Saturday, February 16, 2013
போலீஸ் மாமாவும் இன்சூரன்ஸும்
Saturday, May 8, 2010
போலீஸ் மாமாவும் ஆயிர ரூபாய் மொய்யும்
நானும் சென்னை வந்ததில் இருந்து, எந்த போலீசும் என்னை நிறுத்தி லஞ்சம் கேட்டதில்லை, இதனால நான் ஒரு வேளை இந்திய குடிமகன் இல்லையோன்னு கூட சந்தேகம் வந்துச்சு. அப்படி ஒரு வேளை போலீஸ் நம்ம கிட்ட லஞ்சம் கேட்ட அப்படியே சினிமா படத்துல வர மாதிரி லஞ்சம் தரமாட்டேன்ன்னு வீராப்பு வேங்கைமைந்தனாக சொல்லிடலாம்ன்னு இருந்தேன். ஏன்னா லஞ்சம் கூடுபதும் தப்பு வாங்குவதும் தப்பு. ஒரு வேளை அப்படி எந்த போலீசாச்சு என்கிட்டே கேட்டாங்கன்ன என்ன பண்ணறதுன்னு கூட நிறைய யோசிச்சு வைச்சு இருந்தேன்.
இந்த பதிவு ஒன்னும் லஞ்சத்துக்கு எதிரான பதிவு இல்லைங்க, அந்த மாதிரி எழுத வேற ஆளுங்க நிறைய இருக்காங்க. ஏன் இதை சொல்லுறேனா ஒரு வேளை யாராச்சு தப்ப நினைசுகிட்டு ஆட்டோ அனுபிட்டாங்கன்ன என்ன பண்ணறது. பாதுகாப்பான உறவு தேவைன்னு அரசாங்கமே சொல்லுது அதனால தான் இந்த மாதிரி எல்லாம் கலங்கரை விளக்கம் தர வேண்டியதா இருக்கு. எல்லாம் நேர கொடுமை தான், அத தவிர வேற ஒன்னும் இல்ல.
டிஸ்கி - இப்பவே சொல்லிறேன். இந்த பதிவிலும் வழக்கம் போல் நான் கருத்தையும் சொல்லவில்லை. அதனால் மொக்கையை தவிர வேற எதையும் எதிர்பார்த்து, டோல் கொப்பற கோயா ஆகாதிங்க.
நடந்தது என்ன ..... அப்படின்னு விஜய் டிவி ல சொல்லுற மாதிரி எல்லாம் எனக்கு சொல்ல தெரியாதுங்க. ஏதோ ஞாபகம் இருக்கிறதை கொஞ்சம் ஞாபக படுத்தி சொல்லுறேன்..... கொஞ்சம் கொக்கு மக்கா தான் இருக்கும். ADJUST பண்ணிகொங்க.
நேத்து தீடிர்ன்னு BUSINESSMAN (A person engaged in commercial or industrial business (especially an owner or executive) கார்க்கியை நேர்ல பார்க்கணும்ன்னு ஒரு விபரீத ஆசை வந்துச்சு (நல்ல வேளை நேர்ல பார்க்கும் பொழுது அவர் என்கிட்டே இலக்கியம் பேசல). சரின்னு ஆபீஸ்ல இருந்து அவருக்கு கால் பண்ணி சொல்லிட்டு ........ அந்த பணகார ஏரியாவில் இருக்குற அவரோட ஆபீஸ்க்கு போனேன். பார்த்தேன். பேசினேன். பேசினோம். கிளம்பினேன். வந்து வழி அனுப்பினர். (அதை பற்றி தனிய ஒரு பதிவு எழுதுறேன், இதுல எழுதல. இது லஞ்சம் பத்தின பதிவுன்னு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்.)
அந்த ஏரியாவிலிருந்து பெருங்குடியை தாண்டி (இந்த spelling சரியாய் தப்பான்னு தெரியல. யாராச்சு சொன்ன நல்ல இருக்கும்) துரைபாக்கம் வழிய வந்து (சீக்கிரம் இந்த பதிவை எழுதி முடிக்கணும், இப்பவே மணி 4 . 44 am ) 100 ft ரோடு சிக்னல் ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்பன்னு பார்த்து என்னோட சனி பிடிச்ச மொபைல் (சாணி கலர் ல இருக்கும்) ல யாரோ கூப்பிட்டாங்க. இந்த இடத்துல நான் பைக் தான் ஓட்டிகிட்டு வந்தேன் என்பது தேவையான இடைசொருகல்.
