வழக்கம் போல் இந்த வாரமும் ஆனந்த விகடன் வாங்க கூடாது என்றே இருந்தேன். ஆனால் cover story யை பார்த்த உடனே வாங்க வேண்டியதாக போயிருச்சு. அப்படி என்ன கவர் ஸ்டோரி??? சினிமா ஹீரோக்கள் டம்மி பீஸா........(தலைப்பு சரியாய் ஞாபகமில்லை) எழுதியவர் கதிர்வேலன் (இதுவும் சரியாய் ஞாபகமில்லை).
சரி நம்ம கவர் ஸ்டோரிக்குள் போகும் முன் ...... விகடன்ல லூசு பையன் ங்கிற ஒருத்தர் ஓர் நையாண்டி பகுதியை எழுதிட்டு இருக்காரு. அதில் அவர்கள் கிண்டல் பண்ணாத அரசியல்வாதிகள், சினிமா ஆளுங்களே இல்லை என்று சொல்லலாம்.
அரசியல்வாதிகளின் மீதும், சினிமாக்காரங்க மீதும் அவர்கள் வைப்பது கொள்கை ரீதியான விமர்சனமோ, கிண்டலோ இல்லை. பெரும்பாலும் அவை அனைத்தும் தனிநபர் தகுதல்களாகவே இருக்கும். அத்தனை கிண்டல் தொனிக்கும் கார்ட்டூன் படங்கள். அதுவும் விஜயை அவர்கள் கிண்டலடிக்கும் விதம்....அப்பப்ப. (விகடன் வீட்டிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிக்க படுகிறது).
இப்படி கார்டூன் போடும் அவர்கள் எந்த உரிமையில் இந்த மாதிரியான கவர் ஸ்டோரிக்களை போட்டார்கள் என்று எனக்கு சத்யமா தெரியல. ஒரு வேளை அதெல்லாம் தான் பத்திரிகை தர்மம்மோ .......
ஏதோ ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்திற்கு போய், நன்றாக சிரித்துவிட்டு வந்தேன். எனக்கு தெரிந்த வரைக்கும் அந்த படத்தில் யாரையும் அவர்கள் புண்படுத்தவில்லை .
முக்கியமாக ஒரு விஷயம் ......இந்த மாதிரியான கவர் ஸ்டோரி நான் விகடனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நான் தமிழ்ப்படத்தை பற்றியும், அத்தனை இயக்கிய அமுதனை பற்றியும் எதாவது பாராட்டி எழுதிருப்பர்கள் என்று நினைத்தேன்.
கடைசியாக அவர்கள் விஜய் ரசிகர்களை வேற சப்போர்ட் க்கு வருகிற மாதிரி எழுதிருக்காங்க ...... எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. பிறகு என்னோடு இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும் பல நடிகர்களுக்கு தீவிர விசிறிகளே.
இந்த கூத்தில் தயாநிதி அழகிரியும் விஜய்யும் ஏதோ சண்டை போட்டு கொள்வது போல் ...அட்டை படம். ......
முக்கியமாக .....ஒரு விஷயம் கிண்டலடிக்கப்பட கூடாது என்றால் ....... கிண்டலடிக்க கூடிய விஷயங்கள் ஏதும் அதில் இருக்க கூடாது.
இதில் வேறுச் சில டைரக்டர்கள் கோவப்பட்டு இருக்காங்க ....... கதை மேல் நம்பிக்கை இல்லாமல் மசாலா ஐட்டங்களின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் தானே அவர்கள் ........
ஒரு பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி ...என்றால் பல்வேறு விஷயங்களை முன் வைத்து, அதனை கொண்டு ஆராய்ந்து, அதன் முலம் ஆசிரியர் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். ஆனால் பலரின் கருத்தை ஒரு தொகுப்பாக போடுவதெல்லாம் கவர் ஸ்டோரி ஆகிவிடாது.
விகடனிடம் இருந்து நான் இந்த மாதிரியான கவர் ஸ்டோரியை நான் எதிர்ப்பார்க்கவில்லை.
