழிபெயர்த்து மொக்கை ஆக்குவது என்பதை கற்று கொள்ள வேண்டும் .....இதிலையும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பல புது புது தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ள முடியும் ......அதற்க்கெல்லாம் பாரதி சொன்னது போல் மனதில் உறுதி வேண்டும்....வார்த்தைகளில் தெளிவு வேண்டும்)....
இன்னொரு முக்காத விஷயம் என்னன்னா விமர்சனம் எழுத ஆரமிக்க இருக்கிற வரைக்கும் அந்த மொக்கை படங்களின் கதையை ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம். இதை விட பெரிய தண்டனை வேறு எதுவுமில்லை......
ஆனால் இந்த பட விமர்சனங்களால் ஒரு நன்மையையும் உண்டு ........ பிறர் காசை செலவு செய்து படம் விட்டு ....விமர்சனம் எழுதவங்க. அதை படிச்சுட்டு நம்ம காசை மிச்சம் பிடிச்சுக்கலாம்.
அப்படா நானும் விமர்சனம் எழுதிட்டேன் .......
-
16 comments:
அண்ணே, கோடம்பாக்கம் கோந்துசாமி கிட்டே வீக்-எண்ட் வகுப்புக்குப் போனீங்கன்னா, படம் பார்க்காமலே எப்படி விமர்சனம் எழுதறதுன்னு அழகாச் சொல்லித்தருவாரில்லா? ஏன் இவ்வளவு மெனக்கிடுதீக?
சேட்டைககரனுக்கு ரிப்பீட்டு..
@சேட்டை,
பதிவை படிக்காம்லே பின்னூட்டம் போடவதற்கு யார் கிட்ட பாஸ் ட்யூஷன் போகனும்? :))
தராசு வெச்சு பண்ணுங்க விமர்சனம் .... மணி ரத்னம் சம்சாரம் மாதிரி
//தமிழ்ல வர பல படங்கள் மொக்கையா தான் இருக்கு ....அதுக்கு டைம் வேஸ்ட் பண்ணினதே பெருசு : அந்த மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதிவேற நம்ம டைம்யை மொக்கை ஆக்க வேண்டுமா ?????//
மைனஸ் * மைனஸ் = ப்ளஸ்
படிக்கிற நேரத்துல ஒழுங்கா படிச்சிருந்தா இதெல்லாம் புரிஞ்சிருக்கும், ஹ்ம்ம்ம்
அப்பா....டா நானும் கஸ்டப்பட்டு வாசிச்சிட்டேன் !
எதிர்க்கவிதையா ?பாக்கலாம் பாக்கலாம் !
என்னமோ போப்பா மேவி :)
eppa vimarsanam ezuthua poreenga???
உன்னைய என்ன பண்ணினா தகும்?
kolaveri!!! :))
@ சேட்டைக்காரன் : அப்படியா போன போச்சு
@ கார்க்கி : ரைட்டு
@ ராஜன் : விமர்சனம் எழுதின பிறகு அதை வைத்து என்ன செய்யறதுங்க
@ சங்கர் : எப்புடி கண்டுபிடிச்சிங்க (நீங்க சொன்னது நூறு சதவிதம் உண்மைதாங்க
@ ஹேமா : அந்த கவிதை புரிந்தால் தானே எழுதுவதற்கு
// ராஜன் : விமர்சனம் எழுதின பிறகு அதை வைத்து என்ன செய்யறதுங்க //
வேற என்ன மளிகை கடைதான் !
@ தாரணி ப்ரியா : என்னவாக போவதுன்னு சொல்லிட்டு போங்க
@ கனகு : அதை படிக்கும் அளவுக்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா
@ கார்த்திகை : எது பண்ணினாலும் தகும்
@ கார்த்திக் : ஆமாம்
மேவி! கில்லாடி!!
ஹா ஹா ஹா... பின்னிட்டீங்க.. நல்லவேள நான் விமர்சனம் எழுதுற வேலயை விட்டு நாளாச்சு :)
ஆமா... அது என்ன பத்து லட்சம் ஹிட்ஸ் தரப்போகும்......
எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே.... ஏன் இந்த கொலவெறி :-))
கலக்குங்க பாஸ் ;-)
யப்பா! மொக்கை மன்னன் நீங்க தான்!
முடியல!..........
Post a Comment