நான் சிவாஜி ராவ் என்ற தனிமனிதனுக்கு ரசிகன் இல்லை. ரஜினி என்ற திரை பிம்பத்திற்கு தான் ரசிகன், அதனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு, ஆன்மீகம், கருத்துக்களை பற்றி எல்லாம் நான் பெரும்பாலும் கவலைப்பட்டது இல்லை. ரஜினி படம் வருகிறதா ???? முதல் நாள், முதல் ஷோ பார்க்க மனம் துடிக்கும்.
என்னை பொறுத்த வரைக்கும் ரஜினியின் நடிப்பு திறமையை யாரும் முழுமையாக பயன் படுத்தவில்லை. ரசிகனின் எதிர்பார்புக்கும், டைரக்டர் மற்றும் பட முதலாளிகளின் எதிர்பார்பையும் பூர்த்தி செய்யவே அவரின் இத்தனை ஆண்டு திரைவாழ்க்கை போய்விட்டது. டைரக்டர்கள் எல்லோரும் அவரை பணம் சம்பாதித்து தரும் ஒரு நாயகனாகவே பார்த்தார்களே தவிர ஒரு நடிகனாக அவரை பார்க்க வில்லை. அதில் எனக்கு கொஞ்சம் கஷ்டமே.
ஒரு படத்தில் தான் மகள் தனக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள போகிறாள் என்று தெரிந்ததும் ஒரு அதிர்ச்சி முகத்தில் காட்டுவார் பாருங்க. கிளாஸ் + மாஸ் நடிப்பு அது.
அண்ணாமலை படத்தில் அந்த சவால் விடும் காட்சி, சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த ஓன்று.
எனக்கு விடுமுறைக்கு சென்னை வரும் போது தான் திரையரங்கில் படம் பார்க்க முடியும், திருச்சியில் அப்பா நல்ல MOODல இருந்தருன்ன ஞாயிறு மாலையில் எதாவது இங்கிலீஷ் படத்தை வாங்கிட்டு வந்து விடியோவில் போடுவார். பிறகு அப்பொழுது நங்கள் இருந்த இடத்திலிருந்து திரையரங்குகள் இருந்த இடம் மிகவும் தொலைவு. ஆனால் சென்னையில் சொந்தக்காரங்க யாரவது வாரத்துக்கு ஒரு தடவை சினிமாவுக்கு கூட்டிட்டு போயிருவாங்க. எங்கள் வீட்டில் ரஜினி அல்லது கமல் படங்களுக்கு மட்டும் காரணங்கள் கேட்காமல் அனுமதி தருவார்கள்.
அதுவும் ரஜினி சினிமா என்றால், கார்ல போகும் பொழுதே செம கொண்டாட்டமாக இருக்கும். தீபாவளி சந்தோசம் இருக்கும்.
இன்னும் ஞாபகம் இருக்கும், எஜமான் படத்தில் ரஜினி வரும் முதல் காட்சி, பக்கத்தில் இருந்த அண்ணா (கட்டாயமான முறையில் இப்பொழுது அங்கிள் ஆகி இருப்பார்) செம சத்தமா விசில் அடிச்சாரு. நானும் முயற்சி செய்து பார்த்தேன். இன்று வரைக்கும் அந்த முயற்சியில் தோல்வி தான். இன்னுமும் எனக்கு விரல் வைத்து விசில் அடிபர்களே, அந்த மாதிரி விசில் அடிக்க தெரியாது.
வளர்த்த பிறகு நண்பர்களோடு பார்த்த ரஜினி படம் என்றால் அது பாபா தான். இரண்டாவது ரிலீஸ்,பிளக் தியட்டர். அதனால் அந்த படத்திற்கு ஓர் ஸ்பெஷல்யான மனசில் இடம் உண்டு. படத்தில் தேவை இல்லாமல் ரஜினி தனது அரசியல் கருத்துகளையும், அந்த கதைக்கு சற்றும் பொருந்தாத (தேவை இல்லாத) heroism தை வைத்தால்(சொந்த செலவில் சூனியம்) படம் தோல்வி. இல்லாட்டி அந்த படம் ஒரு சிறந்த fantasy படமாக வந்து இருக்கும். அதே மாதிரி தான் சந்திரமுகியும். ஆன சந்திரமுகியை என்னால் ரசித்து பார்க்க முடியவில்லை, பக்கத்தில் ஒரு அங்கிள் இடுக்கு பண்ணி கொண்டு இருந்தார்.
ரஜினியின் அறிமுக பாடல்கள், செம தன்னம்பிக்கை டானிக். அதிலும் மனிதன் படத்தில் "மனிதன் மனிதன், எவன் தான் மனிதன்" , அண்ணாமலை படத்தில் "வெற்றி நிச்சயம், இது வேத சத்யம்", படையப்பாவில் "சிங்க நடை போட்டு" .........