-
23 comments:
நான் விகடன் பார்க்கவில்லை.ஆயினும் தனிநபர் தாக்குதல் தவறு!!
அட விடுங்க.. விகடனை இப்படி ஒரு படம் எடுக்க சொல்வோம்... ஒருத்தர் மஞ்சப்பையோடு நாலு முழ வேட்டியோடு ஒரு கிராமத்தில் பஸ் ஏறுகிறார்... இன்னொருவர் திரைப்படத்தில் நாட்டியமாடுகிறார்... மஞ்சப்பைகாரர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்.... அந்த குடும்பத்திலிருந்து வரும் ஒரு பேரன் சினிமா மாஸ் ஹீரோக்களை கிண்டலடிக்கும் படம் எடுக்கிறார்... நாட்டியம் ஆடியவங்களுக்கு எப்படி 100 கோடி செலவில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ய முடிந்தது... இப்படி எடுத்தா படம் பிச்சிக்கிட்டு ஓடுமில்லயா
டம்ம்ம்ம்பி...
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
:)
//எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்....
//
அதெப்படி ”ஆசியாவின் மிகப்பெரிய” என்று உறுதியாகச் சொல்லுகின்றீர்கள்??
அது என்ன கணக்கு??
முதல்ல தலைப்ப மாத்தி ஆனந்த விகடன். நீ அந்த புக்க பார்த்து “ஆ”ன்னு ஆச்சரியபடலனாலும் ஆனந்த விகடன் தான்..
அப்புறம், //எனக்கு தெரிந்து பதிவுலகத்தில் இருக்கும் ஓர் தீவிர விஜய் ரசிகரே இந்த படத்தை பாராட்டி எழுதிருக்காரு. //
நான் கூட பாராட்டிதான் எழுதினேன். நீ யார சொல்ற? என்னைதான் சொல்ரேன்னா, நான் மட்டும் தான் விஜய் ஃபேனா? ஆவ்வ்வ்வ் பதிவுகள் படிப்பா.. வசந்த், தீப்பெட்டி, வெற்ரியெல்லாம் படிக்கிறது இல்லையா?
அவங்களுக்கு விமர்சிக்கறதுக்கு தகுதியிருக்குங்க, ஏன்னா 'சிவா மனசுல சக்தி'ன்னு தமிழ்த் திரையுலகை புரட்டி போட்ட ஒரு படத்தை தயாரிச்சிருக்காங்கல்ல:))
@ தேவன் மாயம் : ஆமாங்க ....ரைட்டு
@ குழுலி : நல்ல ஓடுமே ....ஆமாங்க இந்த மாதிரியான பயங்கர கதையெல்லாம் எடுத்த ...மக்கள் பயந்துரா மாட்டங்களா ???
@ அப்துல்லா : அப்படியா ????? இன்னும் எதை எல்லாம் சஜகம் ன்னு சொல்ல வேண்டி வருமோ
@ கார்க்கி : தலைப்பை மாத்தியாச்சு ...அவங்க பதிவுகளை படிப்பேன் ......ஆனா அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாதே
@ குறும்பன் : ஆமாங்க ....உலக காவியம் ல அது .......
நிறைய விஷயம் எழுதியிருக்கீங்க தம்பி.ஒரு படம் போட்டிருக்கலாமே !
//குழலி / Kuzhali said...
