குழம்பி கிடக்கிறது மனது
தாண்ட இயலாமல்
தோற்றுப் போகிறான் ரசிகன்
புது படம் என்னும் கேடயம் ஏந்தி
ரசிகனின் மடி சாய்கிறான்
நடிகனை அரவணைத்துக் கொள்கிறான் ரசிகன்
ரசிகன் கிட்ட இருந்தும்
எது கால் ; எது கைன்னு கண்டு பிடிக்க முடியாத அளவில் இருந்துச்சு எல்லா படங்களும். ஒரு ஆர்வம் ரொம்ப நேரம் ஒரு படத்தை பார்த்து கொண்டு இருந்தேன்; அப்படி பார்த்து கொண்டு இருந்ததால் கழுத்து வலி.
நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தேன் ; எனக்கு பக்கத்தில் ஒரு பெரியவர் (பெருசு) என்னையும் என் கையில் இருந்த புத்தகத்தையும் மாறி மாறி முறைத்த படி பார்த்து கொண்டு இருந்தார். வழக்கம் போல மனசுக்குள் நம்ம அறிவை பார்த்து பிரமிப்பு அடைஞ்சு பார்க்கிறார்ன்னு ஒரு சின்ன சபலம் தோனுச்சு. சரின்னு இன்னும் கொஞ்சம் சீன் காட்டலாம்ன்னு இன்னும் உன்னிப்பாக படிப்பது போல் நடித்தேன். ஒரு ஐஞ்சு நிமிஷம் போய் இருக்கும். அவர் என்னை பார்க்கிறாரா இல்லையான்னு பார்க்கலாம் என்று நிமிர்ந்து அவரை பார்த்த பொழுது அவர் முகத்தில் ஒரு மாதிரியான அருவெறுப்பான பார்வை என்னை நோக்கி.
நான் வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு நிர்வணமான பெண்ணின் படம் சிலை வடிவில். அந்த படத்தை அவர் பார்த்துவிட்டார் போலும். அவருடைய பார்வையை தவிர்க்க புத்தகத்தை வைத்து விட்டு அப்படியே சுற்றி அந்த பக்கம் போய் இன்னொரு புக் பார்த்து கொண்டு இருந்தேன் (ஆன்மீக புத்தகம்). கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பெரியவரை தேடிய பொழுது ; அப்படியே ஷாக் ஆகிட்டேன் காரணம் அவர் கையில் அதே புத்தகம் ; அதே படம் , இன்னும் உற்று பார்த்து கொண்டு இருந்தார். அதை நான் பக்கத்தில் இருந்த பொழுதே வந்து பார்த்து இருக்கலாமே...... பிறகு எனக்குள் பல கேள்விகள் எனக்கு நானே கேட்டு கொண்டு இருந்தேன் இருப்பிடம் வரும் வரை.
================================
தொடரும் .......
MARKETING ல DEMAND CREATION ன்னு ஒரு CONCEPT இருக்கு. அதாவது ஒரு மனிதனுக்குள் ஒரு குறுபிட்ட பொருளின் தேவையை உற்பத்தி பண்ணுவது தான் DEMAND CREATION.
நுட்பங்கள் பல இருந்தாலும் இன்றைய சுழ்நிலையில் ஒரு மனிதனுக்குள் பொருளின் தேவையை உற்பத்தி செய்ய அவனுடைய காம இச்சைகளுக்கு ஏற்றவாறு ஒரு விளம்பரம் தேவை படுகிறது ; அந்த மாதிரியான விளம்பரம் இருந்தால் தான் அவன் அந்த குறுப்பிட்ட பொருளை நினைவில் வைத்து கொள்வான். ஏனென்றால் அது தான் அவனது கவனத்தை பெருமளவு கவர்கிறது.
இதில் யார் மேல் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. விளம்பரத்தால் மக்கள் கெடுகிறார்கள் என்று சொல்வதா ??? இல்லை மக்களின் மனநிலைமை அப்படி இருப்பதினால் தான் இப்படி பட்ட விளம்பரங்கள் எல்லாம் வருகிறதா ????
இந்த மாதிரியான பெரியவர்களுக்கான விளம்பரங்களை வீட்டில் இருக்கும் சிறுவர்களும் பார்க்கிறார்கள். இதை தெரிந்தே தான் விளம்பரங்கள் தயாரிக்க படுகிறது. அமெரிக்காவில் சில சிறுவர்களுக்கான சாக்லேட்களின் விளம்பரங்களில் பால் உணர்ச்சியை துண்டுவது போல் இருக்கும்.... அந்த மாதிரியான விளம்பரங்கள் கூடிய விரைவில் இந்தியாவிலும் வந்தாலும் வரலாம்.
=============================================
சில நாட்கள் முன்னர் டிவியில் கந்தசாமி பட பாடல ஓன்று வந்தது. அதில் ஸ்ரேயாவின் மார்புகளில் ஏதோ ராஜா ராஜா சோழன் காலத்து புதையல் இருபது போல் அவ்வளவு CLOSE யாக காட்டினார்கள். இந்த மாதிரி காட்சிகள் கொண்ட படத்தை தான் குழந்தைகள் படம் என்று கூறி படத்தை PROMOTE செய்கிறார்கள்.
இந்த மாதிரியான காட்சிகள் முலம் இவர்கள் கூறுவது தான் என்னா????
ஸ்ரேயாவின் மார்பு எப்படி இருக்கும் என்று குழந்தைகள் பார்க்க வேண்டும் என்பதா????
தொடரும் .......