ரஜினி நடிப்பை பற்றி சொல்லும் பொழுது, அவரோட "புவனா ஒரு கேள்வி குறி", "தில்லு முள்ளு", "ஆறிலிருந்து ஆறுபது வரை" , "முள்ளும் மலரும்"....... போன்ற சிலது பார்க்க வேண்டிய படங்கள். இதில் தில்லு முள்ளு சிடி மட்டும் தான் என்னிடம் இருக்கும் ஒரே ரஜினி படம். செம காமெடி யான படம் என்பதால் வைத்து இருக்கிறேன்.
இவ்வளவு எழுதின பிறகும் நிறைய தோன்றுகிறது, ம்ம்ம்ம்
எனக்கு இருக்கும் ஒரே ஆசை, ரஜினிக்கு என்று கதை பண்ணாமல், கதைக்குள் ரஜினி கொண்டு ஒரு படம் வர வேண்டும்.... முடியுமா என்று தெரியல.மற்றபடி நானும் எந்திரன் எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் சராசரி ரஜினி ரசிகன் (ரஜினி வெறியன் அல்ல)......
என்னை மிகவும் entertain பண்ணின ஒரு நடிகருக்கு இன்று பிறந்த நாள், HAPPY BIRTHDAY THALAIVAAAA ......................
8 comments:
ரஜினிக்கு வாழ்த்துகள்
நன்றாக இருக்கு
Happy Birthday to Rajini Kanth.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்!!
//இன்னுமும் எனக்கு விரல் வைத்து விசில் அடிபர்களே, அந்த மாதிரி விசில் அடிக்க தெரியாது.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா தல? :)
//எஜமான் படத்தில் ரஜினி வரும் முதல் காட்சி, பக்கத்தில் இருந்த அண்ணா (கட்டாயமான முறையில் இப்பொழுது அங்கிள் ஆகி இருப்பார்) செம சத்தமா விசில் அடிச்சாரு. நானும் முயற்சி செய்து பார்த்தேன். இன்று வரைக்கும் அந்த முயற்சியில் தோல்வி தான். இன்னுமும் எனக்கு விரல் வைத்து விசில் அடிபர்களே, அந்த மாதிரி விசில் அடிக்க தெரியாது.//
நானும் பாஷாவில் இருந்து try பண்றேன் முடியல்ல..
// படத்தில் தேவை இல்லாமல் ரஜினி தனது அரசியல் கருத்துகளையும், அந்த கதைக்கு சற்றும் பொருந்தாத (தேவை இல்லாத) heroism தை வைத்தால்(சொந்த செலவில் சூனியம்) படம் தோல்வி. இல்லாட்டி அந்த படம் ஒரு சிறந்த fantasy படமாக வந்து இருக்கும். //
உடன்படுகிறேன் ஆனால் மேல சொன்ன விடயங்கள்தான் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அவை இல்லையென்றாலும் படம் பப்படம்தான். ஆனால் நல்லதொரு fantasy படமாய் இருந்திருக்கும். ஆமாம் தலை magical realism என்கிறார்களே இது அதுதானே
//எனக்கு இருக்கும் ஒரே ஆசை, ரஜினிக்கு என்று கதை பண்ணாமல், கதைக்குள் ரஜினி கொண்டு ஒரு படம் வர வேண்டும்.... முடியுமா என்று தெரியல.//
நடக்கும் நடக்கணும்
//இன்னுமும் எனக்கு விரல் வைத்து விசில் அடிபர்களே, அந்த மாதிரி விசில் அடிக்க தெரியாது.//
நானும் உங்கள மாதிரி தான் இன்று வரை முயற்சி செய்கிறேன் ஆனால் இன்னும் விரல் வைத்து விசில் அடிக்க தெரியாது . தலைவர் படத்துக்கு போகும் போது அப்படி விசில் அடிக்க தெரிந்த என் நண்பர்களுடன் செல்வேன் . அவர்கள் விசில் அடிப்பார்கள் .
//என்னை பொறுத்த வரைக்கும் ரஜினியின் நடிப்பு திறமையை யாரும் முழுமையாக பயன் படுத்தவில்லை. //
சரிதான்.
\\நான் சிவாஜி ராவ் என்ற தனிமனிதனுக்கு ரசிகன் இல்லை. ரஜினி என்ற திரை பிம்பத்திற்கு தான் ரசிகன், அதனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு, ஆன்மீகம், கருத்துக்களை பற்றி எல்லாம் நான் பெரும்பாலும் கவலைப்பட்டது இல்லை. ரஜினி படம் வருகிறதா ???? முதல் நாள், முதல் ஷோ பார்க்க மனம் துடிக்கும்\\
I differ. ஆரம்ப காலங்கள் படங்கள் தவிர ரஜினி செய்த நல்ல படங்களே இல்லை. Entertainment என்ற பெயரில் அவர் பேசும் பன்ச் டயலாக்குகள் - அய்யோ அய்யோ :)
எப்பத்தான் நிறுத்துவாங்களோ.
ellorukkum oru big thanks
Post a Comment