அட விடுங்க.. விகடனை இப்படி ஒரு படம் எடுக்க சொல்வோம்... ஒருத்தர் மஞ்சப்பையோடு நாலு முழ வேட்டியோடு ஒரு கிராமத்தில் பஸ் ஏறுகிறார்... இன்னொருவர் திரைப்படத்தில் நாட்டியமாடுகிறார்... மஞ்சப்பைகாரர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்.... அந்த குடும்பத்திலிருந்து வரும் ஒரு பேரன் சினிமா மாஸ் ஹீரோக்களை கிண்டலடிக்கும் படம் எடுக்கிறார்... நாட்டியம் ஆடியவங்களுக்கு எப்படி 100 கோடி செலவில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ய முடிந்தது... இப்படி எடுத்தா படம் பிச்சிக்கிட்டு ஓடுமில்லயா
//
ரிபீட்டு
//அட விடுங்க.. விகடனை இப்படி ஒரு படம் எடுக்க சொல்வோம்... ஒருத்தர் மஞ்சப்பையோடு நாலு முழ வேட்டியோடு ஒரு கிராமத்தில் பஸ் ஏறுகிறார்... இன்னொருவர் திரைப்படத்தில் நாட்டியமாடுகிறார்... மஞ்சப்பைகாரர் எப்படி ஆசியாவின் மிகப்பெரிய குடும்பமாகவும் மிகப்பெரிய பணக்கார குடும்பமாகவும் மாறுகிறார்.... அந்த குடும்பத்திலிருந்து வரும் ஒரு பேரன் சினிமா மாஸ் ஹீரோக்களை கிண்டலடிக்கும் படம் எடுக்கிறார்... நாட்டியம் ஆடியவங்களுக்கு எப்படி 100 கோடி செலவில் வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்ய முடிந்தது... இப்படி எடுத்தா படம் பிச்சிக்கிட்டு ஓடுமில்லயா//
ஒருத்தன் மரத்தை வெட்டிக்கிட்டே இருக்கான். அதை அப்படியே குளோசப்புலே காட்டுறோம். லாங்ஷாட்டுக்கு வந்தா மரம் வெட்டி பயலோட மவன் மந்திரி ஆயிட்டான். இப்படியும் படம் எடுக்கலாமே. நடுத்தெருவுலே நிறுத்து சாட்டையடி பைட்டு சீன் க்ளைமாக்சா வைக்கலாமே.
தல நான் அவங்க கவர் ஸ்டோரிய படிக்கல. தமிழ்ப்படத்தையும் பார்க்கல. ஆனா ஒரு Spoof அ ரசிக்க முடியலனா அது பரிதாபப்பட வேண்டிய விஷயம். ஆனந்த விகடன் அந்த அளவுக்கு போயிடுச்சுங்கிறத நம்ப முடியல. :((
ஏதோ விகடன் விமர்சனத்தை தான் அனைவரும் பார்த்து படத்திற்கு போகிறார்கள் என்று நினைகிறார்கள் போல ... நான் இப்பலாம் விகடன் விமர்சனத்தை படிப்பதே இல்லை
//ஒருத்தன் மரத்தை வெட்டிக்கிட்டே இருக்கான். அதை அப்படியே குளோசப்புலே காட்டுறோம். லாங்ஷாட்டுக்கு வந்தா மரம் வெட்டி பயலோட மவன் மந்திரி ஆயிட்டான். இப்படியும் படம் எடுக்கலாமே. நடுத்தெருவுலே நிறுத்து சாட்டையடி பைட்டு சீன் க்ளைமாக்சா வைக்கலாமே.
//
தாராளமா வைக்கலாம்... ப்டம் ஓடுமாங்கறது தான் மேட்டர்...ஏன் என்ன மாஸ் ஹீரோக்களான விஜய் அஜீத் பற்றி பேசும்போது சைடு ஹீரோ விஷாலை பேசுறது போல இருக்கும் இது மாதிரி கதைகள்... கிசு கிசுவே இருந்தாலும் மாஸ் ஹீரோக்களுக்கு தானே கிரேஸ் இருக்கு
//அதெப்படி ”ஆசியாவின் மிகப்பெரிய” என்று உறுதியாகச் சொல்லுகின்றீர்கள்??
அது என்ன கணக்கு??
//
அட இவிங்க குடும்ப மரம் அதாங்க ஃபேமிலி ட்ரீ பற்றி கொஞ்ச நாளைக்கு முன்னால படம் போட்டிருந்தாங்களே... அட எங்க பிசினஸ் ப்ராசஜ் டயக்ராம் கூட இம்புட்டு சிக்கலா இருந்திருக்காது... அம்புட்டு சிக்கல் இந்த குடும்ப மரம்... தலைவர் ரொம்ப வேகமா இருந்திருக்காரு... அது அவருக்கே பெரும் சிக்கலா இருக்கு
வேணும்னா மஞ்சள் பைகாரர் - நாட்டியக்காரி படத்தில் மரம்வெட்டி கதையை காமெடி ட்ராக்கா சேர்த்துக்கலாம்!