ரிங் அடிக்கும் பொழுதே சிக்னலை பார்த்தேன். 40 seconds இருந்துச்சு. சரின்னு அதற்குள் பேசி முடிச்சுடலாம்ன்னு தான் நினைச்சு பேசினேன். பேசினது என்னோட மேனேஜர். லேசுல விடுவாரா. அவருக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் பொழுதே கிரீன் சிக்னல் விழுந்துருச்சு. சரி பேசி முடிச்சு வண்டிய எடுக்கலாம்ன்னு பார்த்த பின்னாடி இருந்த கார்காரன் sound horn தந்தான். சரின்னு ஏதோ ஞாபகத்துல பேசிகிட்டே தோள் ல முட்டு தந்துகிட்டே right side cut பண்ணி 100 ft ரோடுக்கு போயிறலாம்ன்னு நினைச்சு பைக் ஸ்டார்ட் பண்ணி கிளப்பினேன்.
அப்படி கிளம்பும் போது எதிர்க்க ஒரு traffic constable வந்து பைக் நிறுத்துற மாதிரி கவட்டையா விரிச்சுகிட்டு வந்தாரு. தூக்கிறாலமா ன்னு பார்த்தேன். எதாச்சு கேஸ் கீஸ்ன்னு ஆகிட என்ன பண்ணறதுன்னு நிறுத்திட்டேன்.
அப்பரும் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த சீன்களை இந்த பதிவில் இருந்து avid editing முலமாக நீக்கிவிட்டேன் (வேற என்னங்க பண்ணுறது டைப் பண்ண டைம் இல்லையே..டி குடிக்க போகணும்)
கொஞ்ச நேரம் கழிச்சு இன்ஸ்பெக்டர் முன்னாடி நின்னுகிட்டு இருந்தேன். வண்டி சாவியை வைத்தபடி கான்ஸ்டேபிள் பக்கத்துல இருந்தாரு.
"ஆயிர ரூபா பைன்...கட்டிட்டு போ.."
"இல்ல சார் .....அவ்வளவு காசு இல்ல சார்"
"எங்க வேல பார்க்குற"
"...... .... .... கம்பெனி"
"சம்பளம் எவ்வளவு இருக்கும்"
"..... ... .."
"அவ்வளவு காசு வாங்குற ....கைல கொஞ்சம் வைசிகிட்டா என்ன"
"தெரியாதே சார்...இந்த மாதிரிஎல்லாம் நடக்கும்ன்னு"
"சரி சரி .....மூநூறு ரூபா கட்டிட்டு போ"
"எரநூறு (200 ) தான் இருக்கு சார்"
"சரி கட்டிட்டு போ...நான் எத்தன பேர தான் மன்னிச்சு விடறது....."
"சரி சார் ......இதுக்கு ரசித் தருவிங்களா"
"ஏன் ...அதெல்லாம் வராது..."
"அதுஎப்படி சார் ..."
"யோய் நீ ரொம்ப பேசுற ...... "
"இல்ல சார் ....நியாயத்தை தான் சொன்னேன்"
"சரி நானும் நியாயப்படி சொல்லுறேன்...ஒழுங்கா ஆயிர ரூபா கட்டிட்டு போ...."
சரி நம்ம காசு போலீஸ் கைக்கு போகாமல் அரசாகதுக்கு தானே போகுதுன்னு (வேற வழி) நினைசுகிட்டு கட்டிட்டு வந்தேன். கொஞ்ச தூரம் போனா உடனே, தீடிர்ந்னு டென்ஷனாகி அந்த ரசீது சுக்கு நூறாய் கிழிச்சு போட்டுட்டேன்.
டிஸ்கி : தமிழ் நாட்டு போலீஸ் படத்துக்கு பதிலாக வெளிநாட்டு போலீஸ் படத்தை ஏன் போட்டேநேன்றால், இது ஒரு உலக தரமான பதிவென்பதை காட்ட தான்.