Pages

Saturday, May 8, 2010

போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்



நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.

இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.

டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.

நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.

நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)

அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.

ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.


அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.

அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)


கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.

"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."

"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"

"எங்க வேல பார்க்குற"

"...... .... .... கம்பெனி"

"சம்பளம் எவ்வளவு இருக்கும்"

"..... ... .."

"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"

"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"

"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"

"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"

"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."

"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"

"ஏன் ...அதெல்லாம் வராது..."

"அதுஎப்படி சார் ..."

"யோய் நீ ரொம்ப பேசுற ...... "

"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"

"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."

சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.


டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.

11 comments:

கார்க்கிபவா said...

//குடிமகன் இல்லையோன்னு/

நீ ’குடி’மகனே இல்லை. அப்புறம் எதுக்கு லஞ்சம் கேட்கனும்?

// லஞ்சம் கூடுபதும்/

ஆமாம். கூடுவது தப்புதான்

/பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது /
உறவு வச்சிக்கிட்டா பாதுகாப்பா இருக்ங்கன்னு தான் சொல்லுது...

//BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை //

இவரு என்னை ஏதாவ்து திட்டியிருக்காரான்னு ஆங்கிலம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா

//அந்த பணகார ஏரியாவில் /
ஆனா இங்க இருக்கிற ஃபிகர் எல்லாம் ச்சோ ஸ்வீட்ங்க

//துரைபாக்கம் வழிய வந்து//
நல்லா வழிஞ்சிங்க பாஸ்

//இருந்த கார்காரன் sound horn தந்தான். /
லூசுப்பையன். இடிசிட்டு போயிருந்தா எஙக்ளுக்கு இந்த தொல்லை இருந்திருக்காது. ஐ மீன் பதிவ ப்டிக்கிற தொல்லை

//இதுக்கு ரசித் தருவிங்களா"/
நீ கொடுக்கிற 200 ரூபாய்க்கு ரஞ்சிதாவ தருவாங்க..

//தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.//
மிளகு ஐனூராய், திப்பிலி முன்னுறாய் கிழிக்க்லையா?

ஓ.. இவங்கதான் ஒலக போலீஸா?

Athisha said...

பயபுள்ள போலீஸ்கிட்ட மாட்டிகிட்டு ஆயிரம் ரூவா அழுதத எப்படி அழுகாம சொல்லுது பாரேன்!

Unknown said...

கார்க்கி கிட்டே 1000 மறக்காம வாங்கிக்கோங்க. ஒரு பிஸினஸ்மேன் 1000 கூட தர மாட்டாரா என்ன?

PNS said...

எப்படிய்யா? எப்படி? ...........
வலிக்காத மாதிரி நல்லா நடிக்கரே அப்பூ.....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

முடியல... முடியல... (அந்த போலீஸ் மாமாவா யாராச்சும் பாத்தா அடுத்த வாட்டி ஒரு Rs .5000 ஆச்சும் வாங்க சொல்லுங்க ப்ளீஸ்...)

தரிசு said...

ஹைய்யோ ஹைய்யோ,நீங்க இவ்ளோ அப்பாவியா, இரசீது கொடுத்தா மட்டும் அரசாங்கத்துக்கு தான் போகுதுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? இதுக்கு நீங்க 200ஏ குடுத்துட்டு வந்திருக்கலாம்.
அவனுங்க எதோ 'கிறுக்கி' தரத நம்ம்..பி 1000 ரூபாய கொடுத்துள்ளீர்.
அவனுங்க சார்ஜ் சீட்ல 5000 னு கூட போட்டுட்டு வெறும் 100 ஐ வாங்கிவிட்டு அனுப்புவார்கள்.என் நண்பனுக்கு இது போல் நிகழ்ந்துள்ளது

Karthik said...

kadasi punch arumai :D unga style la WORLD_CLASS adu :D

மேவி... said...

@ கார்க்கி :

"நீ ’குடி’மகனே இல்லை. அப்புறம் எதுக்கு லஞ்சம் கேட்கனும்?"

ஒரு வேளை குடி குடியை கெடுக்கும்ன்னு நினைச்சு கேட்டு இருப்பங்களோ???

"ஆமாம். கூடுவது தப்புதான்"

லைசென்ஸ் வாங்கின பிறகுமா ????

"உறவு வச்சிக்கிட்டா பாதுகாப்பா இருக்ங்கன்னு தான் சொல்லுது..."

கேட்டது ஆண் போலீஸ் பாஸ் .....பிறகு அங்க தனிய ரூம் இல்ல. TQM DEPARTMENT வேற அங்க இல்லை...

"ஆனா இங்க இருக்கிற ஃபிகர் எல்லாம் ச்சோ ஸ்வீட்ங்க"

அதான் அடையாறு அனந்த பவன் அங்க இருக்கோ ????

"நீ கொடுக்கிற 200 ரூபாய்க்கு ரஞ்சிதாவ தருவாங்க.."

அவங்க இல்லாட்டி யாராக இருந்தாலும் ஓகே தானுங்க ஹி ஹி ஹி ஹி ஹி

"மிளகு ஐனூராய், திப்பிலி முன்னுறாய் கிழிக்க்லையா?"

கிழிஞ்சது மண்டை மட்டும் இல்லைங்க :)


"ஓ.. இவங்கதான் ஒலக போலீஸா?"

இல்ல போலீசும் உலகத்தில் இருக்கும் நாடுகளில் இருப்பதால் ...எல்லோரும் உலக போலீஸ் தான்


@ அதிஷா : நாங்க எல்லாம் யாரு ??? சுறா படத்தை தியேட்டர்ல போய் பார்த்தவங்க

@ KVR : பிறகு அவர் சிறுவர் இலக்கியம் பேச ஆரம்பிச்சிட்டா ???

@ PNS : பழகிருசுங்க...... நாங்க எல்லாம் கைப்புள்ள ஓட cousin brothers தெரியுமா

@ அப்பாவி தங்கமணி : இதே மாதிரி இன்னொரு அனுபவமும் இருக்குங்க

@ தரிசு : அப்படியா ??? நான் இன்னொரு விஷயமும் கேள்விபட்டேனே ??? அதாவது பிடிக்கிற காசுல போலீசுக்கு கமிஷன் உண்டாமே ?

@ கார்த்திக் : நன்றிங்க. பார்த்துங்க ஆடு கோச்சிக்க போகுது

மேவி... said...

@ தரிசு : உங்க பிளாக் நல்ல இருக்குங்க ..எதாச்சு எழுத்து வேண்டியதுதானே

தரிசு said...

எனக்கு தட்டச்சும் தெரியாது.ஆரம்பிக்கும் போது எதுவுமே வரமட்டிக்குது. முடிந்தவரை விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்.ஊக்கத்திற்கு நன்றி.

மேவி... said...

@ தரிசு : எனக்கு ஆரம்பத்துல டைபிங் தெரியாதுங்க .....மேட்டர் கிடைச்சிட்ட ..ஒரு சந்தோஷத்துல தான வருமுங்க. உங்களுக்கு நல்ல ரசனை இருக்குன்னு எனக்கு தோணுது. எழுதுங்க பாஸ்

Related Posts with Thumbnails