நானும் எதிர்பார்க்காதுதான். தமிழ்படத்தை பாராட்டி எழுதியிருப்பாங்கன்னு நினைச்சேன்... விகடனுக்கு என்னாச்சு-
யோவ்.. விகடன்ல படத்துக்கு மார்க் 45 தந்து இருக்காங்க.. நீங்க சொல்ற விஷயம் ஒரு கவர் ஸ்டோரிதான்.. அதுவும் சினிமாக்கார மக்கள்கிட்ட எடுத்த பேட்டிதான்.. ஒரு வேலை நீங்க சொல்றது லூசுப்பையன் மேட்டரா? நான் அதை இன்னும் படிக்கவில்லை..
முதல்ல விகடனை முழுசா படிங்க. அவசரப்பட்டு இந்த கட்டுரைய எழுதிட்டீங்க என்று நினைக்கிறேன். தமிழ்ப்படத்துக்கு எதிரா எதுவும் விகடனில வரல. மாறாக தமிழ்ப்படத்தை பாராட்டித்தள்ளிட்டாங்க விமர்சனத்தில. 45 மார்க்கு வேற போட்டிருக்காங்க!
நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை கூட சும்மா மேலோட்டமாக தமிழ்ப்படம் பற்றி சினிமாத் துறையைச் சேர்ந்த சிலரின் கருத்துக்களை போட்டிருக்கிறார்கள் அவ்வளவே!
தமிழ்ப்படத்துக்கு எதிராய் ஒன்றும் இல்லை!
@ ஹேமா : போட்டு இருக்கலாம் தான் ...ஆனா என்ன படம் போடுவது என்று தெரியல ..
@ அகல்விளக்கு : ரைட்டு
@ அனானி அண்ணே : ஓகே ஓகே
@ கார்த்திக் : ஆமாப்பா
@ லுக்கி லிமிட் : ஆமாங்க நானும் படிபதில்லை
@ குழலி : ஆமா பாஸ் ...
@ குழலி : ரைட்டு
@ அனானி அண்ணே : ஏன் இந்த கொலை வெறி
@ நாஞ்சில் பிரதாப் : ஆமா பாஸ் ...அவர்களுக்கு என்னாச்சு ன்னு தான் தெரியல
@ கார்த்திகை பாண்டியன் : தல ...விகடனோட REACH தெரியாம பேசாதிங்க ...... அவர்கள் கை வைத்து இருப்பது படத்திற்க்கான GODWILL ல ..மறைமுகமா இருந்துச்சு இப்ப அப்படி இல்லையே
@ KIWI : அண்ணே ...நான் விகடன் வாங்கினது காலை அஞ்சு மணிக்கு ...பொறுமையா படிச்சிட்டு தான் எழுதினேன் .... அண்ணே விமர்சனத்துக்கு அரை பக்கம் .... போட்டு கிளிச்சதுக்கு மூன்று பக்கம் ...
மேலோட்டமாக போட்ட மாதிரி தெரியலையே ..... அந்த கட்டுரையின் முதல் வரிகளை நன்றாக படித்து பாருங்க
எனக்கு அந்த அட்டைப்படம் வேனுமே... கெடைக்குமா?
மரம்வெட்டி மகான்களுக்கு மரியாதை பண்ணியே குழலிக்கு வயசாயிடும் போலிருக்கு.
விகடனும் வியாபார சாக்கடைக்குள் விழுந்து ரொம்ப நாட்களாகி விட்டது
நண்பரே விகடன் எடுத்த SMS படம் மட்டும் சூப்பர் படமா? இதை எல்லாம் சகஜமப்பா.....
Post a Comment