எனது வெற்றியின்
பெண்மையை கற்பழித்து விட்டு
சென்றது இந்த பக்கம்....
அங்கங்கே
தோல்வியின் வெற்றி ஓலம்:
எனது வெற்றி
காயங்களோடு நிற்க முடியாமல்
வேதனையின் நிழலில் .
மடை திறந்த வெள்ளமாய்
வறண்ட பூமியில் காய்ந்த நாற்றாய்
வெற்றி மங்கையின் கண்ணீர் ...
கரைந்து விடுமோ தோல்வியின் உள்ளம்
தோல்வியின் வெற்றியை எண்ணி
வெற்றி மங்கை தற்கொலைக்கு
முயற்சிக்குமோ சிக்காதோ
முடிவும் இருக்குமோ தொடக்கமாய் ??
களையை விட்டு
பயிரை களை எடுத்து விட்டதே
தோல்வியின் நண்பர்களும் தோல்வியும் ....
காணாமல் போன குழந்தையின்
தவிப்பாய் உதவியை நாடி
தவிப்புடன் அங்கும் இங்கும்
வெற்றியின் கண்கள்...
ஈன்று புறந்தருதல் பெற்றோரின் கடனே
கற்பழித்து விட்டு போவது தோல்வின் கடமை என்றாகுமா ?
புலம் பெயர்ந்த உள்ளம் போல்
குன்றியது வெற்றியின் உள்ளம்
குன்றிலிருந்தது குன்றுகிறதே
வந்துவிட்டதோ
இயலாமை என் வெற்றிக்கு
எழ முயற்சித்தாலும்
வருகிறதே தூரத்தில்
அவமானம் ஆண்மையுடன் ......
பிகு - போட்டிக்காக எழுதப்பட்டது ....(நானும் களத்தில் குதிச்சாச்சு... ஏய் பார்த்துக்கோ நாங்களும் ரவுடி தான்)
7 comments:
me the first!!!
எனக்கு புரியல!
அதனால
me the escapu!
//.. வால்பையன் said...
எனக்கு புரியல!
அதனால
me the escapu! ..//
me the repeatu..
//.. வால்பையன் said...
எனக்கு புரியல!
அதனால
me the escapu! ..//
me the repeatu..
என்னங்க இது புரியல புரியலன்னிட்டு ,மேவீயே விளக்கம் குடுப்பாரு பாருங்க.கொஞ்சம் பொறுமையா இருங்க.
ஏதோ சொல்ல வாரீக. ஆனா என்னான்னு தன் புரியலை. ஆனா இப்படி யாருக்குமே புரியாம இருக்கறது தான் நல்லது. அப்பத்தான் திரும்பத் திரும்பப் படிப்பாங்க. :-)
/*பிகு - போட்டிக்காக எழுதப்பட்டது ....(நானும் களத்தில் குதிச்சாச்சு... ஏய் பார்த்துக்கோ நாங்களும் ரவுடி தான்) */
அதென்னையா... பிகு போட்டி...?
மேவீ வாழ்த்துக்கள் முதல்ல உங்க முயற்சிக்கு.நிச்சயம் வெற்றிதான்.
Post a Comment